Tamil Star |
- கனேடியப் பிரதமர் பயணிக்கும் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி
- இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்!
- வெங்காய தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- பிரம்ரனில் வாகன விபத்து – 23 வயது நபர் ஒருவர் காயம்
- ஆபிரிக்க நாடுகளின் இளையோர் பயிற்சித் திட்டத்திற்காக 15 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா
| கனேடியப் பிரதமர் பயணிக்கும் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி Posted: 29 Nov 2015 07:34 PM PST
பிரதமர் பயணிக்கும் விமானம் தனது இருப்பிடம் குறித்த தகவலை ஒலிபரப்பி வருவதானல், சாதாரண இணையத்தளம் அல்லது செயலி மூலம் விமானம் எந்த இடத்தில் பறந்துகொண்டிருக்கின்றது என்பதனை இனங்கண்டுவிட முடியும் என பாதுகாப்பு நிபுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்போக்குவரத்து விமானங்களின் பயணத்தினை கண்காணிக்க உதவும் Flight Radar 24 போன்ற இணையத் தளங்கள் வாயிலாகவே, பிரதமரின் விமானம் தற்போது எங்கு பறந்துகொண்டுள்ளது என்பதனை இலகுவில் அறிந்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு இலகுவில் கிடைக்கக்கூடிய தகவல்களுடன், சில முற்கூட்டிய திட்டமிடல்களுடன் இந்த விமானத்தினை சுட்டு வீழ்த்துவதற்கான ஏவுகணையினை பயங்கரவாதிகளால் நிலைப்படுத்த முடியும் என்பதையும் பாதுகாப்பு நிபுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கனேடிய பிரதமர் பயணிக்கும் விமானம் அவ்வாறான சமிக்கைகளை வெளியிடுவது பாதுகாப்புக்கு உகந்ததல்லை எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. பராக் ஒபாமா உள்ளி்ட்ட முக்கிய உலகநாட்டு தலைவர்கள் பயணிக்கும் விமானங்கள் அவ்வாறான சமிக்கைகளை வெளியிடுவதில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. The post கனேடியப் பிரதமர் பயணிக்கும் விமானத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்! Posted: 29 Nov 2015 06:52 PM PST
எந்த நேரத்தில் எவ்வகை உணவுகள் சாப்பிடலாம் என்பதை தெரிவு செய்து சாப்பிட வேண்டுமே தவிர, அதனை விட்டுவிட்டு இஷ்டத்திற்கு ஏதேனும் உணவுகளை எடுத்துக்கொண்டு உடல்நல உபாதைகளுக்கு ஆளாகக்கூடாது. குறிப்பாக இரவு உணவில் கவனம் செலுத்தாவிட்டால் செரிமானப்பிரச்சனைக்கு ஆளாகி இரவு தூக்கத்தை தொலைக்க நேரிடும். சாப்பிட வேண்டிய உணவுகள் காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் நம்மை தாக்குவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான். இரவு நேர உணவுகள் உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். எவற்றைச் சாப்பிடக்கூடாது? நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும். சாப்பிடும் நேரம் இரவு 7 - 8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். தாமதமாக சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். The post இரவு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெங்காய தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Posted: 29 Nov 2015 06:46 PM PST
அதுமட்டுமின்றி சாம் சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள் ஈரப்பதம் – 86.6% புரதம் – 1.2% கொழுப்புச்சத்து – 0.1% நார்ச்சத்து – 0.6% தாதுச்சத்து – 0.4% மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7% மருத்துவ பயன்கள் வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீரை நன்கு வெளியாகும். உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது. வெங்காய தண்ணீர் தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும், இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். The post வெங்காய தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்ரனில் வாகன விபத்து – 23 வயது நபர் ஒருவர் காயம் Posted: 29 Nov 2015 10:46 AM PST
விபத்தின் காரணமாக காமடைந்த அந்த நபரை உலங்கு வானூர்தி மூலமாக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். Embleto மற்றும் Mississauga வீதிகளுக்க அருகாமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் இருந்தமையால் அவசர வானூர்தி மூலமக உடனடியாகவே அவர் மருத்துவமனைக்ககு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விபத்தை அடுத்த Embleton வீதியில் இருந்து Queen வீதி வரையிலான மிசிசாகா வீதியின் பகுதி மூடப்பட்டு, பின்னர் மதியம் அளவில் திறந்து விடப்பட்டுள்ளது. The post பிரம்ரனில் வாகன விபத்து – 23 வயது நபர் ஒருவர் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆபிரிக்க நாடுகளின் இளையோர் பயிற்சித் திட்டத்திற்காக 15 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா Posted: 29 Nov 2015 08:14 AM PST
மோல்டாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவின் இந்த நிதியால் எட்டு ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளையோர் பயன்பெறுவதுடன், குறித்த அந்த எட்டு ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்த இளைஞர்கள் சிறந்த வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. கானா, கென்யா, மலாவி, மொறோக்கோ, ருவாண்டா, செனிகல், தான்சானியா மற்றும் சாம்பியா ஆகிய எட்டு நாடுகளில் உள்ள இளைஞர்களுக்கே இந்த உதவித் திட்டம் சென்றடையவுள்ளதுடன், இந்த திட்டத்தின் மூலம் சுமார் இரண்டு இலட்சம் ஆபிரிக்க இளைஞர்கள் பயனடையவுள்ளதாக கனேடிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினையும், வர்த்தக வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் அங்கு நிலவும் வறுமையை குறைக்க உதவுவதாக கனேடிய மத்திய அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த நிதிஉதவி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தினை "Digital Opportunity Trust" எனப்படும் கனேடிய நிறுவனம் வழங்கிவருகின்ற நிலையில்,அதனுடன் இணைந்தே கனேடிய மத்திய அரசாங்கம் இந்த உதவியினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ஆபிரிக்க நாடுகளின் இளையோர் பயிற்சித் திட்டத்திற்காக 15 மில்லியன் டொலர்களை வழங்குகிறது கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனேடியப் பிரதமர் தமது பயணதிற்காக பயன்படுத்தும் உத்தியோகபூர்வ விமானம் தனது இருப்பிடம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளதுடன், பிரதமரின் பாதுகாப்புக் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளையும் ஆரோக்கியம் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

பிரம்ரனில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் 23 வயது ஆண்நபர் ஒர்வர் காயமடைந்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளின் இளையோரின் பயிற்சித் திட்டத்திற்காக 15 மில்லியன் டொலர்களை உதவி நிதியாக வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.