Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


போர் விமானங்களை கனடா மீட்டுக்கொள்ளும முடிவிற்கு எதிர்ப்பு?

Posted: 28 Nov 2015 08:34 PM PST

yt

ytஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து போர் விமானங்களை கனடா மீட்டுக்கொள்ளும் முடிவினை கனேடியர்களில் அனேகர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள லிபரல் அரசாம் சிரிய அகதிகளை உள்வாங்குவது, தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போர் விமானங்களை மீட்டுக்கொள்வது ஆகிய இரண்டு முக்கிய முடிவினை எடுத்துள்ளது

இந்த நிலையில் லிபரல் அரசாங்கத்தின் இந்த முடிவுகள் தொடர்பில் கருத்துக் கணிப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்து பெருமளவான சிரிய நாட்டு அகதிகளை உள்ளீர்க்கும் கனேடிய மத்திய அரசாங்கத்தின் திட்டத்தினை பெருமளவான கனேடியர்களும் ஆதரிக்கின்ற போதிலும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து போர் விமானங்களை கனடா மீட்டுக்கொள்ளும் முடிவினை அனேகர் எதிர்ப்பதாக கூறப்படுகிறது.

25,000 சிரிய நாட்டு அகதிகளை கனடாவுக்குள் ஏற்றுக்கொள்ள உள்ளதான லிபரல் அரசாங்கத்தின் அறிவிப்பினை மூன்றில் இரண்டு கனேடிய மக்கள் ஆதரிப்பதனை கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 65 சதவீதம் போர், அகதிகள் வருகையை ஆதரிக்கின்ற போதிலும், மத்திய கிழக்கில் ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கு எதிரான பன்னாட்டு தாக்குதல் நடவடிக்கையில இருந்து போர் விமானங்களை மீட்டுக்கொள்ளும் கனடாவின் முடிவினை 34 சதவீத மக்கள் எதிர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா தலைமையான பன்னாட்டு நடவடிக்கையில் இருந்து தமது CF-18 போர் விமானங்களை மீட்டுக்கொள்ளும் முடிவினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ மீளவும் உறுதிப்படுத்தியு்ள்ள நிலையில், கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக கனடாவும் விமானங்களை அனுப்பி வைக்க வேண்டும் என 59 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களில் கனேடிய விமானங்களும் பங்கேற்க வேண்டும் என கடந்த வருடம் ஒக்டோபர் மாத்தில் 65 சதவீத மக்கள் கூறியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை, லிபரல் அரசாங்கதின் திட்டத்தினை அதிகளவு மக்கள் ஆதரிக்க ஆரம்பித்துள்ளதனை காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

The post போர் விமானங்களை கனடா மீட்டுக்கொள்ளும முடிவிற்கு எதிர்ப்பு? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ மேற்கில் வாகன விபத்து – சந்தேக நபர் தப்பி ஓட்டம்

Posted: 28 Nov 2015 08:14 PM PST

uiuo

uiuoரொரன்ரோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்துத் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைத் தேடி வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குச் சற்றுப் பின்னராக Dovercourt வீதி மற்றும் College வீதி என்பவற்றின் சந்திப்பில் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்துத் தொடர்பான சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிச் சென்றதை கண்டுள்ளதாகவும், வாகனத்தில் இருந்து அவர் விட்டுச் சென்ற ஆயுதம் மீட்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.uiuo

இந்த விபத்தில் காயமடைந்த வேறு சிலர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், எனினும் அவர்களுக்க உயிராபத்தான காயங்கள் எதுவும் இல்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தை அடுத்து குறித்த வீதிப் பகுதி போக்குவரத்துக்காக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

The post ரொரன்ரோ மேற்கில் வாகன விபத்து – சந்தேக நபர் தப்பி ஓட்டம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தினமும் தேன் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள்

Posted: 28 Nov 2015 05:09 PM PST

o

oஇயற்கை நமக்களித்துள்ள மிகப்பெரிய கொடையான தேன் உடலில் ஏற்படும் பல வித நோய்களுக்கும் மருந்தாக விளங்குகிறது.

அத்தகைய தேனை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

உடல் எடை குறைய

சிலர் உடல் எடையைக் குறைக்க பல முயற்சிகள் செய்யும் பலன் இல்லாமல் தவிப்பார்கள்.

அத்தகையோர் தேனை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்.

எனவே தினமுன் காலையில் வெறும் வயிற்றில் மிதமான சூட்டில் உள்ள நீருடன் தேனைக் கலந்து குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.

இரத்ததில் சக்கரையின் அளவை கட்டுப்படுத்த

மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க நினைப்பவர்கள், வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வரவேண்டும்.

மேலும், இனிப்பு வகைகளில் சக்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்துங்கள். இதனால் இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு சீராக்கப்படும்.o

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

மழை மற்றும் பனி காலங்களில் சிலருக்கு விரைவாக நோய்கள் தொற்றிக்கொள்ளும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதே அதற்கு காரணம்.

எனவே, அவர்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பருகினால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நச்சுப்பொருட்கள்(Toxins) வெளியேற

சில வேளைகளில் நாம் சாப்பிடும் உணவில் உள்ள நச்சுபொருட்கள்(Toxins) நமது உடலிலே தங்கிவிடக்கூடும்.

இதனால் பல்வேறு உபாதைகளும் ஏற்படக்கூடும். எனவே, சிறிது எலுமிச்சையுடன் தேனை கலந்து பருகிவந்தால் இத்தகைய நச்சுபொருட்கள் எளிதாக வெளியேறும்.ioioi

இளமை தோற்றம் பெற

சிலர், குறைந்த வயதிலேயே முகத்தில் முதிர்ச்சி ஏற்பட்டது போல் தோன்றுவர்.

அவர்கள் தேனை தினமும் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். தேனில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட் முகம் பொலிவு பெற உதவும்.

கேசம் நன்மை பெற

தேனை தடவினால் முடி வெள்ளையாகிவிடும் என்று சிலர் தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். எனினும் அது உண்மையல்ல.

தற்போது முடிக்கு பயன்படுத்தும் பல விதமான கண்டிஷ்னர்களில் தேன் கலக்கப்படுகிறது என்பதே இதற்கு சான்று.

ஒரு ஸ்பூன் தேனுடன் இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து முடிக்கு பயன்படுத்தலாம்.

இது ஒர் சிறந்த கண்டிஷ்னராக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

hyu

The post தினமும் தேன் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரிய அகதிகளின் 50 குடும்பங்களுக்கு வழங்கும் வர்த்தகர்

Posted: 28 Nov 2015 10:15 AM PST

Jim_Estill_-_11282015

Jim_Estill_-_11282015

ஒன்ராறியோ வர்த்தகரான அவர் தனது தனிப்பட்ட செலவில் 50 சிரிய நாட்டு அகதி குடும்பங்களை கனடாவுக்குள் அழைத்து வந்து குடியேற்றவுள்ளதாக தெரவித்துள்ளார்.

தமது இந்த உதவி் துன்பங்கைளை அனுபவித்துவரும் சிரிய அகதிகளை அழைத்வரும் நடைமுறைகளில் ஏற்படும் காலதாமத்தினை குறைக்கும் என நம்புவதாகவும் ஜிம் எஸ்டில் எனப்படும் அந்த வர்த்தகர் கருத்து வெளியிட்டுள்ளார்.

50 சிரிய அகதிக் குடும்பங்களை அழைத்துவந்து ஒன்ராறியோவின் குவெல்ஃப் (Guelph) நகரில் குடியேற்றப் போவதாகவும், அதற்கு ஏற்படும் சுமார் 1.5 மில்லியன் டொல்ரகளை தனது சொந்த நிதியிலிருந்து செலவு செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.Jim_Estill_-_11282015

சிரிய அகதி மக்களை நாட்டுக்குள் அழைத்து வருவது மட்டுமின்றி அவர்களுக்கான வீடு, மொழிப் பயிற்சி, உடை, வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகள் உள்ளிட்டவற்றையும் தனது செலவிலேயே மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அகதி மக்களை அழைத்துவந்து அவர்களுக்கான தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதனை பெரும் சுமையாக கருதவில்லை எனவும் வர்தகராக ஜிம் எஸ்டில் தெரவித்துள்ளார்.

The post சிரிய அகதிகளின் 50 குடும்பங்களுக்கு வழங்கும் வர்த்தகர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழர்களுக்கு ஆதரவாக அமைந்த கனேடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு

Posted: 28 Nov 2015 09:17 AM PST

MV_Sun_Sea_-_1128

MV_Sun_Sea_-_1128வழக்கு ஒன்று தொடர்பில் கனேடிய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2009,2010ஆம் ஆண்டுகளில் Sun Sea, Ocean Lady கப்பல்கள் கப்பல் மூலம் கனடாவை வந்தடைந்த தமிழர்கள்களின் வழக்கு தொடர்பில் வழங்கிய தீப்பிலேயெ அவர்களுக்க ஆதரவான வகையில் கனேடிய உச்ச நீதிமன்ற இரண்டு தீர்ப்புக்களை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் முதலாவது தீர்ப்பில் MV Sun Sea கப்பல் மூலம் அகதிக் குடிவரவாளர்களை கனடாவுக்கு அழைத்துவர உதவியர்களை ஆள் கடத்தல்காரர்கள் என்ற வகைக்குள் அடக்கமுடியாது என தெரிவித்துள்ளது.

அத்துடன், தஞ்சக் கோரிக்கையாளர்களை கப்பல் மூலம் கனடாவுக்குள் கடத்தி வந்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு தமிழர்களும், மீண்டும் அகதிக் கோரிக்கையை முன்வைத்து, விசாரணைகளை எதிர்கொள்ளமுடியும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.MV_Sun_Sea_-_1128

அவ்வாறே 2009ஆம் ஆண்டில் Ocean Lady கப்பல் மூலம் பயணம் மேற்கொண்ட மேலும் நால்வருக்கு புதிய அகதிக் கோரிக்கை வழக்குகள் நடத்தப்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது இரண்டாவது முடிவில் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையிலான குடிவரவு சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளது எனவும், குறிப்பாக இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனேடிய குவரவுத் திணைக்களத்தின் நிலைப்பாடு, கனேடிய அரசியல் சாசனத்திற்கு முரணானது எனவும் நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளையும் ஒடுக்கும் வகையில் சட்டங்கள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள நீதிமன்றம், பயணிகள் மற்றுமொருவருக்கு உதவிகளை வழங்குதல், அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றுமொரு உறவினருக்கு உதவிகளை வழங்குதல் போன்றனவும் தண்டனைக்குரிய குற்றமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான அனைத்துலக சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கனடாவின் சட்டங்கள் அமைய வேண்டுமென தெரிவித்துள்ள பிரதம நீதியரசர், கடந்த அரசாங்கத்தின் குடிவரவு சட்டங்கள் "தந்தை பிள்ளைக்கு போர்வையை வழங்கினாலும், சக படகுப் பயணிகள் உணவைப் பகிர்ந்து கொண்டாலும்" குற்றமாகக் கருதப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழர்களுக்கு ஆதரவாக அமைந்த கனேடிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™