Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பாரிஸ் புறப்படுகிறார் பிரதமர் மோடி

Posted: 28 Nov 2015 10:05 PM PST

பாரிசில் நாளை பருவநிலை மாநாடு தொடங்கவுள்ள நிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்சிற்கு புறப்பட்டு செல்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பருவநிலை மாநாடு வரும் 30ம் தேதி(நாளை) தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கவுள்ளன.

ஒட்டு மொத்த ராணுவம் வந்தாலும் தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீரை பாதுகாக்க முடியாது: பரூக் அப்துல்லா

Posted: 28 Nov 2015 09:53 PM PST

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்–மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

மத்திய பிரதேசத்தில் மதுவுக்கு தடை விதிக்க முடியாது: முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான்

Posted: 28 Nov 2015 09:27 PM PST

மத்தியப்பிரதேதச்தில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியின் 10 ஆண்டு நிறைவையொட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்படுவதாக முதல்–மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளாரே அது போல் மத்தியப்பிரதேசத்தில் மதுவிற்பனை தடை செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் ராகேஷ் மரணம்

Posted: 28 Nov 2015 08:14 PM PST

தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 24 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான். தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் பொம்மாரெட்டி குடெம் கிராமத்தில் தின கூலி வேலை செய்பவர்களின் மகன் ராகேஷ் (வயது 3). இந்நிலையில் ராகேஷின் பெற்றோர் வேலையில் ஈடுபட்டு

இந்தி படப்பிடிப்பில் நடிகர் அமீர்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 28 Nov 2015 06:18 PM PST

நடிகர் அமீர்கான் சகிப்பு தன்மை பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்டார். பாதுகாப்பின்மை நிலவுவதாகவும் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாம் என்று தனது மனைவி தன்னிடம் வற்புறுத்தியதாகவும் அவர் கூறினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூகவலைத்தளங்களிலும் பலர் கண்டித்தனர். சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அமீர்கான் தற்போது 'டங்கல்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் ப

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்க சுற்றுலாப்பயணி கைது

Posted: 28 Nov 2015 04:13 PM PST

பதின்ம வயதில் உள்ள ஒரு சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவரை கொல்கத்தா போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள 5 நட்சத்திர உணவு விடுதியான போஷிற்கு நேற்று

மோடியுடன் செல்பி எடுத்துக்கொள்ள நிருபர்கள் போட்டாபோட்டி: செல்பி சர்க்கஸ் என ஒமர் அப்துல்லா காட்டம்

Posted: 28 Nov 2015 04:06 PM PST

டெல்லி பாரதீய ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி விருந்து அளித்தார். அப்போது அவருடன் 'செல்பி' படம் எடுத்துக்கொள்ள பத்திரிகையாளர்கள் போட்டா போட்டி போட்டனர்.

இந்துக்கள் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அசாம் கவர்னர்: ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம்

Posted: 28 Nov 2015 03:57 PM PST

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா, இந்தியா இந்துகளுக்கானது. மற்ற நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடிவரும் இந்துக்களை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை என கூறினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வன்முறை; 2 பேர் பலி

Posted: 28 Nov 2015 03:44 PM PST

உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மெயின்புரி மாவட்டத்தில் நேற்று நடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அங்குள்ள சிர்ரா கிராம பஞ்சாயத்துக்கு தேபு யாதவ் மற்றும் பப்பு யாதவ் என்பவர்கள்

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனை

Posted: 28 Nov 2015 03:44 PM PST

நாடு முழுவதும் ஒரே சீராக மறைமுக வரி வசூலிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் தீவிரமாக உள்ளது. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மேல்-சபையில் ஆளுங்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாமல், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோவை அடுத்து வாஷிங்டன்னுக்கும் நேரடி விமான சேவை: ஏர் இந்தியா அதிரடி

Posted: 28 Nov 2015 03:13 PM PST

அண்மையில் புதுடெல்லியிலிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவித்த ஏர் இந்தியா விரைவில் வாஷிங்டன்னுக்கும் நேரடி விமானத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த சதி? சந்தேகத்துக்கு இடமாக பறப்பதை சுட்டுத்தள்ள உத்தரவு

Posted: 28 Nov 2015 02:49 PM PST

டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஏதேனும் பறந்தால், சுட்டுத்தள்ள பாதுகாப்பு அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சகிப்பின்மை குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதம்: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் நோட்டீசு ஏற்பு

Posted: 28 Nov 2015 02:49 PM PST

சமீபகாலமாக நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் நடந்த மாட்டிறைச்சி பிரச்சினை, கர்நாடகாவில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறி வரும் காங்கிரஸ், மார்க்சிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் என்று கோரி வந்தன.

2016-க்குள் இந்திய துறைமுகங்கள் ரூ.6 ஆயிரம் கோடி லாபத்தை ஈட்டும்: நிதின் கட்காரி

Posted: 28 Nov 2015 02:05 PM PST

இந்திய துறைமுகங்கள் வருகிற 2016-ம் ஆண்டிற்குள் ரூ.6 ஆயிரம் கோடியை லாபமாக ஈட்டும். இந்த லாபமானது துறைமுகங்களை முன்னேற்றுவதற்கு முதலீடு செய்யப்படும் என மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

செல்போன் விற்பனையில் இன்டெக்ஸ் முதல் இடம்

Posted: 28 Nov 2015 01:45 PM PST

இந்தியாவில் அதிகம் விற்கப்படும் செல்போன்களில் முதலிடத்தை ''இன்டெக்ஸ்'' போன்கள் பிடித்துள்ளதாக ஐ.டி.சி. க்யூ 3, 2015 அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை-செப்டம்பர் மாதத்துக்கு உட்பட்ட காலப்பகுதியில் 87 லட்சத்து 55 ஆயிரத்து 697 ''இன்டெக்ஸ்'' செல்போன்கள் இந்திய சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில்

அரசு ஊழியரை தாக்கிய வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் ஜெயில்

Posted: 28 Nov 2015 01:24 PM PST

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம் ஆர்னி-கேலாப்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜு தோட்சம். இவர் 2013-ம் ஆண்டில் பந்தர்காவ்டா மின்சார அலுவலகத்துக்கு ஆதரவாளர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டார். ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, ஒரு ஊழியரை கடுமையாக தாக்கினார்.

மத்தியப் பிரதேசத்தில் மதுவிலக்கு அமலாகாது: சிவ்ராஜ் சிங் சவுஹான்

Posted: 28 Nov 2015 12:18 PM PST

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்படாது. அதே நேரம், மது விலக்கை அமல்படுத்தும் எண்ணமும் இல்லை என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் கூறியுள்ளார். பீகாரில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மது விற்பனை தடை செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அண்மையில்

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை ராஜீவ் தடை செய்தது தவறு-சிதம்பரம்: இத ஒத்துக்க வெறும் 27 வருஷம்தா ஆச்சா?-ருஷ்டி

Posted: 28 Nov 2015 11:19 AM PST

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வேதங்கள் ('Satanic Verses') நாவலை ராஜீவ் அரசு தடை செய்தது தவறு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எழுத்தாளராக அறியப்படும் சல்மான் ருஷ்டி எழுதிய தி

நிலக்கரியை நதிகளின் வழியாக கொண்டு சென்றால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு மிச்சமாகும்: நிதின் கட்காரி

Posted: 28 Nov 2015 10:47 AM PST

கடந்த பல ஆண்டுகளாக சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டங்களே அதிகம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், நிறைய ஆறுகளை கொண்ட நம் நாட்டில் இதுவரை நீர் வழிப்போக்குவரத்து பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு, உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ராணுவ போர்ட்டர் ஒருவர் காயம்

Posted: 28 Nov 2015 09:41 AM PST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தின் சவுஜியன் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் சற்று முன்னர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ போர்ட்டர் ஒருவர் காயமடைந்ததாகவும் உடனடியாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™