Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்டிற்கு இந்த வார இறுதியில் கீமோ தெரபி சிகிச்சை

Posted: 25 Nov 2015 08:26 PM PST

ui

uiரொரன்ரோவின் முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,அவருக்கான இரண்டாம் கட்ட கீமோ தெரபி சிகிச்சைகள் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.

அந்த சிகிச்சைக்காக இந்த வார இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ள அவருக்கு சில மேலதிக மருத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்த புற்றுநோய்க் கட்டி ஒன்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் முற்றாக அகற்றப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டுள்ளமை கடந்த மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அவர் மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்.

எனினும் தமது சிகிச்சை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த ரொப் ஃபோர்ட், இரண்டு தடவைகளுக்கு மேல் கீமோ தெரபிக்கு செல்லவேண்டிய தேவை ஏற்படாது என எதிர்பார்ப்பு வெளியிட்டிருந்தார்.ui

இரண்டு கீமோ தெரபிகளுக்கு பின்னர், கட்டியை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிவிடலாம் எனவும், அது தனக்கான நத்தார் பரிசாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரொரன்ரோவின் நகரபிதாவாக பதவிவகித்து வந்த வேளையில் அவரது அடிவயிற்றுப் பகுதியில் புற்றுநோயக் கட்டி உருவானமை கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து, அடுத்த நகரபிதா தேர்தலில் அவர் போட்டியிடாது விலகியமை குறிப்பிடத்தக்கது.

The post முன்னாள் நகரபிதா ரொப் ஃபோர்டிற்கு இந்த வார இறுதியில் கீமோ தெரபி சிகிச்சை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகனத்தில் தனியாக விடப்பட்டிருந்த சிறுவர்கள் மீட்பு – பெற்றோர் கைது

Posted: 25 Nov 2015 08:08 PM PST

yu

yuசிறுவர்கள் இருவர் வாகனத்திற்குள் தனியாக உறங்கிக்கொண்டிருந்தமை தொடர்பில் ரொரன்ரோ தம்பதியினர் மீது காவல்த்துறையினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு ஒன்ராறியோவின் Port Perry இன் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூதாட்ட மையம் ஒன்றிற்கு தாம் அழைக்கப்பட்டிருந்தாகவும், அங்கு சென்ற போது அந்த சூதாட்ட மையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றினுள் இரண்டு குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்தாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த சிறுவர்களுள் மூன்று, ஐந்து வயதுடையவர்கள் எனவும். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் அவ்வாறு தனியாக விடப்பட்டிருந்தனர் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.yu

அப்போது வாகனத்தின் வெளியில் உறைநிலையை எட்டும் அளவில் குளிராக இருந்தது என்றும், சிறுவர்கள் இருவரும் குளிரால் பாதிக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது என்றும் விபரித்துள்ள காவல்த்துறையினர், எனினும் அவர்களுக்க மருத்துவ உதவிகள் தேவைப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.

வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் சிறுவகளுக்கான உதவி அமைப்பு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை சிறுவர்களின் தந்தையும், தாயும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

The post வாகனத்தில் தனியாக விடப்பட்டிருந்த சிறுவர்கள் மீட்பு – பெற்றோர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கார் ஒன்றினுள் உயிரிழந்து கிடந்த நபர்

Posted: 25 Nov 2015 10:53 AM PST

man_found_dead_in_car_in_Markham_-_11252015

man_found_dead_in_car_in_Markham_-_11252015மார்க்கம் பகுதியில் நபர் ஒருவர் கார் ஒன்றினுள் உயிரிழந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரொரன்ரோவின் வடக்கில்,Kennedy வீதி மற்றும் Elgin Mills வீதிப் பகுதியில், நிறுத்திவைக்கப்பட்ட காரினுள் குறித்த நபர் உயிரிழந்து கிடந்தாக கூறப்பட்டுள்ளது.

நேற்று நண்பகல் அளவில் குறித்த அந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனைக் காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த நபரின் மரணம் எவ்வாறு சம்பவித்தது என்பது தொடர்பிலான தகவல்கள் எவையும வெளியிடப்படவில்லை.man_found_dead_in_car_in_Markham_-_11252015

இந்த மரணம் குறித்து யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் இன்று வெளியிடப்படக்கூடும் என யோர்க் பிராந்திய காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post கார் ஒன்றினுள் உயிரிழந்து கிடந்த நபர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

10,000 சிரிய அகதிகளே இந்த வருடத்திற்குள் அழைத்துவரப்படுவர்

Posted: 25 Nov 2015 08:18 AM PST

Minister_of_Immigration_Refugees_and_Citizenship_John_McCallum__-11252015

Minister_of_Immigration_Refugees_and_Citizenship_John_McCallum__-11252015சிரிய அகதிகளை கனடாவினுள் அழைத்து வருவது தொடர்பான தனது திட்டத்தை மத்திய அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

அதன் பிரகாரம் இந்த வருடத்தினுள் 10,000 சிரிய அகதிகளே கனடாவினுள் அழைத்து வரப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளைக் கனடாவினுள் அழைத்து வருவதை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளதாகவும், அதன் பிரகாரம், டிசம்பர் 31ஆம் திகதிக்குள் அதாவது இந்த வருடத்திற்குள் 10,000 பேரே அழைத்துவரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 15,000 பேரும் இரண்டாவது பிரிவாக அடுத்த வருடம் பெப்ரவரி மாத இறுதிக்குள் கனடாவினுள் அழைத்து வரப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.Minister_of_Immigration_Refugees_and_Citizenship_John_McCallum__-11252015

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் திட்டமிட்டபடி 25,000 அகதிகளையும் அழைத்து வருவது என்பது கடினம் என்றும், அவர்கள் அனைவரையும் அழைத்துவருவதற்கு கூடிய காலம் பிடிக்கும் என்பதனாலேயே இவ்வாறு இரண்டு பிரிவுகளாக அழைத்துவருவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள இரண்டு பிரிவுகளாக அகதிகளை அழைத்து வரும் திட்டத்தை

எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறது என்ற துல்லிய விபரங்கள் எதனையும் நேற்று வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பெருமளவிலான அகதிகள் வருகை எப்போது ஆரம்பமாகும், அவர்களை அழைத்து வருவதற்கான மொத்தச் செலவீனம் என்பன தொடர்பான விபரங்களையும் அரசாங்க அதிகாரிகளால் வெளியிட முடியவில்லை.

இந்த திடடத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக செலவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிரிய அகதிகள் ரொரன்ரோவிலா மொன்றியலிலா தரையிறக்கப்படுவார்கள் என்பது தொடர்பிலோ, அகதிகளை கையாளும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் அழைக்கப்படுவார்களா என்பது தொடர்பிலும் தகவல்கள் வெளியிடப்படவில்லை

The post 10,000 சிரிய அகதிகளே இந்த வருடத்திற்குள் அழைத்துவரப்படுவர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சமையலறையில் உள்ள மசாலா பொருட்களின் மருத்துவ நன்மைகள்!

Posted: 25 Nov 2015 07:24 AM PST

9

9நோய்கள் நம்மை தாக்கும்போது மருத்துவரியின் பரிந்துரையின் பேரில் சில மருந்துகளை சாப்பிடுகிறோம்.

ஆனால், நாம் உண்ணும் உணவுகளே நமக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு தரும் மருந்தாகும் என்பதை மறந்துவிடக்கூடாது.

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவினை சமைக்கபயன்படுத்தும் மசாலா பொருட்களில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை தரும் சத்துக்கள் அடங்கியுள்ளன.

மஞ்சள்

இதில் உள்ள 'குர்குமின்' (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது.

செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு.

காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.9

குங்குமப்பூ

குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து.

முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி' (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது.ooi

இஞ்சி

இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது.

குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.iu

சீரகம்

உடலைச் சீராக வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால்தான், இதை சீரகம் என்கிறார்கள். செரிமான சக்தியை அதிகரிப்பது, வாத நோய்களைக் கட்டுப்படுத்துவது, குன்மம் என்ற கட்டிகளைக் குணப்படுத்துவது போன்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

இதில் உள்ள 'தைமோக்யூனைன்' (Thymoquinone) என்ற வேதிப் பொருள், புற்று நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது.

புற்றுநோய் உருவாகக் காரணமாய் இருக்கும் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

கணையத்தில் உள்ள 'பீட்டா' (Beta) செல்களைப் பாதுகாக்கிறது. வெறும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால்கூடப் போதும். உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது.o

பூண்டு

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. இதய நோய்க்குச் சிறந்தது. குறிப்பாக, இது மார்பகப் புற்றுநோயைத் தடுக்கிறது. கட்டிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

வயிற்றில் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி'(Helicobacter pylori) என்ற பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் பூண்டில் உள்ளது.

மேலும், லுகேமியா என்னும் ரத்தப் புற்றுச் செல்களை அழிக்கிறது. பூண்டை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.jop

The post சமையலறையில் உள்ள மசாலா பொருட்களின் மருத்துவ நன்மைகள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™