Tamil Star |
- ரொரன்ரோ ஆசிரியர் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப் பகுதியில் கொல்லப்பட்டார்
- கலிபோர்னியாவில் வாகன விபத்து – இரு கனேடியர்கள் பலில்
- அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – தாமாகவே மருத்துவமனைக்கு சென்ற நபர்
- தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!
| ரொரன்ரோ ஆசிரியர் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப் பகுதியில் கொல்லப்பட்டார் Posted: 20 Nov 2015 02:54 PM PST
மேற்குக் கரை மற்றும் ரெல் அவிவில் என்ற இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கத்திக் குத்துத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டர் என்றும், அதில் மூவர் இஸ்ரேலியர்கள் எனவும், மற்றும் பாலஸ்தீனர் ஒருவரும், அமெரிக்கர் ஒருவரும், கனேடியர் ஒருவரும் அடங்குவதாகவும் கூறப்பட்டது. அதில் உயிரிழந்த கனேடியர் ரொரன்ரோவைச் சேர்ந்த றேவ் டொன் என்ற ஆசிரியரும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த ஆசிரியா ரொரன்ரோவைச் சேர்ந்த றேவ் டொன் என்பவர் என ரொரன்ரோவில் இயங்கும் அரபு கல்வி நிறுவனம் ஒன்று நேற்று இரவு உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியர் 15 வருடங்களுக்கு முன்னர் தமது கல்வி நிறுவத்தில் நான்கு வருடங்கள் கடமையாற்றியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் அனைவராலும் மிகவும் விரும்ப்படும் ஆசிரியர் என்றும், குடும்பத் தலைவரான அவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாகவும் அந்த கல்வி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. The post ரொரன்ரோ ஆசிரியர் இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப் பகுதியில் கொல்லப்பட்டார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கலிபோர்னியாவில் வாகன விபத்து – இரு கனேடியர்கள் பலில் Posted: 20 Nov 2015 02:49 PM PST
அவர்கள் இருவரும் குறித்த விபத்து சம்பவித்த இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. இவர்களின் பிள்ளைகளில் ஒருவர் கல்கரியிலும், மற்றையவர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் வசித்து வருவதாகவும், தந்தையின் மரணம் தொடர்பிலான விவகாரத்தினை தற்போது இவ்விருவரும் கையாண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கோல்ஃப் விளையாட்டு ஊர்தி மீது SUV ரக வாகனம் ஒன்று மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது. The post கலிபோர்னியாவில் வாகன விபத்து – இரு கனேடியர்கள் பலில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – தாமாகவே மருத்துவமனைக்கு சென்ற நபர் Posted: 20 Nov 2015 09:49 AM PST
அதிகாலை 1.30 மணிக்கு சற்று முன்னராக துப்பாக்கிச் சூட்டிற்கு ஆளான அந்த நபர் Humber River மருத்துவமனைக்கு தானாகவே நடந்து சென்றுள்ளார். அதேவேளை அந்த நபர் சிறிய காயத்திற்கே உள்ளாகியுள்ளார் என்றும், அந்த காயம் அவரின் காலில் ஏற்பட்டிருந்தது என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணையாளர்கள் எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் குறித்த தகவல்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை. The post அதிகாலையில் துப்பாக்கிச் சூடு – தாமாகவே மருத்துவமனைக்கு சென்ற நபர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! Posted: 20 Nov 2015 07:19 AM PST
தினமும் காலையில் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வந்தால், வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். மேலும், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். விட்டமின்கள், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும். இதே பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். கண்களில் கருவளையங்களை கொன்டவர்கள் பலர் உண்டு. அது மிகவும் அசிங்கமாக இருக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால் போதும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும். வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள Platelets- களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது. The post தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இஸ்ரேல் பாலஸ்தீன எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்கு கரைப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களுள் ரொரன்ரோவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோனியாவில் இரண்டு வாகனங்கள் மோதிக்ககொண்ட விபத்தொன்றில் கனடாவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான நபர் தானாகவே மருத்துவமனைக்கு சென்றுள்ள சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும்.