Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தீ சம்பவம் – 5 வயது சிறுவன் மருத்துவமனையில்

Posted: 17 Nov 2015 08:04 PM PST

kj

kjவீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் அவசர வான்னூர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிராபத்தான நிலையிலேயே சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் அளவில் 108 Tanners Drive பகுதியில் இருந்த வீடு ஒன்று தீப்பற்றியதாக ஹால்ட்டன் ஹில்ஸ் (Halton Hills)தீயணைப்புத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட புகையில் சிக்கியே சிறுவன் உயிராபத்தான நிலைக்கு சென்றிருந்தாகவும், அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுவனை அவசர உலங்கு வான்னூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.kj

அத்துடன் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது சிறுவனின் நிலை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post தீ சம்பவம் – 5 வயது சிறுவன் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மொசாம்பிகில் கனடாவிற்கு சொந்தமான கனியவளச் சுரங்கம தீவைத்து அழிப்பு

Posted: 17 Nov 2015 12:23 PM PST

k

kமொசாம்பிக் நாட்டில் காணப்பட்ட கனடாவிற்கு சொந்தமான கனியவளச் சுரங்கம் ஒன்று தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாகவே அவ்வாறு தீ வைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது.

சுரங்கப் பகுதிக்குச் சென்று கலவரக்காரர்கள், அங்கிருந்த சுரங்கத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திவிட்டு சுரங்கத்திற்கு தீவைத்து கொழுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

கலவரக்காரர்களால் சுரங்கம் தீவைத்து அழைக்கப்பட்டதை அடுத்து கனடாவிற்க சொந்தமான அந்த சுரங்க நிறுவனத்தின் பிரதிநிதிகள் அங்கிருருந்து வெளியேறி சுமார் 120 கிலோமீடடர் தொலைவில் உள்ள நாம்பூலா என்ற நகருக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.k

குறித்த சுரங்கப் பகுதியில் தொடர்ந்தும் கலவரக்காரர்கள் நிலைகொண்டுள்ளதனால், அந்த பகுதிக்கு வெளியார் செல்வதனை அந்த நாட்டு காவல்த்துறையினர் தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post மொசாம்பிகில் கனடாவிற்கு சொந்தமான கனியவளச் சுரங்கம தீவைத்து அழிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பீட்டர்பொறோ பள்ளிவாசல் தீ வைப்பு – அரசியல் தலைவர்கள் கண்டனம்

Posted: 17 Nov 2015 09:46 AM PST

mosque_-_____Peterborough_-1117

mosque_-_____Peterborough_-1117பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பத்திற்கு பிரதமர் ஜஸ்டின் ரூடோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

ஒன்ராறியோவின் பீட்டர்பொறோ(Peterborough) பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் குறித்த தாம் வருத்தம் கொண்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அந்த தாக்குதல் சம்பவத்தை வெறுப்புத் தன்மை மிக்ககுற்றச் செயல் என குறிப்பிட்ட பிரதமர், அந்த குற்றச் செயலை புரிந்த சூத்திரதாரிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் காவல்த்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சம்பவத்தின் பி்ன்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து தண்டிப்பதற்கு அனைத்துவித நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்ளும் என கனேடிய முஸ்லிம்களுக்கு பிரதமர் உறுதியளித்துள்ளார்.mosque_-_____Peterborough_-1117

தீவிரவாதிகளின் தாக்குதல்களால் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்களும் பலியாகி வருவதனை கனேடியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது முக்கியமானத என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பள்ளிவாசலுக்கு வாராவாரம் தொழுகைக்கு செல்லும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு கனேடிய அரசாங்கமும், அமுலாக்கத்துறை அதிகாரிகளும் உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள் என்றும் பிரமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அதேபோல ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கண்டனம் வெளியிடுகையில்,கடந்த வாரம் பாரீசில் இடம்பெற்ற கொடூரச் செயலுக்கு இவ்வாறு வஞ்சம் தீர்ப்பது பதிலாக அமையாது என தெரிவித்துள்ளார்.

கத்தலி்ன் வின் மட்டுமின்றி இன்று ஒன்ராறியோ சட்டசபையில் கூடியிருந்த மூன்று அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாரீஸ் தாக்குதலுக்கு கண்டனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபமும் தெரிவித்துள்ளனர்.

பாரீசில் இடம்பெற்றது பயங்கரவாதத்தின் மிகக் கொடுஞ் செயல் என வர்ணித்துள்ள முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுன், பீட்டர்பொறோவில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு குறித்த ஒரு சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஒன்ராறியோவில் எப்போதும் இடமில்லை என்பதனை வலியுறுத்தியுள்ள புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்றியா ஹோர்வத் (Andrea Horwath), ஒன்ராறியோவின் அனைத்து மக்களும் முஸ்லிம் மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post பீட்டர்பொறோ பள்ளிவாசல் தீ வைப்பு – அரசியல் தலைவர்கள் கண்டனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேப்ப எண்ணெயின் மருத்துவ பலன்கள்

Posted: 17 Nov 2015 07:22 AM PST

hj

hjதோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறந்த கிருமி நாசினி தான் வேப்ப எண்ணெய்.

வேப்ப மரத்தின் இலை, காய், பழம் என அனைத்து உறுப்புகளுமே மருத்துவ குணம் கொண்டது.

குறிப்பாக இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சிறந்த கிருமிநாசினியாகும்.

தயாரிப்பது எப்படி?

வேப்ப எண்ணெய் (Neem oil) என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில்(வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும்.

கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர்.

அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது.

பலன்கள்

* இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சொரியாசிஸை குணப்படுத்தலாம்.

* வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.hj

* வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* வேப்ப எண்ணெயை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணெய்யை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

The post வேப்ப எண்ணெயின் மருத்துவ பலன்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™