மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- வங்காள தேசத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அனுப் சேதியா கவுகாத்திக்கு அழைத்து வரப்பட்டார்
- மேயர்–கணவர் சுட்டுக்கொலை: தலைமறைவான மருமகனை பிடிக்க அதிரடி வேட்டை
- ஓடும் ரெயிலில் இருந்து பெண் போலீஸ் கீழே தள்ளிவிட்டதில் பயணி பலி: தண்டவாளத்தை மறித்து பொதுமக்கள் மறியல்
- மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
- காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நினைவுநாள் அனுசரிப்பதா?: அசாம் முதல் மந்திரி கடும் கண்டனம்
- சுப்பிரமணியசாமி மிகப்பெரிய பொய்யர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கண்டனம்
- தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பதில் மனு
- சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் தலைமை நீதிபதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை- மத்திய அரசு விளக்கம்
- பிரசவத்தில் குழந்தையை வெளியே எடுத்தபோது தலை தனியாக வந்தது: குப்பைத் தொட்டியில் வீசிய டாக்டரிடம் விசாரணை
- ஆந்திராவில் மழைக்கு 5 பேர் பலி
- தன்னை தேடும் சி.பி.ஐ. அதிகாரிக்கு போன் செய்து பேசிய தாவூத் இப்ராஹிம்
- ரெயிலில் குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.5-லிருந்து ரூ.10-ஆக உயர்கிறது - புறநகர் ரெயில்களுக்கு பொருந்தாது
- விருதுகளை திருப்பி அளித்தவர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ராஜ்நாத் சிங்
- தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா, வங்காளதேசம் ஒப்புதல்
- ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்: மக்களவை சபாநாயகருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்
- ராகுல் காந்தியை தலைவராக்க இதுவே சரியான தருணம்: சச்சின் பைலட் ஆதரவு குரல்
- இருசக்கர வாகன விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா
- ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: ராணுவ கர்னல் பலி
- ஆணும், பெண்ணும் வகுப்பறையில் ஒன்றாக அமர்வதா? கேரள கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு
- கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் கையைவிட்டு பக்கோடா போடும் பவர்ஃபுல் மாஸ்டர்: வைரல் வீடியோ
| வங்காள தேசத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அனுப் சேதியா கவுகாத்திக்கு அழைத்து வரப்பட்டார் Posted: 17 Nov 2015 10:07 PM PST அசாம் மாநிலத்தைச் சேர்ந்த உல்பா தீவிரவாதி அனுப் சேதியா. இவர் அந்த அமைப்பின் செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, ஆள் கடத்தல்கள் மற்றும் கட்டாய வசூல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அதற்காக அவரை போலீசார் தேடி வந்தனர். எனவே, அவர் இந்தியாவில் இருந்து தப்பி வங்காள தேசத்திற்குள் புகுந்தார். அங்கு அவரை கடந்த 1997-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். |
| மேயர்–கணவர் சுட்டுக்கொலை: தலைமறைவான மருமகனை பிடிக்க அதிரடி வேட்டை Posted: 17 Nov 2015 09:53 PM PST ஆந்திர மாநிலம் சித்தூர் மாநகராட்சி மேயராக இருந்தவர் கட்டாரி அனுராதா (வயது 50). இவரது கணவர் கட்டாரி மோகன். இருவரும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள். நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு கட்டாரி அனுராதாவும், கட்டாரி மோகனும் சென்றனர். 2 பேரும் அங்குள்ள அறையில் இருந்தனர். உடன் |
| Posted: 17 Nov 2015 09:21 PM PST மேற்கு வங்காளம் மாநிலம், ஹூக்லி மாவட்டத்தில் பெண்களுக்கான சிறப்பு ரெயிலில் பயணித்த ஒரு ஆண் பயணியை ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் கீழே தள்ளியதில் அவர் உயிரிழந்ததையடுத்து, ரெயில் பாதைகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹூக்லி மாவட்டத்திலுள்ள பத்ரகாளி பகுதியைச் சேர்ந்த தீபக் ஷர்மா(40) என்பவர் நேற்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஹவுரா-பன்டேல் நிலையங்களுக்கு இடையில் ஓடும் மத்ரிபூமி புறநகர் ரெயிலில் |
| மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் Posted: 17 Nov 2015 09:18 PM PST சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் 1–ந்தேதியான நேற்று மண்டல பூஜை தொடங்கியது. இதையொட்டி சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடையை திறந்துவைத்து சுவாமி அய்யப்பனுக்கு பூஜைகள் நடத்தினார். காலை 11 மணிக்கு அய்யப்பனுக்கு களபாபிஷேகம் நடை |
| காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நினைவுநாள் அனுசரிப்பதா?: அசாம் முதல் மந்திரி கடும் கண்டனம் Posted: 17 Nov 2015 07:46 PM PST மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு நினைவுநாள் அனுசரிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அசாம் முதல் மந்திரி தருண் கோகாய், இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க.வும் மவுனம் காத்துவருவது ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். |
| சுப்பிரமணியசாமி மிகப்பெரிய பொய்யர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கண்டனம் Posted: 17 Nov 2015 07:21 PM PST ராகுல் காந்தியின் இங்கிலாந்து குடியுரிமை விவகாரம் பற்றிய சுப்பிர மணியசாமியின் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் "சுப்பிரமணியசாமி மிகப்பெரிய பொய்யர்" என்று ஆவேசமாக கூறியுள்ளார். |
| தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பதில் மனு Posted: 17 Nov 2015 04:15 PM PST தமிழ்நாட்டுக்கான தண்ணீரை உடனடியாக திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. இதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 'தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது' என்று தெரிவித்துள்ளது. |
| சொத்துகுவிப்பு வழக்கு: முன்னாள் தலைமை நீதிபதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை- மத்திய அரசு விளக்கம் Posted: 17 Nov 2015 02:27 PM PST சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். இவர் தனது பதவிக்காலத்தில் தனது உறவினர்கள் பெயரில் சொத்து குவித்திருப்பதாக ஒரு தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிற்கு உதவும்படி மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டது. |
| Posted: 17 Nov 2015 01:05 PM PST உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 32 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அன்று மாலை அவருக்கு ஒரு டாக்டரும், சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர். |
| ஆந்திராவில் மழைக்கு 5 பேர் பலி Posted: 17 Nov 2015 12:37 PM PST வங்க கடலில் தமிழகத்தின் அருகே நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திர கடலோர பகுதியில் நேற்று நிலைகொண்டு இருந்தது. இது தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| தன்னை தேடும் சி.பி.ஐ. அதிகாரிக்கு போன் செய்து பேசிய தாவூத் இப்ராஹிம் Posted: 17 Nov 2015 11:51 AM PST மும்பை மூத்த போலீஸ் அதிகாரி நீரஜ் குமார். இவர் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளில் நடைபெற்ற சூதாட்ட புகார் குறித்த விசாரணையை மேற்பார்வை செய்தவர் ஆவார். அப்போது இந்த சூதாட்ட விவகாரங்களில் பிரபல நிழல் உலக தாதா தாவுத் |
| Posted: 17 Nov 2015 10:52 AM PST ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு இடையூறாக நடைமேடையில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தி மத்திய ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. |
| விருதுகளை திருப்பி அளித்தவர்கள் தங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ராஜ்நாத் சிங் Posted: 17 Nov 2015 10:02 AM PST பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம், உத்தரபிரதேசத்தின் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் போன்றவை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் நிலவும் சகிப்புத்தன்மையற்ற |
| தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா, வங்காளதேசம் ஒப்புதல் Posted: 17 Nov 2015 08:48 AM PST தீவிரவாதிகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்தியா மற்றும் வங்காளதேசம் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற உள்துறை செயலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது. வங்காள தேசத்தில் கைது செய்யப்பட்ட உல்பா எனப்படும் அசாம் |
| ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்: மக்களவை சபாநாயகருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம் Posted: 17 Nov 2015 08:24 AM PST ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமை பெற்ற நபர் என்று கூறி, அது தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். |
| ராகுல் காந்தியை தலைவராக்க இதுவே சரியான தருணம்: சச்சின் பைலட் ஆதரவு குரல் Posted: 17 Nov 2015 08:19 AM PST காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக உள்ள ராகுல்காந்தி, தலைவர் பொறுப்பை ஏற்க இதுவே சரியான தருணம் என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சச்சின் பைலட் கூறியுள்ளார். நாடுமுழுவதும் இந்த கோரிக்கை ஒலிக்கத் துவங்கியுள்ளதாகவும், பீகார் தேர்தல் முடிவுகள் ராகுல்காந்தியின் பங்களிப்பை வெளிப்படுத்துவதாகவும் |
| இருசக்கர வாகன விற்பனையில் புதிய சாதனை படைத்த ஹோண்டா Posted: 17 Nov 2015 07:51 AM PST அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வாகன விற்பனைத்துறையில் முன்னணியில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் ஒரே நாளில் 2.2 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. |
| ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: ராணுவ கர்னல் பலி Posted: 17 Nov 2015 06:49 AM PST ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கர்னல் ஒருவர் பலியானார். 2 பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், ஹாஜி நாகாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. |
| ஆணும், பெண்ணும் வகுப்பறையில் ஒன்றாக அமர்வதா? கேரள கல்வித்துறை மந்திரி எதிர்ப்பு Posted: 17 Nov 2015 06:10 AM PST கல்லூரிகளில் ஆண்களும், பெண்களும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நடைமுறைக்கு, முஸ்லிம் லீக் தலைவரும், கேரள மாநில கல்வித் துறை மந்திரியுமான அப்து ராப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கோழிக்கூட்டில் 67 வருட பாரம்பரியத்தைக் கொண்டது பாரூக் கல்லூரி. இந்த கல்லூரியில், மாணவர்களும், மாணவிகளும் ஒரே |
| கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் கையைவிட்டு பக்கோடா போடும் பவர்ஃபுல் மாஸ்டர்: வைரல் வீடியோ Posted: 17 Nov 2015 05:22 AM PST வாணலியில் கொதிக்கும் எண்ணெய்யில் ஒரே ஒரு சொட்டு கையில் பட்டாலே அய்யோ...அம்மா!!! என்று அலரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு 'ராம் பாபு' சூப்பர் மேன்தான். 60 வயதாகும் ராம் பாபு, உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |