Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


வினிபெக் சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கை

Posted: 14 Nov 2015 06:27 PM PST

yt

ytவினிப்பெக்கில் அமைந்துள்ள கனேடிய மத்திய சிறைச்சாலை வளாகத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனை ஒட்டி சிறைச்சாலைக்கான அனைத்து உள்நுளைவு, வெளிச்செல்லும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேடுதல் நடவடிக்கைகள் முடிவடைய சுமார் நான்கு நாட்கள் எடுக்கும் என்றும், அதுவரையில் அந்த சிறைச்சாலைக்கு வெளியார் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்தே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அதி உச்ச மற்றும் இடைநிலை பாதுகாப்பு தேவைப்படும் கைதிகளை கொண்டுள்ள இந்த சிறைச்சாலையின் பணியாளர்கள் மற்றும் சிறைக் கைதிகளின் பாதுகாப்பினை இந்த தேடுதல் நடவடிக்கையின் மூலம் உறுதிப்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.yt

தேடுதல் நடவடிக்கையில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் குழு ஒன்றின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும்,அவர்கள் சிறைச்சாலைக்குள் அவ்வாறான தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருக்கின்றனவா என்பது தொடர்பில் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் அந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வின்னிபெக்கின் வட பகுதியில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை வளாகம் மீதான இந்த தேடுதல் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறான ஒன்று என கனேடிய சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த துறை தெரிவித்துள்ளது.

The post வினிபெக் சிறைச்சாலையில் தேடுதல் நடவடிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Milton பகுதியில் பதின்ம வயது ஆண் மீது கத்திக்குத்து

Posted: 14 Nov 2015 05:04 PM PST

j

jMilton பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் காயமடைந்த பதின்ம வயது நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று  இரவு வீடு ஒன்றில் இந்த கத்திக்கத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து இரவு 11.30 மணியளவில் Yates Drive பகுதியில் இருந்த அந்த வீட்டிற்கு காவல்த்துறையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதின்ம வயதுடைய குழுவினர் இடையே சண்டை ஏற்பட்டிருந்ததாகவும், அவர்கள் ஒருவர் மற்றவர் மீது பியர் போத்தல்களை எறிந்து தாக்குதல் நடாத்தியதாகவும் தெரிவித்த காவல்த்துறையினர், இதன் போதே ஒருவர் கத்திக்குத்துக் காயத்திற்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த அந்த பதின்ம வயது ஆண் உடனடியாக ஹமில்ரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், எனினும் அவருக்கு உயிராபத்தான காயம் இல்லை என்றும் காவல்த்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.j

அதேவேளை இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடைந்ததான முறைப்பாடுகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்று அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்த்துறையினர் விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்த கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்த்துறையினருடன் அல்லது குற்றத்தடுப்புப் பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

The post Milton பகுதியில் பதின்ம வயது ஆண் மீது கத்திக்குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் வீடொன்றில் இறந்து கிடந்த பெண்

Posted: 14 Nov 2015 04:08 PM PST

y

yஸ்காபரோவில் உள்ள அடுக்குமாடிக் குடியிரு்ப்புப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் இறந்து கிடக்க காணப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Sheppard மற்றும் Warden அவனியூவிற்கு அருகில் உள்ள கட்டத்திற்கு நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் தாம் வரவழைக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது அந்த கட்டடத்தின் ஒரு தளத்தில் குறித்த பெண் உணர்வற்ற நிலையில் கிடந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த அந்த பெண்மணி உயிரிழந்து கிடந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரில் உயிரிழப்பு இயல்பானது இல்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளார்.y

பெண்ணின் உயிரழப்புக்கான காரணம் குறித்து தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அத்துடன் இவரின் இந்த கொலை குறித்து சந்தேகம் நிலவுவதனால், கண்காணி்ப்பு ஒளிப்படக் கருவி உள்ளிட்டவையில் உள்ள தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post ஸ்காபரோவில் வீடொன்றில் இறந்து கிடந்த பெண் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்

Posted: 14 Nov 2015 08:10 AM PST

p

pநமது உடலில் தோல் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் புறஊதாக்கதிர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றவற்றில் இருந்து நமது உடலை காக்கும் பணியை மேற்கொள்கிறது.

எனவே, தோலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதனை பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் தோலினை பளபளப்பாகவும் வைத்திருங்கள்.

கீழே கொடுக்கப்பட்ட 5 உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் தோலினை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.

பூசணிக்காய்

பூசணிக்காயில் விட்டமின் ஏ, ஈ, பொட்டாசியம், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடண்ட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன.

இவை தோலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தோலினை பளபளப்பாக்க உதவுவதால், இதனை பாஸ்தாவுடன் சேர்த்தோ அல்லது சூப் செய்து குடிக்கலாம்.po

அவகேடோ

அவகேடோவில் ஆன்டிஆக்ஸிடண்ட்களான லுட்டின்(Lutein), கரோட்டின்(carotein) போன்றவை நிறைந்துள்ளதால், அவை தோலினை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

அவகேடோவை ஆரஞ்சு சாறுடன் சேர்த்து குடிக்கலாம்.o

மாதுளம்பழம்

மாதுளம்பழத்தில் விட்டமின் மற்றும் tannins சத்துக்கள் நிறைந்துள்ளதால் தோலினை மென்மையாக்கும், மேலும் தோலில் விழும் அழுக்கு கோடுகளை அழிக்கவல்லது.

இதனை தினமும் சாலட் செய்து சாப்பிடுங்கள்.l

வால்நட்

விட்டமின் பி நிறைந்துள்ள வால்நட், நமது தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கை எதிர்ப்பானாக செயல்படுகிறது.

மேலும் மற்ற உணவுகளில் இருப்பதை விட இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் சக்திவாய்ந்ததாக உள்ளது, எனவே தோலிற்கு மிகுந்த பாதுகாப்பினை தருகிறது.

 

p

கிவி

கிவி பழத்தில் விட்டமின் ஈ நிறைந்துள்ளது, மேலும் இயற்கையாகவே சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் பழமாகும்.

இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது.jh

The post உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

தினமும் உலர்திராட்சை…நன்மைகளோ ஏராளம்!

Posted: 14 Nov 2015 07:55 AM PST

jk

jkகிஸ்மிஸ்பழம் என்றழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

திராட்சை பழத்தை விடவும் இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது, சுக்ரோஸ், ப்ராக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்கு பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.

இதே பிரச்னை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு, காலையில் கண்விழித்ததும் உலர் திராட்சையை நசுக்கி, அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்னை சரியாகிவிடும்.

கர்ப்பிணிகளுக்கு வாய் குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்த மாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

இதேபோன்று மாதவிடாய் வலியால் அவஸ்தைப்படும் பெண்கள், ஊறவைத்த உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.jk

எடை குறைவாக இருக்கிறவர்கள், உடம்பில் சூடு அதிகம் உள்ளவர்களும் திராட்சையை சாப்பிடலாம்.

அதுமட்டுமின்றி எலும்புகள் வலுவாக இருப்பதற்கு உலர்திராட்சை சாப்பிடலாம், ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளது.

உலர்திராட்சையை அப்படியே பயன்படுத்தக் கூடாது. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு, பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவிய பின்தான், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

The post தினமும் உலர்திராட்சை…நன்மைகளோ ஏராளம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™