Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஜஸ்டின் ரூடோவிற்கான ஆதரவு நிலைப்பாடு மேலும் அதிகரிப்பு

Posted: 12 Nov 2015 08:08 PM PST

oi

oiபுதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கான ஆதரவு நிலைப்பாடு கனேடிய மக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.தேர்தலின் பின்னர் அவருக்கான ஆதரவு தொடர்பான கருத்துக் கணிப்பொன்றை 'த ஃபோரம் றிசேர்ச்"(The Forum Research) அமைப்பு நடாத்தியிருந்தது.அந்த கருத்துக் கணிப்பீட்டில் இருந்து தேர்தலி்ன் பின்னராக காலப்பகுதியில் பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கான ஆதரவு நிலைப்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

தேர்தல் முடிவடைந்து வெறும் மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில்,பிரதமர் மீதான ஆதரவு நிலைப்பாடு முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பினை காட்டுவதாகவும்,ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கையில் இருந்து ஆதரவு வெளியிடாதோரின் எண்ணிக்கையை கழித்த போதிலும், அது 40 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாகவும் கருத்துக் கணிப்பினை நடாத்திய நிறுவனத்தின் அதிகாரி ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

oi

இதேவேளை 72 சதவீத மக்கள் தேர்தல் முடிவுகளில் தாம் திருப்தி அடைவதாகவும்,அவர்களில் 40 சதவீத மக்கள் தாம் மிகவும் திருப்தி கொள்வதாகவும் கருத்துக் கூறியுள்ளனர்.

லிபரல் கட்சி தலைமையிலனா புதிய நாடாளுமன்ற அமைச்சரவையில் ஆண் பெண் இரு பாலாருக்கும் சமமான அளவில் அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அதன் காரணமாகவும் புதிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் இந்த நடவடிக்கைக்கும் கனேடியர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளமை பெரும்பாலான கனேடியர்களால் வரவேற்கப்பட்டுள்ளதுடன், பாலியல் சமத்துவத்துடனான பிரதமரின் நடவடிக்கையை 70 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் வரவேற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜஸ்டின் ரூடோவிற்கான ஆதரவு நிலைப்பாடு மேலும் அதிகரிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

2 சிறுவர்கள் பலியான வாகன விபத்து: 17 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

Posted: 12 Nov 2015 07:52 PM PST

gf

gfஇரண்டு சிறுவர்கள் பலியானதுடன், மேலும் நான்கு சிறுவர்கள் படுகாயமடைந்த வாகன விபத்து தொடர் பில் ஒன்ராறியோவின் வோன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 24ஆம் திகதி வோன் பகுதியின் பைன் வெலி ட்ரைவில் இடம்பெற்ற இந்த ஒரு வாகனம் மட்டும் தொடர்புடைய விபத்து தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள விசாரணை அதிகாரிகள், டெஸ்டன் வீதியில் ஆறு பேருடன் சென்றுகொண்டிருந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும், வாகனத்தில் இருந்த 15 சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 16 சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் சென்ற ஏனைய நான்கு பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், அவர்களில் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஏனையோர் வீடு திரும்பியுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து திரும்பியவர்களில் ஒருவரான, வாகனத்தை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை காவல்த்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவர் மீது மரணம் விளைவிக்கும் வகையிலும், படுகாயம் ஏற்படும் வகையிலும் அபாயகரமாக வாகனத்தினை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யோர் பிராந்திய காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post 2 சிறுவர்கள் பலியான வாகன விபத்து: 17 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோ வீடு ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted: 12 Nov 2015 07:42 AM PST

dead_in_Scarborough_-_11122015

dead_in_Scarborough_-_11122015ஸ்காபரோவில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Birchmount வீதி மற்றும் St. Clair Avenue பகுதியில், Elfreda Boulevardஇல் அமைந்துள்ள வீடு ஒன்றின் கீழ்த் தளத்தில் அந்த பெண் இறந்து கிடந்த நிலையில், அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்து கிடந்த அந்த வயதான பெண்ணின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாகவும், பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் அடையாளங்களை காவல்த்துறையினர் உடனடியாக வெளியிடப்படவில்லை.dead_in_Scarborough_-_11122015

சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் மனித கொலைச் சம்பவங்களை விசாரிக்கும் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் எனவும், அந்த பகுதியில் வசிக்கும் ஏனைய குடியிருப்பாளர்களிடம் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த மரணம் இயற்கையானதா அல்லது கொலையாக இருக்கக்கூடுமா என்ற சந்தேகங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை சடலம் கண்டெடுக்கப்பட்ட அந்த வீட்டின் அடித் தளத்தின் சன்னல் கதவு உடைந்து போயுள்ள நிலையில், இந்த மரணத்துடன் அதற்கு தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஸ்காபரோ வீடு ஒன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் தீ சம்பவம் – 3 வீடுகள் சேதம்

Posted: 12 Nov 2015 06:14 AM PST

k

kபிரம்டன் பகுதியில் இடம்பெற்ற தீச் சம்பவம் ஒன்றில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று புதன்னிழமை இரவு இந்த தீ சம்பவம் இடம்பெற்றதாகவும், தீச் சம்பவத்தினால் அருகில் இருந்த குறிப்பிட்ட எண்ணிக்கையான குடியிருப்பாளர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு 11 மணிக்கு சற்று முன்னர் Binder Twine Trail பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு தாம் அழைக்கப்பட்டிருந்ததாகவும், தாம் அங்கு சென்றிருந்த போது அந்த வீடு தீயினால் முற்றாக எரிந்து போயிருந்ததாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அந்த தீ அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கு பரவியதுடன்,அங்கிருந்த இரண்டு வாகனங்கள் சேதத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தீ பரவிய இந்த வீடுகளின் அருகில் இருந்த சுமார் 10 குடியிருப்பாளர்கள் அவர்களின் வீடுகளில் இருந்த வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவங்களில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதை காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்னர் வியாழக்கிழமை காலையில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து வெளியேற்றப்பட்டிருந்த குடியிருப்பாளர்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.k

தீ ஏற்பட்டதற்கான காணரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தீச் சம்பவத்தினால் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீச் சம்பவத்திற்கு சதிச் செயல்கள் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடாத நிலையில்.

இந்த தீச் சம்பவத்திற்கு சதிச்செயல் காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எதனையும் காவல்த்துறையினர் வெளிப்படுத்தவில்லை.

The post பிரம்டனில் தீ சம்பவம் – 3 வீடுகள் சேதம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பட்டாணியை உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Posted: 12 Nov 2015 06:05 AM PST

ji

jiமனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பெரிதும் உதவும் தானியங்களில் ஒன்றுதான் பட்டாணி.

ஆராச்சியாளர்களின் ஆராய்ச்சியின் படி, பச்சை பட்டணியில் உள்ள Coumestrol எனப்படும் Phytonutrients புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும்.

இதனை நாள்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும்.

என்னென்ன சத்துக்கள் உள்ளன?

பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 8 விதமான உயிர்சத்துக்களும், 6 விதமான தாது உப்புகளும் மற்றும் நார்சத்து, புரதம் அதிகம் உள்ளது. புரதம் அதிகளவாக 15.5 முதல் 39.7 சதவீதம் வரை காணப்படுகிறது.

100 கிராம் பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து 75.6 சதவீதம், புரதம் 6.2 கிராம், கொழுப்புச்சத்து 0.4 கிராம், கார்போஹைட்ரேட் 16.9 கிராம், நார்சத்து 2.4 கிராம், கால்சியம் 32 மில்லி கிராம், பாஸ்பரஸ் 102 மி.கிராம், இரும்புசத்து 1.2 மி.கிராம், சோடியம் 6 மி.கிராம், பொட்டாசியம் 350 மி.கிராம், பீட்டாகரோட்டீன் 450 மி.கிராம், தையாமின் 34 மி.கிராம்,ரிபோளேவின் 16 மி.கிராம், நியாசின் 2.7 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் 26 மி.கிராம், விட்டமின்ஏ 680 ஐயு.

மருத்துவ பயன்கள்

பச்சை பட்டாணியில் நிகோடினிக் அமிலம்(Nicotinic Acid) என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது ரத்தத்தில் அதிகளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அதை குறைக்கிறது.

பச்சை பட்டாணியில் லேக்டின்(Lactin) என்ற புரதப்பொருள் இருப்பதால் ரத்த சிவப்பு அணுக்கள் உறைந்து ரத்தக் கட்டுகளாக மாறுவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கலாம்.

பச்சை பட்டாணியில் அதிகளவு விட்டமின் சி இருப்பதால் எல்லா வகையான புற்று நோய்களால் நாம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது.ji

பச்சை பட்டாணியில் கரையாத நார்சத்து இருப்பதால், கொழுப்பு சத்தை குறைத்து இதயநோய், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

பச்சை பட்டாணியில் லுட்டின்(Lutin) என்ற கரோட்டீனாய்டு(carotenoid) இருப்பதால் வயதானவர்களுக்கு கண்ணில் ஏற்படு புரை வளர்தலை குறைக்கிறது.

பச்சை பட்டாணியில் அதிகளவு இரும்புசத்து இருப்பதால் நம் உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையை போக்கி உடல் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனக்குறைவு ஆகியவற்றை போக்குகிறது.

விட்டமின் கே இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தி, பாதுகாக்கிறது.

பச்சை பட்டாணியில் விட்டமின் சி இருப்பதால் ரத்த புற்று, நுரையீரல் புற்று, ஆசனவாய் புற்று போன்ற எல்லா புற்று நோய் வராமல் தடுக்கிறது.

பச்சைபட்டாணியில் உள்ள விட்டமின் பி6 ரத்த குழாய் சுவர் சுருங்குதலைத் தடுத்து, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பச்சைபட்டாணியில் விட்டமின் பி6, இரும்பு சத்து இருக்கிறது. இவை இரண்டுமே ஹோமோசிஸ்டைன்(Homocysteine) என்ற ஆபத்தை விளைவிக்கும் வேதிப் பொருள் உடலில் உருவாவதை தடுக்கிறது.

இந்த வேதிப்பொருள் தான் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் எலும்பு பலம் குன்றல் ஏற்பட காரணமான மூலப்பொருள்.

எனவே மாதவிடாய் நின்ற பெண்கள், வயதானவர்கள் பச்சை பட்டாணியை உட்கொண்டால் எலம்பு பலமடையும். மூட்டு வலி, எலும்பு முறிவு வராமல் தடுக்கலாம்.

கேரட் பட்டாணி சாதம்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி, கிராம்பு, பிரியாணி இலை, பட்டை வதக்கவும்.

வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். கேரட் துருவல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

கேரட் நன்கு வேகும் வரை மூடி வைக்கவும். பிறகு அதில் பட்டாணி சேர்க்கவும். தயாராக உள்ள சாதத்தை சேர்த்து மெதுவாகக் கிளறவும். தீ குறைத்து, 5 நிமிடம் கிளறவும். ரெய்த்தாவுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

பயன்கள்

கேரட் கண்களுக்கு குளிர்சியை தரும் உணவாகும், மேலும் இதனை பட்டாணியுடன் சேர்த்து சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இரண்டிலும் கால்சியம் சி நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைக்கு இந்த சாதத்தை கொடுப்பதன் மூலம் உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி ஏற்படும்.

பச்சை பட்டாணியை வேகவைத்து உப்பு, மிளகு சேர்த்து வாரம் 2 முறை வளரும் குழந்தைகளுக்கு தர உடல், மனம் பலப்பட்டு ஆரோக்கியமாக காணப்படுவர்.

பச்சை பட்டாணி, கேரட், புதினா, பீன்ஸ் சேர்த்து வேகவைத்து உப்பு சேர்த்து சூப்பாக சிற்றுண்டிக்கு பதில் குழந்தைகளுக்குத் தரலாம்.

உடல் எடை அதிகரிக்க இதனுடன் உருளைகிழங்கு சேர்த்து சமைத்து தரலாம்.

The post பட்டாணியை உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™