Tamil News | Online Tamil News |
- அனைத்து கிராமங்களுக்கும் 2017ல் மின்சாரம் கிடைக்க இலக்கு
- பீஹார் தேர்தலில் லாலு அமைத்த மெகா கூட்டணிக்கு வெற்றி: மீண்டும் ஆட்சியை பிடித்தார் முதல்வர் நிதிஷ்குமார்
- பீஹாரில் பா.ஜ., கூட்டணி தோல்வி ஏன்? நிதிஷ் வெற்றிக்கான காரணங்கள் அலசல்
- வாழ்த்து கூறினார் மோடி: நன்றி தெரிவித்தார் நிதிஷ் குமார்
- 'மக்கள் முதல்வர்' நிதிஷ் குமார்
- பிரிட்டனில் மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு
- முதல்வர் ஜெயலலிதா அவசரமாக சென்னை திரும்பியது ஏன்?
- நோக்கியா ஆலைக்கு புத்துயிரூட்ட தனியார் நிறுவனங்கள் நிபந்தனை
- அனுபவமற்றவர்களுக்கு ஓய்வில்லா பணி: தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவதில் விபரீதம்
- குற்றத்தை ஒப்புக்கொள்ளும் கடற்கொள்ளையர்கள்
| அனைத்து கிராமங்களுக்கும் 2017ல் மின்சாரம் கிடைக்க இலக்கு Posted: கொச்சி : 'மின்சார வசதி கிடைக்காத கிராமங்களுக்கு, 2017க்குள் மின்சாரம் அளிப்பது; 2019க்குள், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், 24 மணி நேரமும் தட்டுப்பாடில்லாத மின்சாரம் வழங்குவது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின் துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாட்டில், இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மத்திய மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல்; பா.ஜ.,வைச் சேர்ந்த இவர், நாட்டின் மின் துறை சீரமைப்புக்கு பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கேரள ... |
| Posted: பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ்குமார் - லாலு பிரசாத் அமைத்த மெகா கூட்டணி, மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார், பீஹார் முதல்வராக, மீண்டும் பதவியேற்கிறார். 53 இடங்களை மட்டுமே பெற்று, பா.ஜ., பின்னடைவை சந்தித்துள்ளது. பீஹாரில், 243 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்து கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றன. பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், மத்திய அமைச்சர் ... |
| பீஹாரில் பா.ஜ., கூட்டணி தோல்வி ஏன்? நிதிஷ் வெற்றிக்கான காரணங்கள் அலசல் Posted: புதுடில்லி : பீஹார் சட்டசபை தேர்தல் முடிவால், பா.ஜ., கூட்டணி அதிர்ச்சி அடைந்துள்ளது. கடந்த, 2010 சட்டசபை தேர்தலில் பெற்ற அளவிற்கு கூட இடங்களை பிடிக்க முடியாமல் திணறிய, பா.ஜ.,வால், அக்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதிலும், முதல்வர் பதவியை, தன் கூட்டாளி நிதிஷ் குமாருக்கு விட்டுக் கொடுத்துள்ள, ஆர்.ஜே.டி., கட்சித் தலைவர் லாலு பிரசாத், மத்திய, பா.ஜ., அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். |
| வாழ்த்து கூறினார் மோடி: நன்றி தெரிவித்தார் நிதிஷ் குமார் Posted: பீஹார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி, அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு, தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து, 'டுவிட்டரில்' நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள தகவலில், 'தேர்தல் வெற்றிக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார்; அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன்' என, கூறியுள்ளார். |
| 'மக்கள் முதல்வர்' நிதிஷ் குமார் Posted: பீஹார் மக்களின் இதயம் கவர்ந்த நிதிஷ் குமார், தொடர்ந்து, மூன்றாவது முறையாக, முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இவர், ஏற்கனவே, 2000ல், 7 நாட்கள் முதல்வராகவும், 2005 மற்றும் 2010லும் முதல்வரானார். அவரது ஆதரவாளர்களால், 'முன்னா' என, அழைக்கப்படுகிறார். கடந்த, 1951 மார்ச் 1ல், பாட்னா அருகில் உள்ள பக்டியாபுரில், வசதியான குடும்பத்தில் பிறந்தார். பீஹார் இன்ஜினியரிங் கல்லுாரியில், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்தார். பின் பீஹார் மாநில மின் வாரியத்தில் பணியில் சேர்ந்தார். பின் வேலையை உதறிவிட்டு அரசியலில் நுழைந்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய ... |
| பிரிட்டனில் மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு Posted: லண்டன்:பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை சமாளிக்க, 'ஸ்காட்லாந்து யார்டு' போலீசார் சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 13ல், தலைநகர் லண்டனில், 60,000 இந்தியர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கூட்டத்தில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுடன், நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். லண்டனின், பல்வேறு இடங்களில், மோடிக்கு எதிராக, ஆர்ப்பாட்டம் நடத்த, அங்குள்ள ... |
| முதல்வர் ஜெயலலிதா அவசரமாக சென்னை திரும்பியது ஏன்? Posted: கோட நாட்டிலிருந்து, சென்னை, போயஸ் கார்டன் வீட்டிற்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று திரும்பினார். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அக்டோபர் 14ல், நீலகிரி மாவட்டம், கோட நாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கிருந்து, கட்சி மற்றும் அரசு பணிகளை கவனித்து வந்தார். நேற்று மதியம், கோட நாட்டிலிருந்து கோவைக்கு வந்த அவர், விமானம் மூலம், மாலையில், சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம், போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்த ஜெயலலிதாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள், மழையில் நனைந்தபடி வரவேற்றனர். இம்மாத இறுதியில் வர திட்டமிட்டிருந்த ஜெயலலிதா, முன்கூட்டியே சென்னை ... |
| நோக்கியா ஆலைக்கு புத்துயிரூட்ட தனியார் நிறுவனங்கள் நிபந்தனை Posted: சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் செயல்பட்டு வந்த, 'நோக்கியா' மொபைல் போன் ஆலையை மீண்டும் இயங்க செய்ய, தனியார் நிறுவனங்கள் கடும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளன. |
| அனுபவமற்றவர்களுக்கு ஓய்வில்லா பணி: தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்குவதில் விபரீதம் Posted: சேலம்:தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் மூலம் இயக்கப்படுவதால், 30 ஆயிரம் தினக்கூலி பணியாளர், டிரைவர், கண்டக்டர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| குற்றத்தை ஒப்புக்கொள்ளும் கடற்கொள்ளையர்கள் Posted: மும்பை:இந்திய கடற்படையினரால், 2011ல் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 120 சோமாலிய கடற்கொள்ளையர்கள், தங்களது குற்றத்தை, நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.இக்கொள்ளையர்கள், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் வழியாகச் செல்லும், கப்பல்களைக் கைப்பற்றி, அதிலுள்ளவர்களை சோமாலியாவுக்கு கடத்திச் சென்று, மிரட்டிப் பணம் பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தனர். இப்பிரச்னைக்கு முடிவு கட்ட நினைத்த இந்திய அரசு, 2011ல், கடற்படை உதவியுடன், 120 சோமாலிய கடற்கொள்ளையர்களை, அதிரடியாக கைது செய்தது.மும்பை சிறையில் அடைக்கப்பட்ட ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 09,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |