Tamil News | Online Tamil News |
- நாடு முழுவதும் ஆணுறைக்கு.தட்டுப்பாடு: 'எய்ட்ஸ்' நோய் பரவும் ஆபத்து
- பொருளாதாரம் வளர்ந்துள்ளது: மோடி பெருமிதம்
- 'சோட்டா' ராஜனிடம் சி.பி.ஐ., தீவிர விசாரணை
- ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு
- கூடங்குளம் மின் உற்பத்தி மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை
- சீமை கருவேல மரத்துக்கு தடை விதிக்க அரசு பரிசீலனை: முற்றிலும் அழிக்க பல வழிகளில் ஆய்வு
- இந்தியா மீது போர் தொடுத்தால் பிரச்னை பெரிதாகும்: நவாஸ் கவலை
- தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் கூட்டணி நிலவரம் திசைமாறுது: ஆட்சியில் பங்கிற்கு வாய்ப்பில்லை என ஸ்டாலின் திட்டவட்டம்
- கலாமுக்கு நினைவகம்: மத்திய அரசு ஆலோசனை
- தமிழக போலீஸ் மீது அவநம்பிக்கை வந்துவிட்டது: விஜயகாந்த் பேச்சு
| நாடு முழுவதும் ஆணுறைக்கு.தட்டுப்பாடு: 'எய்ட்ஸ்' நோய் பரவும் ஆபத்து Posted: புதுடில்லி,: பிரதமர் மோடி தலைமையிலான, மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மேற்கொண்ட சிக்கன நடவடிக்கையால், நாடு முழுவதும், பாதுகாப்பான உடலுறவுக்கு இலவசமாக வழங்கப்படும் ஆணுறைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆணுறை போதுமான அளவு கிடைக்காததால், பாதுகாப்பற்ற முறையில் உறவு வைத்துக் கொள்ளும், பெண் செக்ஸ் தொழிலாளர்களாலும், அவர்களால் பல ஆண்களுக்கும், எச்.ஐ.வி., நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பீதி ஏற்பட்டுள்ளது.உலகம் முழுவதும் வியாபித்துள்ள, உயிர்க்கொல்லி நோயான, எய்ட்சுக்கு, லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 2013ல் மட்டும், உலகம் முழுவதும், 15 ... |
| பொருளாதாரம் வளர்ந்துள்ளது: மோடி பெருமிதம் Posted: புதுடில்லி,:''வளர்ச்சிக்கு தடையாக இருந்த சில அம்சங்களை களைய, திடமான முடிவுகளை எடுத்தோம்; சிக்கனத்தை மேற்கொண்டோம்; நாட்டு மக்கள் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தியதால், பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்கள் பங்கேற்ற, பொருளாதார மாநாடு டில்லியில் நேற்று நடந்தது.அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பதினேழு மாதங்களுக்கு முன், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த மோசமான பொருளாதார நிலை மாறி ... |
| 'சோட்டா' ராஜனிடம் சி.பி.ஐ., தீவிர விசாரணை Posted: புதுடில்லி:இந்தியாவிலிருந்து தப்பியோடி, 27 ஆண்டாக தலைமறைவாக இருந்து, சமீபத்தில், இந்தோனேஷியாவில் கைதான, நிழல் உலக தாதா, 'சோட்டா' ராஜனிடம், டில்லியில் உள்ள சி.பி.ஐ., தலைமையகத்தில், அதிகாரிகள் நேற்று, தீவிர விசாரணை நடத்தினர்.இந்தியாவில் கொலை, கொள்ளை, பணம் பறிப்பு, கடத்தல் உள்ளிட்ட, 75க்கும் மேற்பட்ட பயங்கர வழக்குகளில் தொடர்புள்ளவன், சோட்டா ராஜன், 55. இவனது, இயற்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. 1988ல், இவன், இந்தியாவிலிருந்து, துபாய்க்கு தப்பியோடினான்.இந்திய அரசால் தேடப்பட்டு வரும் மற்றொரு நிழல் உலக தாதா, தாவூத் இப்ராகிம், 2000ல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ... |
| ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் இரண்டு மடங்காக உயர்வு Posted: ஜோத்பூர்:ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கட்டணம், 12ம் தேதி முதல், இரு மடங்காக உயருகிறது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றபின், ரயில்வே துறையில், வருவாயை பெருக்கும் முயற்சியில், ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை, ரத்து செய்வதற்கான காலக்கெடு மற்றும் கட்டணத்தை மாற்றி அமைக்க, ரயில்வே அமைச்சர், சுரேஷ் பிரபு முடிவு செய்தார். இதன்படி, புதிய விதிமுறைகளை, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.* ரயில் புறப்படுவதற்கு, 48 மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்தால், ஒவ்வொரு பயணிக்கும், ... |
| கூடங்குளம் மின் உற்பத்தி மத்திய அரசுக்கு தமிழகம் கோரிக்கை Posted: சென்னை,:''கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி துவக்க வேண்டும்,'' என, தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய மின் துறை அமைச்சகம் சார்பில், கேரளா மாநிலம், கொச்சியில், மாநில மின் துறை அமைச்சர்கள் மாநாடு, நேற்று, நடந்தது. இதில், தமிழக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:அடுத்த ஆண்டு, தமிழக மின் தேவை, 14 ஆயிரம் - 15 ஆயிரம் மெகா வாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை, பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தின், முதல் உலையில் தமிழகத்திற்கு, 563 மெகா வாட் ... |
| சீமை கருவேல மரத்துக்கு தடை விதிக்க அரசு பரிசீலனை: முற்றிலும் அழிக்க பல வழிகளில் ஆய்வு Posted: அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக ... |
| இந்தியா மீது போர் தொடுத்தால் பிரச்னை பெரிதாகும்: நவாஸ் கவலை Posted: இஸ்லாமாபாத்: 'இந்தியா மீது போர் தொடுத்தால் பிரச்னை தான் பெரிதாகும்' என, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைப்பட்டதாக, 'தி நேஷன்' பத்திரிகை தெரிவித்து உள்ளது.நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் அதிபர் மம்னுான் உசேனை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, நவாஸ் ஷெரீப் பேசியது குறித்து உடனிருந்த மூத்த அதிகாரி கூறியதை, தி நேஷன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:இந்தியா உடனான அனைத்து பிரச்னைகளுக்கும், பேச்சு மூலமாகவே தீர்வு காண வேண்டும்; போர் தொடுப்பது தீர்வாகாது. மாறாக, அது பிரச்னையை அதிகரிக்கவே செய்யும். அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்பு ... |
| Posted: ''கூட்டணி ஆட்சி முறையை, தமிழக மக்கள் ஏற்பதில்லை; எனவே, ஆட்சியில் பங்கு கொடுக்கும் எண்ணம், தி.மு.க.,வுக்கு அறவே இல்லை,'' என, அக்கட்சியின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளரும், பொருளாளருமான ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், கூட்டணி ஆட்சி திட்டத்துடன், தி.மு.க.,விடம் பெரிய அளவில், 'சீட்' பேரம் பேச நினைத்திருந்த கட்சிகள், வேறு பாதையை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் கூட்டணி நிலவரம் திசைமாறுவதும் உறுதியாகி உள்ளது.தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க, தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் எப்போதும் போட்டியிருக்கும். இதற்கான ... |
| கலாமுக்கு நினைவகம்: மத்திய அரசு ஆலோசனை Posted: புதுடில்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, ராமேஸ்வரத்தில், நினைவகம் அமைப்பது குறித்த, மத்திய அரசு, நேற்று ஆலோசனை நடத்தியது.ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், ஏவுகணை தொழில் நுட்பத்தில் சிறந்த விஞ்ஞானி ஆனார். பின்னாளில், நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தார்; ஜூலை 27ல், அவர் காலமானார். கலாம் நினைவாக, நினைவகம் அமைக்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, ராமேஸ்வரத்தில், அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில், அவருக்கு நினைவகம் அமைக்கப்பட உள்ளது. இதில், ... |
| தமிழக போலீஸ் மீது அவநம்பிக்கை வந்துவிட்டது: விஜயகாந்த் பேச்சு Posted: பல்லடம்: ''தே.மு.தி.க., ஆட்சிக்கு வந்தால், கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குவோம்,'' என, பிரேமலதா பேசினார். தே.மு.தி.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவில், நேற்று நடந்தது. விழாவில், பிரேமலதா பேசியதாவது:தி.மு.க., --அ.தி.மு.க., கட்சிகளை தாக்கி, ஓட்டு சேகரிக்கும் எண்ணம் இல்லை. திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை; பனியன் தொழிலை ஊக்குவிக்காமல் உள்ளது. பனியன் கம்பெனிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சேகரமாகும் நீரில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம், தே.மு.தி.க.,விடம் உள்ளது.திருப்பூரில் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 07,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |