Tamil News | Online Tamil News |
- பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் 'ஆப்' அறிமுகம்
- பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை: சோனியா
- '2ஜி': குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கனிமொழி மனு: கோர்ட் தள்ளுபடி
- தாவூத் இப்ராஹிமுக்கு மும்பை போலீசார் உதவி: சோட்டா ராஜன் 'திடுக் தகவல்
- காஷ்மீர் பிரச்னையில் தலையிடுங்கள்: ஐ.நா., சபையில் பாக்., மன்றாடல்
- ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை
- ஸ்டாலினுக்கு தலைவர் தகுதி: கருணாநிதி கண்டுபிடிப்பு
- சீனப்பொருள் வாங்குவோர் 'உஷார்': 10ல் 4 போலியென ஆய்வில் அம்பலம்
- தங்கபாலுவுக்கு தமிழக காங்., தலைவர் இளங்கோவன் சவால்: சொத்து சேர்த்தது பற்றி விவாதிக்க தயாரா என கேள்வி
- குரல் மாதிரியை கொடுக்க இந்திராணி ஒப்புதல்
| பெண்களின் பாதுகாப்புக்காக ரயில்வேயில் 'ஆப்' அறிமுகம் Posted: புதுடில்லி, : ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்காக, மொபைல் போன்களில் பயன்படுத்தக் கூடிய,'ஆப்' எனப்படும் செயலியை, ரயில்வே துறை அறிமுகப்படுத்தி உள்ளது. |
| பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை: சோனியா Posted: புதுடில்லி: பிரதமர் மோடி அமைதியாக உள்ளார்; எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா, நேற்று முன்தினம், டில்லியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, மதத்தின் பெயரால் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த கேட்டுக் கொண்டார். நேற்று, தன் கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலையிலிருந்து, 1 கி.மீ.,யில் உள்ள, ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக சென்றார்.பிரணாப் முகர்ஜியை சந்தித்து, மனு அளித்த பின், ஜனாதிபதி மாளிகைக்கு ... |
| '2ஜி': குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய கனிமொழி மனு: கோர்ட் தள்ளுபடி Posted: புதுடில்லி: '2ஜி' அலைக்கற்றை வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், தி.மு.க., எம்.பி.,யுமான கனிமொழிக்கு பெருத்த பின்னடைவாக, விசாரணை நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய, சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. '2ஜி' அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, சாகித் பல்வா ஆகியோர், தம் மீதான வழக்கை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், 'ரிட்' மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். கனிமொழி தாக்கல் செய்த மனு விவரம்:கலைஞர், 'டிவி'யில், 2008 டிசம்பர் முதல், 2009 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் நடந்த நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக, ... |
| தாவூத் இப்ராஹிமுக்கு மும்பை போலீசார் உதவி: சோட்டா ராஜன் 'திடுக் தகவல் Posted: பாலி:இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ள, மும்பை மற்றும் டில்லியில், 70க்கும் மேற்பட்ட கொலை, ஆள் கடத்தல் போன்ற குற்றங்களில் தொடர்புடைய தாதா, சோட்டா ராஜன், 55, தன் எதிரியும், இந்திய அரசால், 22 ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் குறித்து, திடுக்கிடும் தகவல்களை நிருபர்களிடம் நேற்று தெரிவித்துள்ளான். ''மும்பை போலீஸ் உயரதிகாரிகள் சிலர், தாவூத் இப்ராஹிமுடன் இப்போதும் தொடர்பில் உள்ளனர்; பாகிஸ்தானில், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பின் பாதுகாப்பில் தாவூத் பத்திரமாக உள்ளான்,'' என, அவன் தெரிவித்துள்ளான்.மும்பையில், 1993ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட, 2௫0க்கும் மேற்பட்ட ... |
| காஷ்மீர் பிரச்னையில் தலையிடுங்கள்: ஐ.நா., சபையில் பாக்., மன்றாடல் Posted: ஐக்கிய நாடுகள்,:'காஷ்மீர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்' என பாகிஸ்தான் மீண்டும் மன்றாடியுள்ளது. ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி 'காஷ்மீரில் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு மக்களின் கருத்தை அறிய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை அபகரிக்க நினைக்கும், அண்டை நாடான பாகிஸ்தான் அதற்காக பலவிதமான முயற்சிகளில் இறங்கி வருகிறது. இந்தியா மீது பயங்கரவாதிகளை ஏவி விடும் அந்நாடு அவ்வப்போது ஐ.நா., சபையில், காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதை வாடிக்கையாக ... |
| ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை மீட்க முதல்வர் நடவடிக்கை Posted: சென்னை:ஆந்திர சிறையில் உள்ள தமிழர்களை ஜாமினில் வெளியே கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.ஆந்திர மாநில சிறையில் தமிழர்கள் வாடுவதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்த விபரங்களை பெறும்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அதன்படி ஆந்திர சிறையில் உள்ள 516 தமிழர்களின் விவரம் பெறப்பட்டதுஅவர்களை ஜாமினில் விடுவிக்கவும் அவர்களின் வழக்கை நடத்த இலவச சட்ட உதவி வழங்கும்படியும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ஜெயலலிதா அக்.,15ல் கடிதம் எழுதினார். இதையடுத்து ஆந்திர சிறையில் இருந்து 172 தமிழர்கள் ஜாமினில் ... |
| ஸ்டாலினுக்கு தலைவர் தகுதி: கருணாநிதி கண்டுபிடிப்பு Posted: சென்னை:''தி.மு.க., தலைவர் ஆவதற்கான தகுதி பெற்றவராக, ஸ்டாலின் இருக்கிறார்,'' என, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.அவர் அளித்த பேட்டி:அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் தான், அ.தி.மு.க.,வை தோற்கடிக்க முடியும் என்பதை, ஏற்க முடியாது. அ.தி.மு.க.,வின் பலமும், செல்வாக்கும் இமயம் போன்றதில்லை. கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், 27 சதவீதம்; 2006ல், 33 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்று, தோல்வியடைந்த கட்சி தான் அது. ஆனால், 1996 சட்டசபை தேர்தலில், 53 சதவீதம்; 2006ல், 45 சதவீத ஓட்டுக்களை பெற்று, ஆட்சி அமைத்த கட்சி, தி.மு.க., என்பதை மறந்து விடக்கூடாது.தி.மு.க., தலைவராக ஸ்டாலினை, ... |
| சீனப்பொருள் வாங்குவோர் 'உஷார்': 10ல் 4 போலியென ஆய்வில் அம்பலம் Posted: பீஜிங்:சீனாவில், 'இகாமர்ஸ்' எனப்படும், இணையவழி வர்த்தகத்தில் விற்கப்படும் பொருட்களில், 10ல் நான்கு, தரமற்றவை; போலியானவை, என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.நுகர்வோர் நலன் மற்றும் உரிமை பாதுகாப்பு மீதான, சீன அரசின் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்தாண்டு, இணையவழி வர்த்தகத்தில், அமெரிக்காவை, சீனா, பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்தாண்டில், அமெரிக்காவில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு இணையவழி வர்த்தகம் நடந்துள்ளது; சீனாவில், 28 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. ஆனால், இணையவழி வர்த்தகம் மூலம், சீனாவில், எண்ணற்ற போலி ... |
| தங்கபாலுவுக்கு தமிழக காங்., தலைவர் இளங்கோவன் சவால்: சொத்து சேர்த்தது பற்றி விவாதிக்க தயாரா என கேள்வி Posted: தமிழக காங்கிரஸ் கட்சியில், இந்நாள் தலைவர் இளங்கோவன் - முன்னாள் தலைவர் தங்கபாலு இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'திருட்டு ரயிலில், சென்னைக்கு வந்த தங்கபாலு, சொத்துகளை வாங்கி குவித்தது எப்படி என்பது பற்றி விவாதிக்க, நான் தயார்; தங்கபாலு தயாரா' என, இளங்கோவன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.'கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து, இளங்கோவனை மாற்ற வேண்டும்' என, சிதம்பரம், தங்கபாலு, செல்லக்குமார் உள்ளிட்ட, 11 கோஷ்டி தலைவர்கள், டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணை தலைவர் ராகுலை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, இளங்கோவனை டில்லிக்கு அழைத்து, ... |
| குரல் மாதிரியை கொடுக்க இந்திராணி ஒப்புதல் Posted: மும்பை,:மகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி, விசாரணைக்காக, தன் குரல் மாதிரியை கொடுக்க, ஒப்புதல் அளித்துள்ளார். வட மாநிலங்களில் பிரபலமான, 'டிவி' நிறுவனத்தின் அதிபரான பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை, 23, கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.இந்நிலையில், 'இந்த வழக்கின் விசாரணைக்காக, இந்திராணியின் குரலை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே, அவரது குரல் மாதிரியை எங்களுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்' ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 04,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |