Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின் கட்டணம் உயருமா? நவ.,30ல் தெரியும்

Posted:

மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, வரும், 30ம் தேதி நடக்கும், மின் வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின் வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.முக்கிய முடிவுகள்இந்த குழு தான், புதிய மின் நிலையம், மின் கொள்முதல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு, மின் வாரிய நிறுவன செயலர் மூலம் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, எரிசக்தி துறை செயலர் வழியாக, தமிழக அரசின் ஒப்புதல் ...

பெண் ஆசை காட்டி இளைஞர்களை கவரும் ஐ.எஸ்.,

Posted:

மும்பை: 'சிரியா நாட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்' என, ஆசை காட்டி, இளைஞர்களை பயங்கரவாதிகளாக, ஐ.எஸ்., அமைப்பு மாற்றி வரும், அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு ஆசிய நாடுகளான, ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கொடூரமான தாக்குதல்கள் மூலம், உலகையே அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பாக, ஐ.எஸ்., செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில், இந்தியா உட்பட, பல நாட்டை சேர்ந்த இளைஞர்கள், பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்.மஹாராஷ்டிர மாநிலம், பன்வெல் பகுதியை சேர்ந்தவர் அரீப் பயாஸ் மஜீத், 23. சிவில் இன்ஜினியரான இவர், ஐ.எஸ்., ...

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்வது சரியல்ல: தீர்ப்பின்படி நடக்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை

Posted:

புதுடில்லி, :'வழக்கறிஞர்கள், வேலை நிறுத்தம் செய்யவோ அல்லது நீதிமன்றத்தை புறக்கணிக்கவோ கூடாது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இரண்டு கோடி ரூபாய் வரையிலான சிவில் வழக்குகளை, ஐகோர்ட்டுக்கு பதிலாக, மாவட்ட நீதிமன்றங்களிலேயே விசாரிக்க வகை செய்யும் சட்டம், பார்லிமென்டில் நிலுவை யில் உள்ளது. இந்தச் சட்டம் நிறைவேறினால், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பதால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி ஐகோர்ட்டில் கடந்த மாதத்தில், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுநல அமைப்பு:
'இந்த ...

எட்டு மணி நேரம் தான் கடை ஜன. 1 முதல் 'டாஸ்மாக்' நேரம் குறைப்பு

Posted:

'டாஸ்மாக்' மது விற்பனை நேரத்தை, பகல், 2:00 முதல் இரவு, 10:00 மணி வரை என, எட்டு மணி நேரமாக குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2016 ஜன., முதல், இந்த நடைமுறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:டாஸ்மாக் மது விற்பனையில் இருந்து ஆயத்தீர்வை, விற்பனை வரி வாயிலாக, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகாவில், மது விற்பனை உள்ளது; எனவே, தமிழகத்தில் மட்டும் மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியம் இல்லை.தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக ...

30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'

Posted:

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம், நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலர், மானிய விலை சிலிண்டரை ...

இரட்டை ரயில் பாதை அறிக்கை: தமிழக எம்.பி.,க்கள் அலட்சியம்

Posted:

மதுரை - குமரி இரட்டை ரயில் பாதை திட்ட அறிக்கை, மூன்று மாதமாக ரயில்வே வாரியத்திடம் முடங்கி உள்ளது. இந்த அறிக்கையை, திட்ட கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பிற்கு அனுப்பி நிதி பெற வேண்டும். தமிழக எம்.பி.,க்கள் அழுத்தம் கொடுத்தால், இந்த பணியை விரைவுப்படுத்த முடியும்.மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், நடப்பு ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி; மணியாச்சி - நாகர்கோவில் என, இரண்டு திட்டங்களாக பிரித்து அறிவிக்கப்பட்டது. 'எக்ஸ்ட்ரா பட்ஜெட் ரிசோர்சஸ்' என்ற பெயரில், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இந்த ...

சென்னை மழைக்கு அஞ்சிய முதலீட்டாளர்கள்

Posted:

சென்னை மழைக்கு அஞ்சி, தொழில் முதலீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை, முதலீட்டாளர்கள் தவிர்த்து வரும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து, தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்குப் பின், தொழில் முதலீட்டாளர்களுடன், ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக நடந்தன. அதன் காரணமாக, சில ஆலைகளில் செயல்பாடும் துவங்கியது. ஆனால், கடந்த இரு வாரமாக, இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, சென்னையில் பெய்து வரும் தொடர் மழையே காரணம். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பல கூட்டங்கள், மழை காரணமாக முதலீட்டாளர்கள் வராததால், ஒத்திவைக்க நேர்ந்தது. ...

அரசியல் சட்டம் உருவாக நேரு பங்கு தான் அதிகமாம்: அம்பேத்கரை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் புது தகவல்

Posted:

புதுடில்லி : ''நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கியதில், ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பங்களிப்பை, பா.ஜ., அங்கீகரிக்கவில்லை,'' என, ராஜ்யசபாவில் நேற்று, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார். அரசியல் சட்டத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த, மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின் பெருமைகளை மறைத்து பின்னுக்கு தள்ளும் வகையில், நேருவை முன்னிறுத்தி ஆசாத் பேசியது, சபையில் சலசலப்பை ஏற்படுத்தியது.பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில், முதல் இரண்டு தினங்கள், அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடுவதற்காக, விசேஷமாகக் கூட்டப்பட்டது. நேற்று ...

ஷீனா கொலைக்கு பணம் காரணமா?

Posted:

புதுடில்லி: ஷீனா போரா கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பீட்டர் முகர்ஜியிடம், நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள், ஆறு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, ஷீனா கொலைக்கு, வெளிநாட்டில் உள்ள அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் காரணமா என, துருவி துருவி கேட்டனர்.'ஸ்டார் டிவி' முன்னாள் தலைவர் பீட்டர் முகர்ஜி; இவரது இரண்டாவது மனைவி இந்திராணி. இவருக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போரா. ஷீனாவும், பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவி மகன் ராகுலும் காதலித்தனர். முறையற்ற இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷீனா போராவை, 2012ல் ...

தயாநிதியை விசாரிக்க அனுமதி

Posted:

புதுடில்லி:தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியிடம், சி.பி.ஐ., ஆறு நாட்கள் விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த, 2004 - 07ல், மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தயாநிதி இருந்தார்; அப்போது, அவரது சென்னை வீட்டிற்கு, 300க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், அந்த அதிவேக இணைப்புகளை, தயாநிதியின் சகோதரர் கலாநிதியின், 'சன் டிவி' நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தியதாகவும், சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ., தன்னை கைது செய்யாமல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™