Tamil News | Online Tamil News |
- அமீர் கானை அறைந்தால் ரூ.1 லட்சம்!
- அமைச்சர் ராஜ்நாத்துடன் காங்., தலைவர் கார்கே..மோதல் ஆரியர் - திராவிடர் விவகாரத்தை எழுப்பி பரபரப்பு
- எழுதப்பட்ட 'பாஸ்போர்ட்' காலாவதி
- 2016 ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
- உஷார் ! : நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை :முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவக்குமாஅரசு?
- எத்தனையே வழக்குகளில் இதுவும் ஒன்று: கருணாநிதி
- அமெரிக்காவிலா இருக்கு விஜயகாந்த் கேள்வி
- 'விரைவாக அறிக்கை அளியுங்கள்'சந்தித்த மத்திய குழுவிடம் ஜெ., வேண்டுகோள்
- ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு மழை சேத அறிக்கை
- அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை
| அமீர் கானை அறைந்தால் ரூ.1 லட்சம்! Posted: சண்டிகார் :'பாலிவுட் நடிகர் அமீர் கானின் கன்னத்தில் அறைந்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு தரப்படும்' என, சிவசேனா கட்சி அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் அமீர் கான், 50, சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. அதனால், நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என, என் மனைவி கேட்கிறாள்' என்றார்; அவரது பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமீர் கான், டங்கல் என்ற படத்தில் நடிப்பதற்காக, பஞ்சாப் ... |
| அமைச்சர் ராஜ்நாத்துடன் காங்., தலைவர் கார்கே..மோதல் ஆரியர் - திராவிடர் விவகாரத்தை எழுப்பி பரபரப்பு Posted: புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, மத சகிப்பின்மை தொடர்பான உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு பதிலடி தருவதாக நினைத்து, காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆரியர் - திராவிடர் விவகாரத்தை கிளப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125வது பிறந்த நாள் போன்றவற்றை கொண்டாடும் விதமாக, மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களும் விவாதம் நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.கூட்டாட்சி... முதல் நாளான நேற்று, இரு ... |
| எழுதப்பட்ட 'பாஸ்போர்ட்' காலாவதி Posted: புதுடில்லி :'கையால் எழுதப்பட்ட, 'பாஸ்போர்ட்'கள் இனி செல்லுபடியாகாது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்த, 2001 முதல், மத்திய அரசு, கணினி மற்றும், 'பார்கோடு' தொழில்நுட்பத்தில், பாதுகாப்பு அம்சங்ளுடன் கூடிய, பாஸ்போர்ட்டுகளை வழங்கி வருகிறது. அதற்கு முன், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வந்தன; இவற்றில், மோசடி நடைபெறுவதால், '2015, நவ., 25க்குப் பின், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் செல்லாது' என, கடந்த ஆண்டு, சர்வதேச விமான போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதையடுத்து, மத்திய அரசும், 'கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை கொடுத்து விட்டு, புதிய ... |
| 2016 ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு: பீஹார் முதல்வர் நிதிஷ் அறிவிப்பு Posted: பாட்னா :'பீஹாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படும்' என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நவ., 20ல் பதவியேற்றது. முன்னதாக சட்டசபை தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என நிதிஷ் குமார் அறிவித்தார்.இந்நிலையில் கலால் வரி தினத்தை முன்னிட்டு பாட்னாவில் நேற்று நடந்த ... |
| உஷார் ! : நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை :முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவக்குமாஅரசு? Posted: சென்னை: 'வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள, காற்று அழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக வலுவடைந்து உள்ளது. எனவே, நாளை முதல், தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த முறை போல் இல்லாமல், மழை வெள்ள பாதிப்பை உடனுக்குடன் சீர் செய்ய, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு முன்கூட்டியே துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வானிலை ஆய்வு மையம், அறிக்கை: அந்தமான் தீவுக்கு தென் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உருவான, காற்று மேலடுக்கு சுழற்சி, வங்கக் கடலின் தென் ... |
| எத்தனையே வழக்குகளில் இதுவும் ஒன்று: கருணாநிதி Posted: சென்னை :தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:அவதுாறாக தகவல்களை வெளியிட்டதாக கூறி, முதல்வர் ஜெயலலிதா, என் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். ஏற்கனவே, சுப்பிரமணியன் சாமி, விஜயகாந்த், பிரேமலதா, ராமதாஸ், ஸ்டாலின், 'முரசொலி' செல்வம், 'நக்கீரன்' கோபால் போன்றவர்கள் மீது, தமிழக அரசு, அவதுாறு வழக்குகளை தொடுத்துள்ளது.விஜயகாந்த் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அது விசாரணையில் உள்ளது. அந்த வழக்கு விசாரணையின் போது, 'அவதுாறு சட்ட பிரிவுகளை, தமிழக அரசு, அரசியல் பழி வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்துகிறது' ... |
| அமெரிக்காவிலா இருக்கு விஜயகாந்த் கேள்வி Posted: சென்னை: ''ஜெயலலிதாவின் எந்த செயலுக்கும், தே.மு.தி.க., ஆதரவு தராது,'' என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் நேற்று அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் முதல்வர் என்ற நிலையில், ஜெயலலிதா சென்று பார்க்கவில்லை. ஓட்டுப் போட்ட மக்களுக்கு, அவர் செய்யும் துரோகம் இது; கேட்டால், 'ஆர்.கே.நகருக்கு சென்றேன்' என்பார். அப்படியென்றால், மற்ற இடங்கள் எல்லாம், அமெரிக்காவிலா உள்ளன?வெள்ள நிவாரணத்துக்கு, 8,000 கோடி நிதி வேண்டும் என, மத்திய அரசை கேட்டுள்ளார். ஜெயலலிதாவால், எந்த நன்மையும் செய்ய முடியாது. அதனால், ... |
| 'விரைவாக அறிக்கை அளியுங்கள்'சந்தித்த மத்திய குழுவிடம் ஜெ., வேண்டுகோள் Posted: சென்னை : ''வெள்ள சேதங்களை விரிவாக பார்வையிட்டு, விரைவாக அறிக்கை அளியுங்கள்,'' என, தன்னை சந்தித்த மத்தியக் குழுவிடம், முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். தமிழக வெள்ள பாதிப்பு குறித்து, முதல்வர் ஜெயலலிதா, 23ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில், சேதங்களை பார்வையிட, மத்தியக் குழுவை அனுப்பி வைப்பதுடன், நிவாரண பணிகளுக்கு, உடனடி நிதி ஒதுக்கும் படி கேட்டிருந்தார்.அதை ஏற்று, பிரதமர் உடனடியாக, 940 கோடி ரூபாயை ஒதுக்கினார். மத்திய உள்துறை இணைச் செயலர் பிரசாத் தலைமையில், மத்தியக் குழுவை அனுப்பினார். இக்குழுவினர் நேற்று காலை, 10:40 மணிக்கு, ... |
| ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு மழை சேத அறிக்கை Posted: ''தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கையை, ஒரு வாரத்திற்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்,'' என, மத்திய குழு தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு நியமித்துள்ள, பல துறை அதிகாரிகளை கொண்ட மத்திய குழுவினர், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட்டனர். * தாம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்த மத்திய குழுவினரை, தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வரவேற்றனர்* மாலை, 4:00 மணிக்கு, மேற்கு தாம்பரம், 'சேவா சதன்' பள்ளியில் உள்ள வெள்ள நிவாரண ... |
| அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டு சாதனை Posted: மும்பை : மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு வீடு, 160 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளது. மும்பையில், 'அல்டமவுன்ட்' சாலையில், 'லோதா அல்டமவுன்ட்' என்ற பெயரில், 40 மாடிகளுடன் கூடிய, பிரம்மாண்டமான அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. முன்பணம் : இதில், 53 வீடுகள் கட்டப்பட உள்ளன. அதில், 34 மற்றும், 35வது மாடிகளில், 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் உள்ள, 'டூப்ளக்ஸ்' வீட்டை, ஜிந்தால் குடும்பத்தினர், 160 கோடி ரூபாய்க்கு வாங்குகின்றனர். இதற்காக, லோதா கட்டு மான குழுமத்திடம், 48 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளனர். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 27,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |