Tamil News | Online Tamil News |
- 'நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்': சத்ருகன் சின்ஹா புகழாரம்
- வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும்: 7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது
- மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்
- தமிழக கன மழைக்கு 'எல் நினோ' காரணமா?
- மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ., கடிதம்
- ஓசைப்படாமல் உதவும் தனியார் அமைப்புகள்: ஒருங்கிணைக்க மாநகராட்சி முன்வராதது ஏன்?
- ஒரு வீட்டுக்கு ரூ.17 ஆயிரம் செலவு: மழையால் மக்கள் அவதி தீரவில்லை
- பீஹார் மாநில முதல்வராக 5வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்பு: லாலுவின் 26 வயது மகன் தேஜஸ்வி துணை முதல்வர்
- ஐயோ! சாமி! போதும்டா சென்னை வாழ்க்கை!
- 3 நாள் சுற்றுபயணமாக மலேஷியா கிளம்பி சென்றார் மோடி
| 'நம்பிக்கை நட்சத்திரம் ராகுல்': சத்ருகன் சின்ஹா புகழாரம் Posted: புதுடில்லி: சொந்தக் கட்சிக்கு எதிராக, தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வரும், பா.ஜ., - எம்.பி., சத்ருகன் சின்ஹா, நேற்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுலை, 'வேகமாக வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரம்' என, புகழ்ந்துள்ளார். இதுதொடர்பாக, 'டுவிட்டரில்' அவர் அடுத்தடுத்து வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு:பீஹார் சட்டசபை தேர்தல் வெற்றி, ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி; நிதிஷ், லாலு, நம்பிக்கை நட்சத்திரம் ராகுல் ஆகியோர் அமைக்கும் கூட்டணி அரசுக்கு என் வாழ்த்துகள். பீஹார் முதல்வரும், மாநிலத்தை முன்னேற்ற வந்தவருமான நிதிஷுக்கும், பாமர மக்களின் தலைவரும், பீஹாரில் மிகப் ... |
| வீடு, கார், இருசக்கர வாகனங்கள் விற்பனை எகிறும்: 7-வது ஊதிய குழு பரிந்துரை அமலாகும் போது Posted: புதுடில்லி: 'ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படும் போது, மத்திய அரசு ஊழியர்களின் கையில், தாராளமான பணப்புழக்கம் இருக்கும்; இதனால், வீடு, கார், டூ - வீலர், வீட்டு உபயோகப்பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை எகிறும்' என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள், 2016 ஜன., 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என, ஒரு கோடி பேரின் மாதாந்திர சம்பளம் மற்றும் ஓய்வூதியம், 23 சதவீதம் அளவுக்கு உயரும். அப்போது, அவர்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். ... |
| மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த் Posted: தே.மு.தி.க., தலைவரும், திரையுலகத்தினரால், 'கேப்டன்' என, அழைக்கப்படுபவருமான விஜயகாந்த், தன் மகன் கதாநாயகனாக நடிக்கும், தமிழன் என்று சொல்லடா படம் மூலம், மீண்டும் நடிக்க வருகிறார்.விஜயகாந்த் கடைசியாக, விருதகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன் பின், சினிமா பக்கம் திரும்பாமல், தீவிர அரசியலில் ஈடுபட்டார். சமீபத்தில், அவரது மகன் சண்முக பாண்டியன் நடித்த, சகாப்தம் படத்தில், சில காட்சிகளில் மட்டும் நடித்தார். அந்தப்படம், எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.இன்று முன்னணி நடிகராக உள்ள விஜய்க்கு, ஆரம்ப கட்டத்தில் தோள் கொடுத்து உதவிய விஜயகாந்த், தன் ... |
| தமிழக கன மழைக்கு 'எல் நினோ' காரணமா? Posted: 'சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு, 'எல் நினோ' என்ற பருவ நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்' என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவ மழை சராசரியாக, 44 செ.மீட்டர் பெய்யும். நடப்பு ஆண்டில், நவ.,1 முதல், 18 வரை, சராசரியாக, 3.7 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.3 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, சராசரியை விட, 153 சதவீதம் அதிகம்.அதேநேரத்தில், இந்த காலகட்டத்தில், சென்னையில் சராசரி மழை, 10 செ.மீ., - பெய்தது, 44 செ.மீ., - இது, 329 சதவீதம் அதிகம்; காஞ்சிபுரத்தில் ... |
| மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெ., கடிதம் Posted: சென்னை:'இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள், 14 பேரையும், 50 படகுகளையும் உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:ராமேஸ்வரம், மண்டபம் மீன்பிடிப் பகுதியில் இருந்து, நவ., 18ம் தேதி, 14 மீனவர்கள், மூன்று இயந்திர படகுகளில், மீன் பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றுள்ளனர். நவ., 8ம் தேதி, படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறால் திசை மாறி, இலங்கை கடற்கரையில் ... |
| ஓசைப்படாமல் உதவும் தனியார் அமைப்புகள்: ஒருங்கிணைக்க மாநகராட்சி முன்வராதது ஏன்? Posted: சென்னை: மழை வெள்ளத்தால் சீர்குலைந்துள்ள சென்னை நகரத்தில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, பல்வேறு தனியார் அமைப்புகள் ஓசையின்றி களப்பணி ஆற்றி வருகின்றன. அந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து, உதவிகளை பெற, மாநகராட்சி முன்வரவில்லை.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாநகராட்சி நிர்வாகம், நிவாரண பணிகளை செய்து வருகிறது. மாநகராட்சியின், 23 ஆயிரம் பணியாளர்கள், குடிநீர் வாரியம் உட்பட பல்வேறு இதர அரசு துறைகளின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மாநகராட்சி தெரிவிக்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உறைவிட வசதி போன்றவற்றை மாநகராட்சி அளிப்பதாக ... |
| ஒரு வீட்டுக்கு ரூ.17 ஆயிரம் செலவு: மழையால் மக்கள் அவதி தீரவில்லை Posted: 'சென்னையில் மழைநீர் வடிந்து வரும் நிலையில், மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய, ஒவ்வொரு குடும்பத்தினரும், 13 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக மழை குறைந்ததாலும், அதிகாரிகளின் நடவடிக்கையாலும் மழைநீர் வடிய துவங்கியது. உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள், தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். அப்படி திரும்பியவர்கள், வீடு முழுவதும் சேதமடைந்திருப்பது கண்டு அதிர்ச்சியில் மூழ்கினர். வீடுகளின் உள்ளேயும் தண்ணீர் தேங்கி நின்றதால், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் ... |
| Posted: பாட்னா: பீஹார் மாநில முதல்வராக, 5வது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். அவருடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின், இரு மகன்கள் உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.பீஹார் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற, 'மெகா' கூட்டணி, 178 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அரசின் ... |
| ஐயோ! சாமி! போதும்டா சென்னை வாழ்க்கை! Posted: சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் தங்கியுள்ள, திருமணம் ஆகாத இளைஞர்கள் முதல் குடும்பங்கள் வரை, நகரில் இருந்து வெளியேறி, சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். சென்னை நகரில் வாடகை அதிகம் என்பதால், பலர் புறநகர்களிலும், வாடகை குறைவான பகுதிகளிலும் வசிக்கின்றனர். குறிப்பாக, திருவொற்றியூர், வில்லிவாக்கம், வேளச்சேரியின் ஒரு பகுதி, தாம்பரம் ஆகிய இடங்களில் வசிக்கின்றனர்.சமீபத்திய மழை வெள்ளம், அவர்களை மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் அதிகளவில் மிரட்டி இருக்கிறது. வீட்டு உபயோக பொருட்கள் பெருமளவு சேதம் அடைந்து உள்ளன. விளைவாக, இந்த பகுதிகளில் வாடகைக்கு ... |
| 3 நாள் சுற்றுபயணமாக மலேஷியா கிளம்பி சென்றார் மோடி Posted: புதுடில்லி: பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக, மலேஷியா கிளம்பி சென்றார். ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரஸாக் மற்றும் அந்நாட்டு மூத்த தலைவர்களுடன், இருநாட்டு உறவுகள் மேம்பாடு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.இதன் பின், பல்வேறு ஒப்பந்தங்களில், இரு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திடுவர்.கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பை, 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய நாடுகளில் முக்கியமானது இந்தியா. அதனால், நாளை, கிழக்கு ஆசிய உச்சி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 21,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |