Tamil News | Online Tamil News |
- 20 மாவட்டங்களில் அடைமழை கொட்டுது:பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை :இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்
- 'தூய்மை இந்தியா' வரி அமலால் செலவுகள் அதிகரிப்பு: ரயில், மொபைல் போன் கட்டணங்கள் உயர்வு
- மோடி மீது மீண்டும் சத்ருகன் பாய்ச்சல்
- பாரிசில் தாக்குதல்: பயங்கரவாதி கண்டுபிடிப்பு
- பொதுமக்கள் மீது தடியடி: விஜயகாந்த் கண்டனம்
- சென்னையில் சிக்கி தவித்த 1,900 பேர் மீட்பு: நிவாரண மையங்கள், முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு
- சென்னையில் ரயில், பஸ் சேவை பாதிப்பு
- சென்னையில் கனமழை எச்சரிக்கை: மின்சார ரயில்கள் சேவை நிறுத்தமா?
- 'ஏஜன்டு'க்கு புதிய அர்த்தம்: பாரிக்கர் தகவல்
- துருக்கியில் தற்கொலை தாக்குதல்: 'ஜி - 20'க்கு பலத்த பாதுகாப்பு
| Posted: தமிழகத்தில், 20 மாவட்டங்களில் கனமழை கொட்டுவதால், பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 'தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை, அக்., 28ல் துவங்கினாலும், கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய ... |
| 'தூய்மை இந்தியா' வரி அமலால் செலவுகள் அதிகரிப்பு: ரயில், மொபைல் போன் கட்டணங்கள் உயர்வு Posted: புதுடில்லி:மத்திய அரசின், 'சுவச் பாரத்' எனப்படும், 'துாய்மை இந்தியா' திட்டத்திற்காக, சேவை வரியில், 0.5 சதவீத கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், செலவுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ரயில், மொபைல் போன் உள்ளிட்ட சேவைகளுக்கு, கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, அருண் ஜெட்லி, நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், 'அனைத்து சேவைகள் அல்லது குறிப்பிட்ட சேவைகளுக்கு, துாய்மை இந்தியா திட்டத்திற்காக, வரை கூடுதல் வரி வசூலிக்க, அரசு திட்டமிட்டுள்ளது' என, தெரிவித்திருந்தார். அதன் படி, ... |
| மோடி மீது மீண்டும் சத்ருகன் பாய்ச்சல் Posted: நாக்பூர்:''பீஹாருக்கு சிறப்புத் திட்டங்கள் அளிக்கப்படும் என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு, அரசியல் தந்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர்,'' என, அம்மாநிலத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., சத்ருகன் சின்ஹா விமர்சித்துள்ளார். ஓரங்கட்டப்பட்டார்:பீஹார் சட்டசபை தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுத்தப்படாமல், பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜ., - எம்.பி.,யுமான சத்ருகன் சின்ஹா ஓரங்கட்டப்பட்டார். இதனால், கடும் அதிருப்தியில் உள்ள சின்ஹா, தேர்தலில், பா.ஜ., மோசமான தோல்வியை தழுவியதை அடுத்து, கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்து வருகிறார். மஹாராஷ்டிர ... |
| பாரிசில் தாக்குதல்: பயங்கரவாதி கண்டுபிடிப்பு Posted: பாரிஸ்:பாரிசில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், ஒருவனின் அடையாளம் தெரிய வந்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், இரண்டு நாட்களுக்கு முன், கால்பந்து மைதானம், இசை அரங்கு உள்ளிட்ட, ஆறு இடங்களில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், 129 பேர் பலியாயினர்; 352 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில், 99 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கை விரல் துண்டிப்பு: தற்கொலைப் படை தாக்குதலில் பலியான, ஏழு பயங்கரவாதிகளில், ஒருவனின் அடையாளம் தெரிந்துள்ளது. படக்லான் இசை அரங்கில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மூன்று ... |
| பொதுமக்கள் மீது தடியடி: விஜயகாந்த் கண்டனம் Posted: சிதம்பரம்:கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துணிசிரமேடு பகுதி மக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு போராட்டம் நடத்தினர். போராடிய பொதுமக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. வெள்ள பாதிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வழங்கிய, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் போதாதது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ... |
| சென்னையில் சிக்கி தவித்த 1,900 பேர் மீட்பு: நிவாரண மையங்கள், முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு Posted: சென்னை : சென்னையில் இடை விடாது பெய்யும் மழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி வீடுகளை இழந்தோர், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், வசிக்க முடியாதோர், 1,900 பேரை, மாநகராட்சி மீட்டு, பல்வேறு முகாம்கள், நிவாரண மையங்களில் தங்க வைத்துள்ளது.சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையாறு மண்டலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. நீர்வழித்தடங்கள் நிரம்பி வழிவதால், வெள்ளத்தை உடனடியாக வெளியேற்றுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. பேருந்து சாலைகளில், வெள்ளம் தேங்கி ... |
| சென்னையில் ரயில், பஸ் சேவை பாதிப்பு Posted: சென்னையில் நேற்று பெய்த கனமழையால், ரயில் மற்றும் பஸ் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை தினம் என்பதால், நிலைமை சமாளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு, தென் மாவட்டங்களில் இருந்து நேற்று காலை வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் எல்லாம், 30 முதல், 40 நிமிடங்கள் தாமதமாக வந்தன. ஞாயிற்றுக்கிழமை என்பதால், குறைந்த எண்ணிக்கையிலேயே மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன. |
| சென்னையில் கனமழை எச்சரிக்கை: மின்சார ரயில்கள் சேவை நிறுத்தமா? Posted: சென்னையில், நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வேலை நாளான, இன்றும், மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பதால், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோர், வியாபாரம் நிமித்தமாக பயணிப்போர் என, அனைவரும் அவதிப்பட உள்ளனர். இவர்களுக்காக, போதிய ரயில்களையும், பஸ்களையும் இயக்க வேண்டியது அவசியம். உயர்த்தப்பட்ட வழித்தடமாக உள்ளதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான மேம்பால ரயில் சேவை, கோயம்பேடு - ஆலந்துார் இடையிலான மெட்ரோ ரயில் சேவை ஆகியவை, மழை பாதிப்பில் இருந்து தப்புகின்றன. ஆகையால், மேம்பால பாதையில் செல்லும் ... |
| 'ஏஜன்டு'க்கு புதிய அர்த்தம்: பாரிக்கர் தகவல் Posted: புதுடில்லி: ' ஏஜன்டு' என்றால் அரசின் பிரதிநிதி என்ற வகையில் அவர்களின் செயல்பாடு தீர்மானிக்கப்பட உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது:ஆயுத கொள்முதலில் வெளிப்படையான தன்மைக்காக, மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அதில் ஒன்று, 'ஏஜன்டு'களை ஒழிப்பது. ஏனெனில், இப்போதைய நடைமுறைப்படி, ஏஜன்ட் என்றால், ஆயுத விற்பனை நிறுவனத்திடம் இருந்தும், அதை பெறும் நாட்டிடம் இருந்தும், 'கமிஷன்' பெறுபவர்கள் என, கருதப்படுகின்றனர்; அதை மாற்ற உள்ளோம். ஏஜன்ட் என்றால், அரசின் பிரதிநிதி என்ற வகையில், ... |
| துருக்கியில் தற்கொலை தாக்குதல்: 'ஜி - 20'க்கு பலத்த பாதுகாப்பு Posted: அன்டல்யா: மேற்காசிய நாடுகளில் ஒன்றான துருக்கியில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கும், 'ஜி - 20' மாநாடு துவங்கிய நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அங்கு, தற்கொலை படை தாக்குதல் நடத்தியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் இரவு, துருக்கி சென்றடைந்தார். இங்குள்ள சுற்றுலா தலமான, அன்டல்யாவில், ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும், இரண்டு நாள் உச்சி மாநாடு, நேற்று துவங்கியது; இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட, 20 ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 16,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |