Tamil News | Online Tamil News |
- தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் அதிகரிப்பு: கடந்த ஆண்டு சாதனை முறியடிக்க வாய்ப்பு
- மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த், வாசன்: வலுவான மூன்றாவது அணியாக உருவாகுமா
- பீஹார் தோல்விக்கு பாகவத் காரணமில்லை: ராஜ்நாத் சிங்
- பீஹார் மாநில பா.ஜ.,வில் சலசலப்பு: தேர்தல் தோல்வியால் குழப்பம்
- அன்னிய முதலீட்டை குவிக்க புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு
- மழையால் ரூ.2,000 கோடி தீபாவளி வர்த்தகம் பாதிப்பு: ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம்
- 'செல்பி' பிரியரா நீங்கள்? மனநோய் பாதிக்கும் அபாயம்
- எம்.பி., தொகுதி நிதி அதிகரிக்க வேண்டுமா?
- மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36: 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் நாசம்: வெள்ளத்தில் மிதக்கிறது கடலூர் மாவட்டம்
- டில்லி சட்டசபை தேர்தல் தோல்வியில் பாடம் கற்கவில்லை: பா.ஜ., மூத்த தலைவர்கள்
| தீபாவளி பண்டிகை சிறப்பு பஸ்கள் அதிகரிப்பு: கடந்த ஆண்டு சாதனை முறியடிக்க வாய்ப்பு Posted: சேலம்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துக்கழகங்கள் சார்பில், இயக்கப்படும் சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, நடப்பாண்டு அதிகரிக்கப்பட்டதால், கடந்த ஆண்டின் வருவாயை தாண்டி சாதனை படைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களின் சார்பில், கடந்த, 2011 தீபாவளி பண்டிகையை வரை, குறைந்த அளவிலேயே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், 2012 தீபாவளி முதல், சிறப்பு பஸ்கள் இயக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்த துவங்கியதை அடுத்து, அதிகாரிகள் சிறப்பு பஸ்களின் ... |
| மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த், வாசன்: வலுவான மூன்றாவது அணியாக உருவாகுமா Posted: பீகார் தேர்தல் முடிவுகளால், தமிழக அரசியல் களத்தில், அணி மாற்றம் ஏற்படலாம் என, தெரியவந்துள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு எதிராக, தே.மு.தி.க., - ம.தி.மு.க., - த.மா.கா., மார்க்சிஸ்ட்,இந்திய கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் அணி சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.பீகார் தேர்தல் முடிவுக்காக காத்திருந்த, விஜயகாந்தின் தே.மு.தி.க., இனி, பா.ஜ., கூட்டணியில் தொடர்வது கேள்விக்குறி யாகி உள்ளது. ஏற்கனவே, தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டு இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்ட, விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியில், இணைவதற்கானவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக, தகவல்கள் ... |
| பீஹார் தோல்விக்கு பாகவத் காரணமில்லை: ராஜ்நாத் சிங் Posted: புதுடில்லி:''பீஹார் சட்டசபை தேர்தலில், பாஜ., கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேச்சு, காரணம் அல்ல,'' என, மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:நிதிஷ் தலைமையில், 'மெகா' கூட்டணி அமைந்தது தான், பா.ஜ., கூட்டணி தோல்வி அடைய காரணம்; இதற்கு, பிரதமர் மோடியை பொறுப்பாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், 'இட ஒதுக்கீடு தொடர வேண்டும்' என்று தான் கூறினார். அதனால், அவரது பேச்சு தான், தோல்விக்கு காரணம் என்பதை ஏற்க முடியாது. அமித் ஷா, பா.ஜ., தலைவராக, அடுத்த ஆறு ... |
| பீஹார் மாநில பா.ஜ.,வில் சலசலப்பு: தேர்தல் தோல்வியால் குழப்பம் Posted: பாட்னா:பீஹார் மாநில சட்டசபைத் தேர்தலில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, மெகா கூட்டணி, அபார வெற்றி பெற்றதை அடுத்து, அவருக்கு வாழ்த்துக் கூறிய, பா.ஜ.,வை சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, தன்னை விமர்சித்த, மூத்த தலைவர் விஜய் வர்கியாவுக்கு பதிலடி தந்துள்ளார். மேலும் பல தலைவர்கள் அதிருப்தி கருத்துகளை கூறியதால்,கட்சியில் சலசலப்பு காணப்படுகிறது. மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளை கொண்ட பீஹார் மாநிலத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். மாநில சட்டசபைக்கு, அக்., 12 முதல், நவ., 5 வரை, ஐந்து கட்டங்களாக தேர்தல் ... |
| அன்னிய முதலீட்டை குவிக்க புதிய சீர்திருத்தங்கள் அறிவிப்பு Posted: புதுடில்லி: அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து, ராணுவம், கட்டுமானம் உள்ளிட்ட, 15 துறைகளில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி சீர்திருத்தங்களை நேற்று அறிவித்துள்ளது.கடந்த வாரம் வௌியான, பீஹார் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், பா.ஜ., அரசுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில், புதிய சீர்திருத்தங்களை, மத்திய அரசு நேற்று மேற்கொண்டுள்ளது.இதுகுறித்து, மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை விவரம்:நாட்டில் பொருளாதார ... |
| மழையால் ரூ.2,000 கோடி தீபாவளி வர்த்தகம் பாதிப்பு: ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேக்கம் Posted: சேலம்: தமிழகத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, தீபாவளி பண்டிகையில், 2,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகத்தில் முடக்கம் ஏற்பட்டது; பட்டாசு கடைகளில் மட்டும், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கி உள்ளன.தமிழகத்தில், நவ.,1ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களில் கன மழை பெய்த நிலையில், வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை. இதனால், தீபாவளி பண்டிகை விற்பனைக்காக, வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை வாங்கிக் குவித்தனர்.தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான, நவ., 9ம் தேதி, காலை முதல், சேலம், தர்மபுரி, ... |
| 'செல்பி' பிரியரா நீங்கள்? மனநோய் பாதிக்கும் அபாயம் Posted: காலையில் கண் விழித்ததும், 'பேஸ்புக்'கில், 'குட்மார்னிங்' என பதிவிட்டு, எத்தனை, 'லைக்' விழுந்திருக்கிறது என பார்த்துவிட்டு பல் துலக்கச்செல்வோரும் உள்ளனர். இணைய தள அடிமைகளாக, இன்றைய தலைமுறை மாறிவிட்டதோ என்றே அஞ்சும் அளவுக்கு, அவற்றின் உபயோகம் எல்லைமீறிவிட்டது.குடும்ப உறுப்பினர்களுள் ஆரோக்கியமான உரையாடல்களும், ஆனந்தமாக பேசி பொழுது போக்கும் நகைச்சுவை பேச்சுக்களுக்கும், இப்போதைய அவசர உலகில், அவசியமில்லாமல் போய்விட்டது. பலரும் 'பேஸ்புக்', 'டிவிட்டர்' போன்ற இணையதள இடிபாடுகளில் சிக்கி பொழுதை போக்கிவருகின்றனர்.போதாக் குறைக்கு, 'செல்பி' மோகம் வேறு. ... |
| எம்.பி., தொகுதி நிதி அதிகரிக்க வேண்டுமா? Posted: லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் தங்களது தொகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, தற்போது ஒவ்வொரு எம்.பி.,க்கும் ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் தொகுதி நிதியாக மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியை குடிநீர், சாலை வசதி, பள்ளிகளுக்கு கட்டடம், சுகாதாரதிட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைநிறைவேற்றுவதற்கு செலவிடலாம்.லோக்சபா எம்.பி.,க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கும், ராஜ்யசபாஎம்.பி.,க்கள் தாங்கள் தேர்வான மாநிலத்தில் ஏதாவது 2 மாவட்டங்களிலும், லோக்சபா மற்றும் ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் இந்தியாவில் ஏதாவது ஒரு மாவட்டத்துக்கும் ... |
| Posted: தமிழகத்தின் பல பகுதிகளில், மூன்று நாட்களாக கொட்டிய கன மழைக்கு, பலியானோர் எண்ணிக்கை, 36 ஆக உயர்ந்துள்ளது; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில், சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழையால் கடலுார் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது.வங்கக் கடலில், புதுச்சேரி அருகே, 150 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறி, நேற்று முன்தினம் கடலுார் அருகே கரையை கடந்தது. இதனால், சென்னை, கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, சேலம் உட்பட, பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது.மழை வெள்ளத்துக்கு, கடலோர மாவட்டங்களில் அதிக அளவில் உயிர் ... |
| டில்லி சட்டசபை தேர்தல் தோல்வியில் பாடம் கற்கவில்லை: பா.ஜ., மூத்த தலைவர்கள் Posted: புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் கிடைத்த தோல்வியிலிருந்து பாடம் கற்காததால் தான் பீஹார் சட்டசபை தேர்தலில் தோல்வி கிடைத்துள்ளதாக அத்வானி, முரளி மனோகர்ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி 58 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பீஹார் சட்டசபை தேர்தல் தோல்வி குறித்து பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சாந்த குமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 11,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |