Cinema.tamil.com |
- நான் தவளைக்கறி விரும்பி சாப்பிடுவேன் - ஓவியா!
- கருணாநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிககள்
- 100 கோடி போட்டியில் 'வேதாளம், தனி ஒருவன்'
- சூர்யா உடன் அதர்வா மோதல்- வெற்றி கிடைக்குமா?
- புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பிரிந்தனர்
- பாகுபலி படத்திற்கு விருது வென்ற ராணா
- சர்தார் படப்பிடிப்பில் பிசியான காஜல் அகர்வால்
- அடுத்தடுத்து திரைக்கு வரும் மஞ்சு மனோஜ் படங்கள்
- அல்லு அரவிந்த் தயாரிப்பில் நடிக்கும் நானி
- ஆர்யாவுடன் முத்தக்காட்சியில் அனுஷ்கா?
- வெற்றிக் கொண்டாட்டத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்
- 'ஒரு நாள் இரவில்' - நிலவரம் என்ன ?
- சல்மானிடம் கதை சொல்ல தயங்கிய ஜரின்கான்!
- ரூ.60 கோடிக்கு 'தில்வாலே' சாட்டிலைட் விற்பனை!
- சஞ்சய்தத் படத்திற்காக மொட்டை போடும் ரன்பீர்!
- ஷிவ்வாயில் வீர் தாஸ்!
- ராணா டகுபதிக்கு கிடைக்கும் தனி அங்கீகாரம்
- 'சவுகார்பேட்டை'-யில் ராய் லட்சுமியை பார்த்து மிரளுவார்கள் - இயக்குநர்
- விமலின் பங்காளிகள்!
- 9 அடி ராட்சத அலையில் சிக்கிய 'அனார்கலி' டீம்..!
| நான் தவளைக்கறி விரும்பி சாப்பிடுவேன் - ஓவியா! Posted: 'களவாணி' படத்தின் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து மெரினா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இப்போது ''144'' என்ற படத்தில் நடித்துள்ளார். திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், அபி அண்ட் அபி சார்பில் அபினேஷ் இளங்கோவனும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஓவியாவுடன், ... |
| கருணாநிதியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிககள் Posted: சென்னை : நடிகர் சங்கத்திற்கு நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வுவாகியுள்ளனர். பொறுப்புக்கு வந்தவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடக்க உள்ளது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ... |
| 100 கோடி போட்டியில் 'வேதாளம், தனி ஒருவன்' Posted: 'வேதாளம்' படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததா இல்லையா என்பது பற்றி கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்து வருகிறது. ஒரு பக்கம் அந்தப் படம் 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டதென்றும் மறு பக்கம் அவ்வளவு வசூலை இன்னும் தொடவில்லை என்று சிலரும் சொல்லி வருகிறார்கள். ஆனால், 'வேதாளம்' படம் வாங்கிய அனைவருக்குமே மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதித்துக் ... |
| சூர்யா உடன் அதர்வா மோதல்- வெற்றி கிடைக்குமா? Posted: டிசம்பர் மாதம் வெளியிடத் தயாராக கெத்து, டார்லிங்-2, பசங்க -2, ரஜினி முருகன், சவுகார்பேட்டை, கரையோரம் உட்பட ஏறக்குறைய ஒரு டஜன் படங்கள் காத்திருக்கின்றன. இந்த போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் அதர்வா நடிக்கும் ஈட்டி படத்தை நவம்பர் மாதம் 27 அன்று ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவில் இருந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். பிரபல விநியோகஸ்தரான ... |
| புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பிரிந்தனர் Posted: விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கிய புலி படத்தை விஜய்யின் முன்னாள் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமாரும், விஜய் படங்களின் கேரள விநியோகஸ்தரான ஷிபு தமீம் இருவரும் இணைந்து தயாரித்தனர். புலி படத்தின் ரிசல்ட் நாடறிந்த விஷயம். அந்தப் படத்தின் கணக்கு வழக்குகளை செட்டில் செய்து கொண்ட பிறகு, பி.டி.செல்வகுமாரும், ஷிபு தமீமும் பிரிந்துவிட்டனர். ... |
| பாகுபலி படத்திற்கு விருது வென்ற ராணா Posted: அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பனாக வந்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் ராணா, பாகுபலி படத்தில் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் இந்திய அளவில் அவருக்கு புகழை ஈட்டித்தந்துள்ளது. பாகுபலி படத்தில் வில்லன் வேடத்தில் மிரட்டியதற்காக ராணாவிற்கு ஆசியாவிசன் மூவி அவார்ட்ஸ் 2016, ... |
| சர்தார் படப்பிடிப்பில் பிசியான காஜல் அகர்வால் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்தார் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தை இயக்குனர் பாபி இயக்குகின்றார். ஈரோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ... |
| அடுத்தடுத்து திரைக்கு வரும் மஞ்சு மனோஜ் படங்கள் Posted: டோலிவுட்டின் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் அதிரடி நாயகனாக நடித்துள்ள அட்டாக் படத்தில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்த நடிகை சுரபி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில் இப்படத்தை டிசம்பரில் திரைக்கு கொண்டுவர ராம் ... |
| அல்லு அரவிந்த் தயாரிப்பில் நடிக்கும் நானி Posted: நானி நடிப்பில் டோலிவுட்டில் இறுதியாக வெளியான பலே பலே மகாதேவோ திரைப்படம் விமர்சக ரீதியாகவும் வசூலிலும் வெற்றி பெற்றது. இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவான பலே பலே மகாதேவோ படத்தில் நானி, ஞாபக மறதியுடன் தனது காதலைக் காப்பாற்றும் இளைஞனாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். அப்படத்திற்கு பின்னர் 14 ... |
| ஆர்யாவுடன் முத்தக்காட்சியில் அனுஷ்கா? Posted: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள இஞ்சி இடுப்பழகி திரைப்படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து அனுஷ்காவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அனுஷ்கா இப்படத்திற்காக தனது உடல் எடையைக் கூட்டி குண்டான உடல் தோற்றத்துடன் நடித்திருப்பதே இவ்வித எதிர்பார்ப்பிற்கு காரணம். பிவிபி ... |
| வெற்றிக் கொண்டாட்டத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் Posted: மீடியாக்களில் என்ன செய்தி வேண்டுமானாலும் வரட்டும் எதைப் பற்றியும் கவலையில்லை என்று காதல் ஜோடி ஒன்று நானும் ரௌடிதான் வெற்றியை வெளிநாடுகளில் சுற்றுலாவாகக் கொண்டாடி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றி அனைத்து மீடியாக்களுமே பேசிவிட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட அவர்கள் அது தங்களது தனிப்பட்ட விவகாரம் என்று சொன்னாலும் ... |
| 'ஒரு நாள் இரவில்' - நிலவரம் என்ன ? Posted: மலையாளத்திலிருந்தும், தெலுங்கிலிருந்தும், ஹிந்தியிலிருந்தும் எண்ணற்ற படங்கள் தமிழில் ரீமேக்காகி வருகின்றன. சமீப காலமாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வரும் படங்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. சிலர் சரியான விதத்தில் அந்தப் படங்களை ரீமேக் செய்து வெற்றி பெற்று விடுகின்றனர். சிலர் பல விஷயங்களில் கோட்டை விட்டு ... |
| சல்மானிடம் கதை சொல்ல தயங்கிய ஜரின்கான்! Posted: 'ஹேட் ஸ்டோரி-3' படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகை ஜரின் கான். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஹேட் ஸ்டோரி-3 படத்தின் கதையை சல்மானிடம் சொல்ல தயங்கியதாக கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஹேட் ஸ்டோரி-3 படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் உள்ளன. இதனால் அப்படிப்பட்ட காட்சியையும், கதையையும் ... |
| ரூ.60 கோடிக்கு 'தில்வாலே' சாட்டிலைட் விற்பனை! Posted: ''சென்னை எக்ஸ்பிரஸ்'' படத்திற்கு பிறகு மீண்டும் ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ''தில்வாலே''. இப்படத்தில் பாலிவுட்டின் மோஸ்ட் ரொமாண்ட்டிக் ஜோடி என பெயர் எடுத்த ஷாரூக்கானும், கஜோலும் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாரூக் உடன் ஜோடி சேர்ந்துள்ளார் கஜோல். இதனாலேயே இப்படத்திற்கு அதிக ... |
| சஞ்சய்தத் படத்திற்காக மொட்டை போடும் ரன்பீர்! Posted: பாலிவுட்டின் இளம் நடிகரான ரன்பீர் கபூர், ''தமாஷா'' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தமாஷா படத்தை முடித்த பின்னர் அனுராக் பாசு இயக்கத்தில், ஜகா ஜாசூஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் துவங்குகிறது. இதற்கு அடுத்தப்படியாக ஏ தில் ஹே முஷ்கில் ... |
| Posted: த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு நடிகர் அஜய் தேவ்கன் தனது கனவுப்படமான ''ஷிவ்வாய்''-ல் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் வீர் தாஸூம் இணைந்துள்ளார். வீர் தாஸ், இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில், அதுவும் ஒரு ஆக்ஷ்ன் ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்காக ... |
| ராணா டகுபதிக்கு கிடைக்கும் தனி அங்கீகாரம் Posted: 'பாகுபலி' படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து இந்தியத் திரையுலகில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ஒரு நடிகராக தன்னுடைய உயரத்தைப் போலவே உயர்ந்து நிற்கிறார் ராணா டகுபதி. அந்தப் படத்தில் நடித்த நாயகன் பிரபாஸுக்குக் கூட இந்த அளவிற்கு பெயரும் புகழும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அவர் அடுத்தும் 'பாகுபலி' ... |
| 'சவுகார்பேட்டை'-யில் ராய் லட்சுமியை பார்த்து மிரளுவார்கள் - இயக்குநர் Posted: சாட்டை படத்தை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோ தற்போது தயாரித்துள்ள படம் சவுகார்பேட்டை, ஸ்ரீகாந்த் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் அதில் ஒன்று மந்திரவாதி மற்றொன்று சவுகார்பேட்டை இளைஞன். ராய் லட்சுமி சவுகார்பேட்டை சேட்டு பொண்ணாக இருந்து பேயாக மாறுகிற கேரக்டர். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் ... |
| Posted: பசங்க, களவாணி, வாகை சூடவா போன்றவை விமலுக்கு முக்கியமான படங்கள். இந்த படங்களில் ரொம்ப இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதில், வாகை சூடவா அவருக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. அதேசமயம், சிட்டி கதைகளை விட கிராமத்து கதைகளே அவருக்கு வெற்றியாக அமைந்து வருவதால், கிராமத்து கதை பண்ணும் டைரக்டர்களே விமலை அணுகி வருகிறார்கள். ... |
| 9 அடி ராட்சத அலையில் சிக்கிய 'அனார்கலி' டீம்..! Posted: கடந்த வாரம் வெளியான பிருத்விராஜின் 'அனார்கலி' படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்து விட்டது. இந்தப்படத்தில் லட்சத்தீவில் படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தந்துள்ளது. இந்தப்படத்தை ஆரம்பிக்கும் முன் எந்த தீவில் படமாக்கலாம் என முடிவு செய்வதற்காக லொக்கேஷன் பார்க்க கிளம்பினார்களாம் அனார்கலி டீம். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-11-21. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |