மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காசி விஸ்வநாதர் கோயிலில் உடை கட்டுப்பாடு - பெண்கள் இனி கட்டாயமாக சேலை அணிந்து வரவேண்டும்
- ஆந்திராவில் 7 மாவட்டத்தில் பலத்த மழை: 263 பேர் பலி
- ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல்: மும்பையில் பாதுகாப்பு மேலும் தீவிரம்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயர்துடைப்பு பணியில் உதவுங்கள்: ஆம் ஆத்மி தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவு
- சபரிமலையில் இருதய நோயாளிகளின் வசதிக்காக 17 இடங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள்: மருத்துவ அதிகாரி தகவல்
- ஷீனா போரா உயிருடன் இருப்பதாக பீட்டர் முகர்ஜியை நம்பவைக்க இந்திராணி செய்த தில்லுமுல்லுகள்
- மலப்புரம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ்– லாரி மோதல்: 5 பேர் பலி
- சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 140 பேர் மீது அமலாக்கப்பிரிவின் பிடி இறுகுகிறது
- அசாமில் 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒற்றை கள்ளநோட்டுடன் 3 பேர் கைது
- கொல்லத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் தற்கொலை
- அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: முதல்-மந்திரி போர்க்கொடி
- டெல்லி மாநில வளர்ச்சிக்கு ரூ.3,250 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு
- மேற்குவங்க இளைஞர்களை குறிவைக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
- ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய தெலுங்கானா நீதிமன்றம்
- பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளிக்கிறார் கவிஞர் ஜெயந்த் மகாபத்ரா: ஜனாதிபதிக்கு கடிதம்
- சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறுமா? பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 26-ந்தேதி தொடங்குகிறது
- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அத்வானி திடீர் பாராட்டு
- 76-வது பிறந்த நாள்: முலாயம்சிங்யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- ஸ்ரீநகரில் இருந்து நேரடியாக குல்மார்க், பகல்காமுக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்கி வைத்த காஷ்மீர் முதல்வர்
- சர்ச்சைக்குரிய கருத்திற்கு விளக்கம் அளிப்பதாக கூறி மீண்டும் சர்ச்சையில் மாட்டிய அசாம் ஆளுநர்
| காசி விஸ்வநாதர் கோயிலில் உடை கட்டுப்பாடு - பெண்கள் இனி கட்டாயமாக சேலை அணிந்து வரவேண்டும் Posted: 22 Nov 2015 10:38 PM PST உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பெண்கள் குட்டையான பாவாடைகள் மற்றும் டிரவுசர்களை அணிந்துவருவதை தடுக்கும் வகையில் இனி பெண்கள் அனைவரும் சேலை அணிந்துவந்தால் மட்டுமே கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆந்திராவில் 7 மாவட்டத்தில் பலத்த மழை: 263 பேர் பலி Posted: 22 Nov 2015 10:16 PM PST குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள நெல்லூர், சித்தூர், அனந்தபுரம், கடப்பா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, பிரகாசம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. |
| ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதி மிரட்டல்: மும்பையில் பாதுகாப்பு மேலும் தீவிரம் Posted: 22 Nov 2015 09:58 PM PST ஏர் இந்தியா விமானத்தை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அண்மையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்மஆசாமி ஒருவர் தானேயில் உள்ள ஏர் இந்தியா அலுவலக |
| Posted: 22 Nov 2015 09:32 PM PST மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் துயர்துடைப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு உதவிடும்படி தமிழ்நாட்டில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை கடந்த இருவாரங்களாக பதம்பார்த்த பெருமழையின் விளைவாக மாநிலத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. நிவாரணம் ம |
| சபரிமலையில் இருதய நோயாளிகளின் வசதிக்காக 17 இடங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள்: மருத்துவ அதிகாரி தகவல் Posted: 22 Nov 2015 08:34 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் 17 இடங்களில் ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைக்கப்படும் என்று தேவஸ்தான மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:– சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 5 வயது முதல் 100 வயது வரையிலான பக்தர்கள் மாலை அணிந்து அய்யப்பனை தரிசிக்க வருகை தருகிறார்கள். |
| ஷீனா போரா உயிருடன் இருப்பதாக பீட்டர் முகர்ஜியை நம்பவைக்க இந்திராணி செய்த தில்லுமுல்லுகள் Posted: 22 Nov 2015 08:27 PM PST ஷீனா போரா உயிருடன் இருப்பதாக தனது கணவர் பீட்டர் முகர்ஜியை நம்பவைக்க இந்திராணி மேற்கொண்ட தில்லுமுல்லு வேலைகள் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷீனா போரா கொலை வழக்கில் புதைந்துகிடக்கும் மர்மங்களை சி.பி.ஐ. கண்டறிந்து வருகிறது. இதையொட்டி, கடந்த வியாழக்கிழமை சிறப்பு கோர்ட்டில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதில் கூறி இருப்பதாவது:– |
| மலப்புரம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ்– லாரி மோதல்: 5 பேர் பலி Posted: 22 Nov 2015 07:59 PM PST கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த மட்டனூரை சேர்ந்த 40 பேர் ஒரு சுற்றுலா பஸ்சில் சேலத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவுக்கு வந்தனர். அங்கு விழாவில் பங்கேற்றபின்னர் அவர்கள் அதே பஸ்சில் நேற்று இரவு ஊர் திரும்பினர். இன்று அதிகாலை அந்த பஸ் அக்கரபாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே ஒரு லாரி வேகமாக வந்தது. |
| சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 140 பேர் மீது அமலாக்கப்பிரிவின் பிடி இறுகுகிறது Posted: 22 Nov 2015 07:40 PM PST சுவிஸ் நாட்டில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் போட்டு வைத்துள்ள 628 பேர் பெயர்கள் அடங்கிய பட்டியலை அங்கு பணியாற்றிய ஒரு ஊழியர் திருடி, பிரான்சு நாட்டு அரசுக்கு கொடுத்தார். பிரான்சு அரசு, அந்த பட்டியலை இந்தியாவிடம் கொடுத்தது. |
| அசாமில் 10 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒற்றை கள்ளநோட்டுடன் 3 பேர் கைது Posted: 22 Nov 2015 07:28 PM PST அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா - வங்காளதேசம் எல்லைப்பகுதியில் 10 லட்சம் அமெரிக்க டாலர் முகமதிப்புள்ள ஒற்றை கள்ளநோட்டுடன் எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலர் உள்பட மூன்று பேரை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு லட்சம் டாலர், பத்து லட்சம் டாலர் உள்ளிட்ட மிகப்பெரிய தொகைக்கான டாலர் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு, |
| கொல்லத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் தற்கொலை Posted: 22 Nov 2015 07:03 PM PST கேரளாவின் கொல்லம் மாவட்டம் பரவூரில் வசித்து வந்தவர் அர்ச்சனா (வயது 30). இவருக்கு அனு (9), பொன்னி (5) என 2 குழந்தைகள் இருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டரான அர்ச்சனா, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். |
| அசாம் கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: முதல்-மந்திரி போர்க்கொடி Posted: 22 Nov 2015 06:55 PM PST நாகாலாந்து கவர்னராக பதவி வகித்து வரும் பி.பி.ஆச்சார்யா, கூடுதல் பொறுப்பாக அசாம் மாநிலத்தையும் கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் 'இந்துஸ்தான்(இந்தியா) இந்துக்களுக்கு மட்டும்தான்' என்று கருத்து தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. |
| டெல்லி மாநில வளர்ச்சிக்கு ரூ.3,250 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு Posted: 22 Nov 2015 04:27 PM PST அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு வளர்ச்சி நிதியாக ரூ.3,250 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசு, டெல்லி அரசு மற்றும் டெல்லி நகராட்சி மூன்றும் இணைந்து தூய்மை டெல்லி முகாமின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் |
| மேற்குவங்க இளைஞர்களை குறிவைக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை Posted: 22 Nov 2015 04:24 PM PST சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். சில பகுதிகளை கைப்பற்றி அதனை இஸ்லாமிய தேசமாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதில் இணையுமாறு பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக இளைஞர்களை கவர ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் இணையம் முக்கியமான வழி. |
| ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி விவாகரத்து வழங்கிய தெலுங்கானா நீதிமன்றம் Posted: 22 Nov 2015 03:43 PM PST தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு ஸ்கைப் மூலம் விசாரணை நடத்தி தெலுங்கானா நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்த பெண்ணின் தரப்பு ஆலோசகர் பொன்னைய்யா கூறுகையில்: |
| பத்மஸ்ரீ விருதினை திருப்பி அளிக்கிறார் கவிஞர் ஜெயந்த் மகாபத்ரா: ஜனாதிபதிக்கு கடிதம் Posted: 22 Nov 2015 03:00 PM PST நாட்டில் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாக கூறி எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தங்களது விருதினை திருப்பி அளித்து வருகின்றனர். |
| சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேறுமா? பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 26-ந்தேதி தொடங்குகிறது Posted: 22 Nov 2015 01:05 PM PST பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. கடந்த ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் நடந்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு பின்பு குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம்(டிசம்பர்) 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. |
| பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அத்வானி திடீர் பாராட்டு Posted: 22 Nov 2015 12:21 PM PST பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி திடீரென பாராட்டி உள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்காக பிரதமர் மோடியையும், |
| 76-வது பிறந்த நாள்: முலாயம்சிங்யாதவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து Posted: 22 Nov 2015 11:16 AM PST சமாஜ்வாடி கட்சி தலைவரான முலாயம்சிங் யாதவ் நேற்று தனது 76-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு மலேசியா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் வலைதள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் 'பிறந்தநாள் கொண்டாடும் |
| Posted: 22 Nov 2015 09:04 AM PST காஷ்மீர் சுற்றுலா தலங்களில் குல்மார்க், பகல்காம் ஆகியவை முக்கிய இடம் வகித்து வருகின்றன. ஆனால், அப்பகுதிகளுக்கு செல்ல போதுமான அளவில் போக்குவரத்து வசதிகள் எளிமையாக இல்லை. இந்நிலையில், காஷ்மீரில் சுற்றுலாத்துறையை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் முதல்முறையாக ஸ்ரீநகர் ஏர்போர்ட்டில் இருந்து நேரடியாக குல்மார்க், |
| சர்ச்சைக்குரிய கருத்திற்கு விளக்கம் அளிப்பதாக கூறி மீண்டும் சர்ச்சையில் மாட்டிய அசாம் ஆளுநர் Posted: 22 Nov 2015 06:55 AM PST அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் செய்தியாளர் கேள்விக்குப் பதிலளித்த அம்மாநில ஆளுநர் ஆச்சார்யா, இந்தியா இந்துகளுக்கானது. மற்ற நாடுகளில் இருந்து அடைக்கலம் தேடிவரும் இந்துக்களை ஏற்பதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை என கூறினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |