மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இன்று குழந்தைகள் தினம்: ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சோனியா அஞ்சலி
- கேரளா காங். எம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பி.சி. ஜார்ஜ் எம்.எல்.ஏ. கட்சி தாவல் தடை சட்டத்தில் டிஸ்மிஸ்
- 6–வது மாடியில் இருந்து விழுந்து தெலுங்கு நடிகர் மரணம்
- திருப்பதி 2–வது மலைபாதையை நிரந்தரமாக மூட திட்டம்: ரோப்கார் வசதி செய்ய பரிசீலனை
- மலைப்பாதையில் நிபுணர்கள் ஆய்வு: திருப்பதி மலைப்பாதையை அகலப்படுத்த திட்டம்
- நிரபராதி என நிரூபித்து மீண்டும் திரும்பி வருவேன்: ஆதரவாளர்கள் முன்பு மாணி ஆவேசம்
- பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 150 பேர் பலி: பிரதமர், ஜனாதிபதி கண்டனம்
- ஸ்மார்ட் நகர இலக்கை அடைய மேயர்களுக்கு கூடுதல் அதிகாரம்: தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
- நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு
- கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- சோனியா, ராகுலுடன் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்திப்பு
- முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு அருண் ஜேட்லி நாளை பயணம்
- எலிசபெத் ராணிக்கு டீ, தேன், சால்வையுடன் அரிய நிழற்படங்களையும் பரிசாக வழங்கிய மோடி
- சத்தீஷ்கரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
- லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் மோடி: லண்டன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு
- இளைஞர்களை கவரும் இந்திய ராணுவம்: புதிய அசத்தல் வீடியோ
- மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 19-ம் தேதி சீனா பயணம்
- 66.11 சதவீத இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு
- ஆசிட் வீச்சில் ரஷ்ய இளம்பெண் படுகாயம்: காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்
- பூஜை செய்வதற்காக சோட்டா ராஜனை சந்திக்க அனுமதிக்க வேண்டும்: சகோதரிகள் மனு
| இன்று குழந்தைகள் தினம்: ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சோனியா அஞ்சலி Posted: 13 Nov 2015 11:18 PM PST முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் மாதம் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறு குழந்தைகள் மீது நேரு வைத்திருந்த பாசத்தை பிரதிபலிப்பதாக இந்த நாள் கொண்டாடப்படுகின்றது. நேருவின் 126-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் யமுனை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சாந்தி வனம் பகுதியில் உள்ள அவரது |
| Posted: 13 Nov 2015 11:10 PM PST கேரளாவில் காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவர் மாணி, காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதி மந்திரியாக இருந்தார். இவர் மீது மது பார் ஊழல் வழக்கு தொடரப்பட்டது. ரூ.1 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாணி பதவியை ராஜினாமா செய்தார். |
| 6–வது மாடியில் இருந்து விழுந்து தெலுங்கு நடிகர் மரணம் Posted: 13 Nov 2015 10:11 PM PST ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும்படங்களில் நடித்து வந்தார். முதன் முறையாக 'இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு' (இக்காலத்தில் ராமன்–சிதையை போல யார் இருக்கிறார்கள்) என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் |
| திருப்பதி 2–வது மலைபாதையை நிரந்தரமாக மூட திட்டம்: ரோப்கார் வசதி செய்ய பரிசீலனை Posted: 13 Nov 2015 09:34 PM PST திருப்பதி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள், சாலையை அகலப்படுத்த திட்டமிட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரு |
| மலைப்பாதையில் நிபுணர்கள் ஆய்வு: திருப்பதி மலைப்பாதையை அகலப்படுத்த திட்டம் Posted: 13 Nov 2015 09:21 PM PST திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையும், அங்கிருந்து வாகனங்கள் திரும்பி வருவதற்கு ஒரு பாதையும் உள்ளன. அந்த பாதைகளின் நீளம் 16 கிலோமீட்டராகும். சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக, திருப்பதி– திருமலை மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. அதனால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| நிரபராதி என நிரூபித்து மீண்டும் திரும்பி வருவேன்: ஆதரவாளர்கள் முன்பு மாணி ஆவேசம் Posted: 13 Nov 2015 08:50 PM PST கேரள நிதி மந்திரியாக இருந்தவர் மாணி. இவர் கேரளாவில் மூடப்பட்ட மது பார்களை மீண்டும் திறக்க உதவி செய்வதாக கூறி மது பார் உரிமையாளர்களிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. கேரள லஞ்ச ஒழிப்புத்துறை கோர்ட்டில் இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொடுத்த நெருக்கடியும், |
| பாரிசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் 150 பேர் பலி: பிரதமர், ஜனாதிபதி கண்டனம் Posted: 13 Nov 2015 07:44 PM PST பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை நூற்றைம்பதை கடந்துள்ள நிலையில் இந்த கொடூர தாக்குதல்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| ஸ்மார்ட் நகர இலக்கை அடைய மேயர்களுக்கு கூடுதல் அதிகாரம்: தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு Posted: 13 Nov 2015 07:37 PM PST லண்டனில் அம்பேத்கர் இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த நிலையில், லண்டனில் 'ஸ்மார்ட்' நகர திட்டம் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் |
| நிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு Posted: 13 Nov 2015 07:20 PM PST பீகார் சட்டசபைக்கு அண்மையில் நடந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மெகா கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போதைய முதல்-மந்திரி நிதிஷ்குமார் வருகிற 20-ந்தேதி பாட்னாவில் |
| கோவனை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 13 Nov 2015 06:48 PM PST மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு பொறுப்பாளரும், பிரபல தெருக்கூத்து பாடகருமான கோவன் (வயது 54), தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அவர் |
| சோனியா, ராகுலுடன் விஜயதரணி எம்.எல்.ஏ. சந்திப்பு Posted: 13 Nov 2015 06:41 PM PST டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதரணி எம்.எல்.ஏ. சந்தித்தார். அவருடன் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் 20 பேரும் கலந்து கொண்டனர். |
| முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு அருண் ஜேட்லி நாளை பயணம் Posted: 13 Nov 2015 03:36 PM PST மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அந்த நாட்டு முதலீட்டாளர்களிடம் எடுத்துரைப்பதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். |
| எலிசபெத் ராணிக்கு டீ, தேன், சால்வையுடன் அரிய நிழற்படங்களையும் பரிசாக வழங்கிய மோடி Posted: 13 Nov 2015 01:44 PM PST மூன்று நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் இங்கிலாந்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். |
| சத்தீஷ்கரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை Posted: 13 Nov 2015 01:02 PM PST சத்தீஷ்கர் மாநிலம், பிஜாபூர் மாவட்டத்தில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, மாநில காவல்துறை ஐ.ஜி. எஸ்.ஆர்.பி.கல்லூரி, ராய்பூரில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பிஜாபூர் மாவட்டம், |
| லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் மோடி: லண்டன் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு Posted: 13 Nov 2015 09:46 AM PST பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று லண்டன் சென்ற அவருக்கு ஹீத்ரு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் இங்கிலாந்து |
| இளைஞர்களை கவரும் இந்திய ராணுவம்: புதிய அசத்தல் வீடியோ Posted: 13 Nov 2015 09:06 AM PST உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவம் ஆள் பற்றாகுறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக விளம்பர படங்களை வெளியிட்டுவருகிறது. மிகச் சரியாக கூறவேண்டுமானால் 9,642 அதிகாரிகளுக்கும், 33,998 வீரர்கள் |
| மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 19-ம் தேதி சீனா பயணம் Posted: 13 Nov 2015 07:49 AM PST இந்திய எல்லையில் சீன ராணுவத்தினரின் ஊடுருவல், வடகிழக்கு பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு சீன ஆயுதங்களை கடத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 19-ந்தேதி 5 நாள் சுற்றுப் பயணமாக சீனாவுக்கு செல்கிறார். இந்தியா- சீனா எல்லையானது 3,488 கி.மீ. நீளமுள்ள பகுதியாகும். இந்தியாவின் ஜம்மு- காஷ்மீர், இமாச்சல பிரதேசம், |
| 66.11 சதவீத இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை- அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு Posted: 13 Nov 2015 07:43 AM PST நகரமயமாக்கல் மற்றும் தலைகீழ் வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இந்திய குழந்தைகள் உடலில் அசாதாரண அளவுகளில் சர்க்கரை இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. எஸ்.ஆர்.எல். நோயியல் ஆய்வுக்கூடம் 3 ஆண்டுகளில் சுமார் 17 ஆயிரம் இந்திய குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் |
| ஆசிட் வீச்சில் ரஷ்ய இளம்பெண் படுகாயம்: காதலிக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம் Posted: 13 Nov 2015 06:44 AM PST வாரணாசியில் தங்கியிருந்த ரஷ்ய இளம்பெண் மீது, இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண் தார்யா இந்தியா வந்துள்ளார். அவர் கடந்த 3 நாட்களுக்கு முன் வாரணாசி சென்றார். நகரின் மையப் பகுதியான நந்த நகர் காலனியில் உள்ள ஹரிடே லால் ஸ்ரீவத்ஸவா வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக (வாடகை) தங்கினார். |
| பூஜை செய்வதற்காக சோட்டா ராஜனை சந்திக்க அனுமதிக்க வேண்டும்: சகோதரிகள் மனு Posted: 13 Nov 2015 05:54 AM PST இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜனை விசாரணைக்காக சி.பி.ஐ. 10 நாள் காவலில் எடுத்துள்ளது. தற்போது சோட்டா ராஜனிடம் சி.பி.ஐ. உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சோட்டா ராஜன் தொடர்பான வழக்குகளுடன், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அவர் மீதான அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |