Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


"மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

Posted: 01 Nov 2015 09:41 AM PST

- வாடிக்கையாளர்களிடம் மோசடியாக மோடம், பணத்தை அளிக்குமாறு கூறி பணம் பறிப்போரிடம் ஏமாற வேண்டாம் என பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. - இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: - பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களை சிலர் ஏமாற்றி வருவதாகப் புகார்கள் வருகின்றன. இதன்படி, "ஃபைபர் தொழில்நுட்பத்தின்படி மேம்பட்ட இணைய வசதியை பி.எஸ்.என்.எல். அளிக்கிறது. இந்த வசதியைப் பெற "மோடம்' கருவியைத் திருப்பிக் கொடுத்தால், புதிதாக வழங்கப்படும். இதற்கான ரூ.2,500 கட்டணம்' என அவர்கள் ...

யார் தமிழன்?

Posted: 01 Nov 2015 09:33 AM PST

நான்கு வார்த்தைகள் தமிழில் காேர்வையாக பேச தெரியாதவர்கள் ் நற்றமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள், திருக்குறள் தெரியாதவர்கள் திருத்தப்பாேகிறாேம் தமிழகத்தை என்கிறார்கள் இளங்காேவையே அறியாதவர்கள் சிலப்பதிகார சிங்கத்தை நீ தமிழனல்ல என்கிறார்கள் அகத்தூய்மை அற்றவர்கள் அகநானூறு அறிந்தவனை நீ அந்நியன் என்கிறார்கள் . புறநானூற்று புலியிடம் பாேரிட அஞ்சுபவர்கள் புறம்பேசி அலைகிறார்கள் . கம்பனையே அறியாதவர்கள் கன்னித்தமிழ் காவலர்கள் நாங்கள் என்கிறார்கள் . தமிழர் தம் பண்பாடு பயின்று ,வரலாறு விளங்கி உலகுக்கு ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(394)

Posted: 01 Nov 2015 09:25 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

சசியின் குட்டி கவிதைகள்

Posted: 01 Nov 2015 08:29 AM PST

விரக்தியில் இருந்தேன்  வெளியே வந்தாய்  சன்னியாசி ஆனேன்!!  _____________________________ மறைத்தாய்  முகம்தனை  மரமானேன்!!  ________-_____-_- காய்ந்த சருகாய்  காணப்பட்டேன் புன்னகைத்தாய்  மலர்ந்தேன்!!!!  _----___-________-----_- கரம்பிடிப்பாயா?  கைக்கெட்டா தூரத்தில்  காகித பூவாய் நான்!!  ____-----________ வார்த்தைகளால்  அல்ல வலி  உன் மௌனத்தால்!!

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Posted: 01 Nov 2015 08:02 AM PST

மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை  இங்கு காணலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் வீட்டில் உள்ளதினிலே.

Posted: 01 Nov 2015 05:58 AM PST

இதயத்தைப் பாதுக்காக்கும் பழங்கள்..! இன்றைய நவீன உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும். சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை பரிந்துரைக்கும் ஒரே வாசகம்தான் உணவில் கீரை, காய்கனிகளை அதிகம் சேருங்கள் என்பது. இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன. ...

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Posted: 01 Nov 2015 05:43 AM PST

பாட்டி வைத்தியம்.... * கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும். * பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும் * இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும். * அத்திப்பழம் ...

சினி துளிகள்!

Posted: 01 Nov 2015 05:12 AM PST

முகங்களும் பாவனைகளும்

Posted: 01 Nov 2015 04:10 AM PST



அனுமந்தபுரம். செங்கல்பட்டு

ஈகரை உறவுகளின் WhatsApp

Posted: 01 Nov 2015 03:32 AM PST

நாம் அனைவரும்  வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துகிறோம். ஈகரை உறவுகள் விரும்பினால் அவர்களின்  வாட்ஸ் அப் எண்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! எனது வாட்ஸ் அப் தொடர்பு எண்: [noguest] 60186644132  [/noguest] ஈகரை உறுப்பினர்கள் அல்லாதோர் உங்கள் பதிவைப் பார்க்கக் கூடாது என்றால் கீழ்கண்டவாறு உங்கள் பதிவுகளைப் பதிவிடுங்கள்! Code:[noguest] இதற்கு இடையில் உங்கள் தகவலை எழுதிப் பதிவிட்டால் ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் பதிவைப் பார்க்க முடியும்!  [/noguest] அல்லது Code:[code] ...

ஈகரை திண்ணைப் பேச்சு!

Posted: 01 Nov 2015 03:29 AM PST

நமது தளத்தில் அனைவரின் விருப்பத்திற்கிணங்க மக்கள் அரங்கம் பகுதியில் "திண்ணைப் பேச்சு" என்ற புதிய பகுதி துவங்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தப் பகுதி இயங்கும். Forum Rules * திண்ணைப் பேச்சின் தலைப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்கள் இடம்பெற வேண்டும். * தனிமனித தாக்குதல்கள் வேண்டாம், சமுதாய நலன், பொது அறிவு, சமுதாய சீர்திருத்த அடிப்படையில் பதிவுகளைத் துவங்க அறிவுறுத்துகிறோம். * நிர்வாகக் குழுவினர் தங்களின் கருத்துக்களைத் திருத்தவோ, நீக்கவோ முழு அதிகாரம் படைத்தவர்கள். நம் ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 01 Nov 2015 03:02 AM PST

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 01 Nov 2015 02:40 AM PST


-

-
-

படிகள் - 16

Posted: 01 Nov 2015 01:33 AM PDT

அலட்டல் அலமேலு - நகைச்சுவை

Posted: 01 Nov 2015 01:29 AM PDT


-
அலட்டல் தொடரும்...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 01 Nov 2015 12:21 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

ஏற்றம் பெற மாற்றம் வந்தது!!!

Posted: 31 Oct 2015 11:49 PM PDT

அதிகாரம் அரசோச்சினால்
ஆணவம் தலையெடுக்கும்
மதயானை குணமிருக்கும் – அங்கே
மூர்க்கத்தனம் குடியிருக்கும்
விதிவசத்தால் நிலைமாறும்
வீணர்கள் வீழ்ச்சியாகும் – நல்ல
மதிவாணர் கைகொடுப்பர்
மீண்டுமோர் எழுச்சிவரும்
உதவாத வித்துக்களால்
விடியலுக்கு வழியுண்டா?
இருள்நீக்கப் பிறந்ததுவே – இன்று
இதந்தரும் நல்லாட்சி!!!

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 31 Oct 2015 11:13 PM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

அழகே வா - சருமப் பாதுகாப்பு

Posted: 31 Oct 2015 09:56 PM PDT

நெஞ்சே ! உன்னோடு வாழ்தல் அரிது .

Posted: 31 Oct 2015 07:54 PM PDT

தலைவி : நெஞ்சே ! ஔவைப் பாட்டியை உனக்குத் தெரியுமா ? நெஞ்சு : கூழுக்குப் பாடும் கூனக் கிழவியை ஏழுலகும் அறியும் ; நான் அறியேனா ? தலைவி : ஔவைக் கிழவியின் அமுதப் பாட்டு ! பசியைப் பற்றிப் பாடிய பாட்டு ! வறுமையில் வாடிய வயிற்றுப் பாட்டு ! அருமையான பாட்டை அறிவாயோ நீ ? நெஞ்சு : அறிந்திலன் நானே ! அறியச் செய்வாய் ! தலைவி : ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. நெஞ்சு ...

ஏன் ராஜயோக தியானம் மட்டும் கண்கள் திறந்து செய்கிறோம்

Posted: 31 Oct 2015 07:22 PM PDT



பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகம்.
சுயமாற்றமே, உலக மாற்றம்.
பிரம்மா குமாரிகள் இராஜயோக தியானப் பயிற்சிகள் உலகம் முழுவதிலும் 120 நாடுகளில்,

This posting includes an audio/video/photo media file: Download Now

கழுத்து வலி நீக்கும் யோகா

Posted: 31 Oct 2015 07:00 PM PDT

‘மிஸஸ் எர்த் 2015’ – ப்ரியங்கா குரானா கோயல்

Posted: 31 Oct 2015 06:37 PM PDT

- திருமணமான பெண்களுக்காக அலங்கார அணிவகுப்பில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட ப்ரியங்கா குரானா கோயல், 'மிஸஸ் எர்த் 2015' பட்டம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்! – 20 நாடுகளிலிருந்து 24 அழகிகள் பங்கேற்ற தனித்துவமான 'மிஸஸ் எர்த்' போட்டி, ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உதவி மையத்துக்கு (HCWA) ஆதரவு அளிக்கும் வகையில் நடத்தப் படுகிறது. – இம்மையத்தின் இயக்குனரான ரித்திகா வினய், 2014ல் 'மிஸஸ் ஆசியா பசிபிக் க்வின்' பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! ''வறுமையில் வாடிக் ...

மிஸஸ் ஆன மிஸ் கபாலி

Posted: 31 Oct 2015 06:29 PM PDT

- போச்சு. ராதிகா ஆப்தேவுக்கு கல்யாணம் ஆச்சாம். "ஏன் இத்தனை நாளா மறைச்சீங்க?" என்று மனசு உடைந்து போன நிலையில் அவரிடம் கேட்டோம். – "நீங்கதான் கேட்கவேயில்லையே? கேட்டிருந்தால் சொல்லிட்டுப் போறேன். நான் எங்கே மறைச்சேன்?" என்று பதிலுக்கு கேட்கிறார். ராதிகாவின் கணவர் பெனடிக்ட் டெய்லர் ஒரு பிரிட்டிஷ் இசைக்கலைஞர். – நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நடனம் குறித்து ஆய்வு செய்ய இங்கிலாந்துக்கு ராதிகா போனபோது காதல் பற்றிக் கொண்டதாம். சில நாட்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து தங்களுக்குள் ஒத்துவரும் ...

கன்னத்தில் குழி விழுந்தால்…

Posted: 31 Oct 2015 06:17 PM PDT

- – தமிழ்த் திரையுலகில் பிரபுவின் கன்னக்குழி ரொம்ப ஃபேமஸ். அந்தக் காலத்தில் ஹீரோயின்கள் செல்லமாக இவரது கன்னக்குழியைக் கிள்ளுவார்கள் என்று சொல்வார்கள். – அவரைப் போலவே ஸ்ரீபிரியாவும் கன்னக்குழியும் பிரபலம். இப்போதைய நடிகைகளில் கன்னக்குழி அழகி என்றால், அது சிருஷ்டி டாங்கேதான். அதுவும் ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்பது மாதிரி இரு கன்னத்திலும் அழகாக குழி விழுகிறது. கன்னக்குழி பற்றி கன்னல் சொல்லழகியிடம் பேசினோம். – "பொதுவாக கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம் என்று தமிழ்நாட்டில் ...

இறுதி வரை உறுதி வேண்டும்!

Posted: 31 Oct 2015 05:05 PM PDT

- கடந்த வாரம் மூத்த நண்பர்கள் மூவரோடு கோல்ஃப் ஆடிக் கொண்டிருந்தேன். மூவருமே 70 வயதைத் தாண்டியவர்கள். 3 மணி நேரம் எனக்கு இணையாக ஆடிய அவர்களின் உடல் மற்றும் மன வலிமையைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தேன் - அந்த மூவரும் இணைந்து, குழந்தைகளால் கைவிடப்பட்ட, ஒதுக்கித் தள்ளிய, அடித்து துரத்திய, வயோதிக பெற்றோருக்காக 'இலவச முதியோர் இல்லம்' அமைத்து, மாபெரும் சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது! எனது ஆச்சரியம் கண்ட அவர்களில் ஒருவர், ஒரு நீதிக் கதையோடு ஆரம்பித்தார்... ...

கைக்குட்டைக் காகிதங்கள்-127

Posted: 31 Oct 2015 04:48 PM PDT

நேற்று தாய்ப்பால் இன்று புட்டிப்பால் நாளை ---------? மாந்தோப்பில் வேடர்கள் ஆடிப் பாடினார்கள் மயில்கள் மட்டும் மவுனமாய் வேருக்கு ஏன் தலைப்பாகை மண்ணுக்குள்ளே மகுடம் உருளைக்கிழங்கு. நிலவைப் பார்த்து சோறூட்டும் அன்னையிடம் நிலவுக்கு யாரைக் காட்டி? விலங்குவதைச் சட்டம் போடப்பட்டவரின் மேசையில் பரிமாறப்பட்டது மான்கறி. -கவிஞர்வாலிதாசன்:

ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!

Posted: 31 Oct 2015 04:36 PM PDT

கெய்ரோ : 224 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் சென்ற ரஷ்ய பயணிகள் விமானம், எகிப்தின் சியான் தீபகற்பத்தில் நொறுங்கி விழுந்தது. - இந்த விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது . இந்நிலையில், இந்த விமானத்தில் இருந்த 7 ஊழியர்கள் மற்றும் 217 பயணிகள் அனைவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என எகிப்து அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். - நொறுங்கி விழுந்த விமானத்தின் கறுப்புப்பெட்டியை எகிப்து அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ...

இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு

Posted: 31 Oct 2015 04:31 PM PDT

இந்திய கடற்படை துணை தலைமைத் தளபதியாக வைஸ் அட்மிரல் கரம்பீர் சிங் பொறுப்பேற்றுக் கொண்டார். கடற்படையில் கடந்த 38 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த வைஸ் அட்மிரல் ஆர்.கே. பட்டாநாயக் அப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணை தலைமைத் தளபதியாக கரம்பீர் சிங்கை பாதுகாப்புத் துறை அண்மையில் நியமித்தது. - கிழக்கு பிராந்திய கடற்படைத் தளம், அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான ஒருங்கிணைந்த தலைமையகம், மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் பிராந்தியங்களுக்கான தலைமையகம் ஆகியவற்றின் தலைமை அதிகாரியாகவும் ...

கைக்குட்டைக் காகிதங்கள்-128

Posted: 31 Oct 2015 03:11 PM PDT

கல்லூரி மாணவர்களே பறிபோகலாம் பாதுகாத்த இதயம். சிலர் இருந்து பெறுவார் சிலர் இறந்து பெறுவார் புகழ். உதடுகளின் மேற்கூரை மீசை. கடற்கரை பீச்சில் மிதக்கிறது கள்ளத்தோணி கொட்டிக்கிடக்கிறது கல்ல்றையில் பூக்களாய் உனது நினைவுகள்.கவிஞர்வாலிதாசன் :


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™