Tamil Star |
- போர்க்குற்ற விசாரணைக்கான தலைமையைக் கனடா ஏற்க வேண்டும்: கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்புக் கோரிக்கை
- குழாய் குண்டு அகற்றப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த College வீதி மீண்டும் திறப்பு
- ஆயுதக் கொள்ளையுடன் தொடர்புடைய 20 வயது இளைஞன் கைது
- பிரம்டனில் வீடு ஒன்று தீக்கிரை – யாருக்கும் காயங்கள் இல்லை
- முஸ்லிம் பெண்கள் முகத்தினை மறைத்து முக்காடு விவகாரம் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கருத்து
- தமிழ் பெண் கனடாவில் மாயம்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார்
- செல்வந்தருக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் இடையோன இடைவெளி ரொரன்ரோவில் அதிகம்
- முன்னணிப் படையாக கனேடிய இராணுவத்தினர் மாற்றியமைக்கப்படுவர்
- பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்?
- ஒன்ராறியோவில் அம்பு பாய்ந்து உயிரிழந்த நபர்: எய்தவரை இன்னமும் தேடிவரும் காவல்த்துறை
- தந்தையும் மகளும் பலியான வாகன விபத்து: குற்றவாளிக்கு 5 வருட சிறை
| போர்க்குற்ற விசாரணைக்கான தலைமையைக் கனடா ஏற்க வேண்டும்: கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்புக் கோரிக்கை Posted: 07 Oct 2015 09:09 PM PDT
எனினும் அப்போது போர் இடம்பெற்றபடியால் அது இயலாமல் போனது. எனவே கனடியப் பிரதமர் ஹாப்பரும் அவர் சார்ந்த அரசும் இந்தப் போர்க்குற்ற விசாரணை மற்றும் மீளிணக்கத்திற்கான முயற்சி, இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் முயற்சி என்பனவற்றில் காத்திரமாகப் பங்களிக்க வேண்டுமென கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்பு கேட்டுக் கொண்டதுடன், அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமைக் கூட்டத் தொடரில் "கலப்பு விசாரணை" தான் வேண்டுமென கனடா எடுத்துக் கொண்ட முடிவோடு பெல்ஜியம், அயர்லாந்து, நெதர்லாந்து, நோர்வே மற்றும் பிரான்ஸ் என்பன இணைந்து செயற்பட்டது நல்லதொரு முன்னுதாரணம் என்றும், அதனைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதோடு, கடந்த 2013ல் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்ததின் மூலம் கனடா காத்திரமாகப் பதிவு செய்த புறக்கணிப்பை போன்ற நடவடிக்கைகளைத் தொடர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதோடு ஐக்கிய நாடுகளவையின் வேண்டுகோள்கள் பரிசீலிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டது. குறிப்பாக புலம்பெயர்ந்த தேசங்களில் கோவில்கள் தனிப்பட்ட வியாபாரங்களை விடுதலைப் புலிகள் வைத்திருந்தார்கள் எனவும் அவர்கள் இல்லாத காரணத்தால் அச் சொத்துக்களை ஈழத்தில் இன்னல்படும் அகதிகளின் நலன்களிற்காகச் செலவிடும் பொறிமுறையை அமைக்க, மேற்குலக நாடுகள் உதவ வேண்டும் என்ற ஐக்கிய நாடுகளவையின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமெனவும் கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்பு தனது அறிக்கையில் கேட்டுள்ளது. The post போர்க்குற்ற விசாரணைக்கான தலைமையைக் கனடா ஏற்க வேண்டும்: கனடியத் தமிழ் கன்சவேட்டிவ் அமைப்புக் கோரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழாய் குண்டு அகற்றப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த College வீதி மீண்டும் திறப்பு Posted: 07 Oct 2015 08:40 PM PDT
குழாய் குண்டு ஒன்று காணப்பட்ட தகவலை அடுத்த மாலை 6 மணியளவில் காவல்த்துறை தலைமை அலுவலகம் மட்டுமல்லாது, Bay மற்றும் Yonge வீதிகளுக்கு இடைப்பட்ட College வீதிகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டிருந்தது. முற்பாதுகாப்பு நடடிக்கையாகவே வீதிகள் போக்குவரத்திற்க மூடப்பட்டிருந்ததுடன், அவை பின்னர் இரவு 9 மணியில் இருந்து மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதேவேளை குழாய் வடிவில் அமைக்கப்பட்ட இந்த குண்டினால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post குழாய் குண்டு அகற்றப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த College வீதி மீண்டும் திறப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆயுதக் கொள்ளையுடன் தொடர்புடைய 20 வயது இளைஞன் கைது Posted: 07 Oct 2015 08:21 PM PDT
Thorncliffe Park பகுதியில் கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த இரண்டு கொள்ளைச் சம்பவமும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாவது கொள்ளைச் சம்பவம் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Thorncliffe Park இல் 33 வயதுடைய ஆண் நபர் ஒருவரை பின்தொடர்ந்து அங்கு காணப்பட்ட பாரம்தூக்கியில் (elevator)வைத்து கத்திமுனையில் அச்சுறுத்தி அந்த ஆணிடம் இருந்த ஆயுதம் கொள்ளயிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அதே முறையில் 21 வயது பெண் ஒருவரை பின்தொடர்ந்து பாரம்தூக்கியினுள் வைத்து கத்திமுனையில் அச்சுறுத்தி ஆயுதத்தை கொள்ளையிட்ட இரண்டாவது சம்பவம் அதே இடத்தில் ஓகஸ் மாதம் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணியவில் இடம்பெற்றுள்ளது. பின்னர் காவல்த்துறையினர் அங்கு இருந்து பாதுகாப்பு கண்காணிப்பு கருவியில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபரின் அடையாளத்தை இந்த மாத ஆரம்ப்பத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்த்துறையினர் இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர். Faiyaz Hafejee என்ற நபரை திங்கட்கிழமை கைது செய்துள்ளதாகவும், அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை இவர்களால் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்றும், அவ்வாறான தகவல்கள் எதுவும் இருப்பின் 416-808-5300 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 416-222-TIPS (8477) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். The post ஆயுதக் கொள்ளையுடன் தொடர்புடைய 20 வயது இளைஞன் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டனில் வீடு ஒன்று தீக்கிரை – யாருக்கும் காயங்கள் இல்லை Posted: 07 Oct 2015 07:27 PM PDT
Castlemore வீதிக்கு அருகில் 10230 Goreway Drive பகுதியில் இன்று காலை 7 மணிக்கு தீ மூண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து தீயணைப்புப் படையினர் சம்வ இடத்திற்கு சென்றிருந்த வேளையில் வீடு முழுமையான புகையினால் சூழப்பட்டு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தமையால், தீயணைப்புப் படையினர் வீட்டினுள் செல்ல முடியாது போயுள்ளது. இதேவேளை குறித்த வீட்டு உரிமையாளர்கள் தற்சமையம் அந்த வீட்டில் இல்லை என்றும், அவர்களின் உறவினர்களே அந்த வீட்டை பராமரித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டினுள் யாரும் இருந்தார்கள் என்பதை நம்புவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்று தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். The post பிரம்டனில் வீடு ஒன்று தீக்கிரை – யாருக்கும் காயங்கள் இல்லை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முஸ்லிம் பெண்கள் முகத்தினை மறைத்து முக்காடு விவகாரம் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கருத்து Posted: 07 Oct 2015 07:24 PM PDT
கனடாவில் புதிதாக குடியேறுவோருக்கான குடியுரிமை வழங்கும நிகழ்வில் முகத்தினை மறைத்து முக்காடு அணிவதனை தவிர்க்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவினை பெரும்பான்மையான கனேடியர்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார். இருந்த போதிலும் அந்த விவகாரம் தற்போது நீதிமன்ற வழக்கு விவகாரமாக உருவெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குடியுரிமை வழங்கும் நிகழ்வில் முக்காடு அணிவதை தடை செய்யும் முடிவினை சட்டத்திற்கு முரணான செயல் என கடந்த பெப்ரவரி மாதத்தில் நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் நீதிமன்றத்தின் அந்த முடிவினை மேன்முறையீட்டு நீதிமன்றமும் அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தகைய நிலையில், எதிர்காலத்தில் அரசாங்க துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகத்தினை மறைத்து முக்காடு அணிவதையும் தடை செய்வது குறித்து ஆலோசிக்கவிருப்பதாக பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார். ஆனால் கனேடியப் பிரதமரின் இந்த கருத்தை ஏனைய பிரதான கட்சிகளான லிபரல் கட்சி மற்றும் புதிய சனநாயக கட்சி ஆகியன விமர்சித்துள்ளன. கனடியப் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்காளர்களை திசைதிருப்பும் வகையில் பழமைவாதக் கட்சி இந்த விடயத்தினை கையில் எடுத்துள்ளதாகவும் அவை குற்றஞ்சாட்டியுள்ளன. The post முஸ்லிம் பெண்கள் முகத்தினை மறைத்து முக்காடு விவகாரம் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கருத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் பெண் கனடாவில் மாயம்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார் Posted: 07 Oct 2015 04:13 PM PDT
இது தொடர்பாக ரொறொன்ரொ பகுதி பொலிசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கனடாவைச் சேர்ந்த கோமதி ரத்தினசிங்கம் என்ற பெண்மணியை கடந்த ஒக்டோபர் 4அம் திகதி முதல் காணாவில்லை. இவர் கடைசியாக Finch Avenue West/ Keele Street அருகே பார்க்கப்பட்டார். இவரது உயரம் 5.2 அடி. ஒல்லியான தேகம். காணாமல் போன அன்று நீல நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி எதேனும் தகவல் தெரிந்தால் 416-808-3100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது TOR என்று டைப் செய்து 274637 எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு www.222tips.com என்ற இணையப்பக்கத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. The post தமிழ் பெண் கனடாவில் மாயம்: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| செல்வந்தருக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் இடையோன இடைவெளி ரொரன்ரோவில் அதிகம் Posted: 07 Oct 2015 10:24 AM PDT
Toronto Foundation இது தொடர்பில் நடாத்திய ஆய்வின் அறிக்கையை நேற்று செவ்வாய்கிழமை வெளியிட்டிருந்தது. வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கையில் இருந்து பிராந்தியங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இருபது வருடங்கள் ஆகின்ற போதிலும், வசதிவாய்ப்பு அடிப்படையில் ரொரன்ரோ இன்னமும் பிளவுபட்டே உள்ளது என்பது தெரியவந்துள்ளது. கனடாவில் செல்வந்தர்களுக்கும், ஏனைய வசதி குறைந்த குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக காணப்படும் நகராக கல்கரி காணப்படுகிறது. கல்கரியை அடுத்து அவ்வாறு செல்வந்தருக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாக கொண்ட கனடாவின் நகராக ரொரன்ரோ உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரொரன்ரோ கடந்த 25 ஆண்டுகளாக உறுதித்தன்மையான ஒரு வளர்ச்சியை பதிவு செய்து வந்துள்ள அதேவேளை, ரொரன்ரோவின் வருமான இடைவெளி தேசிய சராசரியினை விடவும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் பெறப்பட்ட புள்ளி விபரங்களில் இருந்து ரொரன்ரோவில் முன்நிலை வருமானத்தினை பெறுபவர்களில் ஒரு சதவீதத்தில் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வருமானத்தின் 17.4 சதவீதத்தினை அனுபவித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. The post செல்வந்தருக்கும் வசதி குறைந்தவர்களுக்கும் இடையோன இடைவெளி ரொரன்ரோவில் அதிகம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முன்னணிப் படையாக கனேடிய இராணுவத்தினர் மாற்றியமைக்கப்படுவர் Posted: 07 Oct 2015 10:16 AM PDT
சில வருடங்களிலேயே ஐ.நா அமைதிகாப்பு படையில் அங்கம் வகிக்கும் மேற்குலக நாட்டு படைகளில், கனேடிய படைகளே முன்னணி வகிக்கும் நிலையினை உருவாக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்தடன் கனேடிய விமான படையினரின் நிலைகள் விரிவுபடுத்தப்படும் என்றும், அனர்த்தங்கள் ஏற்படும் போது தேடி மீட்கும் படையினர் 30 நிமிடங்களுக்குள்ளேயே சம்பவ இடத்திற்கு செல்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இதேவேளை கனேடிய படைகள் சிறந்த ஆற்றலுள்ளவையாகவும், அனைத்துலக தரம்வாய்ந்த நிலை உறுதிப்படுத்தப்படுவதற்காகவும் பாதுகாப்பு துறைக்கான செலவீனங்கள் ஒருநிலைப்படுத்தப்படும் எனவும் புதிய சனநாயக கட்சி தலைவர் Tom Mulcair தெரிவித்துள்ளார். The post முன்னணிப் படையாக கனேடிய இராணுவத்தினர் மாற்றியமைக்கப்படுவர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்? Posted: 07 Oct 2015 08:21 AM PDT
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம், குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கியமான காய்கறியாகும். பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள், * கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. * தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க கேரட் சாறு அருந்தவும். * பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் தாதுக்கள், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் இழப்பை சரிசெய்ய கேரட்டை மிகவும் சரியான ஊட்டசத்து என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. * பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. * கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு காரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும். * கேரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளப்பாக காணப்படும். The post பெண்கள் எதற்காக கேரட் சாப்பிட வேண்டும்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோவில் அம்பு பாய்ந்து உயிரிழந்த நபர்: எய்தவரை இன்னமும் தேடிவரும் காவல்த்துறை Posted: 07 Oct 2015 07:43 AM PDT
கடந்த திங்கட்கிழமை Margaret Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் பகுதியில் Michael Gibbon எனப்படும் அந்த நபர் வீழ்ந்து கிடந்ததை கண்ட அயலவர்கள் மேற்கொண்ட முயற்சியால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த அந்த நபர் வசித்துவந்த பகுதியில் தேடுதல்களையும் விசாரணைகளையும் மேற்கொண்ட காவல்த்துறையினர், அங்குள்ள வீடு ஒன்றில் தேடுதல்களை நடாத்தி, நிழற்படம் எடுத்ததுடன், சில பொருட்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படாத நிலையிலும், சந்தேக நபர் தொடர்பிலான விபரங்கள் எவையும் தெரியாத நிலையிலும், தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையிலும், மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்த்துறையினர், அந்த பகுதியில் ஏதாவது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டிருப்பின் தம்மிடம் தெரியப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதனை அறிந்தவர்கள் யாராவது இருக்க கூடும் எனவும் சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், தெரிந்த தகவல்களை தம்முடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். The post ஒன்ராறியோவில் அம்பு பாய்ந்து உயிரிழந்த நபர்: எய்தவரை இன்னமும் தேடிவரும் காவல்த்துறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தந்தையும் மகளும் பலியான வாகன விபத்து: குற்றவாளிக்கு 5 வருட சிறை Posted: 07 Oct 2015 07:32 AM PDT
குறித்த அந்த விபத்துக்கு காரணமான 22 வயது Sabastian Prosa எனப்படும் இளைஞருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, குறித்த அந்த நபர் எட்டு வருடங்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கும் தடை விதித்துள்ளார். மரணத்தினை விளைவிக்க கூடிய வகையில் வாகனத்தினை மோசமாக செலுத்திச் சென்றமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுகளில் இவர் குற்றவாளி என்பது கடந்த யூன் மாதமே நிரூபிக்கப்பட்ட போதிலும், தற்போதுதான இவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி காலையில், குயீன் எலிசபென் சாலையில் குறித்த அந்த இளைஞர் வாகனங்கள் செல்லவேண்டிய திசைக்கு எதிர்மாறான திசையில் செலுத்திச் சென்ற SUV ரக வாகனம், சிற்றூர்தி ஒன்றின் மீது நேருக்கு நேர் மோதியதில் அதில் பயணித்த 49 வயதான ஜெயந்த வியேரட்ண என்பவரும், அவரது மகளான 16 வயது எலீஸா என்பவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் உயிரிழந்த ஜெயந்த வியேரட்ணவின் மனைவியான அன்டோனிட்டா விஜேரட்ண என்பவர் படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார். நேற்றைய தினம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அன்டோனிட்டா, இந்த தீர்ப்பு தனக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பில் தான் திருப்தி கொள்ளவில்லை எனவும், இரண்டு உன்னத உயிரிகளை காவு கொண்டதுடன், தன்னை நிரந்தர நோயாளியாக்கிய குற்றவாளிக்கு இந்த தண்டனை போதுமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்று வருடங்களின் முன்னர் தாம் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நிலையில், குற்றவாளிக்கு வெறும் ஐந்து வருட சிறைத் தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். The post தந்தையும் மகளும் பலியான வாகன விபத்து: குற்றவாளிக்கு 5 வருட சிறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



குழாய் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை அகற்றுவதற்காக சுமார் இரண்டு மணித்தியாளங்களாக மூடப்பட்டிருந்த College வீதியின் ஒரு பகுதி போக்குவரத்திற்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆயுதக்கொள்ளை சம்பவங்கள் இரண்டுடன் தொடர்புடைய ரொரன்ரோவைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரம்டன் பகுதியில் இன்று புதன்கிழமை காலையில் வீடு ஒன்று பாரியளவில் தீப்பற்றிக் கொண்டதாகவும், எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக முறைபாடு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது.
முஸ்லிம் பெண்களின் முகத்தினை மறைத்து முக்காடு விவகாரம் தொடர்பில் கனடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கருத்து வெளியிட்டுள்ளார்.
கனடாவில் வசித்து வந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதையடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஒன்ராறியோவின் Kitchener பகுதியில் யாரோ ஒருவர் எய்த அம்பு பாய்ந்து 60 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அம்பை எய்த நபரை தொடர்ச்சியாக தேடிவரும் காவல்த்துறையினர், அவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு நெடுஞ்சாலை 427இல் வாகனத்தினை தவறாக செலுத்திச் சென்று, தந்தையும் மகளும் உயிரிழக்க காரணமான விபத்தினை ஏற்படுத்திய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.