Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஈடடோபிக்கோவில் சநதேகத்திற்கிடமான துப்பாக்கிப் பிரயோகம் – விசாரணைகள் தீவிரம்

Posted: 27 Oct 2015 08:29 PM PDT

hi

hiஈட்டோபிக்கோவில் இன்று அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலக்கம் 689, Queenswayயில் அமைந்துள்ள House of Lancaster எனப்படும் இரவுக் கேளிக்கை விடுதிக்கு வெளியே இன்று அதிகாலை 1.30 அளவில் இரண்டுமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், வெற்றுத் தோட்டாக்கல் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவரும் காயமடைந்ததாக இதுவரை முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.hi

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற சமயம் கறுப்பு நிற லெக்சஸ் ரக வாகனம் ஒன்று நான்கு போருடன் அந்த இடத்தில் இருந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படாத நிலையில், மேலதிக தகவல் அறிந்தோர் தம்மை 416-808-2200 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post ஈடடோபிக்கோவில் சநதேகத்திற்கிடமான துப்பாக்கிப் பிரயோகம் – விசாரணைகள் தீவிரம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Barrie தொகுதியில் மீள் வாக்கு எண்ணிக்கை

Posted: 27 Oct 2015 11:24 AM PDT

Election_Canada-2710

Election_Canada-2710ஒன்ராறியோவின் Barrie Springwater Oro Medonte தேர்தல் தொகுதியில் மீள் வாக்கு எண்ணிக்கைக்கு கனேடிய தேர்தல் திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் தினமான கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது அந்த தொகுதியில் பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Alex Nuttall என்பவர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட Brian Tamblynஐ 108 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.

வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் மிகவும் குறைவான நிலையில் உள்ளதனால், வேட்பாளர்களில் ஒருவர் வாக்கு எண்ணிக்கையை மீளவும் மேற்கொள்ளுமாறு கோரியதாகவும், அதற்கு அமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீள்வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் எனவும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.Election_Canada-2710

தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களுக்கான வாக்கு வித்தியாசம் மொத்த வாக்குகளில் ஆயிரத்தில் ஒரு மடங்கில் குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் மீள் வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post Barrie தொகுதியில் மீள் வாக்கு எண்ணிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவில் இன்றிரவு காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கை

Posted: 27 Oct 2015 11:01 AM PDT

rain

rainஇன்று இரவு ரொரன்ரோ மற்றம் ரொரன்ரோ பெரும்பாகத்தின் வேறு சில பகுதிகளிலும் பலத்த காற்றுடனும் இடிமின்னலுடனும் கூடிய மழை பொழியக்கூடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.

அண்மையில் மெக்சிக்கோவைத் தாக்கிய பற்றீசியா சூறாவளியின் பக்க விளைவாக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையே இந்த மழை வீழ்ச்சியை கொண்டுவருவதாக வழிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலத்த காற்றுடன் பெருமளவு மழை வீழ்ச்சியும் ஏற்படும் எனவும், இன்றிரவு ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் ஏற்படும் இந்த மழைப் பொழிவு நாளை காலை அளவில் Golden Horseshoe பிராந்தியத்தினை நோக்கி நகரும் என அந்த சிறப்பு வானிலை எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழமுக்கம் அதிகாரிக்கும் நேரங்களில் மழைவீழ்ச்சியும் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் திணைக்களம், அனேக இடங்களில் 25 இலிருந்து 40 மில்லிமீட்டர் மழைப்பொழிவு காணப்படும் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.rain

அதேவேளை காற்றின் வேகமும் மரங்களை முறித்து சேதமாக்கக்கூடிய தன்மையுடையதாக இருக்கலாம் எனவும், அதனால் மின்வினியோகத் தடைகள் ஏற்படக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அளவிலேயே இந்த தாழமுக்க நிலை கியூபெக் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுவரையில் மழை வீழ்ச்சி காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோவில் இன்றிரவு காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பதவி விலகப் போவதாக கூறியுள்ளார் அமெரிக்காவுக்கான கனேடிய தூதுவர்

Posted: 27 Oct 2015 10:51 AM PDT

Gary_Doer_-_10272015

Gary_Doer_-_10272015அமெரிக்காவுக்கான கனேடியத் தூதுவராக பணியாற்றிவரும் கரி டூவர் (Gary Doer) அந்த பணியை மேலும் தொடரப் போவதில்லை என்ற அறிவிப்பை நேற்று விடுத்துள்ளார்.

வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம் தாம் இந்த பதவியில் இருந்துள்ளதாகவும், எனவே அதனை முடித்துக் கொள்ளப் போவதாகவும் அவர் நேற்றைய தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதவியில் நீடிக்கப்போவதில்லை என்பதனை தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் போதும், தேர்தலின் பின்னரும் தெளிவாக தாம் தெரிவித்துவிட்டதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அமையவிருக்கும் அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் கரி டூவர் (Gary Doer) தெரிவித்துள்ளார்.

அதனால் புதிய லிபரல் அரசாங்கத்திடமே தான் பதவியிலிருந்து விலகும் திகதியினை தீர்மானிக்கும் பொறுப்பினை விட்டுவிடுவதாகவும், பதவி மாற்றத்திற்கு தேவையான அனைத்து வகையான உதவிகளையும் இந்த புதிய அரசாங்கத்திற்கு செய்துகொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.Gary_Doer_-_10272015

தாம் ஏற்கனவே இரட்டை மேலதிக வேலைநேரத்தில் கடமையாற்றிக் கொண்டுள்ளதாகவும், மூன்று மடங்கு மேலதிக வேலைநேரத்தில் கடமையாற்ற விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர், தமது பணியைத் தொடரப்போவதில்லை என்பதை அமெரிக்க தரப்பினருக்கு உத்தியோகப் பற்றற்ற முறையில் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மிகவும் முக்கியமான அரசதந்திர பதவியினை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன்னர் இதே பதவியல் இருந்த இருவர் பதவிவகித்த காலத்தினை விடவும் இவர் அதிக காலம், அதாவது ஆறு வருடங்கள் அந்த பதவியில் இருந்துள்ளார்.

அத்துடன் இவர் பதவிவிலகுவது தொடர்பிலான வதந்திகள் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post பதவி விலகப் போவதாக கூறியுள்ளார் அமெரிக்காவுக்கான கனேடிய தூதுவர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கான போட்டி – முற்றுப்புள்ளி வைத்தார் ஜோன் பெயர்ட்

Posted: 27 Oct 2015 07:45 AM PDT

John_Baird_-_10272015

John_Baird_-_10272015கனேடியப் பொதுத் தேர்தலில் பழமைவாதக் கட்சி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளதை அடுத்து அதன் தலைவராக இருந்துவந்த ஸ்டீபன் ஹார்ப்பர் பதவி விலவுகுவதாக அறிவித்துள்ளார்.

அதனை அடுத்து பழமைவாதக் கட்சிக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளது.

இதனால் பழைமைவாதக் கட்சியின் தலைவர் யார் என்ற கடும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்த நிலையில் கட்சியின் புதிய தலைமைப் பதவிக்கு ஜோன் பெயர்ட் போட்டியிடக்கூடும் என பரவலான அனுமானங்கள் வெளியிடப்பட்டு வந்தன.

ஒன்ராறியோவின் முற்போக்கு பழமைவாதக் கட்சியில் 1995ஆம் ஆண்டு தெரிவாகி தனது அரசியல் பயணத்தினை தொடரந்துவந்த ஜோன் பெயர்ட், 2005ஆம் ஆண்டில் கனேடிய மத்திய அரசியலுக்குள் தன்னை இணைத்துக் கொண்டார்.John_Baird_-_10272015

ஆனால் சுமார் இரண்டு தசாப்தங்களாக அரசியலில் ஈடுபட்டுவந்த ஜோன் பெயர்ட் இந்த வருட ஆரம்பத்தில் தனது பதவி விலகும் முடிவினை திடீரென அறிவித்திருந்தார்.

அவரின் அந்த திடீர் அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தமை குறி்ப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் ஜோன் பெயர்ட், ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வெளியுறவு அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்திருந்தார் என்பன உள்ளிட்ட காரணங்களினால், பழமைவாதகக் கட்சியின் புதிய தலைவராக ஜோன் பெயர்ட் போட்டியிடுவார் என்று பரவாலான எதிர்பார்ப்புக்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கட்சியின் தலைமைப் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை ஜோன் பெயர்ட் அறிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

The post பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவ பதவிக்கான போட்டி – முற்றுப்புள்ளி வைத்தார் ஜோன் பெயர்ட் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™