Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


உயிராபத்தான நிலையில் உள்ள சிறுவனுக்காக இன்றே கிறிஸ்மஸ் கொண்டாடிய நகர மக்கள்

Posted: 24 Oct 2015 08:32 PM PDT

yuj

yujநோய்வாய்ப்பட்டு வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் சிறுவன் ஒருவருக்காக இன்றைய தினமே நத்தார் பண்டிகையை நகர மக்கள் அனைவரும் கொண்டாடிய நிகழ்வு ஒன்று ஒன்ராறியோவின் தென்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஒன்ராறியோவின் சென். ஜோர்ஜ் பகுதியைச் சேர்நத 7 வயது சிறுவனான Evan Leversage ற்கு மூளையில் கட்டி இருப்பதனை அவன் இரண்டு வயதாக இருக்கும் போதே மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற முடியாத அந்த புற்றுநோய்க் கட்டி, மேலும் பல இடங்களுக்கு பரவிவிட்டதான தகவலை கடந்த மாதம் சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவித்த மருத்துவர்கள், அவர் நீண்டநாள் உயிருடன் இருப்பது கடினம் என்று கூறிவிட்டனர்.

இவ்வாறான நிலையிலேயே சிறுனின் விருப்பத்தினை பெற்றோர் கேட்டபோது, நயாகரா நீர்வீழச்சிக்கு செல்லவேண்டும், திரைப்படம் பார்க்க போக வேண்டும், தனக்கு விரும்பமான உணவகங்களுக்க சென்று உணவருந்த வேண்டும், நத்தார் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பன உள்ளிட்ட தனது ஆசைகளை சிறுவன் பெற்றோரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

yuj

எனினும் நத்தார் தினம் வரையில் சிறுவன் உயிருடன் இருப்பாரா என்பதனை தங்களால் உறுதிப்படுத்த இயலாது என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட நிலையில், சிறுவனுக்காக முற்கூட்டியே நத்தார் தினத்தினை கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இந்த தகவல் அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெரியவந்ததை அடுத்து, அனைவருமாக சேர்ந்து சிறுவனுக்காக பாரிய நத்தார் கொண்டாட்டத்தி இன்று நடாத்தியுள்ளனர்.

அதற்காக இன்று வீட்டுக்கு வெளியே உள்ள மைதானத்தில் செயற்கையான பனிப்பொழிவு ஏற்படுத்தப்பட்டு, டிசம்பர் 25திகதிகளில் கூட இலகுவில் காணமுடியாத அளவுக்கான பனிக்கால சூழல் ஏற்படுத்தப்பட்டு, நத்தார் பண்டிகைக் காலத்தினை ஒத்த மரங்கள், பரிசுப் பொருட்கள், சோடனைகள், பாடல்கள், என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு அந்த பிராந்திய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இன்று நத்தார் நிகழ்வினை நடாத்தியுள்ளனர்.

சிறுவனின் பெற்றோர்கள் அவ்வளவு வசதிபடைத்தவர்கள் இல்லை என்ற போதிலும், நல்லுள்ளம் கொண்ட அந்த பிராந்திய மக்களின் உதவியினால், சிறுவனின் இறுதி ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post உயிராபத்தான நிலையில் உள்ள சிறுவனுக்காக இன்றே கிறிஸ்மஸ் கொண்டாடிய நகர மக்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Uxbridge பகுதியில் விபத்து – ஒருவர் பலி, இருவர் படுகாயம்

Posted: 24 Oct 2015 07:42 PM PDT

ui

uiUxbridge பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 70 வயதுடைய இருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Lakeridge வீதியில் இன்று காலை 11.40 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளதனை டூர்ஹாம் பிராந்திய காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Lakeridge வீதியில் வடக்கு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிவப்பு நிற Honda driven ரக வாகனம், U திருப்பம் மேற்கொண்ட போது, தெற்கு நோக்கிய வீதியால் வந்துகொண்டிருந்த பச்சை நிற Chevrolet ரக வாகனம் அதன் மீது மோதியுள்ளது.ui

விபத்தில் Honda ரக வாகனத்தைச் செலுத்திவந்த 22 இளைஞர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளான நிலையில், மற்றைய Chevrolet ரக வாகனத்தினை செலுத்திவந்த 77 வயதான ஸ்காபரோவைச் சேர்ந்த ஆணும், 74 வயது பெண் பயணியும் படுகாயமடைந்த நிலையில் ரொரன்ரோ தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

The post Uxbridge பகுதியில் விபத்து – ஒருவர் பலி, இருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Walkerton பகுதியில் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted: 24 Oct 2015 04:00 PM PDT

nj

njஒன்ராறியோவின் Walkerton பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஒற்றை வாகன விபத்தில் உயிரிழந்தவர் 20 வயது இளைஞர் என்று தெரிவிக்கப்படுகிறது.

SUV வாகனம் ஒன்றே விபத்துக்குள்ளானதாகவும், அது கிழக்கு Durham வீதியில் இருந்து விலகி மின் கம்பத்தில் மோதுண்டு உருண்டு Saugeen ஆற்றின் கரையில் ஓய்விற்கு வந்திருந்ததாக காவல்த்துறையினரின் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தில் பயணம் செய்த Walkerton சேர்ந்த நபா ஒருவரே விபத்து இடம்பெற்ற சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அந்த வாகனத்தின் சாரதியும், அதில் பயணம் செய்த நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட ஆறுபேர் சிறிய காயங்களுக்காக மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் 20 வயதுடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.nj

The post Walkerton பகுதியில் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

Posted: 24 Oct 2015 03:56 PM PDT

k

kபருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களையும் கலந்துகொள்ளுமாறு ஜஸ்டின் ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

உலக பருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாடு அடுத்த மாத இறுதியில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கனடா சார்ப்பில் ஒரு குழு கலந்துகொள்ளவுள்ள நிலையில்,அந்தக் குழுவில் கலந்துகொள்ளுமாறு பசுமைக் கடசித் தலைவர் எலிசபெத் மேற்கு ஜஸ்டின் ரூடோ ஏற்கனவே அழைப்பு அனுப்பி வைத்துள்ளார்.

அவ்வாறே புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair ற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பழமைவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்டீபன் ஹார்ப்பர் விலகுவதாக கூறியுள்ள நிலையி்ல், அந்த கட்சி புதிதாக தேர்ந்தெடுக்கும் தலைவரையும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜஸ்டின் ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.k

அரசாங்கத் தரப்பு மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மட்டுமின்றி, அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் என பலரும் உலக பருவநிலை மாற்றம் தொடர்பிலான இந்த மாநாட்டில் கலந்த கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் ரூடோ பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், எதிர்வரும் மாதத்தில் தேர்தல்களை எதிர்கொள்ளாத மாகாணங்களின் முதல்வர்களும் ஜஸ்டின் ரூடோவின் அழைப்பினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

The post பருவநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

DVPயில் வாகனம் கவிழ்ந்து விபத்து – 2 சிறுவர் உட்பட நால்வர் மருத்துவமனையில்

Posted: 24 Oct 2015 03:32 PM PDT

hg

hgரொரன்ரோவின் டொன் வெலி பார்க்வேயில் இன்று பிற்பகல் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமுற்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலையின் தெற்குநோக்கிய வழித்தடத்தில், டொன் மில்ஸ் வீதிக்கு அருகே இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமுற்ற சிறுவர்களில் ஒருவர் மோசமான காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சிறுவர்களை தவிர மேலும் இரண்டுபேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவர்களின் வயது உள்ளிட்ட விபரங்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

விபத்தினை அடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்ட போதிலும், சிலமணிநேரங்களில் அவை மீண்டும் வழமைக்குத் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.

The post DVPயில் வாகனம் கவிழ்ந்து விபத்து – 2 சிறுவர் உட்பட நால்வர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று அதிகாலையில் இருவேறு கத்திக்குத்துச் சம்பவங்களினால் இருவர் மருத்துவமனையில்

Posted: 24 Oct 2015 03:01 PM PDT

uy

uyநோர்த் யோர்க்கின் Steeles அவனியூ மற்றும் Weston வீதிப் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுடன் உயிராபத்தான நிலையில் இருந்த நபர் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

காலை 6 மணியளவில் 1880 Ormont Drive பகுதிக்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையில் தாம் அங்கு சென்றிருந்தாகவும், அப்போது பலமுறை கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் நபர் ஒருவர் அவதியுற்றுக் கிடந்ததாகவும் காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு ஆளான அந்த ஆண் நபர் 50 வயது மதிக்கத் தக்கவர் என்று நம்புவதாகவும், அவர் தற்போது உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் மீது குற்றச்சாட்டுச் சுமத்தப்படுமா என்பது குறித்து தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

uy

இதேவேளை York பல்கலைக்கழக வளாகத்தில் அண் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளானதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்துச் சம்பவம் அதிகாலை 2 மணிக்குச் சற்று முன்னராக Keele வீதி மற்றும் Finch அவனியூவிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

எனினும் காத்திக்குத்துக்கு ஆளான நபருக்கு ஏற்பட்ட காயம் உயிராபத்தானது அல்ல என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

The post இன்று அதிகாலையில் இருவேறு கத்திக்குத்துச் சம்பவங்களினால் இருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர் சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 24 Oct 2015 09:30 AM PDT

hj

hjபதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர், சாஸ் உள்ளிட்டவைகளால் புற்றுநோய் பரவிவருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் குறித்த ஆய்வுத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மக்களின் வாழ்க்கைமுறை அவசர வாழ்க்கை முறையாக மாறியுள்ளது.

இந்த அவசர உலகில், சமைத்து சாப்பிட்ட காலம்போய், ஒருநாள் சமைத்த உணவை, பல நாட்கள் வைத்து உண்ணுகிறோம்.

பதப்படுத்தட்ட இறைச்சி வகைகள், புற்றுநோய் உருவாக்கும் கார்சினோஜென்களின்(Carcinogen) புகலிடமாக உள்ளது.hj

பதப்படுத்தப்பட்ட மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, பன்றி இறைச்சி மிகுந்த பாதிப்பை உண்டாக்குவதாக உள்ளது.

பர்கர், பன்றி இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் நோய்க்கு பிரித்தானியாவில் ஆண்டு ஒன்றிற்கு 1,50,000 பேர் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் முதலிடம் வகிப்பது பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் இறைச்சிகள் தான், அதற்கு அடுத்த இடங்களில் மதுப்பழக்கம், ஆர்சனிக் மற்றும் புகைபிடிப்பது உள்ளிட்டவை உள்ளன.

The post பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பர்கர் சாப்பிடுபவரா நீங்கள்? ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாழைப் பழத்தோல் ஆரோக்கியமா? ஆரஞ்சு பழத்தோல் ஆரோக்கியமா?

Posted: 24 Oct 2015 09:26 AM PDT

iu

iuபழங்களில் உள்ள சத்துக்களை போன்று பழத்தோல்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.

தற்போது வாழைப் பழத்தோல் மற்றும் ஆரஞ்சு பழத்தோலின் நன்மைகள் பற்றி பார்ப்போம்,

வாழைப் பழத்தோல்

வாழைப் பழத்தோலில் அதிகளவில் விட்டமின் பி6, பி12 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் போன்றவை இருக்கின்றன.

வாழைப் பழத்தோலில் இருக்கும் விட்டமின் ஏ பற்கள், எலும்பு மற்றும் திசுக்களின் வலுவை அதிகரிக்க உதவுகிறது என்று சமீபத்திய ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இதன் தோலில் இருக்கும் விட்டமின் பி6 உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் இதயத்திற்கு வலு சேர்க்கிறது.

இது மட்டுமின்றி இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்துக் கொள்ள வாழைப் பழத்தோல் உதவுகிறது.

வாழைப் பழத்தோலில் இருக்கும் விட்டமின் பி12 நரம்பு மண்டலத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. மற்றும் இதன் விட்டமின் பி 2 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

வாழைப்பழத்தோல் கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க பயனளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.u

ஆரஞ்சு பழத்தோல்

ஆரஞ்சு பழத்தோல் உடலிலுள்ள LDL அல்லது 'மோசமான' கொழுப்புகளை எதிர்த்துப் போராடி, இதயத்திற்கும் செல்லும் குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும்.

எனவே உணவில் ஆரஞ்சு பழத்தோலை தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கொழுப்பை குறைக்கலாம்.

ஆரஞ்சுப் பழத்திலுள்ள சுறுசுறுப்பான வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 நாட்களுக்கு ஆரஞ்சுப் பழத்தோலை பயன்படுத்தி வந்தால், நெஞ்செரிச்சலுக்கு விடை காணலாம்.

100 கிராம் ஆரஞ்சுப் பழத்தோலில் 10.6 கிராம் அளவிற்கு உணவுக்கான நார்ச்சத்துக்கள் உள்ளன.

எனவே மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும் ஆரஞ்சுப் பழத்தோல் பெரிதும் உதவுகிறது.

ஆரஞ்சுப் பழத்தோலை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர், நமது செரிமான உறுப்புகளை உறுதிப்படுத்தும் குணமும் உண்டு.

மேலும் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சளி, ப்ளூ ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது.iu

The post வாழைப் பழத்தோல் ஆரோக்கியமா? ஆரஞ்சு பழத்தோல் ஆரோக்கியமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™