Tamil Star |
- அறுசுவை உணவுகளின் பயன்கள்! அவை எந்த உணவுகளில் கிடைக்கின்றன?
- TD வங்கியில் ஆட்குறைப்பு
- கைது நடவடிக்கையின் போது காயம் விளைவித்ததாக காவல்த்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு
- ரொரன்ரோ ஈட்டோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில்
| அறுசுவை உணவுகளின் பயன்கள்! அவை எந்த உணவுகளில் கிடைக்கின்றன? Posted: 19 Oct 2015 04:36 PM PDT
காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது. இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது. The post அறுசுவை உணவுகளின் பயன்கள்! அவை எந்த உணவுகளில் கிடைக்கின்றன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 19 Oct 2015 10:16 AM PDT
இந்த நடவடிக்கை காரணமாக எத்தனை பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விபரங்களை வங்கி இன்னமும் வெளியிடவிலலை என்ற போதிலும், அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த நடவடிக்கை செயற்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. Toronto-Dominion வங்கியின் கனேடிய நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தும் வகையிலேயே இந்த மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுவதாக வங்கியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த இந்த வங்கியில் வேலைசெய்யும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவலை ஊடகம் ஒன்று கடந்த வாரம் வெளியிட்டதனை அடுத்தே, குறித்த வங்கியும் அது தொடர்பிலான இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதேவேளை சிலநூறு பணியாளர்க்ள வேலையிழக்ககூடும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. The post TD வங்கியில் ஆட்குறைப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கைது நடவடிக்கையின் போது காயம் விளைவித்ததாக காவல்த்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு Posted: 19 Oct 2015 10:12 AM PDT
குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட ஒன்ராறியோ மாகாண சிறப்பு விசாரணை பிரிவினர், ஹமில்ட்டன் காவல்த்துறை உத்தியோகத்தரான Kudo Park என்பவர் மீது இந்த குற்றச்சாட்டினை பதிவு செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது 35 வயது ஆண் ஒருவர் காயமடைந்தமையால், மோசமாக காயமடையும் வகையில் தாக்கியதாக காவல்த்துறை உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த காவல்த்துறை உத்தியோகத்தல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படுவார் என்பதனைத் தவிர வேறு மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. The post கைது நடவடிக்கையின் போது காயம் விளைவித்ததாக காவல்த்துறை அதிகாரி மீது குற்றச்சாட்டு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ ஈட்டோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில் Posted: 19 Oct 2015 10:07 AM PDT
Rathburn வீதி மற்றும் நெடுஞ்சாலை 427 பகுதியில், Holiday Drive, The West Mallற்கு அருகே இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலில் காயங்களுக்க உள்ளானதாக ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்த்துறையினர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் வெள்ளி நிற Ford Fusion ரக வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்ககூடும் என்று சநதேகம் வெளியிட்டுள்ளனர். The post ரொரன்ரோ ஈட்டோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

அறுசுவை உணவுகளை சாப்பிடும்போது நல்ல ருசியை கொடுப்பது போன்று உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றன.





Toronto-Dominion செலவீன கட்டுப்பாட்டு நடவடிக்கையாக சில வேலைகளை நிறுத்தவுள்ளதுடன், மேலும் சில வேலைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஹமில்ட்டன் பகுதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கை ஒன்றின் போது ஒருவார காயங்களுக்கு உள்ளானமை தொடர்பில் காவல்த்துறை உத்தியோகத்தர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரொரன்ரோவின் ஈட்டோபிக்கோ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.