Tamil Star |
| வாக்களிப்புக்கான ஏற்பாடுகளில் கனேடிய தேர்தல் திணைக்களம் Posted: 18 Oct 2015 11:31 AM PDT
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெருமளவானோர் வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் வெளியிடப்பட்டுள்ளன. இதேவேளை முற்கூட்டிய வாக்குப் பதிவுகளிலும் இம்முறை வழமைக்கு மாறாக பெருமளவானோர் வாக்களித்துள்ள நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகளிலும் சில வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப் பதிவில் 71சதவீதம் அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், முற்கூட்டிய வாக்களிப்பு இடம்பெற்ற நான்கு நாட்களில் சுமார் 3.6 மில்லியன் வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முற்கூடிய வாக்குப் பதிவுகணை எண்ணுவதற்கான புதிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவித்தல்களை தேர்தல் திணைக்களம் விடுத்துள்ளது. அந்த அறிவித்தல்கள் பின்வருமாறு, முற்கூட்டிய வாக்குப் பதிவுகளின் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைக்கு பணியாளர்கள் போதாதிருந்தால், அதிகாரிகள் மேலதிக பணியாளர்களை சேர்த்துக் கொள்ள முடியும். அல்லது நாளைய வாக்குப் பதிவுகள் முடிவடைவதற்கு முன்னரே முற்கூட்டிய வாக்குகளை எண்ண ஆரம்பிக்கலாம். முற்கூட்டிய வாக்குப் பதிவு இடம்பெற்ற நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமான பின்னர், பணியாளர்களோ, சாட்சியாளர்களோ வெளியே செல்லவோ, எவரும் புதிதாக உள்ளே நுளையவோ முடியாது. The post வாக்களிப்புக்கான ஏற்பாடுகளில் கனேடிய தேர்தல் திணைக்களம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனேடிய மண்ணில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவோம் Posted: 18 Oct 2015 10:12 AM PDT
இந்த நிலையில் இந்தப் பொதுத்தேர்தலில் அதிகளவில் வாக்களித்து கனேடிய மண்ணில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவோம் என நாடுகடந்த தமிழீழ அராசங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் அதிகளவிலான ஈழத்தவர்கள் வாழ்கின்ற மண்ணாக கனேடிய தேசம் அமைவதோடு, பல்வேறு துறைகளில் குறிப்பிடதக்க வளர்ச்சியினை தமிழ்சமூகம் கனடாவில் கண்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் தளத்திலும் தமிழர்கள் பங்காற்றத் தொடங்கியுள்ளனர் அதேவேளை, தமிழ்சமூகத்தின் மீதான அரசியற் கட்சிகளதும் அவதானிப்பும் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் வரும் பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழர்கள் வாக்களிப்பதன் ஊடாக சனநாயகத்தின் மீதான நமது பற்றுதலையும், பங்கெடுப்பினையும் வெளிப்படுத்துவதோடு, அது உலக அரங்கில் தமிழர்களின் மென்வலு தளுவிய போராட்டத்துக்கும் வளமூட்டுவதாகவும் அமையும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவே தமிழர்களின் சமூக அரசியற் இருப்புக்கு வலுவுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நாளைய தேர்தலில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்பினை உறுதிப்படுத்தும் வகையில் வாக்களிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது. The post கனேடிய மண்ணில் தமிழர்களின் சமூக அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவோம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனடாவில் நாளைய தினம் நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை கனேடிய தேர்தல் திகணைக்களம்மேற்கொண்டு வருகிறது.

இம்முறை ஆறு ஈழத் தமிழர்கள் பிரதான கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.