Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எங்களுக்குள் பிளவு இல்லை; ஒற்றுமையாக செயல்படுவோம் - நாசர் பேட்டி

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான விஷாலின் பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வெற்றிக்கு பின்னர் விஷால், நாசர் மற்றும் கார்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நாசர்... தமிழ்நாட்டில் நடந்த முக்கியமான ஒரு மிகப்பெரிய நிகழ்வு, இந்த நடிகர் சங்கம் தேர்தல். இது ...

தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறேன் - ராதாரவி

Posted:

நடிகர் சங்க தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்பதாக நடிகர் ராதாரவி கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் ராதாரவியும், நாசர் அணி சார்பில் விஷாலும் போட்டியிட்டனர். இதில் விஷால் 1445 ஓட்டுகளும், ராதாரவி 1138 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் 307 ஓட்டுகள் ...

நடிகர் சங்க தேர்தல் - சாதித்தது விஷாலின் பாண்டவர் அணி!

Posted:

பரபரப்பாக நடந்து முடிந்து நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

அனல் பறந்த தேர்தல் களம்

ஒரு ...

நடிகர் சங்க தேர்தல் - அஜித் ஓட்டு போடவில்லை!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் அஜித் ஓட்டுப்போடவில்லை. காயம் காரணமாக அவர் ஓட்டுப்போடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. ஒருமாத காலத்திற்கு மேலாக பரபரப்பாக போய் கொண்டிருந்த நடிகர் சங்க தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்துள்ளது. நடிகர் சங்க தேர்தலில் ...

விஷால் அப்பா என்று சொல்ல பெருமையாக உள்ளது - ஜிகே ரெட்டி!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து, நாசர் தலைமையிலான விஷால் அணியினர் களத்தில் இறங்கினர். குறிப்பாக விஷாலின் பாண்டவர் அணி பரபரப்பாக இயங்கியது. இந்நிலையில் விஷாலின் அப்பாவும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...

பாலாவின் ...

நடிகர் சங்க தேர்தல் - ஓட்டுபதிவு நிறைவு - ஓட்டு எண்ணிக்கை துவங்கியது

Posted:

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு நடிகர் சங்க தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. சட்டசபை தேர்தல், பார்லிமென்ட் தேர்தலை மிஞ்சும் அளவுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு காலை 7 மணிக்கு சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பெண்கள் ...

ரஜினி பேச்சுக்கு டெல்லி கணேஷ் எதிர்ப்பு!

Posted:

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் சூழ்நிலையில், இன்று காலை 7 மணி 40 நிமிடத்துக்கு வாக்களிக்க வந்தார் ரஜினி. வாக்களித்துவிட்டு வந்த ரஜினி, தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ரஜினி கூறிய கருத்துக்கு நடிகர்கள் மத்தியில் ...

நடிகர் சங்கம் என்று இருந்தால்போதும் - கவுண்டமணி!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலில் வாக்களிக்க வந்த ரஜினி, தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள் முதல் வேலையாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ரஜினி தெரிவித்த இந்த கருத்துக்கு பலரும் வரவேற்பு தெரிவித்தனர். அதேநேரம், தமிழரல்லாத தெலுங்குக்காரர் என்று விமர்சிக்கப்படும் ...

நடிகர் சங்க தேர்தல் - மீண்டும் தள்ளு முள்ளு!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விஜயகாந்த் உள்ளிட் முன்னணி நடிகர்கள் பலரும் ஓட்டு அளித்துள்ளனர். நண்பகல் 12மணியளவில் விஷால் அணியினருக்கும், சரத்குமார் அணியினருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த மோதல் முற்றியதால் அங்கு ...

பெயர் மாற்றம் தற்போது முக்கியமல்ல - கார்த்தி

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தலில் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 850 பேர் வாக்களித்திருப்பதாக தகவல். இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில், அதாவது காலை 7.40 மணிக்கு வாக்களிக்க வந்த ரஜினி, தேர்தலில் வெற்றி பெறுகிறவர்கள் முதல் வேலையாக தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயரை மாற்ற ...

தகராறில் ஈடுபட்டால் தேர்தல் ரத்து செய்யப்படும் - அதிகாரி எச்சரிக்கை!

Posted:

சட்டசபை, பார்லிமென்ட் தேர்தலை விட மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல். காலை 7 முதலே சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டு பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மனாபன் கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் சுமூகமாக நடைபெற்று வந்தநிலையில், ...

நடிகர் சங்கத் தேர்தல் - ஒரு நாள் சினிமா !!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கானத் தேர்தல் காலை முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. செய்தித் தொலைக்காட்சிகளில் கூட பொதுத் தேர்தல் போல காலை முதலே நேரடி ஒளிபரப்பைத்தான் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மீடியாக்கள் மத்தியில் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறிவிட்டது.

பொதுவாக டிவிக்களில் ஒரு ...

தமிழ்நாடு நடிகர் சங்கம் - ரஜினி; இந்திய நடிகர் சங்கம் - கமல் - சாத்தியமா..?!

Posted:

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பெயரை மாற்றுவது தொடர்பாக ரஜினியும், கமலும் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை வாக்களிக்க வந்த ரஜினி கூறிய கருத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது ...

ரஜினியின் கருத்துக்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்டாரா கமல்?

Posted:

நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலை வாக்களிக்க வந்த ரஜினி கூறிய கருத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் சங்கத்தேர்தல் சூடுபிடித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலுபெற்று ...

வன்முறையைத் தூண்டினாரா வடிவேலு.?!

Posted:

காலை முதல் அமைதியாக நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் ஐந்து மணி நேரம் வரை எவ்வித பிரச்சனையும் இல்லை. தேர்தல் நடைபெறும் இடம் 12 மணிக்கு மேல் சண்டைக்களமாக மாறியது. வாக்களிக்க வந்தவர்களிடம் இரண்டு அணியினரும் ஓட்டு கேன்வாஸ் செய்தபோது ஏற்பட்ட பிரச்சனையினால் சற்று நேரம் போர்க்களமாக மாறியது.

இந்நிலையில் அங்கு நிலவும் ...

உலக நடிகர் சங்கமாக மாற்றலாம் - சிம்பு கிண்டல்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை முதலே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரவு வெளிவர உள்ள முடிவுகள் எப்படி இருக்கும் என்று இப்போதே சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்திற்கு தேர்தலே நடைபெறாமல் இருந்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் அறிமுகமானவர்களும் அதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் கூட ...

தாக்குதல் ஏதும் நடக்கவில்லை: சரத்குமார்

Posted:

விஷால் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசிய சரத்குமார், தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. போலீசார் எல்லோரும் இங்கு தான் இருக்கிறார்கள். காலை முதல் சிறப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. சிலிப் வாங்கும் இடத்திலும் போது ஓட்டு சேகரித்தனர். அது சட்டத்திற்கு புறம்பானது என கூறி வெளியேற சொன்னோம். அதற்கு அவர்கள் தகாத ...

தேர்தல் பாதிக்கப்படாது : விஷால்

Posted:

சரத்குமார் அணியினரால் தாக்கப்பட்ட நடிகர் விஷால் கூறுகையில், என்னை தாக்க முயற்சி நடந்தது. என்னை அடித்தாலும், என்ன செய்தாலும் தேர்தல் நிற்காது. தேர்தல் எந்த காரணத்திற்காகவும் பாதிக்கப்படாது. தேர்தல் நடைபெறும். ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிந்த பிறகு விரிவாக பேசுகிறேன். தேர்தல் தொடர்ந்து நடத்த ...

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை: விஜயகாந்த்

Posted:

தேர்தலில் 3000 ஓட்டுக்கள் மட்டுமே உள்ளன. இங்கு போலீஸ் பாதுகாப்பு எப்படி இருப்பது என கேட்கிறீர்கள், தமிழகத்தில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. விஷால் தாக்கப்பட்டது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த பிரச்னைக்கே அதிமுக அரசு தான் காரணம் என தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஓட்டளிக்க வந்த தேமுதிக ...

சரத்குமார்-விஷால் அணியினர் தள்ளுமுள்ளு: விஷால் மீது தாக்குதல்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார்-விஷால் அணியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தேர்தல் மையத்தில் பரபரப்பு காணப்படுகிறது. தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக விஷால் அணியினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார், ஓட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™