Tamil Star |
- தொப்பையால் தொல்லையா? இதையெல்லாம் மிஸ் பண்ணாம குடிங்க..
- Caledon விபத்தில் ஒருவர் பலி
- மிசிசாகா Tim Hortons இல் கத்திக்குத்துச் சம்பவம்
- கருத்துக்கணிப்புக்கள் – தொடர்ந்தும் லிபரல் கட்சி முன்னணியில்
- அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இடையிலான முரண்பாடுகள் கனேடிய நடைமுறைகளின் ஒரு பகுதி
- கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
| தொப்பையால் தொல்லையா? இதையெல்லாம் மிஸ் பண்ணாம குடிங்க.. Posted: 17 Oct 2015 05:43 PM PDT
அதே சமயம் ஆரோக்கியமான உணவுகளும், சீரான டயட் முறைகளும் அவசியமான ஒன்று. அந்த வகையில் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க சில சிறப்பான ஜூஸ்கள் உள்ளன. நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலை நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழும்புகளை குறைக்க முடியும். இதனால் உடலில் நல்ல மாற்றம் தெரியும். இது ஆயுர்வேத மருத்துவத்திலே கூறப்பட்டுள்ளது. மசாலா பால் பாலுடன் மஞ்சள் மசாலா சேர்த்து பருகும் போது உடலில் உள்ள கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. தவிர, மூட்டு வலி, தசை பிடிப்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் கபம் போன்றவற்றுக்கும் இது நல்ல தீர்வளிக்கிறது. இஞ்சி டீ உடல் எடைக் குறைப்பில் மற்றுமொரு சிறந்த பானம் இஞ்சி டீ. இது உடலில் இருக்கும் வாதம், பித்தம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. மேலும், குடலியக்கம் மற்றும் செரிமான செயல் திறனை ஊக்குவித்து உடல் எடையை குறைக்கிறது. சர்க்கரையில்லாத கிரீன் டீ தினமும் கிரீன் டீ பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் வேகமடைகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது. இதன் பலன்கள் முழுவதும் கிடைக்க சர்க்கரையை தவிர்க்க வேண்டியது அவசியம். தேவை என்றால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம். ப்ளேக் காபி ப்ளேக் காபி அதிகப்படியான பசியை கட்டுப்படுத்துகிறது. கிரீன் டீயை போலவே, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் பானமாக திகழ்கிறது. காய்கறி ஜூஸ் காய்கறி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு தேவையான சக்தியும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க இது உதவுகிறது. இதனால் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை தவிர்க்க முடியும். The post தொப்பையால் தொல்லையா? இதையெல்லாம் மிஸ் பண்ணாம குடிங்க.. appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 17 Oct 2015 05:34 PM PDT
Airport மற்றும் Mayfield வீதிப் பகுதியில் அதிகாலை 5 மணிக்கு சற்றுப் பின்னர் இந்த விபத்து இடம்பெற்றதாக ஒன்ராறியோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் பயணிகள் வாகனம் பாரவூர்தியின் பின்பகுதியில் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.அந்த பயணிகள் வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியே சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,இந்த விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் உயிரிழந்த நபர் பிரம்ரனைச் சேர்ந்த 20 வயதான Gurpeet Singh Dhaliwal என்ற நபர் என்று காவல்த்துறையினர் இனங்கண்டுள்ளனர். விபத்தை அடுத்து Airport மற்றும் Mayfield வீதிகள் சில மணிநேரங்களாக போக்குவரத்திற்கு மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.பின்னா வீதிகள் போக்குவரத்திற்காக பிற்பகல் 3 மணியளவில் திறந்து விடப்பட்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது. The post Caledon விபத்தில் ஒருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகா Tim Hortons இல் கத்திக்குத்துச் சம்பவம் Posted: 17 Oct 2015 05:06 PM PDT
கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Dixie வீதி மற்றும் Mid-Way Boulevard பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் தெரிவிக்கையில், கத்திக்குத்துக்கு ஆளான நபர் ஆபத்தான நிலையில் உயிருடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த கத்திக்குத்துச் சம்பவம் அங்கு காணப்பட்ட உணவத்தினுள் இடம்பெற்றதா இல்லையா என்பது தொடர்பில் உடனடியாக தொளிவுபடுத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடாபில் காவல்த்தறையினர் உடனடியாக தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை. The post மிசிசாகா Tim Hortons இல் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கருத்துக்கணிப்புக்கள் – தொடர்ந்தும் லிபரல் கட்சி முன்னணியில் Posted: 17 Oct 2015 02:37 PM PDT
இந்த நிலையில் வாக்காளர் மத்தியில் லிபரல் கட்சிக்கு அதிக ஆதரவு காணப்படுவதனை இறுதிநேர கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. முக்கிய மூன்று கட்சிகளில் பழமைவாதக் கட்சி மற்றும் புதிய சனநாயக கட்சி என்பவற்றுடன் ஒப்பிடுகையில், லிபரல் கட்சி முன்னிலை வகிக்கின்றமையை Forum Research அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தேர்தல் ககணிப்பு வெளிப்படுத்தியுள்ளத. தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் நாடு தழுவிய ரீதியில் 1,438 பேரிடம் கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நாள் Forum Research அமைப்பு வெளியிட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரம், லிபரல் கட்சிக்கு 37 சதவீதம், பழமைவாதக் கட்சிக்கு 31 சதவீதம் புதிய சனநாயக கட்சிக்கு 24சதவீதம் என்ற மக்கள் ஆதரவைக் பெற்றுள்ளதை அறியமுடிகின்றது. இந்த கருத்துக் கணிப்பின் படி எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படக்கூடும் எனவும், கடந்த பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்த பழமைவாதக் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்டக்ககூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மற்றொரு கருத்துக் கணிப்பில், ஒன்ராறியோவில் லிபரல் கட்சிக்கான ஆதரவு 43.5 சதவீதம் என்ற வலிமையான நிலையில் காணப்படுவதாகவும், பழமைவாதக் கட்சிக்கு 33.5 சதவீத ஆதரவும், புதிய சனநாயக கட்சிக்கு 19.9 சதவீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. The post கருத்துக்கணிப்புக்கள் – தொடர்ந்தும் லிபரல் கட்சி முன்னணியில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இடையிலான முரண்பாடுகள் கனேடிய நடைமுறைகளின் ஒரு பகுதி Posted: 17 Oct 2015 02:31 PM PDT
கடந்த சுமர் ஒரு தசாப்தகால பழமைவாதக் கட்சி ஆட்சியில், அரசாங்கத்திற்கும், நாட்டின் நீதித் துறைக்கும் ஆங்காங்கே முரண்பாடுகள் காணப்பட்டுவந்த நிலையில் அவர் அந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் நேற்றைய நாள் தகவல்களை வெளியிட்டுள்ள பிரதமர், குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் தொழில், மருத்துவ ரீதியிலான தற்கொலைக்கு உதவுதல் போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் நீதித் துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவ்வாறான வேறுபாடுகள் காணப்படும் நடைமுறையான கனேடிய அரசியலமைப்பு முறையின் ஒரு பகுதியே என விபரித்துள்ள பிரதமர், அதனை மாற்றியமைக்க தாங்கள் முயலவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்தடன் கனேடிய குடியுரிமையினை பெற்றுக்கொள்ளும நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி முக்காடு அணிவதனை எதிர்க்கும் தமது திட்டத்தினையும் அவர் தற்காத்து பேசியுள்ளார். கனேடிய சமூகத்துடன் இணைந்து கொள்ளப் போகிறவர்கள், முகத்தை மறைத்துக் கொண்டு அவ்வாறு செய்யவேண்டியதில்லை என விபரித்துள்ளார். இதேவேளை கனேடியப் பிரதமர் மக்களின் பணம் பாதுகாக்கப்பட வேண்டுமா அல்லது செலவழிக்கப்பட வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இவை பாதுகாக்கப்பட வேண்டும் எனில் பழமைவாதக் கட்சியினையே வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் எனவும் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வலியுறுத்தியுள்ளார். The post அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இடையிலான முரண்பாடுகள் கனேடிய நடைமுறைகளின் ஒரு பகுதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? Posted: 17 Oct 2015 08:44 AM PDT
அதற்கு ஒரே காரணம் கஷப்புத்தன்மை, இருமல், ஜலதோஷம், மிதமான காய்ச்சல் போன்றவற்றிற்கு கஷாயம் ஒரு சிறந்த நிவாரணியாகும். மிளகு கஷாயம் 12 மிளகை நன்றாகப் பொடித்து, இரண்டு கப் பாலில் சேர்த்து சுண்ட காய்ச்சவும். இனிப்பு தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். பயன்கள்: தொண்டைக் கரகரப்பு நீங்கும். ஜீரணக்கோளாரைச் சரி செய்யும். பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் மசக்கையால் ஏற்படும் வாந்தியை தடுக்கும். கிராம்பு கஷாயம் 10 கிராம்புகளைப் பொடித்துக்கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும். கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பருகலாம். பயன்கள்: தொண்டைக்கு இதமாக இருக்கும். தோல் பிரச்சனைக்கு மிகவும் நல்லது. கரும்புள்ளிகளை போக்கும். கண்களில் இருக்கும் கருவளையம் மறைந்துவிடும். சுக்குக் கஷாயம் அம்மியில் சுக்கை நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். மிக்சியில் சிறிது சுக்கை போட்டு பொடித்துக்கொள்ளவும். இந்த இரண்டுவிதமான பொடியையும் பாத்திரத்தில் போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கப்பாகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டவும். சூடான பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து பருகவும். பயன்கள்: வாயுக் கோளாறை நீக்கும். சளித் தொல்லையைப் போக்கும். வாயில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். இஞ்சி கஷாயம் இஞ்சியை அம்மியில் வைத்து நசுக்கி தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி பனை வெல்லம் சேர்க்கவும். பயன்கள்: உடல் வலியைப் போக்கும். இருமல், தும்மல், மூச்சு அடைப்பை நீக்கும். மாதவிடாய் காலங்களில் உடலுக்குத் தேவையான எதிர்ப்பு சக்தி தரும்.
The post கஷாயம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.





Caledon பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மிசிசாகா Tim Hortons இல் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
புதிதாக ஆட்சி அமைக்கப்போகும் புதிய அரசாங்கத்தினை தீர்மானிக்கவுள்ள கனடாவின் பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
அரசாங்கத்திற்கும், நீதித்துறைக்கும் இடையில் ஆங்காங்கே காணப்படும் முரண்பாடுகள் கனேடிய நடைமுறைகளின் ஒரு பகுதியே என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
கஷாயம் குடிப்பது என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும்.

