Tamil Star |
- ஒன்ராறியோவில் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது
- இலங்கை தமிழ் பெண்ணை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களிற்கு நன்றி தெரிவித்துள்ள காவல்த்துறை
- இலங்கை தொடர்பில் அனைத்தலக விசாரணையை வேண்டும் – கனேடிய குடிவரவு குடியுரிமை அமைச்சர்
- கன்சவேட்டிவ் அரசு பதவிக்கு வந்தால் சென்னையிலும் துணைத் தூதராலயம் அமைக்கும்!- ஜேசன் கெனி
- எந்த நோய்க்கு என்ன காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்?
- தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா?
- பிரம்டனில் வாகனம் மோதி பாதசாரி பலி
- உயிராபத்தான நிலையில் குழந்தை மீட்பு – 25வயது பெண் கைது
- ரொரன்ரோவில் மரதன் ஓட்டம் – வாரஇறுதியில் பல வீதிகள் மூடல்
- Stouffville பகுதியில் தீ சம்பவம்
| ஒன்ராறியோவில் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது Posted: 16 Oct 2015 07:50 PM PDT
இந்த அதிகரித்த புதிய கட்டண முறை நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என ஒன்ராறியோ மின்சாரசபை அறிவித்துள்ளது. காலை 7 மணியில் இருந்து முற்பகல் 11 வரையும், மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரையுமான உச்ச பயன்பாட்டு நேரத்திற்கான கட்டணம் 1.4 சதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் கிலோவாட்டுக்கு 17.5 சதங்களாக மாற்றம் காணும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மத்திம உச்ச பாவனை வேளையாகிய முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலான காலப்பகுதிக்கான கட்டணம் 0.6 சதத்தினால் அதிகரிக்ப்பட்டவுள்ளதுடன், அந்த அதிகரிப்பால் 12.8 சதமான மாற்றம் காணவுள்ளது.
பாவனை குறைவான காலப்பகுதியான இரவு 7 மணியிலிருந்து காலை 7 மணி வரையிலான நேரத்திற்கும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களுக்குமான கட்டணம் 0.3 சதத்தினால் அதிகரிக்கப்பட்டு கிலோவாட்டுக்கு 8.3 சதமாக மாற்றம் காணவுள்ளது. இந்த மாற்றங்களின் படி மாதாந்தம் சுமார் 800கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம், சுமார் 4 டொலர்கள் 42 சதத்தினால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. The post ஒன்ராறியோவில் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தமிழ் பெண்ணை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களிற்கு நன்றி தெரிவித்துள்ள காவல்த்துறை Posted: 16 Oct 2015 07:47 PM PDT
இலங்கையரான 33 வயதான சுரேசினி சிவசுதன் அவரது ஐந்து மாத குழந்தையான பவிஷ் சிவசுதன் ஆகியோர் காணாமல் போனதாக கடந்த 13ஆம் திகதி காவல்த்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டது. அன்று காலை 6.30 அளவில் Sheppard Avenue East மற்றும் Morningside Avenue பகுதியில் அவர்கள் இறுதியாக காணப்பட்டதாகவும், அதன் பின்னர் அவர்களை காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடரந்து நேற்று முன்தினம் 14ஆம் திகதி இரவு 11.40 அளவில் அவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள ரொரன்ரோ காவல்த்துறையினர், அவர்களை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களுக்க நன்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் காணாமல் போனமைக்கான காரணம் மற்றும கண்டிபிக்கப்பட்ட மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
The post இலங்கை தமிழ் பெண்ணை கண்டுபிடிக்க உதவிய பொதுமக்களிற்கு நன்றி தெரிவித்துள்ள காவல்த்துறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தொடர்பில் அனைத்தலக விசாரணையை வேண்டும் – கனேடிய குடிவரவு குடியுரிமை அமைச்சர் Posted: 16 Oct 2015 06:31 PM PDT
பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் அலெக்ஸ்சாண்டர், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ரொரன்ரோ அஜெக்ஸ் தொகுதியில் போட்டியிடும் நிலையில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த அவர்,அப்போது அங்கிருந்த நிலைமைகளையும் நினைவுபடுத்தினார். இலங்கை தொடர்பில் அவரின் அந்த கருத்துக்கள் வருமாறு, சக உறுப்பினர் ஒருவருடன் இலங்கையின் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றிருந்தேன். 2012ஆம் ஆண்டிலும் இலங்கையின் முக்கிய பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னம் கடுமையாக இருந்தது. முக்கியமாக வடக்கு பகுதிகளில் அதிகமாகவே காணப்பட்டது. அப்போது இலங்கை தமிழர்களுக்கும் மத்திய அரசுக்குமான சமரச முயற்சிகள் எவையும் ஆரம்பிக்கவோ, நடைபெறவோ இல்லை. காணாமல் போனவர்கள் குறித்த கேள்விகளுக்கு உறுதியான எந்த பதிலும் அவர்களால் தர முடியவில்லை.இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த மோதலில் உயிரிழந்திருந் போதிலும், அது குறித்து பொறுப்பேற்க எவரும் முன்வரவில்லை. இவ்வாறான நிலையிலேயே இலங்கை பிரச்சினை குறித்து கனேடிய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், மனித உரிமைகள் ஆணையத்தால் அழுத்தமான தீர்மானத்தை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.
அந்த வகையில் இலங்கையில் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள அனைத்து விதமான ஆதரவினையும் கனடா தொடர்ந்து வழங்கும். காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை வழங்கவும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையிலான சுதந்திரமான விசாரணை மட்டுமே இலங்கை பிரச்சனைக்கு உரிய தீர்வினை தரமுடியும். இந்த பிரச்சனையின் உண்மைத்தன்மையை அறிந்தால் மட்டுமே இந்த கொடிய நிகழ்வை மறக்க முடியும். என்றார் குடியுரிமை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர். The post இலங்கை தொடர்பில் அனைத்தலக விசாரணையை வேண்டும் – கனேடிய குடிவரவு குடியுரிமை அமைச்சர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கன்சவேட்டிவ் அரசு பதவிக்கு வந்தால் சென்னையிலும் துணைத் தூதராலயம் அமைக்கும்!- ஜேசன் கெனி Posted: 16 Oct 2015 05:25 PM PDT
இவ்வாறான தனி இனக்குழுக்களுக்கான அறிவிப்புக்களை வெளியிட்டாவது ரொறன்ரோ பெருநகரத்தில் ஓரிரு ஆசணங்களைத் தானும் தக்க வைக்க வேண்டிய நிலைக்குக் கன்சவெட்டிவ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. சென்னையில் திறக்கப்படும் தூதரகத்தால் தென்னிந்திய மக்களிற்கு கனடா வருவதற்கான விசா, படிப்பிற்கான விசா மற்றும் வியாபாரத் தேவைகளிற்கான விசாக்களைப் பெறுவது இலகுவாக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளிவந்த கருத்துக் கணிப்புக்கள் நேற்றைய கருத்துக் கணிப்பிலிருந்து வேறுபடாமால் லிபரல் கட்சி 37வீத ஆதரவைப் பெறும் என்பதை காட்டி நின்றன. இரண்டாவதாக கன்சவெட்டிவ் கட்சி 31 வீத ஆதரவையும். புதிய ஜனநாயகக் கட்சி 24 வீத ஆதரவையும் கொண்டுள்ளன. ரொறன்ரோ பெரும்பாகத்தில் பெரும்பாலான தொகுதிகள் லிபரல் கட்சியின் வசம் செல்லும் என்ற கணிப்பிற்கு அமைய அவ்வாறான தொகுதிகளில் ஓரிரண்டையாவது கைப்பற்றும் நோக்கிலேயே கன்சவேட்டிவ் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக மார்க்கம், பிரம்டன், மிசிசாகா ஆகிய நகரங்களை ஓரிண்டு தொகுதிகளையாவது தக்கவைத்து கொள்ள கன்சவெட்டிவ் கட்சி கடும்பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகின்றது. The post கன்சவேட்டிவ் அரசு பதவிக்கு வந்தால் சென்னையிலும் துணைத் தூதராலயம் அமைக்கும்!- ஜேசன் கெனி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எந்த நோய்க்கு என்ன காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்? Posted: 16 Oct 2015 05:01 PM PDT
அவை எந்தெந்த நோய்களை குணமாக்க உதவுகின்றன என்பதை பற்றி பார்ப்போம், எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம் - இயற்கை வைத்தியம் உடல் பருமன் முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி. சர்க்கரை நோய் தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி. வயிற்று குடல் புண் மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு. மாதவிடாய் கோளாறுகள் வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை. ஆஸ்துமா கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை. மலச்சிக்கல் பாலக்கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா. சிறுநீரகக் கல் புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள். மூலம் பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய். நரம்புக் கோளாறுகள் கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா. The post எந்த நோய்க்கு என்ன காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம்? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? Posted: 16 Oct 2015 04:35 PM PDT
தற்போது தேங்காய் எண்ணெய்யில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான். புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம். உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும். சளித்தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும். The post தேங்காய் எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டனில் வாகனம் மோதி பாதசாரி பலி Posted: 16 Oct 2015 03:32 PM PDT
இந்த சம்பவத்தினை பீல் பிராந்திய காவல்த்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். விமானநிலைய வீதி மற்றும் Queen Street பகுதியில், Coventry வீதியில் அமைந்துள்ள Wal-Mart வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இன்று இரவு ஏழு மணியளவில் இந்த அசம்பாவிதம் சம்பவித்துள்ளது. இந்த மோதல் சம்பவித்தமைக்கான காரணம் மற்றும் உயிரிழந்தவர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருக்கும காவல்த்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகி்ன்றனர். The post பிரம்டனில் வாகனம் மோதி பாதசாரி பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உயிராபத்தான நிலையில் குழந்தை மீட்பு – 25வயது பெண் கைது Posted: 16 Oct 2015 03:28 PM PDT
குறித்த அந்த பெண் முதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிங்ஸ்டன் பொது மருத்துவமனையில் குழந்தையை காண்பித்ததாகவும், அது தொடர்பில் காவல்த்துறையினருக்கும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தை உயிராபத்தான காயங்களுடன் மிக மோசமான நிலையில் காணப்பட்டமையால் மேலதிக சிகிச்சைகளுக்காக உலங்குவானூர்தி மூலம் ஒட்டாவாவில் உள்ள கிழக்கு ஒன்ராறியோ சிறுவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து குழந்தையின் தாயான கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்ணை கைது செய்துள்ள அதிகாரிகள், அவர் மீது மோசமான தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். பெண்ணின் மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. The post உயிராபத்தான நிலையில் குழந்தை மீட்பு – 25வயது பெண் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோவில் மரதன் ஓட்டம் – வாரஇறுதியில் பல வீதிகள் மூடல் Posted: 16 Oct 2015 02:04 PM PDT
குறிப்பாக ரொரன்ரோ டவுன்ரவுன், Distillery District, Leslieville, Beaches, Liberty Village உள்ளிட்ட நீர்முகப்பு பகுதிகளில் இந்த மரதனோட்டம் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முழு மரதனோட்டம் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யூனிவேர்சிட்டி அவனியூ மற்றும் டண்டாஸ் வீதியில் இருந்து ஆரம்பித்து, Bloor Streetஇல் வடக்கு நோக்கியும், Bathurst Streetஇல் கிழக்கு நோக்கியும் சென்று பின்னர், Fort York Boulevard ஊடாக Lakeshore Boulevard ற்கு சென்று, அங்கிருந்து Ellis Avenueவிற்கு சென்று டவுன்ரவுன் நோக்கி திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரை மரதனோட்டத்தில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அதே இடத்தில் ஆரம்பித்து, Lakeshore வரையிலும் சென்ற பின்னர், அங்கிருந்து Bay Street வழியாக வடக்கு நோக்கி சென்று Nathan Phillips சதுக்கத்தில் தமது போட்டியினை முடித்துக் கொள்வார்கள்.
The post ரொரன்ரோவில் மரதன் ஓட்டம் – வாரஇறுதியில் பல வீதிகள் மூடல் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Stouffville பகுதியில் தீ சம்பவம் Posted: 16 Oct 2015 01:34 AM PDT
19thஅவனியூ மற்றும் Stouffville வீதி என்பவற்றிற்கு இடையில் உள்ள Woodbine Avenue பகுதியில் அமைந்துள்ள பழைய உலோகங்கள் சேர்த்து வைக்கப்படும் இடத்தில் அதிகாலை ஒரு மணியளவில் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாம் சென்றிருந்த போது அங்கு கரும் புகையுடன் தீச்சுவாலை பெரிதாக கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்களின் தன்மை காரணமாக அந்த தீச் சுவாலையை நீர் ஊற்றி அணைப்பது சாத்தியமாகாது என்பதனால், சுவாலை எரிந்து தானாகவே அணைவதற்கு தீயணைப்புப் பணியாளர்கள் அனுமதித்திருந்தனர். இதேவேளை அங்கு எவ்வாறு தீ பற்றிக்கொண்டது என்பது தமக்குத் தெரியவில்லை என்று பழைய உலோகப் பொருட்களை சேர்க்த்து வைத்திருந்த அந்த இடத்தின் உரிமையாளர் Nick Gallo தெரிவித்துள்ளார். Stouffville பகுதியில் உள்ள பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் இடத்தில் இன்று அதிகாலை தீ பற்றிக்கொண்டதால் அந்த பகுதியை பெரும் புகைமண்டல் சூழ்ந்து காணப்பட்டது. 19thஅவனியூ மற்றும் Stouffville வீதி என்பவற்றிற்கு இடையில் உள்ள Woodbine Avenue பகுதியில் அமைந்துள்ள பழைய உலோகங்கள் சேர்த்து வைக்கப்படும் இடத்தில் அதிகாலை ஒரு மணியளவில் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாம் சென்றிருந்த போது அங்கு கரும் புகையுடன் தீச்சுவாலை பெரிதாக கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்ட பொருட்களின் தன்மை காரணமாக அந்த தீச் சுவாலையை நீர் ஊற்றி அணைப்பது சாத்தியமாகாது என்பதனால், சுவாலை எரிந்து தானாகவே அணைவதற்கு தீயணைப்புப் பணியாளர்கள் அனுமதித்திருந்தனர். இதேவேளை அங்கு எவ்வாறு தீ பற்றிக்கொண்டது என்பது தமக்குத் தெரியவில்லை என்று பழைய உலோகப் பொருட்களை சேர்க்த்து வைத்திருந்த அந்த இடத்தின் உரிமையாளர் Nick Gallo தெரிவித்துள்ளார் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ சம்பவம் காரணமாக,19th அவனியூ மற்றும் Stouffville வீதிக்கு இடைப்பட்ட Woodbine அவனியூபோக்குவரத்திற்கு மூடப்பட்டு, பின்னர் அது காலை 9 மணியளவில் அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ சம்பவம் காரணமாக,19th அவனியூ மற்றும் Stouffville வீதிக்கு இடைப்பட்ட Woodbine அவனியூபோக்குவரத்திற்கு மூடப்பட்டு, பின்னர் அது காலை 9 மணியளவில் அது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. The post Stouffville பகுதியில் தீ சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோவின் மின் கட்டணங்கள் அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் அதிகரிக்கவுள்ளது.
இலங்கை தமிழ் பெண் ஒருவர் அவரது குழந்தையுடன் காணாமல் போயிருந்த நிலையில், அவரை கண்டுபிடிப்பதற்கு உதவிய பொதுமக்களுக்கு ரொரன்ரோ காவல்த்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கை தொடர்பில் அனைத்தலக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதன் மூலமே ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கனடாவின் குடிவரவு குடியுரிமை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை விடிந்தால் தேர்தல் என்ற நிலையில் வழங்கப்படும் வாக்குறுதிகள் பலமடைந்து செல்கின்றன. கன்சவேட்டிவ் அரசு பதவிக்கு வந்தால் தாங்கள் சென்னையிலும் ஒரு துணைத் தூதராலயத்தை அமைப்போம் என பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.

பொதுவாக பழங்களும், காய்கறிகளும் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
சமையலுக்கு அதிக ருசியை கொடுக்கும் தேங்காயில் உள்ள சத்துக்களை போலவே தேங்காய் எண்ணெய்யிலும் மனிதனுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன.
பிரம்டன் பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் பாதசாரி ஒருவர் மீது வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்ராறியோவின் கிங்ஸ்டன் மருத்துவமனையில் 21 மாத குழந்தை ஒன்று உயிராபத்தான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதனை அடுத்து, அது தொடர்பில் 25 வயது பெண் ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.
Scotiabank Waterfront ஐந்து கிலோமீற்றர் மரதன் ஓட்டம், அரை மரதனோட்டம், முழு மரதனோட்டம் ஆகிய நிகழ்வுக் இநத வார இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், ரொரன்ரோவின் பல வீதிகளும் நெடுஞ்சாலைகளும் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
