Tamil Star |
- 22 வருடங்களின் பின்னர் முதன்முறையாக வாகையர் பட்டத்தை வென்றது ரொரன்ரோ
- 5 வெவ்வேறு பாலியல் தாக்குதல்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது காவல்த்துறை
- பிரம்டனில் வாகனத்தால் மோதுண்ட நபர் ஆபத்தான நிலையில்
- பிரதமர் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி
- ஒஷாவா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
| 22 வருடங்களின் பின்னர் முதன்முறையாக வாகையர் பட்டத்தை வென்றது ரொரன்ரோ Posted: 14 Oct 2015 08:32 PM PDT
அமெரிக்க குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று Texas Rangers அணியை எதிர்கொண்ட ரொரன்ரோ Blue Jays அணி, 6க்கு3 என்ற கணக்கில் வெற்றியினை பதிவு செய்தது.
அதனை அடுத்து ரொரன்ரோ Blue Jays அணியின் ஆதரவாளர்கள் பலத்த மகிழ்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ள போதிலும், அமைதியான முறையிலேயே அவை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியை காண்பதற்கு தாம் 22 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ள விளையாட்டு ரசிகர் ஒருவர், கடந்த 1993ஆம் ஆண்டு தனக்கு வெறும் நான்கு வயது என்பதனால் அப்போதய வெற்றி தனக்கு நினைவில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். The post 22 வருடங்களின் பின்னர் முதன்முறையாக வாகையர் பட்டத்தை வென்றது ரொரன்ரோ appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 5 வெவ்வேறு பாலியல் தாக்குதல்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது காவல்த்துறை Posted: 14 Oct 2015 08:07 PM PDT ரொரன்ரோ நோர்த்வெஸ்ட் நியூமார்க்கெட் பகுதியில அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து வெவ்வேறு பாலியல் தாக்குதல் தொடர்பிலான சந்தேக நபரின் ஒளிபதிவினை யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த எட்டாம் திகதி காலை 7.30 அளவில், Matthew Boyd Crescent பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் நடந்து சென்ற 34 வயது பெண்ணை மெதுவாக அணுகிய சந்தேக நபர், குறித்த அந்த பெண்ணை தகாத முறையில் தீ்ண்டிவிட்டு உடனடியாகவே அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகவும், சம்பவத்தின் போது அந்த […] The post 5 வெவ்வேறு பாலியல் தாக்குதல்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது காவல்த்துறை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டனில் வாகனத்தால் மோதுண்ட நபர் ஆபத்தான நிலையில் Posted: 14 Oct 2015 03:07 PM PDT
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபர் 20 வயது இளைஞன் என்று பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். Steeles அவனியூ மற்றும் Airport வீதிக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணிக்கு சற்று முன்னராக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் தற்சமயம் உயிருடன் இருப்பதாகவும், அவர் உயிராபத்தான காயங்களுக்காக பிரம்ரன் மருத்துவமனையில் சிகி்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் இருந்தால் தமக்கு தகவல் தருமாறு காவல்த்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தின் போது யார் சரியான முறையில் வீதியில் சென்றனர் என்பது தொடர்பில் அவ்வளவு விரைவில் பதிலளித்துவிட முடியாது என்றும் காவல்த்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக நேற்று இரவு Steeles அவனியூவில் உள்ள Airport வீதியின் தெற்குத் தடங்கள் போக்குவரத்திற்கு மூடப்ப்டு பின்னர் மீண்டும் திறந்து விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post பிரம்டனில் வாகனத்தால் மோதுண்ட நபர் ஆபத்தான நிலையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரதமர் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி Posted: 14 Oct 2015 03:00 PM PDT
எகிப்திய சிறையில் இருந்து தன்னை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அரசர்ஙகம் மேற்கொண்ட தவறுகளை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு தமக்கு உள்ளதாகவும், அதேவேளை தேர்தல் அண்மிக்கும் நிலையில் தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கும் வகையிலோ, பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலோ இந்த கருத்தினை வெளியிடவில்லை எனவும் ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி விபரித்துள்ளார். அத்துடன் தான் சிறையில் அடைபட்டிருந்த காலப்பகுதியில், நாட்டில் கனேடிய மக்களும், அனைத்துலக சமூகமும் தம்மீது அக்கறை காட்டியிருந்தனர் என்றும், அந்தளவான அக்கறையை பிரதமர் ஸ்டீபன் ஹாபர் காட்டவில்லை எனவும் அவர் கவலை வெளியட்டள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களை சிறையில் கழித்திருந்த மொஹமட் ஃபஹ்மியை எகிப்திய அரசாங்கம் விடுதலை செய்த நிலையில்,அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவை வந்தடைந்திருந்தார். கனடாவின் ஏனைய பிரதான கட்சிகளான லிபரல் மற்றம் புதிய சனநாயகக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து பேசியிருந்தார் தான் தனது விடுதலைக்காக போராடிய காலங்களில் இவ்விரு கட்சிகளின் தலைவர்களான, Justin Trudeauவும், Tom Mulcairவும் தனக்கு உதவியதாக கூறிய மொஹமட் ஃபஹ்மி, தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் தான் இந்த கருத்துக்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார். The post பிரதமர் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒஷாவா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு Posted: 14 Oct 2015 02:54 PM PDT
இன்று அதிகாலை 2.30 அளவில் Simcoe Street மற்றும் King Street பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக டூர்ஹாம் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். Simcoe Streetஇல் வடக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம், மின் கம்பம் ஒன்றுடன் மோதி பின்னர் அங்கிருந்த மரம் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த வாகனத்தில் அப்போது சாரதி மட்டுமே இருந்தார் என்றும், அவரும் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கு மது போதை காரணமாக இருப்பதற்கான அறிகுறிகுள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள காவல்த்துறை அதிகாரிகள், அந்த விபத்து தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post ஒஷாவா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரொரன்ரோ Blue Jays அடிபந்தாட்ட (baseball) குழு, கடந்த 22 வருடங்களில் வாகையர் பட்டத்தினை வென்றுள்ளதனை அடுத்து, அதன் ஆதரவாளர்கள் ரொரன்ரோ வீதிகளில் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரம்டன் பகுதியில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்ட நபர் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எகிப்பதியச் சிறையில் இரண்டு வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் விடுதலையாகியுள்ள கனடாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் மொஹமட் ஃபஹ்மி கனேடியப் பிரதமர் மீதான தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.தாம் எகிப்தில் கைதாகி இருக்கும் போது தாம் எதிர்நோக்கிய அவசரத்தினை பிரதமர் ஸ்டீபன் ஹாபர் புரிந்துகொள்ளவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ஒஷாவா பகுதியில் இன்று அதிகாலை இடம்பெறற் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.