Tamil Star |
- இணையத்தில் உலவும் பிலிப்பின்சில் கடத்தப்பட்ட கனேடியர்களின் காணொளி
- தேர்தலை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக பழமைவாதக் கட்சி அறிவிப்பு
- முன்பு தோல்வியைச் சந்தித்த தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் லிபரல் கட்சித் தலைவர்
- கருத்துக் கணிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை – Tom Mulcair
| இணையத்தில் உலவும் பிலிப்பின்சில் கடத்தப்பட்ட கனேடியர்களின் காணொளி Posted: 13 Oct 2015 08:50 PM PDT
கடந்த மாதம் விடுமுறையைக் களிப்பதற்காக பிலிப்பீன்சின் ஒரு சிறிய தீவில் உள்ள ஒய்வு இடம் ஒன்றில் இருந்த நால்வரை இனம் தெரியாத நபர்கள் கடந்திச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடத்திச் செல்லப்பட்டவர்களில் இருவர் கனேடியர்கள் என்றும், ஒருவர் நோர்வே நாட்டவர் என்றும், மற்றொரு பெண் பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே தற்போது இணையத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில் இந்த நால்வரும் காணப்படுகின்றனர்.அந்த காணொளியில் கடத்தப்பட்ட கனேடியர்கள் இருவரும் தோன்றி, தங்களை தாங்களே கனேடியர்கள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். அத்துடன் அவர்கள் துப்பாக்கி முனையில் இருப்பதையும் காணமுடிகிறது. அதில் Robert Hall என தன்னை அறிமுகப்படுத்திய கனேடியர், தாம் உயிருடன் இருப்பதாகவும், எனினும் பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். மற்றொரு கனேடியர் தாம் John Ridsdel என்று அறிமுகப்படுத்தியதுடன், பணயக்கைதிகளுக்கு உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவ்வாறோ பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட நோர்வேயை சேர்ந்த ஆண் நபர் அந்த காணொளியில் தம்மை நோர்வே நாட்டவர் என்று அறிமுகப்படுத்திய போதிலும், இவர்களுடன் பிடிக்க்பட்ட பிலிப்பீன் நாட்டின் பெண் எந்த வார்த்தையையும் பேசவில்லை. இந்த நால்வரும் முகமூடி அணிந்து கையில் து்பபாக்கியும், கூரிய ஆயுதங்களும் வைத்திருக்கும் நபர்களால் சூழப்பட்டிருந்தனர். பணயக்கைதிகளாக இருக்கும் இரண்டு கனேடியர்களும் கனடா மற்றும் பிலிப்பீன் அரசாங்கங்கள் இராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று முறையீட செய்துள்ளனர். அத்துடன் பேச்சுக்களை ஆரம்பிக்க முன்னராக கனேடிய மற்றும் பிலிப்பீன் நாடுகளின் அரசாங்கங்கள் குண்டுத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என தாம் விரும்புவதாக முகமூடி அணிந்தவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.எனினும் அவர் தாம்மையோ அல்லது தான் எந்த குழுவைச் சோர்ந்தவர் என்பதையோ வெளியிடவில்லை. The post இணையத்தில் உலவும் பிலிப்பின்சில் கடத்தப்பட்ட கனேடியர்களின் காணொளி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேர்தலை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக பழமைவாதக் கட்சி அறிவிப்பு Posted: 13 Oct 2015 12:04 PM PDT
தொடர்ந்து அவர் இது குறித்து விளக்கமளிக்கையில்,வரிக் குறைப்பு, வரி அதிகரிப்பினை நிறுத்துதல் போன்றவற்றை சமப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திடடத்துடன் முன்னெடுத்துச் செல்லும் போது, மக்கள் தற்போது பெற்றுவரும் வருமானங்கள் தொடர்ந்தும் அவர்களிடமே இருப்பது உறுதிப்படுத்தப்படும். அத்துடன் மக்கள் மேலும் பல அனுகூலங்களை இதன் மூலம் அனுபவிக்க முடியும். ஆனால் ஏனைய கட்சிகளால் முன்வைக்கப்பட்டுவரும் மாற்றங்கள் அவ்வாறானவை அல்ல. அவை நாட்டை பல தசாப்தங்களுக்கு பின்நோக்கி கொண்டு சென்று, வரிச் சுமைகளை மக்கள் மீது திணித்து, வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறையினை ஏற்படுத்தவே வழியமைக்கும். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளார்களால் லிபரல் கட்சி தேர்வு செய்யப்பட்டால், மக்கள் குறைந்த அளவு வருமானத்தினை ஈட்டும் நிலையினையே லிபரல் அரசரங்கம் ஏற்படுத்தும். பல்வேறு விதமான வருமானங்களும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே பழமைவாதக் கட்சியின் குறிக்கோள்.ஆனால் லிபரல் கட்சியை பொருத்தவரையில் மக்களுக்க சென்று சேரவேண்டிய பணத்தினை தனதாக்கிக் கொள்ளும் நிலை அந்த கட்சிக்கு ஏற்படும். - என்றார் தற்போதைய பிரதமரும் அந்த கட்சியின் தலைவருமான ஸ்டீபன் ஹார்ப்பர். The post தேர்தலை தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக பழமைவாதக் கட்சி அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முன்பு தோல்வியைச் சந்தித்த தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் லிபரல் கட்சித் தலைவர் Posted: 13 Oct 2015 11:55 AM PDT
தேர்தல் பரப்புரைகள் இறுதி வாரத்தினை எட்டியுள்ள நிலையில்,கடந்த 2011ஆம் ஆண்டு லிபரல் கட்சி படுதோல்வியை சந்தித்த சில தொகுதிகளுக்கு நேற்று சென்றிருந்த Justin Trudeau, அந்த பகுதிகளில் தனது பரப்புரையும் முன்னெடுத்துள்ளார். அங்கு தமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், பழமைவாதக் கட்சியை தெரிவு செய்ததால் ஏற்பட்ட குறைகள் தொடர்பிலும், பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரின் குறைபாடுகள் தொடர்பிலும் லிபரல் கட்சித் தொண்டர்களுக்கு விளக்களித்துள்ளார். நூற்றுக் கணக்கான லிபரல் கட்சியினர் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை, ஒலிபெருக்கி வாயிலாக கூட்ட மண்டபத்திற்கு வெளியே நடமாடியவர்களுக்கும் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த கால பழமைவாதக் கட்சி அரசாங்கத்தினால் கனடா எதிர்நோக்கிய குறைபாடுகள் தொடர்பில் தனது உரையின் போது பட்டியலிட்ட அவர், இவற்றை நிவர்த்தி செய்து நாட்டை சிறந்த வழியில் கொண்டு செல்வதற்கு லிபரல் கட்சியை தேர்வு செய்வதே ஒரே வழி என்பதை வலியுறுத்தியுள்ளார். ஒட்டாவாவின் புறநகர் பகுதியிலேயே Justin Trudeau நேற்றய தினம் தமது இந்த பரப்புரைகளை மேற்கொண்டிருந்தார் எனினும், அந்த தொகுதி மக்கள் கடந்த தேர்தலில் முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு பலத்த ஆதரவினை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. The post முன்பு தோல்வியைச் சந்தித்த தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் லிபரல் கட்சித் தலைவர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கருத்துக் கணிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை – Tom Mulcair Posted: 13 Oct 2015 11:40 AM PDT
பல்வேறு கருத்துக் கணிப்புகளும் புதிய சனநாயக கட்சிக்கான ஆதரவு குறைந்து செல்வதனை கோடிகாட்டியுள்ளன. புதிய சனநாயக கட்சிக்கான ஆதரவு நிலைப்பாடு குறைவடைந்துள்ளமையால் தேர்தல் இருமுனைப் போட்டியாக உருமாறியுள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கருத்துக் கணிப்புகளில் தான் அதிக அக்கறை செலுத்தவில்லை என தெரிவித்துள்ள புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair , தேர்தல் நிலவரம் இன்னமும் மும்முனைப் போட்டியாகவே உள்ளது எனவும் கூறியுள்ளார். கருத்துக் கணிப்புகள் எவ்வாறான தகவல்களை கூறிவந்தாலும், எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் மும்முனைப் போட்டியாகவே இருக்கப் போகிறது எனவும் அவர் முன்னுரைத்துள்ளார். லிபரல் கட்சியினை விடவும் புதிய சனநாயக கட்சியே ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான பழமைவாதக் கட்சிக்கு அதிக போட்டியாககாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், தேர்தலில் தமது கட்சி முதல் நிலையில், அல்லது சிறு அளவு வித்தியாசத்தில் இரண்டாம் நிலையில் வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பழமைவாதக் கட்சியை தோற்கடிப்பதற்கு புதிய சனநாயக கட்சிக்கு இன்னமும் 35 ஆசனங்களே தேவைப்படும் அதேவேளை, லிபரல் கட்சிக்கு குறைந்தது நூறு ஆசனங்களாவது தேவைப்படும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். The post கருத்துக் கணிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை – Tom Mulcair appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிலிப்பீன்சில் கடந்த மாதம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இரண்டு கனேடியர்கள் உள்ளிட்ட நால்வரின் காணொளி இணையத்தில் வெளியாகி உலவிவருகிறது.

