Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மோசமான Vaughan வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர்

Posted: 01 Oct 2015 08:45 PM PDT

iu

iuரொரன்ரோவின் வடக்கே Vaughan பகுதியில் ஒரு பெரியவரும் அவரின் பேரப் பிள்ளைகளான மூன்று சிறுவர்களும் உயிரிழந்த சம்பவம் மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்திய நிலையில், உயிரிந்த அவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று அவர்களின் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.

ஒன்பது வயதான Daniel, ஐந்து வயதான Harrison, இரண்டு வயதான Milly Neville-Lake மற்றும் அவர்களின் தாத்தா Gary Neville ஆகியொருக்கு மக்கள் கண்ணீர் மல்ல அஞ்சலி செலுத்தினர்.

St. Padre Pio தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் தமது குடும்பம், பிள்ளைகளுடன் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றிதுடன், மலர் கொத்துக்களை வைத்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நன்கொடையினை வழங்கியும் தமது தரப்பு ஆறுதலை வெளிப்படுத்தினர்.iu

இந்த விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்ராறியோவைச் சேர்ந்த Marco Muzzo என்பவர் மீது ஆபாயகரமாக வாகனத்தைச் சேலுத்துச் சென்றமை தொடர்பிலான ஆறு குற்றச்சாட்டுக்கள் உட்பட மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், நாளை அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

The post மோசமான Vaughan வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்பட்டனர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈட்டோபிக்கோவில் 2013இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் இருவர் கைது

Posted: 01 Oct 2015 08:27 PM PDT

ty

tyஇரண்டு வருடங்களின் முன்னர் ஈட்டோபிக்கோ சமூகநிலைய கூடைப்பந்தாட்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்கு வெளியே 25 வயது ஆண் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலும் இரண்டு போரை காவல்த்துறையினர் கைது செய்து்ளளனர்.

2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி கிப்ளிங் அவனியூ மற்றும் ஃபின்ச் அவனியூ பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் Neeko Mitchell என்பவர் மீது பல்வேறு துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அங்கு இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட விளையாட்டில் தனது சகோதரர் விளையாடுவதைப் பார்ப்பதற்காக அவர் அங்கு வந்து சேர்ந்த சில நிமிடங்களில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக காவல்த்துறையினர் முன்னர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்த்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட 25 வயதான Reshane Hayles-Wilson என்பவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்து அவர் மீது முதல் தர கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளின் தொடர்ச்சியாக மேலம் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான Jermaine Dunkley மற்றும் பிரம்டனைச் சேர்ந்த 34 வயதான Sheldon Tingle ஆகிய இருவர் மீதும் முதல்தர கொலைக் குற்றச்சாடடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ஈட்டோபிக்கோவில் 2013இல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் இருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 25 கனேடிய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன

Posted: 01 Oct 2015 03:41 PM PDT

v

v2015-2016 ஆண்டுக்கான சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் முன்னணியில் உள்ள 800 பல்கலைக்கழகங்கள் தரவரிசைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனுள் கனடாவின் 25 பல்கலைக் கழகங்கள் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளன.

ரொரன்ரோ பல்கலைக்கழகம் 19ஆவது இடத்தையும், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் 34ஆவது இடத்தையும், மக்கில (McGill) பல்கலைக்கழகம் 38ஆவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

v

அவ்வாறே மக்மாஸ்டர் பல்கலைக்கழகம், மொன்றியல் பல்கலைக்கழகம், அல்பேர்டடா பல்கலைக்கழகம், வோட்ர்லூ பல்கலைக்கழகம் ஆகியன முதல் 200 பல்கலைக்கழகங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

இந்த வருடத்திற்கான தரப்படுத்தலில் விக்டோரியா பல்கலைக்கழகம் மற்றும் ஒட்டாவா பல்கலைக்கழகம் ஆகியன 201ற்கும் 250 ற்கும் இடைப்பட்ட நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

The post உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் 25 கனேடிய பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Posted: 01 Oct 2015 03:36 PM PDT

i

iநோர்த் யோர்க் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு உந்துருளி ஒன்றும், கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உந்துருளியில் சென்ற பெண் உயிரிழந்து விட்டதாகவும்,அதனை ஓட்டிச் சென்ற மற்றொரு ஆண் உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் புதன்கிழமை, நடு இரவிற்கு சற்று முன்னராக Murray வீதி மற்றும் Dubray அவனியூவிற்கு இடையில் உள்ள Wilson அவனியூவி்ற்கு வருமாறு தமக்கு அழைப்பு வந்திருததாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானபோது, உந்துளியில் இருந்த ஓட்டுனரும், மற்றுமொரு நபரும் தூக்கி வீசப்பட்டிருந்தனர் என்று சம்பவ இடத்திற்கு சென்றிருந்த அவசர மருத்துவப் பிரிவினர் கூறியுள்ளனர்.i

உந்துருளியில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், உந்துருளி ஓட்டுனர் மோசமான காயங்களுக்கு ஆளான நிலையில் மருத்துவமனைக்கு சொண்டு செல்லப்பட்டிருந்தார் எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் காரைச் செலுத்தி வந்த சாரதியும் காங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்

விபத்தை அடுத்து விபத்து இடம் பெற்ற குறித்த பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டு காவல்த்துறையினரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

The post நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அறிவியலாளர்கள் மீது கட்டுப்பாடுகள் இருப்பதாக சாடுகிறார் Tom Mulcair

Posted: 01 Oct 2015 10:56 AM PDT

Tom_Mulcair_-1012015

Tom_Mulcair_-1012015பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தலைமையிலான தற்போதைய ஆட்சியில், கனேடிய அறிவியலாளர்கள் தமது உண்மையான மனக்கிடக்கைகளை வெளியிட முடியாதவாறான நிலை காணப்படுவதாக புதிய சனநாயக கட்சியின் தலைவர் Tom Mulcair சாடியுள்ளார்.

அத்துடன் அறிவியலாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு நிலவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீபன் ஹார்ப்பர் உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு முடிவுகாணும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தகைய நிலையில் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவியலாளர் மத்தியில் அச்சமான சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளார் எனவும் Tom Mulcair குற்றஞ்சாட்டியுள்ளார்.

பழமைவாதக் கட்சி அரசாங்கம் கடந்த நான்கு வருடங்களில் 4,000ற்கும் அதிகமான அறிவியலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், மேலும் பலர் தமது பணிகள் தொடர்பில் கருத்துப் பரிமாறிக்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் Tom Mulcair குறிப்பிட்டுள்ளார்.Tom_Mulcair_-1012015

இந்த நிலையில் தனது தலைமையிலான புதிய சனநாயக கட்சி ஆட்சிக்கு வருமாக இருந்தால் அறிவியலாளர்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும் எனவும் Tom Mulcair தெரிவித்துள்ளார்.

அறிவியலாளர்களிடம் காணப்படும் அச்ச உணர்வு களையப்பட்டு, அவர்கள் வெளிப்படையாக தமது கருத்துக்களை தெரிவிக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு அறிவுபூர்வமான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும், ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் நாடாளுமன்றத்திலேயே அலுவலகம் அமைக்கப்படும் எனவும் Tom Mulcair தெரிவித்துள்ளார்.

The post அறிவியலாளர்கள் மீது கட்டுப்பாடுகள் இருப்பதாக சாடுகிறார் Tom Mulcair appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வீட்டு மருத்துவ பராமரிப்பு சேவைகளுக்காக மூன்று பில்லியன் நிதி ஒதுக்கப்படும்

Posted: 01 Oct 2015 10:34 AM PDT

Liberal_Leader_Justin_Trudeau_-_101

Liberal_Leader_Justin_Trudeau_-_101நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தாம் ஆட்சிக்கு வந்தால் வீட்டு மருத்துவ பராமரிப்பு சேவைகளுக்காக அடுத்த நான்கு வருடங்களில் மூன்று பில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாக லிபரல் கட்சியின் தலைவர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருந்துகள் மற்றும் மனநல சேவைகளுக்காக மேலும் ஒரு தொகை பணத்தினை செலவிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு மருத்துவ பராமரிப்பு மற்றும் மனநல பராமரிப்பு சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நிதியை பங்கீடு செய்வது தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடாத்தப்படும் கலந்துரையாடல்களின் அடிப்படையில்,சிறந்த நிதி பரிவர்த்தனை முறைமை ஒன்று உருவாக்கப்படும் என்ற உறுதிப்பாட்டையும் Justin Trudeau வெளியிட்டுள்ளார்.Liberal_Leader_Justin_Trudeau_-_101

அதேவேளை தம்மால் முன்வைக்கும் இந்த திட்டங்கள் மாநிலங்களுக்கு திணிக்கப்படாது என்றும், சிறப்பான திட்டங்கள் தொடர்பில் மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு நல்ல விளைவை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதியோர் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும் Justin Trudeau சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் முதியவர்களுக்கான பராமரிப்பு செயற்பாடுகளை மேம்படுத்தவேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார பராமரிப்பு திட்டங்கள் தொடர்பிலான விவாதங்களை மாநிலங்களிடையே மீண்டும் நடாத்தி,சுகாதார பராமரிப்பு இணக்கப்பாடுகளை சாதகமான முறையில் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

The post வீட்டு மருத்துவ பராமரிப்பு சேவைகளுக்காக மூன்று பில்லியன் நிதி ஒதுக்கப்படும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆட்டிறைச்சியில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன?

Posted: 01 Oct 2015 08:11 AM PDT

g

gஅசைவ உணவுகளில் ஒன்றான ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம்.

ஆட்டிறைச்சியில் கொழுப்புச்சத்து நிறைந்திருந்தாலும், அதில் சில ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.

ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள்:

விட்டமின் பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், பொட்டாசியம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.g

மருத்துவ பயன்கள்:

ஆட்டிறைச்சியில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது.

இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும்.

அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால், அவர்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.

ஆட்டிறைச்சியில் உள்ள நியாசின் என்னும் விட்டமின், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, ஆற்றலை மேம்படுத்தும்.

படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட, மட்டன் அதிகம் கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு அதிகரித்து, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து கிடைக்கிறது. மற்றும் இதை சாப்பிடுவதன் மூலம் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது.

ஆட்டிறைச்சி சூப்

ஆட்டிறைச்சி சூப்பில் நோயெதிர்ப்பு சக்தி உள்ளதால் நோயாளிகள் குடிப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் எலும்புகள் வலுவடையும்.jh

The post ஆட்டிறைச்சியில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™