Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த தமிழகப் பெண்ணின் கை துண்டிப்பு: சுஷ்மா கடும் கண்டனம்

Posted:

புதுடில்லி:'சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த தமிழகப் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம், துரதிருஷ்டவசமானது; அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன், இது தொடர்பாக பேசி வருகிறோம்' என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். தமிழகத்தில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்துாரி முனிரத்தினம், 55, சவுதி அரேபியாவில், வீட்டு வேலை செய்து வந்தார். இவர் மாதிரியான, வெளிநாட்டு வேலையாட்களின் நிலை குறித்து, அந்நாட்டு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம், 'அந்த வீட்டு பெண் முதலாளியால், தான் சித்ரவதை செய்யப்படுவதாக' ...

போர் விமானங்களில் பெண் விமானிகளா?

Posted:

புதுடில்லி: ''போர் விமானங்களில், பெண் விமானிகளை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். எனினும், அதை அமல்படுத்துவதற்கு முன், இதுவரை ஏன் பெண்களுக்கு, அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதையும் யோசிக்க வேண்டும்,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.விமானப்படை தளபதியாக இருக்கும் அருப் ராஹா, நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'போர் விமானங்களை ஆண் விமானிகள் தான், இதுவரை இயக்கி வந்துள்ளனர். அந்த பொறுப்பில், பெண்களையும் நியமிக்க வேண்டும் என, பரிந்துரை செய்து, ராணுவ அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிஉள்ளேன்' என, ...

தனுஷ்கோடி -- தலைமன்னார் இடையே பாலம்: இலங்கை அரசுக்கு மத்திய அரசு கடிதம்

Posted:

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் தனுஷ்கோடி- இலங்கை தலைமன்னார் இடையே கடலில் பாலம் அமைப்பது தொடர்பாக, இலங்கை அரசிடம் கருத்து அறிய மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.இந்தியாவின் தென் கோடியில் உள்ள ராமேஸ்வரம் தனுஷ்கோடி. தனுஷ்கோடி அரிச்சல்முனை முதல் இலங்கை தலைமன்னார் வரை 31 கி.மீ. துாரம் கடல் மீது பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிய வங்கியிடம் ரூ. 22 ஆயிரம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இப்பாலம் அமைந்தால் இந்தியா, இலங்கை இடையே வணிகம், சுற்றுலா, இரு நாடு நட்புறவு மேம்படும். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகள் வரிசையில் ...

போலீசார் லஞ்சம் வாங்குவது ஏன்: விஜயகாந்த் விளக்கம்

Posted:

திருநெல்வேலி:தமிழகத்தில் போலீசார் லஞ்சம் வாங்குவது ஏன், என நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தே.மு.தி.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த பேசினார்.ஆலங்குளத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு அரசு மருத்துவமனை முன்பும் தனி யார் மருந்துக் கடைகள் இருப்பது ஏன் எல்லாம் கமிஷனுக்காகத் தான். ஓட்டல்களில் சுகாதாரம் இல்லை. அதை உணவு ஆய்வாளர்கள் முறையாக ஆய்வு செய்வதில்லை.இந்த ஆட்சியில் போலீசார் வேலையில் சேருவதற்கே லஞ்சம் கொடுத்துதான் வருகிறார்கள். எனவே லஞ்சம் ...

அணையை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எப்., தேவை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மீண்டும் மனு

Posted:

புதுடில்லி,: 'முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணிகளில், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழகம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. கேரள மாநிலம், இடுக்கியில், முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின் நீர், தமிழகத்தில், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பயன் அளித்து வருகிறது. கடந்த ஜூலை முதல் வாரம், முல்லை பெரியாறு அணைக்கு, சி.ஐ.எஸ்.எப்., பாதுகாப்பு கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அபாயம்:
அதில், 'முல்லை பெரியாறு அணையை, இஸ்லாம் ...

பீஹார் தேர்தல் பிரசாரத்தில் கட்டுப்பாடு தேவை: கட்சி தலைவர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுரை

Posted:

புதுடில்லி,: 'பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள், நாகரிகமாகவும், நியாயமான விதத்திலும், எதிரணியினர் மனம் புண்படாத வகையிலும் பேச வேண்டும். தேவையற்ற விமர்சனங்கள், பேச்சுகள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கண்டிப்புடன் தெரிவித்து உள்ளது.ஐந்து கட்டங்களாக நடைபெறும் பீஹார் சட்டசபை தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப்பதிவு, நாளை மறுநாள் நடக்கிறது. பா.ஜ., சார்பில், நட்சத்திர பேச்சாளரான பிரதமர் மோடி, பீஹார் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதுபோல, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவும், அம்மாநிலத்திலேயே ...

மருதாணி போட்ட மாணவனுக்கு ரூ.500 அபராதம்: வகுப்பில் இருந்து வெளியேற்றியது தனியார் பள்ளி

Posted:

சென்னை தனியார் பள்ளியில், மாணவர்கள் மருதாணி போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருதாணி போட்ட, இரண்டாம் வகுப்பு மாணவரை பள்ளியை விட்டு வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் வசூலித்ததற்கு, சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.சென்னை, வேப்பேரியில் உள்ளது, டவ்டன் மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளி, தமிழக பள்ளி கல்வித்துறை அங்கீகாரத்துடன், இந்திய இடைநிலை சான்றிதழ் கல்வியான, ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் படி செயல்படுகிறது.இங்கு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், கையில் மருதாணி போட்டுக் கொண்டதால், வகுப்பறையில் இருந்து வெளியேற்றி, 500 ரூபாய் அபராதம் விதித்த பள்ளி ...

நேற்று 'பளார்'- இன்று 'செல்பி!'

Posted:

கோவை:''ஆட்டோ டிரைவரை, நான் அடித்ததாக, 'வாட்ஸ் ஆப்'பில் உலா வரும் காட்சிகள் பொய்யானவை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். 'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று, கோவை மாநகரப் பகுதியில் மக்களை சந்தித்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: 'வாட்ஸ் ஆப்'பில், ஆட்டோ டிரைவரை, நான் அடிப்பது போன்ற காட்சிகள், திட்டமிட்டு பரப்பப்படுகின்றன; அவை பொய்யானவை. நான், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த போதும், இதுபோன்ற வதந்திகளை பரப்பினர். முதல்வர் ஜெயலலிதா, போயஸ் கார்டனில் இருந்து கொண்டே, பல நிகழ்ச்சிகளில், அதிகாரிகளோடு ...

பயங்கர நாடு பாகிஸ்தான்: சி.ஐ.ஏ., 'மாஜி' சொல்கிறார்

Posted:

வாஷிங்டன்: 'உலகின் அதி பயங்கர நாடாக, பாகிஸ்தான் இருக்கக் கூடும்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ.,வின், முன்னாள் உயரதிகாரி கூறியுள்ளார்.சி.ஐ.ஏ.,வின் மூத்த புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய, கெவின் ஹல்பர்ட், 2014ல் ஓய்வுபெற்றார். பாக்., பயங்கரவாதம் குறித்து, வாஷிங்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகையில், கெவின் எழுதிய கட்டுரை:பயங்கரவாதம், தோல்வியுற்ற பொருளாதாரம், அணு ஆயுதங்கள் பெருமளவில் குவிக்கப்படுதல் என, மூன்று வித அச்சுறுத்தல்களால், உலகின் மிகப் பயங்கர நாடாக, பாக்., இருக்கக் கூடும். இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகளை பயன்படுத்துவது ...

டில்லியில் ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி டிஸ்மிஸ்: சி.பி.ஐ., விசாரணைக்கும் கெஜ்ரிவால் உத்தரவு

Posted:

புதுடில்லி: கட்டுமான நிறுவன அதிபரிடம் லஞ்சம் கேட்ட அமைச்சரை, பதவியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த ஊழல் விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், சுற்றுச்சூழல், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருப்பவர், அசிம் அஹமது கான்; மதியா மஹால் என்ற தொகுதியின், ஆம் ஆத்மி கட்சி, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் மீது, கடந்த ஒரு வாரமாகவே, ஊழல் புகார் கூறப்பட்டு வந்தது. முடக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுமானம் ஒன்றின் ...

இந்திராணி 'சீரியஸ்' ஏன்? விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டம்

Posted:

புதுடில்லி: முதல் கணவர் மூலம் பிறந்த மகளை கொலை செய்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட இந்திராணி முகர்ஜி, சமீபத்தில் உடல் நலம் பாதித்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சி.பி.ஐ., திட்டமிட்டு உள்ளது. 'ஸ்டார் இந்தியா' நிறுவன முன்னாள் தலைவர், பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவி இந்திராணி. இவர், தன் முதல் கணவர் மூலம் பிறந்த மகள், ஷீனா போராவை, 2012ல் கொன்றதாக, ஆகஸ்டு 25ல், கைது செய்யப்பட்டார். இந்திராணியுடன், இரண்டாவது கணவன் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் சியாம்வர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணை, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™