Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பீஹாரில் பா.ஜ., வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பில் தகவல்

Posted:

பாட்னா:'பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, ஆளும் கட்சியாக மாறும்' என, கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.மொத்தம், 243 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட பீஹாரில், ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் எண்ணம் பீஹார் தேர்தல் வரும் 12ல், துவங்கி, அடுத்த மாதம் 5ல், முடிவடைகிறது; அடுத்த மாதம் 8ல், ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.'மக்களின் எண்ணம்' என பொருள்படும், 'ஜனதா கா மூடு' என்ற பெயரில், ஜீ 'டிவி' கடந்த மாத இறுதியில் கருத்துக்கணிப்பு நடத்தியது. போன் வாயிலாக, 35 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ...

ஐ.எஸ்., சூழ்ச்சியை முறியடிக்க பெங்களூரு இமாம் புது முயற்சி

Posted:

பெங்களூரு:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கு வலை விரிப்பதை தடுக்க, பெங்களூரு ஜும்மா மசூதி இமாம், புதிய முயற்சியை கையாண்டுள்ளார். ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்கள் அமைப்புக்கு புதிய ஆட்களை சேர்ப்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குற்றச்சாட்டு:
இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை, தங்கள் வலையில் விழ வைப்பதற்காக, சமூக வலைதளங்கள் மூலம், அவர்கள் தகவல்களை பரப்பி வருவதாகவும், ஆதரவு திரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ...

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு: முதலீட்டுக்கு ஏற்ற சூழல் நிலவுவதாக பெருமிதம்

Posted:

பெங்களூரு:''மற்ற நாடுகள், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள போது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது. எனவே முதலீட்டாளர்கள், இந்தியாவில் தாராளமாக முதலீடு செய்யலாம்,'' என, பெங்களூரில் நடந்த மாநாட்டில், பிரதமர் மோடி பேசினார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இந்தியா வில், மூன்று நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று, பெங்களூரில் நடந்த, இந்தியா - ஜெர்மன் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதில், பிரதமர் மோடி பேசியதாவது: தற்போதைய சூழலில், மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவு, இந்தியாவில் ...

மருத்துவ நுழைவுத்தேர்வு தேவையில்லை: கருணாநிதி

Posted:

சென்னை:'மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட தொழிற்கல்வி கூடங்களில் சேர, நுழைவுத் தேர்வு தேவையில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது நேற்றைய அறிக்கை:'பொது நுழைவுத் தேர்வு மூலம், மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும்' என, அகில இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை பல முறைகளில் மேற்கொள்ளப்படுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீட்டுக் கொள்கைபடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கிராமப்புற, ...

வழக்கறிஞர் தொழிலுக்கு கிரிமினல்கள் வர தடை: புதிய சட்டம் கொண்டு வர அறிவுறுத்தல்

Posted:

சென்னை:'கிரிமினல்கள், பயங்கரவாத சக்திகள், வழக்குகள் நிலுவையில் உள்ளவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வர, தடை விதிக்கும் வகையில், புதிய சட்டப் பிரிவு அல்லது சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப் பின்னணி உடையவர்கள், வழக்கறிஞர் தொழிலுக்கு வருவதை தடுக்க, நடவடிக்கை எடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஆனந்த முருகன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: குற்றப் பின்னணி உடையவர்கள், சட்டத்தில் பட்டம் பெற்று, வழக்கறிஞர் ...

சிமென்ட் விற்பனையில் 'மெகா' மோசடி: டில்லியில் ரூ.300; சென்னையில் ரூ.420

Posted:

சென்னை: தேசிய தலைநகரான டில்லியில், ஒரு மூடை சிமென்ட், 300 ரூபாயாக உள்ள நிலையில், சென்னையில், 420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் பின்னணியில் நடக்கும், 'மெகா' மோசடியை யாரும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.அடிப்படையான காரணமின்றி, சிமென்ட் விலை உயர்த்தப்படுவது குறித்து, இந்திய சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணைய மான, சி.சி.ஐ.,யில், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்கம், 2012ல் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், 11 சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 6,200 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதில், 10 சதவீத தொகையை மட்டும், கோர்ட்டில் செலுத்திய ...

ஆசிரியர்கள் நாளை 'ஸ்டிரைக்'; பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted:

அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ - ஜியோ' என்ற அமைப்பை துவக்கி, போராட்டம் நடத்தி, அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர். தற்போது, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளது.நாளை, மாநிலம் முழுவதும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், ஒரு ...

பாட்னாவுக்கு பறக்கும் அமைச்சர்களால் காத்தாடுகின்றன ஏழு அமைச்சகங்கள்

Posted:

ஏழு மத்திய அமைச்சர்கள், பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டில்லியில் உள்ள அவர்களின் அமைச்சகங்கள் காத்தாடுகின்றன.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. வரும், 12 முதல், ஐந்து கட்டங்களாக இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ.,வைப் பொறுத்தவரை, இந்த சட்டசபை தேர்தலை மிக முக்கியமாக கருதுகிறது. இதனால், பா.ஜ.,வைச் சேர்ந்த ஏழு அமைச்சர்கள், கட்சி மேலிடத்தால் தேர்தலுக்காக களமிறக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும், உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சருமான அனந்த குமார், கடந்த ...

சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கட்சிகளில் குழப்பம் ஆரம்பம்: இந்திய கம்யூ., - ம.ம.க.,வில் கூட்டணியால் சலசலப்பு

Posted:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதால், எந்த கூட்டணிக்கு செல்வது என்பதில், கட்சிகளில் குழப்பம் ஆரம்பமாகி உள்ளது. இந்திய கம்யூ., மற்றும், ம.ம.க., எனப்படும், மனித நேய மக்கள் கட்சியில், இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, ஒரு அணி அமைக்கும் எண்ணத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும், ம.ம.க., இணைந்து, மக்கள் நல கூட்டு இயக்கத்தை ஏற்படுத்தின. இதிலிருந்து, திடீரென விலகிய, ம.ம.க., 'பெரிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களை பெற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. எனவே, மக்கள் நல கூட்டு ...

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணியில் சுறுசுறுப்பு: வரைபடம் தயாரிக்க நிறுவனங்கள் தேர்வு

Posted:

புதுடில்லி: நாடு முழுவதும், 98 'ஸ்மார்ட் சிட்டி'கள் அமைக்கும் மத்திய நகர்புற வளர்ச்சித்துறையின் திட்டம், சுறுசுறுப்படைந்து உள்ளது.ஸ்மார்ட் சிட்டிகளுக்கான வரைபடம் தயாரிக்கும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு நகருக்கும் தலா, இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அனைத்து கட்டமைப்பு வசதிகளும், ஒருங்கே அமைவதற்கான செயல்திட்ட வரைபடங்கள் வடிவமைக்கப்பட உள்ளன.பா.ஜ.,வைச் சேர்ந்த அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையிலான மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாடு முழுவதும், 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதற்கான அறிவிப்பை, சில மாதங்களுக்கு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™