Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உலக சிக்கன தினம் தலைப்பை ஒட்டி ஓர் கட்டுரை வேண்டும் . உதவுங்கள்.

Posted: 06 Oct 2015 10:46 AM PDT

உலக சிக்கன தினம் தலைப்பை ஒட்டி ஓர் கட்டுரை வேண்டும் . உதவுங்கள்.

விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர்

Posted: 06 Oct 2015 09:51 AM PDT

மத நல்லிணக்கத்தை நோக்கி..: விநாயகர் கோவிலில் பிரசவித்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட இஸ்லாமிய தம்பதியர் உத்தரப்பிரதேசம் மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் இரு சமுதாய மக்களுக்கு இடையில் பூசலை ஏற்படுத்த முயற்சித்துவரும் வேளையில், கோடைக்கால குளிர்மழையாக.., மும்பையில் விநாயகர் கோவிலுக்குள் குழந்தையை பிரசவித்த இஸ்லாமிய பெண் ஒருவர் அந்த குழந்தைக்கு கணேஷ் என பெயரிட்ட நெகிழ்ச்சிகரமான செய்தியும் வெளியாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த இலியாஸ் ஷேக் என்பவரின் ...

மின் கட்டணம் கணக்கிடும் எளிய முறை

Posted: 06 Oct 2015 08:56 AM PDT

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!
வீட்டு இணைப்புகளுக்கானது:-

நன்றி-முகநூல்

விதையில்லாப் பழம் .

Posted: 06 Oct 2015 08:46 AM PDT

"காய்கறி வாங்கிட்டு வரும்போது அப்படியே ஒரு தர்பூசணி பழம் வாங்கிட்டு வாங்க! வெயிலுக்கு இதமா இருக்கும்." என்றால் என் மனைவி. "வெயிலுக்கு இதமாத்தான் இருக்கும்; ஆனா அதுல இருக்குற கறுப்பு விதைகளை எடுத்துட்டு சாப்பிடணும்! அதுதான் கொஞ்சம் கஷ்டம்! முன்னாடியெல்லாம் திராட்சையில விதை இருக்கும்.அத சாப்பிடும்போது விதைய துப்பிட்டு சாப்பிடணும்.பிறகு Seedless Grapes..கண்டுபிடிச்சாங்க இப்ப நிம்மதியா சாப்பிட முடியுது. சீதாப்பழம் சாப்பிடறது ரொம்ப நியூசன்ஸ்! அதுல இருக்குற விதைய எடுத்துட்டு சாப்பிடறதுக்குல்ல பிராணனே ...

ஹிந்தியை முந்திய தமிழ் மொழி

Posted: 06 Oct 2015 08:42 AM PDT


நன்றி-முகநூல்

தமிழில் எண்கள் எழுத்துக்கள்

Posted: 06 Oct 2015 08:32 AM PDT


எண்களை தமிழில் பண்டைய காலத்தில் இப்படி தான் எழுதியிருக்க முடியும்.

இறைவன்

Posted: 06 Oct 2015 08:31 AM PDT

இறைவன் இயக்குவதும் இயங்குவதும் இயக்கம் நின்றபின் இருப்பதும் ஒன்றே!!! இருப்பதும் இறப்பதும் இறந்தபின் இருப்பதும் ஒன்றே!!! உள்ளும் புறமும் உயிரிலும் உணர்விலும் உறைந்தது ஒன்றே!!! உருவமற்று உருவமுற்று உணர்த்தும் உண்மை ஒன்றே!!! பிறப்பற்று பிறவிபல பெற்று நிலைக்கும் மாற்றம் ஒன்றே!!! பிறவிபல பெற்றும் பெறுதற்கரிய பேறுநிலை ஒன்றே!!! நுண்ணோக்கி கண்ட பின்னே நுண்ணுயிர்கள் கண்டோம்!!! உள்நோக்கி உணர்ந்த பின்பே உள்ளதை காண்போம்!!! பகுத்தறிவு ...

முடக்கற்றான் கீரையின் சிறப்புக்கள்

Posted: 06 Oct 2015 08:20 AM PDT

முடக்கற்றான் கீரை பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் ...

மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.

Posted: 06 Oct 2015 08:11 AM PDT

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு ...

முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு

Posted: 06 Oct 2015 07:50 AM PDT

முந்து தமிழ் வட்டெழுத்துடன் மூத்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு By சென்னை First Published : 04 October 2015 01:03 AM IST விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோயிலில் அரிய வட்டெழுத்து பொறிப்புகளுடன் கூடிய பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே காலத்தால் முற்பட்ட கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆலகிராமத்து முந்துத் தமிழ் வட்டெழுத்து கற்சிற்பம்: தமிழக வரலாற்றில் கிடைக்கப் பெற்ற பிள்ளையார் ...

காமாட்சியம்மன் கோயில்,காஞ்சிபுரம்

Posted: 06 Oct 2015 07:31 AM PDT

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். கோயிலின் உள்ளே பிரகாரங்களும், ...

புலவர் கூட ரெண்டு பெண்ணுங்களும் வந்திருக்குதே...ஏன்?

Posted: 06 Oct 2015 06:55 AM PDT

பெண்களுக்கென்றே பிரத்யேகமாக செய்தது...!!

Posted: 06 Oct 2015 06:48 AM PDT

- கண்களும் கவிபாடுதே..! (கதகளி - கண் பயிற்சி - காணொளி)

Posted: 06 Oct 2015 06:21 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம்

Posted: 06 Oct 2015 05:37 AM PDT

திருட்டுப் பட்டம்! சிறுகதை ரமணி (ஆக 2015) வெளியீடு: வல்லமை http://www.vallamai.com/?p=62600 http://ramanishortstories.blogspot.in/2015/10/016.html சைதாப்பேட்டை டாட்‍ஹண்டர் நகர் 'மாதிரி உயர்நிலைப் பள்ளி'யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் 'காய் விட்டுக்கொண்டு' பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள ...

அறிமுகம்

Posted: 06 Oct 2015 05:00 AM PDT

நண்பர்களுக்கு வணக்கம். ஈகரையின் புதிய உறுப்பினர் நான் வீர கல்யாண்.

குழந்தைகளுக்கு எந்த விட்டமின் குறையக்கூடாது?

Posted: 06 Oct 2015 04:45 AM PDT

முதலிலேயே சொல்லி விடுகிறேன்... வைட்டமின் என்பது சரியான உச்சரிப்பு அல்ல. சரி விஷயத்திற்கு தாவுவோம். ஒரு இளம் தாய் என்னிடம், 'பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கூடம் இருந்தால் தேவலை...' என்றார். 'அட... இத்தாய்க்கு தான் பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை; ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கல்வி வேண்டுமென்று நினைக்கிறாரே...' என்று வியந்த வேளையில், அடுத்த வாக்கியம் அவர்களது நிலைப்பாட்டை தெளிவாக்கியது. 'சனியன்களை (!) மேய்க்க(?) முடியலை...' என்றார். சனியன்கள் என்றும், கால்நடைகள் என்றும் பிள்ளைகளை ...

தெரிஞ்சுக்கோங்க!..தண்ணீரை மறைய வைக்கும் மேஜிக்!

Posted: 06 Oct 2015 04:42 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

சில்ட்ரன் ஜோக்- ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க,,,

Posted: 06 Oct 2015 04:30 AM PDT

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Posted: 06 Oct 2015 04:19 AM PDT

மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை  இங்கு காணலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்களை ஏமாற்றும் பிரபல நிறுவனங்கள்: சூரியகாந்தி, கடலை எண்ணெய்யில் கலப்படம்

Posted: 06 Oct 2015 04:07 AM PDT

கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் பிரபல நிறுவனங்கள் விற்றுவரும் பல பாக்கெட்களில் பாமாயில், பருத்திவிதை எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருப்பது நுகர்வோர் அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 'தூய்மையான கடலை எண்ணெய், நல்லெண்ணைய்யை சமையலில் சரியான அளவில் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது' என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒருசில எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் விலை குறைவான பாமாயில், பருத்திவிதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றை கலப்படம் ...

கடவுள்

Posted: 06 Oct 2015 04:07 AM PDT

நாத்திகம் பேசும்  நல்லவர்களே  நீங்கள் உங்களை  முழுமையாக  உணர்ந்து உள்ளீர்களா? தன்னை முழுமையாக  உணர்ந்தவன் கடவுளை  காண்பைவைகளிலெல்லாம்  காண்பான்!! கடவுள் கற்சிலைகளாய் மட்டுமல்ல  நம்மை ஸ்பரிசித்து செல்லும் காற்றாய்  இருக்கிறார்!  காற்றின் பிறப்பிடம்  இங்கு தான் என்று  உங்கள் அறிவியல் மூளை  ஆராய்ந்து அருதியிட்டு சொல்லிவிட முடியுமா??  மலைகளின் பிறப்பிடம்?  நதிகளின் பிறப்பிடம்?  மலர்களின் மகரந்தச்சேர்க்கை  இந்த கன நொடியில் தான்  மலர்ந்தது என்று கூறமுடியுமா? கருவறையில் ...

நான் வந்த பாதை - உதய குமார் !

Posted: 06 Oct 2015 04:07 AM PDT

பெயர்:ச.udayakumar
சொந்த ஊர்:koiliyanur
ஆண்/பெண்:male
ஈகரையை அறிந்த விதம்:google
பொழுதுபோக்கு:டு கனான் டு ஆல் ideas
தொழில்:
mathiya      பொது பணித்துறை  department
மேலும் என்னைப் பற்றி: நான் 16 வருடங்கல்  இந்திய ராணுவத்தில் பணி செய்து விட்டு மீண்டும் பொது பனிதுரையீல் சேர்ந்து பணியாற்றி வருகிறேன் . நான் இந்த ஈகரை இல் வந்து உங்களுத
தான்  வந்த சேர்ந்த மைக்கு நன்றி .

படிப்பறிவை விட சிறந்தது..! (குறுக்கெழுத்துப் போட்டி)

Posted: 06 Oct 2015 03:26 AM PDT


-
நன்றி - பாக்யா
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்க
ள்

மணமகளுடன், 'செல்பி' எடுக்கலாமா?

Posted: 06 Oct 2015 02:35 AM PDT

மணமகளுடன், 'செல்பி' எடுக்கலாமா? 'கார்ப்பரேட்' நிறுவனத்தில் வேலை பார்க்கும் என் தோழிக்கு, சமீபத்தில், பிரபல ஓட்டலில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்ப்பதால், அவரது நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். ஆனால், தோழி உள்ளூரிலேயே படித்து, மூன்று, நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்திருந்ததாலும், எல்லாருடனும் நட்பாக பழக கூடியவள் என்பதனாலும், பழைய, புதிய என, எல்லா நண்பர்களும் ஆஜர்! வரவேற்பின் போது, மணமக்கள் மேடையில் இருக்க, தோழியின் அலுவலக நண்பர்களில் சிலர், அவள் அருகே சென்று, தோளைத் ...

என்ன பெத்த ஐயா’ன்னு அழும் பெண்கள் தேசிய விருதுக்குத் தகுதியானவர்கள்...!!

Posted: 06 Oct 2015 01:49 AM PDT

காதல் வலையில் விழ வைத்து கோடீஸ்வரரின் மகன் கடத்தல் - பத்திரமாக மீட்டது போலீஸ் !

Posted: 06 Oct 2015 12:46 AM PDT

சென்னை: சென்னையில், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த வாலிபரிடம், இளம் பெண்ணை போலியாக காதலிக்க வைத்து, ஐந்து கோடி ரூபாய் கேட்டு, காரில் கடத்தினர்.போலீஸார் அவரை பத்திரமாக மீட்டனர். சென்னை, போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி சுந்தரம்; தொழில் அதிபர் மற்றும் கோடீஸ்வரர். இவரது, இரண்டாவது மகன் அபிஷேக், 19. சென்னை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லுாரியில், பி.இ., இரண்டாம் ஆண்டு படித்தார். பின், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தைக்கு உதவியாக இருந்தார். கடந்த 3ம் ...

உப்பாகவும், ஒளியாகவும் இருப்பவர்கள்!

Posted: 06 Oct 2015 12:30 AM PDT

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை, உலுக்கி எழுப்பினாள் பிலோமினா. ஞாயிற்றுக்கிழமை தூக்கம் கலைக்கப்பட்டதில் கோபம் எழுந்தாலும், உடனே அதை மறந்து, ''என்னம்மா விசேஷம்,'' என்றான் முத்துராமன். ''நீயே கண்டுபிடியேன்,'' என்றாள், கொஞ்சம் பிகு செய்தபடி! சிறிது நேரம் யோசித்து, ஒன்றும் பிடிபடாமல் போகவே, ''தெரியலயே,'' என்றான் சிறு குற்ற உணர்ச்சியுடன். ''இன்னைக்கு என்ன நாள்...'' என்றாள் கோபத்துடன். ''அக்டோபர் 4; அப்படி என்ன இன்னைக்கு விசேஷம்...'' என்றான் புரியாமல்! ''இத்தனை வருஷம் உன் கூட ...

பட்டுப் புடவை!

Posted: 06 Oct 2015 12:20 AM PDT

''ஏய் கனகு... இங்க வந்து கொஞ்ச நேரம் உட்காருடி. கடவுள் உனக்கு காலைக் கொடுத்தானா இல்ல மறந்து போயி சக்கரத்தைக் கட்டி விட்டானா...'' என்ற பர்வதம்மாளின் அன்பிற்கு, அடிபணிந்தவளாய் துவைத்துக் கொண்டிருந்த துணிகளை அப்படியே வைத்து விட்டு அவள் அருகே வந்தாள் கனகு. ''ஏன் மாமி அப்படி கேக்குறீக...'' என்றாள். ''பின்ன என்னடி... சதா எந்நேரமும் ஓடி ஓடி உழைச்சுக்கிட்டேயிருக்க. இந்தா... இந்த பால்கோவாவை கொஞ்சம் வாயில போட்டுக்க. எனக்கு பிடிக்குமேன்னு உங்க மாமா வாங்கிண்டு வந்தார்,'' என்று பால்கோவா கவரை நீட்டினாள். ''மாமி... ...

முன்மாதிரியாய் இருங்கள் பெற்றோர்களே!

Posted: 06 Oct 2015 12:10 AM PDT

அக்.5., வள்ளலார் பிறந்தநாள் 'குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லையே, அவர்களது பழக்க வழக்கங்கள் சரியில்லையே... இவர்களை எப்படி திருத்துவது...' என்று கவலைப்படும் பெற்றோர், உலகில் அதிகம். 'தாயைப் போல் பிள்ளை' என்று ஒரு சொலவடையே உண்டு. பெற்றோர் எப்படி செயல்படுகின்றனரோ, அதையே குழந்தைகளும் பின்பற்றுவர். ஒருவர் கூட பசித்திருக்கக் கூடாது என்பதில், அதிக கவனம் செலுத்தினார் ராமலிங்கம் அடிகளார். இக்குணம் அவருக்கு வரக் காரணம் அவரது பெற்றோர் தான். கடலூரில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ளது ...

தமிழில் பருவ கால ஹைக்கூக்கள் - எழுத ஒரு பயிற்சி

Posted: 05 Oct 2015 11:55 PM PDT

ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்கேற்றபடியும் கருத்துக்களுக்கேற்றபடியும் பிரிக்கப்பட்டன. ...

படித்ததில் பிடித்தது :) --லேட்டஸ்ட் பேஷன்!

Posted: 05 Oct 2015 11:40 PM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

வண்ணமயமானது காதல்...!!

Posted: 05 Oct 2015 11:36 PM PDT

மாப்பிள்ளை வீட்டாரே... ஜாக்கிரதை!

Posted: 05 Oct 2015 11:35 PM PDT

ரொம்ப அடக்கமான பொண்ணு! என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயம் செய்தனர். பையன் தங்கக் கம்பி; பெண் லட்சணமாகவும், அமைதியாகவும் இருந்ததால், மாப்பிள்ளைக்கு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. மொபைல்போன் வாங்கிக் கொடுத்து, தினமும், போனில், 'கடலை' போட்டான். ஆனால், எங்கே வெளியே கூப்பிட்டாலும் வர மாட்டாள். 'இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா...' என வியந்தான். தன்னுடன் வேலை செய்யும் பெண்களின் அட்டகாசங்களை நினைத்து, தனக்கு மிகவும் அடக்கமான, அழகான மனைவி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். திருமணமும் முடிந்தது; ...

சவால் விட்டு முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்ட ஏர்டெல்!

Posted: 05 Oct 2015 11:34 PM PDT

அண்மையில் ஏர்டெல் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் ஏர்டெல் 4ஜியை விட, வேகமான நெட்வொர்க் உண்டா? அப்படி இருந்தால் காட்டுங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள் மொபைலுக்கான செலவுத் தொகையை செலுத்துவதாக அந்த விளம்பரம் கூறியது. - ஏர்டெல்லின் சவால் விளம்பரம் குறித்து அகில இந்திய விளம்பர தரக்கட்டுபாட்டு கவுன்சிலிடம் நுகர்வோர் ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, அந்த விளம்பரத்தை மாற்றியமைக்க விளம்பர தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது. - மேலும் ...

பஞ்ச பட்சி சாஸ்திரம்

Posted: 05 Oct 2015 11:08 PM PDT

பஞ்ச பட்சி சாஸ்திரம் இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும் நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இதை ஆரம்பிக்கிறேன்.       பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை  அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் ...

இரெட்டை வாழ்த்துகள் ,Namachivayam MU

Posted: 05 Oct 2015 11:01 PM PDT

[b]இரெட்டை வாழ்த்துகள் ,Namachivayam MU ஆயிரம் பதிவுகளை அதிரடியாக பதிவிட்ட Namachivayam MU அய்யா அவர்களை வாழ்த்தும்  இத்தருணத்தில் , 24/ 09 அன்று , தனது 61 ஆம் ஆண்டை நிறைவு செய்த அய்யா அவர்களை வாழ்த்துவோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் , அய்யா வாழ்த்துகள் ஆயிரம் பதிவுகளுக்கு . தாமதம் கவனக்குறைவு , வருந்துகிறோம் . ரமணியன் [/b]

பத்துப் பாத்திரம் தேய்த்தால் மன அழுத்தம் குறையுமாம்

Posted: 05 Oct 2015 10:47 PM PDT

- மிகவும் மன அழுத்தமாக இருக்கிறீர்களா.. அதைக் குறைக்க வேண்டுமா.. கவலையே வேண்டாம். வீட்டின் சிங்க்கில் இருக்கும் அழுக்கு பாத்திரங்களை முழு கவனத்தோடு தேய்த்து முடியுங்கள். உங்கள் மனம் லேசாக மாறும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. - பாத்திரங்களை கவனமாக தேய்த்து முடித்து, அதனை சுத்தம் செய்யும் போது, நமது மனதில் ஒரு நேர்மறையான சிந்தனைகள் உதிப்பதை, செயல்வடிவில் ஆய்வு செய்திருக்கிறார்கள் ப்ளோரிடா மாகாண பல்கலைக்கழக ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆடம் ஹேன்லி. - சுமார் 51 மாணவர்களைக் ...

காதலும் வங்கி கணக்கு மாதிரிதான்...!

Posted: 05 Oct 2015 10:24 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™