Tamil News | Online Tamil News |
- அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அசட்டை: ஜெ., அதிரடி
- வங்கி 'மாஜி' அதிகாரிகளுக்கு ரூ.10 கோடி அபராதம், சிறை
- முதல்வர் வேட்பாளர் ஆசை காட்டி விஜயகாந்தை வளைக்க முயற்சி
- மோடி முயற்சியால் தடை நீங்கும் திட்டங்கள்: ரூ.4 லட்சம் கோடியில் பணிகள் 'சுறுசுறு'
- தேச ஒற்றுமைக்காக எதற்கும் தயார்: மோடி
- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களின் கோட்டா உயர்கிறது: 6 இடங்களுக்கான சிபாரிசு 10 ஆக உயர்த்த அரசு முடிவு
- பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்பு தன்மை அவசியம்!
- தியேட்டர்கள் பறிப்பு: கட்சிகள் பாய்ச்சல்
- நடிகையர் பின் ஓடும் காங்.,
- ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்து சிதறி 224 போ பலி: எகிப்து சுற்றுலா தலம் அருகே கோர விபத்து
- தேசிய கீதத்தை பாதியில் நிறுத்திய கவர்னர்
| அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அசட்டை: ஜெ., அதிரடி Posted: பிரதமர் மோடியின் கிராம தத்தெடுப்பு திட்டம், தமிழகத்தில் தோல்வியை தழுவி இருப்பதாக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் போனதை அடுத்து, அது தொடர்பான விவரங்களை திரட்ட, உளவுத் துறையினருக்கு உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. |
| வங்கி 'மாஜி' அதிகாரிகளுக்கு ரூ.10 கோடி அபராதம், சிறை Posted: மும்பை:பங்குச் சந்தை முறைகேடு வழக்கில், முன்னாள் வங்கி அதிகாரிகள் இருவருக்கு, தலா, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ல், மும்பை பங்குச் சந்தை தரகர் ஹர்ஷத் மேத்தாவின், பங்குச் சந்தை ஊழல், நாட்டையே திடுக்கிட வைத்தது. வங்கி அதிகாரிகளை பயன்படுத்தி, பல கோடி ரூபாயை, பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஏமாற்றியதாக, ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட, 22 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்டிராவின் முன்னாள் நிதிப் பிரிவு தலைமை மேலாளர் சீனிவாசன் ... |
| முதல்வர் வேட்பாளர் ஆசை காட்டி விஜயகாந்தை வளைக்க முயற்சி Posted: 'மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இணைந்தால், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்கள்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு துாதுவிடப்பட்டுள்ளது. |
| மோடி முயற்சியால் தடை நீங்கும் திட்டங்கள்: ரூ.4 லட்சம் கோடியில் பணிகள் 'சுறுசுறு' Posted: புதுடில்லி: நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற விடாமல் இடைமறிக்கும் தடைக்கற்களை அகற்ற, பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும், சிறப்புக் கூட்டத்தை நடத்தி வருகிறார். பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையால், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் புத்துயிர் பெற்று, துரிதகதியில் நடந்து வருகின்றன. இந்தியாவில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், அவை நிறைவேறி, மக்களுக்கு பயன் கிடைக்காமல் தடுப்பது, 'ரெட் டேப்பிசம்' எனப்படும், அரசு நிர்வாகத்தில் காணப்படும் எண்ணற்ற விதிமுறை மற்றும் நடைமுறைகள். இந்தியாவின், ரெட் ... |
| தேச ஒற்றுமைக்காக எதற்கும் தயார்: மோடி Posted: புதுடில்லி:''ஒற்றுமை தான் நம் பலம்; தேச ஒற்றுமைக்காக எத்தகைய தியாகத்தையும் புரியலாம் என்பது தான், சர்தார் வல்லபாய் படேலின் கொள்கை; அதை நாமும் பின்பற்றுவோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்தார். நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம், 'தேசிய ஒருமைப்பாட்டு நாள்' என, கொண்டாடப்படுகிறது. அவரின், 140வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் நேற்று, 'ஒற்றுமை ஓட்டம்' என்ற பெயரில், அனைத்து தரப்பினரும் பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது.அதை துவக்கி, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: |
| Posted: 'கேந்திரிய வித்யாலயா' எனப்படும், மத்திய அரசுப் பள்ளிகளில், எம்.பி.,க்களுக்கான மாணவர் சேர்க்கை கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது. தற்போது, ஆறு மாணவர்களுக்கு சிபாரிசு செய்து வரும் எம்.பி.,க்கள், இனிமேல், 10 மாணவர்களுக்கு சிபாரிசு செய்ய, விரைவில் வாய்ப்பு ஏற்பட உள்ளது.மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் நடத்தப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தி யில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்தப் பள்ளிகளில், 'சீட்' வாங்குவது மிகவும் கடினம். இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு, எம்.பி.,க்கள் ... |
| பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்பு தன்மை அவசியம்! Posted: புதுடில்லி: ''சகிப்புத்தன்மையும், ஒருவரை ஒருவர் மதிப்பதும் தான், சமூக, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.நாட்டில் மத சகிப்புத் தன்மை குறைந்து வருவதால் ஏற்படும், எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் மாட்டிறைச்சி தொடர்பான விவகாரங்களால், எழுத்தாளர்கள், கலைஞர்கள்,எதிர்ப்பு தெரிவித்து, விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்ள, இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது:சகிப்புத் தன்மை ... |
| தியேட்டர்கள் பறிப்பு: கட்சிகள் பாய்ச்சல் Posted: சென்னையில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சினிமா தியேட்டர்களை, சசிகலா வாங்கியுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து, 'இந்த விவகாரத்தில், முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும்; சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் ஆவேச பாய்ச்சலை துவக்கி உள்ளன. |
| Posted: இந்திரா போன்று, அதிரடி தலைவர்களை உருவாக்கிய காங்கிரஸ், இன்று பரிதாப நிலையில் உள்ளது. கட்சியின் நம்பிக்கை நட்சத்திரம், இளவரசர் என அழைக்கப்பட்ட ராகுலால், கட்சியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. கட்சியின் சீனியர்கள், ராகுலின் திறமையை சந்தேகப்பட துவங்கியுள்ளனர். நிலைமை இப்படியிருக்க, 'ராகுலோ, கட்சியை வளர்க்க நடிகையரின் உதவியை நாடி வருகிறாரே' என, கட்சித் தலைவர்கள் வருத்தப்படுகின்றனர். நடிகை குஷ்புவிற்கு முக்கிய பதவி கொடுத்தார்; அதையடுத்து, நடிகை நக்மாவிற்கு பதவி. குஷ்புவை விட நக்மா கட்சியில் சீனியர். உத்தர பிரதேசத்தின், மீரட் ... |
| ரஷ்ய விமானம் நடுவானில் வெடித்து சிதறி 224 போ பலி: எகிப்து சுற்றுலா தலம் அருகே கோர விபத்து Posted: கெய்ரோ: வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்திலிருந்து புறப்பட்ட ரஷ்ய, 'ஏர் பஸ்' விமானம், மலையில் மோதி, வெடித்துச் சிதறியது. இதில், 17 குழந்தைகள் உள்ளிட்ட, 224 பேர் பலியாயினர். எகிப்து நாட்டில், செங்கடல் பகுதியில் அமைந்துஉள்ள சுற்றுலா தலம், ஷார்ம் - எல் - ஷேக். இங்கிருந்து, ரஷ்ய தனியார் விமான நிறுவனத்தின், 'கே.ஜி.எல் 9268' என்ற, பிரம்மாண்ட, 'ஏர் பஸ்' ஜெட் விமானம், ரஷ்யாவின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் நோக்கி, நேற்று காலை, இந்திய நேரப்படி, 10:00 மணிக்கு புறப்பட்டது. |
| தேசிய கீதத்தை பாதியில் நிறுத்திய கவர்னர் Posted: லக்னோ:உத்தரப் பிரதேசத்தில், நேற்று புதிதாக, 20 அமைச்சர்கள் பதவியேற்ற விழாவில் தேசிய கீதம் அவதிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை கவர்னர் நிராகரித்தார்.சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யில், 2017ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நீக்கம்: அமைச்சரவையிலிருந்து, எட்டு அமைச்சர்களை, இரண்டு நாட்களுக்கு முன், முதல்வர் அகிலேஷ், அதிரடியாக நீக்கினார்; ஒன்பது அமைச்சர்களின் இலாகாக்களையும் பறித்தார். இந்நிலையில், அமைச்சரவை மாற்றம் நேற்று நிகழ்ந்தது. 20 அமைச்சர்கள் புதிதாக பொறுப்பேற்றனர்; அவர்களுக்கு, கவர்னர் ராம் நாயக் பதவிப் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |நவம்பர் 01,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |