Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திண்டுக்கல் வனப்பாதுகாவலர் அயல் பணிக்கு மாற்றம்
- சின்னமனூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற திரும்பிய ஜீப் பாலத்தில் மோதி மூதாட்டி சாவு: 9 பேர் காயம்
- தேவாரத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
- சிவகங்கையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நெஞ்சுவலியால் சாவு
- தனியார் பாதுகாப்புப் பிரிவு பணியாளர்கள் பி.எப். தொகை வழங்கக் கோரி முற்றுகை
- "ஆதார்' புகைப்படம் எடுக்க பணம் வசூல்? ஆணையரை பொதுமக்கள் முற்றுகை
- வாகரை பகுதிகளில் நவம்பர் 02 மின்தடை
- சரக்கு வாகனம் மோதி முதியவர் சாவு
- ஆதி திராவிடர் நலத்துறை விடுதி சமையலர், துப்புரவுப் பணியாளர் பணி: நவ.9-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
- சின்னமனூர் அருகே 15 பேர் மீது வழக்கு: எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஊர்வலம்
- சுகாதார வளாகத்தை அப்புறப்படுத்த எதிர்ப்பு
- வெள்ளிமலைப் பகுதியில் பலத்த மழை: மூலவைகையில் நீர்வரத்து அதிகரிப்பு
- அரசுப் பள்ளிக்கு ரூ.13 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமிபூஜை
- பள்ளியில் மாணவர் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வுக் கூட்டம்
- டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- தேனி மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
- நவ.8 இல் மானூர் சுவாமிகள் திருக்கோயிலில் குடமுழுக்கு
- சின்னமனூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்
- தேவாரத்தில் தானாக ஊர்ந்து சென்ற பேருந்து மோதி 3 ஆட்டோக்கள் சேதம்
- கோவில்பட்டியில் உலக சிக்கன நாள் விழா
- தூத்துக்குடியில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி
- கோவில்பட்டியில் மழை: 2 வீடுகள் சேதம்
- எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
- கொம்மடிக்கோட்டை கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
- தில்லியில் கலாம் வசித்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்: தமாகா வலியுறுத்தல்
- ஆறுமுகனேரி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
- தூத்துக்குடி, வேப்பலோடை அரசு ஐடிஐகளில் பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- சாத்தான்குளம் தேவாலயத்தில் ஜெபமாலை பவனி
- கூடங்குளம் முதல் உலை பராமரிப்புப் பணிகள் நீடிப்பு:2 ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தாமதம்
- கோவில்பட்டி அருகே 20 பவுன் நகை, ரூ.2.60 லட்சம் திருட்டு
- பெண்ணை ஏமாற்றியதாக ஓட்டுநர் கைது
- கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு வராது: விவசாயிகள் நம்பிக்கை
- வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலை!
- பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு
- ஈவிகேஎஸ் இளங்கோவனை பதவியிலிருந்து நீக்குங்கள்:அதிருப்தி தலைவர்கள் ராகுல் காந்தியிடம் புகார்
- குலசேகரன்பட்டினம்
- போலீஸாரை ஏமாற்றி தப்பிய சிலைக் கடத்தல் கும்பல்
- திருச்செந்தூரில் தீத்தடுப்பு ஒத்திகை
- இன்று புதுச்சேரி விடுதலை நாள்:முதல்வர் ரங்கசாமி கொடியேற்றுகிறார்
- தேவர் ஜயந்தி: மதுரையில் விதி மீறி பேரணி நடத்திய 600 பேர் மீது வழக்கு
- நவ. 3 இல் மக்கள் நல கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிப்பு
- வெறுப்புணர்வைப் பரப்பும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவோம்
- இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு
- கடம்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்
- மலிவு விலை மதிய உணவுத் திட்டம் மாவட்டத் தலைநகரங்களிலும் அமல்
- பிரிட்டனுக்கான புதிய தூதர் சர்னா
- பிகாரில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு
- 3 இந்தியர்களை விடுவிக்க சூடான் உதவ வேண்டும்: பிரதமர்
- பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் மனு
- உ.பி. அமைச்சரவை விரிவாக்கம் :12 புதியவர்கள் உள்பட 20 பேர் பதவியேற்பு
- காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் காயம்
- கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
- இந்தியா முக்கிய கூட்டாளி நாடு: அமெரிக்கா
- இந்திரா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை
- மரியா ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் திறப்பு
- மோடி, அமித் ஷாவுக்கு எதிரான கருத்து:லாலுவுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு
- சிவகிரி மடாதிபதி மரணம் குறித்து விரிவான விசாரணை: கேரள அரசு
- குமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடி
- கருப்பு மை வீசியவர்கள் சிவசேனையில் இருந்து நீக்கம்
- பங்குச் சந்தை ஊழல்:முன்னாள் வங்கி அதிகாரிகள் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை
- மகாராஷ்டிரம்: பாஜகவின் ஓராண்டு ஆட்சி நிறைவு:அரசு கவிழாது என பட்னவீஸ் நம்பிக்கை
- "பிரிவு உபசார போட்டிக்கு வாய்ப்பளிக்காதது வருத்தமளிக்கிறது'
- அம்பலப்பதியில் கலிவேட்டை
- பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ்:இறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி
- 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குமரி மாவட்டம்: மக்களின் கனவுகள், தேவைகள் நிறைவேறுமா?
- இந்திய லெவன் - தென் ஆப்பிரிக்க அணிகளிடையிலான பயிற்சி கிரிக்கெட் டிரா
- குமரியில் சித்த வர்மக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை
- கோவில்பட்டியில் மாநில சதுரங்கப் போட்டி
- குமரியில் பலத்த மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு
- கன்னியாகுமரி
- சாலையைச் சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் தர்னா
- முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
- ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி:சென்னை - கேரள அணிகள் மோதிய ஆட்டம் டிரா
- திங்கள்நகர் போக்குவரத்து பணிமனையில் விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
- அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பால் வியாபாரி சாவு
- தேசிய அளவிலான நீச்சல் போட்டி:சாஜன் குமார் புதிய சாதனை
- இந்திராகாந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு
- துளிகள்..!
- பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: ஆட்சியர் வழங்கினார்
- ரஷிய விமான விபத்து: 224 பேர் பலி
- பிலிப்பின்ஸ் சந்தையில் தீ விபத்து: 15 பேர் பலி
- 55 பேருக்கு விலையில்லா ஆடுகள்
- அமெரிக்காவுக்கு ஐ.எஸ். பதிலடி: 5 குர்து வீரர்கள் தலை துண்டிப்பு
- வியாபாரிகள், காவல் துறையினர் விழிப்புணர்வுக் கூட்டம்
- ருமேனியா கேளிக்கை விடுதியில் தீ: 27 பேர் பலி
- ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம்
- டெங்கு விழிப்புணர்வுப் பேரணி
- வங்கதேசத்தில் மேலும் 3 மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர்கள் மீது தாக்குதல்
- தூய்மை பாரத திட்டப் பணிகள்: மத்திய சுகாதார ஆலோசகர் ஆய்வு
- சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 91-ஆனது
- காஞ்சிபுரம்
- தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு
- "இணைய வர்த்தகத்தால் வணிக வளாக விற்பனை வீழ்ச்சியடையும்'
- கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
- 15 ஏர்பஸ் புதிய விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு
- குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு
- திருட்டு சி.டி.க்கள் விற்பனை: இருவர் கைது
- குற்றாலத்தில் தொடர் மழை: பேரருவியில் வெள்ளப் பெருக்கு
- தங்கம் பவுனுக்கு ரூ.64 குறைவு
| திண்டுக்கல் வனப்பாதுகாவலர் அயல் பணிக்கு மாற்றம் Posted: 31 Oct 2015 01:02 PM PDT திண்டுக்கல் மண்டல வனப் பாதுகாவலராக பணியாற்றி வந்த ஆகாஷ் தீப் பருவா, அயல் பணிக்காக அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். |
| சின்னமனூரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற திரும்பிய ஜீப் பாலத்தில் மோதி மூதாட்டி சாவு: 9 பேர் காயம் Posted: 31 Oct 2015 01:01 PM PDT தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த உத்தமபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது ஜீப் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். ஓட்டுநர் உள்பட 9 பெண்கள் படுகாயமடைந்தனர். |
| தேவாரத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது Posted: 31 Oct 2015 01:01 PM PDT தேவாரத்தில் கஞ்சா விற்றதாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சிவகங்கையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நெஞ்சுவலியால் சாவு Posted: 31 Oct 2015 01:00 PM PDT லாரி ஓட்டிச் சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். |
| தனியார் பாதுகாப்புப் பிரிவு பணியாளர்கள் பி.எப். தொகை வழங்கக் கோரி முற்றுகை Posted: 31 Oct 2015 12:59 PM PDT பழனி திருக்கோயிலில் உள்ள தனியார் பாதுகாவல் பிரிவு பணியாளர்கள் தங்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகையை வழங்கக் கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
| "ஆதார்' புகைப்படம் எடுக்க பணம் வசூல்? ஆணையரை பொதுமக்கள் முற்றுகை Posted: 31 Oct 2015 12:59 PM PDT திண்டுக்கல்லில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுப்பதற்கு பணம் வசூலிப்பதாகவும், பணம் வழங்குவோருக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும்ர கூறி பொதுமக்கள் மாநகராட்சி ஆணையரை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். |
| வாகரை பகுதிகளில் நவம்பர் 02 மின்தடை Posted: 31 Oct 2015 12:58 PM PDT பழனி அருகேயுள்ள வாகரை துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.2) பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன. |
| சரக்கு வாகனம் மோதி முதியவர் சாவு Posted: 31 Oct 2015 12:57 PM PDT தேவாரம் அருகே சனிக்கிழமை மாலை சரக்கு வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். |
| ஆதி திராவிடர் நலத்துறை விடுதி சமையலர், துப்புரவுப் பணியாளர் பணி: நவ.9-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு Posted: 31 Oct 2015 12:57 PM PDT தேனி மாவட்டத்தில் அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பணிக்கு, நவம்பர் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சின்னமனூர் அருகே 15 பேர் மீது வழக்கு: எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஊர்வலம் Posted: 31 Oct 2015 12:56 PM PDT சின்னமனூர் அடுத்த ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை ஊர்வலம் நடத்தினர். |
| சுகாதார வளாகத்தை அப்புறப்படுத்த எதிர்ப்பு Posted: 31 Oct 2015 12:56 PM PDT சுகாதார வளாகத்தை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| வெள்ளிமலைப் பகுதியில் பலத்த மழை: மூலவைகையில் நீர்வரத்து அதிகரிப்பு Posted: 31 Oct 2015 12:55 PM PDT மேகமலை மற்றும் வெள்ளிமலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், மூலவைகையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. |
| அரசுப் பள்ளிக்கு ரூ.13 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமிபூஜை Posted: 31 Oct 2015 12:55 PM PDT அரசுப் பள்ளிக்கு ரூ.13 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. |
| பள்ளியில் மாணவர் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 31 Oct 2015 12:54 PM PDT போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 31 Oct 2015 12:54 PM PDT கொடைக்கானலில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தேனி மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் Posted: 31 Oct 2015 12:53 PM PDT தேனி மாவட்டத்தில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது என்று, வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| நவ.8 இல் மானூர் சுவாமிகள் திருக்கோயிலில் குடமுழுக்கு Posted: 31 Oct 2015 12:52 PM PDT பழனியை அடுத்த கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீ மானூர் சுவாமிகள் திருக்கோயிலில் நவம்பர் 8 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. |
| சின்னமனூரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம் Posted: 31 Oct 2015 12:52 PM PDT சின்னமனூர் நகராட்சியில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேவாரத்தில் தானாக ஊர்ந்து சென்ற பேருந்து மோதி 3 ஆட்டோக்கள் சேதம் Posted: 31 Oct 2015 12:51 PM PDT தேவாரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை மாலை நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தானாக ஊர்ந்து சென்று மோதியதில், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. |
| கோவில்பட்டியில் உலக சிக்கன நாள் விழா Posted: 31 Oct 2015 12:05 PM PDT கோவில்பட்டி நூலகர் வாசகர் வட்டம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் சனிக்கிழமை உலக சிக்கன நாள் விழா மற்றும் சர்தார் வல்லபபாய் பட்டேலின் 140 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. |
| தூத்துக்குடியில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி Posted: 31 Oct 2015 12:04 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணியில் மாணவர்கள் கலந்துகொண்டனர். |
| கோவில்பட்டியில் மழை: 2 வீடுகள் சேதம் Posted: 31 Oct 2015 12:04 PM PDT கோவில்பட்டியில் சனிக்கிழமை பெய்த மழையால் மந்தித்தோப்பு கிராமத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன. |
| எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா Posted: 31 Oct 2015 12:03 PM PDT எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலமாக பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| கொம்மடிக்கோட்டை கோயிலில் திருக்கல்யாண உற்சவம் Posted: 31 Oct 2015 12:03 PM PDT கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. |
| தில்லியில் கலாம் வசித்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும்: தமாகா வலியுறுத்தல் Posted: 31 Oct 2015 12:02 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் புதுதில்லியில் வசித்து வந்த இல்லத்தை மத்திய அரசு நினைவு இல்லமாக அறிவிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா வலியுறுத்தினார். |
| ஆறுமுகனேரி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு Posted: 31 Oct 2015 12:02 PM PDT திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலில் சங்கடஹரசதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. |
| தூத்துக்குடி, வேப்பலோடை அரசு ஐடிஐகளில் பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 31 Oct 2015 12:02 PM PDT தூத்துக்குடி மற்றும் வேப்பலோடை அரசு ஐடிஐ களில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாத்தான்குளம் தேவாலயத்தில் ஜெபமாலை பவனி Posted: 31 Oct 2015 12:01 PM PDT சாத்தான்குளம் புனித மரியாளின் மாசற்ற திருஇருதய ஆலயத்தில் ஜெபமாலை மாதா தின நிறைவையொட்டி ஜெபமாலை பவனி சனிக்கிழமை நடைபெற்றது. |
| கூடங்குளம் முதல் உலை பராமரிப்புப் பணிகள் நீடிப்பு:2 ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தாமதம் Posted: 31 Oct 2015 12:01 PM PDT கூடங்குளம் முதலாவது அணு உலையில் நீடித்து வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, 2ஆவது உலையில் மின் உற்பத்தி தொடங்குவது மேலும் தாமதமாகியுள்ளதாக அதன் |
| கோவில்பட்டி அருகே 20 பவுன் நகை, ரூ.2.60 லட்சம் திருட்டு Posted: 31 Oct 2015 12:01 PM PDT கோவில்பட்டி அருகே வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகை, ரூ.2.60 லட்சத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பெண்ணை ஏமாற்றியதாக ஓட்டுநர் கைது Posted: 31 Oct 2015 12:00 PM PDT கோவில்பட்டி அருகே திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய தனியார் நிறுவன வாகன ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு வராது: விவசாயிகள் நம்பிக்கை Posted: 31 Oct 2015 12:00 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக கால்நடைகளுக்கான தீவனப்பயிர் செழிப்பாக வளரத் தொடங்கியுள்ளதால், நிகழாண்டு கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு வராது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். |
| வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலை! Posted: 31 Oct 2015 11:59 AM PDT சிதம்பரம் அருகே சனிக்கிழமை வீட்டு தோட்டத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினர் பிடித்துச் சென்றனர். |
| பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு Posted: 31 Oct 2015 11:59 AM PDT கோவில்பட்டியையடுத்த கொடப்பாறையில் பகுதி நேர நியாயவிலைக் கடையை அமைச்சர் சண்முகநாதன் சனிக்கிழமை திறந்து வைத்தார். |
| ஈவிகேஎஸ் இளங்கோவனை பதவியிலிருந்து நீக்குங்கள்:அதிருப்தி தலைவர்கள் ராகுல் காந்தியிடம் புகார் Posted: 31 Oct 2015 11:59 AM PDT தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, வேறு தலைவரை நியமிக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக அணி திரண்டுள்ள அதிருப்தி தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் நேரில் புகார் தெரிவித்தார். |
| Posted: 31 Oct 2015 11:59 AM PDT |
| போலீஸாரை ஏமாற்றி தப்பிய சிலைக் கடத்தல் கும்பல் Posted: 31 Oct 2015 11:59 AM PDT விழுப்புரம் அருகே சிலைக் கடத்தல் கும்பல் சோதனைச் சாவடியில் போலீஸாரை ஏமாற்றி தப்பியது தெரிய வந்துள்ளது. |
| திருச்செந்தூரில் தீத்தடுப்பு ஒத்திகை Posted: 31 Oct 2015 11:58 AM PDT திருச்செந்தூரில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. |
| இன்று புதுச்சேரி விடுதலை நாள்:முதல்வர் ரங்கசாமி கொடியேற்றுகிறார் Posted: 31 Oct 2015 11:58 AM PDT புதுச்சேரி 61ஆம் ஆண்டு விடுதலை நாளையொட்டி, அந்த மாநில முதல்வர் ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியை ஏற்றுகிறார். |
| தேவர் ஜயந்தி: மதுரையில் விதி மீறி பேரணி நடத்திய 600 பேர் மீது வழக்கு Posted: 31 Oct 2015 11:58 AM PDT மதுரையில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு விதியை மீறி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட 600 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர். |
| நவ. 3 இல் மக்கள் நல கூட்டியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 31 Oct 2015 11:58 AM PDT மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மக்கள் நலகூட்டியக்கம் சார்பில் தூத்துக்குடியில் நவ. 3 ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூட்டியக்க நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. |
| இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிப்பு Posted: 31 Oct 2015 11:57 AM PDT முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. |
| வெறுப்புணர்வைப் பரப்பும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவோம் Posted: 31 Oct 2015 11:57 AM PDT நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வெறுப்புணர்வைப் பரப்பும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். |
| இந்திய கடற்படை துணை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் பொறுப்பேற்பு Posted: 31 Oct 2015 11:57 AM PDT இந்திய கடற்படை துணை தலைமைத் தளபதியாக கரம்பீர் சிங் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். கடற்படையில் கடந்த 38 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த வைஸ் அட்மிரல் ஆர்.கே. பட்டாநாயக் அப்பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணை தலைமைத் |
| கடம்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம் Posted: 31 Oct 2015 11:57 AM PDT கடம்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் நூதனப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மலிவு விலை மதிய உணவுத் திட்டம் மாவட்டத் தலைநகரங்களிலும் அமல் Posted: 31 Oct 2015 11:56 AM PDT ஒடிஸாவில் 5 பெரிய நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மலிவு விலை மதிய உணவு (ஆஹார்) திட்டத்தை மாவட்டத் தலைநகரங்கள், தொழில் நகரங்களுக்கும் நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| பிரிட்டனுக்கான புதிய தூதர் சர்னா Posted: 31 Oct 2015 11:56 AM PDT பிரிட்டனுக்கான இந்தியாவின் புதிய தூதராக நவ்தேஜ் சிங் சர்னா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 1980-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். விரைவில் இந்தப் பதவியை நவ்தேஜ் சிங் சர்னா ஏற்பார் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பிகாரில் இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு Posted: 31 Oct 2015 11:55 AM PDT பிகார் சட்டப்பேரவைக்கு 4ஆம் கட்டமாக 55 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ.1) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. |
| 3 இந்தியர்களை விடுவிக்க சூடான் உதவ வேண்டும்: பிரதமர் Posted: 31 Oct 2015 11:55 AM PDT லிபியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளால் சிறைவைக்கப்பட்டுள்ள மூன்று இந்தியர்களை விடுவிக்க சூடான் நாட்டு அதிபர் ஹாசன் அகமது எல்பஷீர் உதவ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார். |
| பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் மனு Posted: 31 Oct 2015 11:55 AM PDT சாத்தான்குளம் காவல் நிலைய பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது உறவினர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர். |
| உ.பி. அமைச்சரவை விரிவாக்கம் :12 புதியவர்கள் உள்பட 20 பேர் பதவியேற்பு Posted: 31 Oct 2015 11:54 AM PDT உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவை சனிக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, 5 அமைச்சர்கள், தனிப் பொறுப்புடன் கூடிய 8 இணையமைச்சர்கள், மேலும் 7 இணையமைச்சர்கள் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் 12 புதிய அமைச்சர்களும் |
| காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் காயம் Posted: 31 Oct 2015 11:53 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாகில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தியதில், 2 பேர் காயமடைந்தனர். அனந்த்நாகில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை சனிக்கிழமை வீசினர். ஆனால், அந்த வாகனத்தின் |
| கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு Posted: 31 Oct 2015 11:53 AM PDT ஷீனா போரா கொலை வழக்கில், தாயார் இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் ஓட்டுநர் சியாம்வர் ராய் ஆகியோரின் நீதிமன்றக் காவல் நவம்பர் மாதம் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| இந்தியா முக்கிய கூட்டாளி நாடு: அமெரிக்கா Posted: 31 Oct 2015 11:52 AM PDT இந்தியா எங்களின் முக்கிய கூட்டாளி நாடு என்று அமெரிக்கா தெரிவித்தது. |
| இந்திரா காந்தி நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை Posted: 31 Oct 2015 11:52 AM PDT மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 31-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் |
| மரியா ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் திறப்பு Posted: 31 Oct 2015 11:51 AM PDT கன்னியாகுமரி மாவட்டம், ஆற்றூர் மரியா கல்விக் குழுமங்கள் சார்பில் ஆற்றூர் தோட்டவாரத்தில மரியா ஆயுர்வேத கல்லூரி, திருவட்டாறு பிலாங்காலையில் மரியா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| மோடி, அமித் ஷாவுக்கு எதிரான கருத்து:லாலுவுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு Posted: 31 Oct 2015 11:51 AM PDT பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபணைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மீது பிகாரில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. |
| சிவகிரி மடாதிபதி மரணம் குறித்து விரிவான விசாரணை: கேரள அரசு Posted: 31 Oct 2015 11:51 AM PDT சிவகிரி மடாதிபதி சுவாமி சாஸ்வதிகானந்தாவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
| குமரியில் மழை தீவிரம்: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75 அடி Posted: 31 Oct 2015 11:51 AM PDT குமரி மாவட்டத்தில் மழை தீவிரமான நிலையில் பெருஞ்சாணி அணையிலிருந்து சனிக்கிழமை விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. |
| கருப்பு மை வீசியவர்கள் சிவசேனையில் இருந்து நீக்கம் Posted: 31 Oct 2015 11:51 AM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் தகவல் உரிமை ஆர்வலர் மல்லிகார்ஜுன பாய்கட்டி மீது கருப்பு மை வீசிய தொண்டர்களை, கட்சியில் இருந்து நீக்குவதாக சிவசேனையின் இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே (உத்தவ் தாக்கரேவின் மகன்) அறிவித்துள்ளார். |
| பங்குச் சந்தை ஊழல்:முன்னாள் வங்கி அதிகாரிகள் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை Posted: 31 Oct 2015 11:50 AM PDT கடந்த 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹர்ஷத் மேத்தா தொடர்புடைய பங்குச் சந்தை ஊழலில் முன்னாள் வங்கி ஊழியர்கள் இரண்டு பேர் குற்றவாளிகள் என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. |
| மகாராஷ்டிரம்: பாஜகவின் ஓராண்டு ஆட்சி நிறைவு:அரசு கவிழாது என பட்னவீஸ் நம்பிக்கை Posted: 31 Oct 2015 11:50 AM PDT மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான மாநில அரசு தனது ஐந்து ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும் என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் நம்பிக்கை தெரிவித்தார். |
| "பிரிவு உபசார போட்டிக்கு வாய்ப்பளிக்காதது வருத்தமளிக்கிறது' Posted: 31 Oct 2015 11:49 AM PDT பிரிவு உபசார போட்டிக்கு வாய்ப்பளிக்காதது வருத்தமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் தெரிவித்தார். |
| Posted: 31 Oct 2015 11:49 AM PDT அய்யா வைகுண்டர் அம்பலப்பதியில் 11 நாள் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. |
| பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ்:இறுதிச் சுற்றில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி Posted: 31 Oct 2015 11:48 AM PDT பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி முன்னேறியது. |
| 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் குமரி மாவட்டம்: மக்களின் கனவுகள், தேவைகள் நிறைவேறுமா? Posted: 31 Oct 2015 11:48 AM PDT கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைந்து 59 ஆண்டுகளை நிறைவு செய்து, 60ஆவது ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) அடியெடுத்து வைக்கிறது. |
| இந்திய லெவன் - தென் ஆப்பிரிக்க அணிகளிடையிலான பயிற்சி கிரிக்கெட் டிரா Posted: 31 Oct 2015 11:48 AM PDT இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்ஸ் சதம் விளாச தென் ஆப்பிரிக்க அணி 302 ரன்கள் எடுத்தது. கடைசியில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. |
| குமரியில் சித்த வர்மக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை Posted: 31 Oct 2015 11:47 AM PDT குமரி மாவட்டத்தில் சித்த வர்மக் கல்லூரி அமைக்க வேண்டுமென விவேகானந்த கேந்திரத்தில் நடைபெற்ற தேசிய சித்த வர்மக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. |
| கோவில்பட்டியில் மாநில சதுரங்கப் போட்டி Posted: 31 Oct 2015 11:47 AM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் 14 மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. |
| குமரியில் பலத்த மழை: செங்கல் உற்பத்தி பாதிப்பு Posted: 31 Oct 2015 11:47 AM PDT தமிழகத்தில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையாலும், அரபிக்கடலில் உருவான புயல் காரணமாகவும், குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் செங்கல் உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 31 Oct 2015 11:46 AM PDT |
| சாலையைச் சீரமைக்கக் கோரி மார்க்சிஸ்ட் தர்னா Posted: 31 Oct 2015 11:46 AM PDT கோழிவிளை - மங்காடு சாலையைச் செப்பனிடக் கோரி, முன்சிறை வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளப்புறம் கிராம அலுவலகம் முன் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது. |
| முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு Posted: 31 Oct 2015 11:45 AM PDT முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வழங்கினார். |
| ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி:சென்னை - கேரள அணிகள் மோதிய ஆட்டம் டிரா Posted: 31 Oct 2015 11:45 AM PDT இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டியில் சென்னை - கேரள அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. |
| திங்கள்நகர் போக்குவரத்து பணிமனையில் விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 31 Oct 2015 11:45 AM PDT திங்கள்நகர் அரசுப் போக்குவரத்து பணிமனையில் விபத்து தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பால் வியாபாரி சாவு Posted: 31 Oct 2015 11:44 AM PDT குலசேகரம் அருகே சனிக்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி உயிரிழந்தார். |
| தேசிய அளவிலான நீச்சல் போட்டி:சாஜன் குமார் புதிய சாதனை Posted: 31 Oct 2015 11:44 AM PDT ஆடவருக்கான 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு தேசிய நீச்சல் போட்டியில் சாஜன் குமார் புதிய சாதனைப் படைத்துள்ளார். |
| இந்திராகாந்தி நினைவு தினம் கடைப்பிடிப்பு Posted: 31 Oct 2015 11:44 AM PDT முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாள் நாகர்கோவிலில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. |
| Posted: 31 Oct 2015 11:43 AM PDT துளிகள்..! |
| பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை: ஆட்சியர் வழங்கினார் Posted: 31 Oct 2015 11:43 AM PDT மீனவர் குழு விபத்து காப்புறுதித் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் வழங்கினார். |
| ரஷிய விமான விபத்து: 224 பேர் பலி Posted: 31 Oct 2015 11:43 AM PDT எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பப் பகுதியில் ரஷிய பயணிகள் விமானம் சனிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 17 குழந்தைகள் உள்பட 224 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். |
| பிலிப்பின்ஸ் சந்தையில் தீ விபத்து: 15 பேர் பலி Posted: 31 Oct 2015 11:42 AM PDT பிலிப்பின்ஸில் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 31 Oct 2015 11:42 AM PDT குன்றத்தூரை அடுத்த தண்டலம் பகுதியில் 55 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. |
| அமெரிக்காவுக்கு ஐ.எஸ். பதிலடி: 5 குர்து வீரர்கள் தலை துண்டிப்பு Posted: 31 Oct 2015 11:41 AM PDT குர்துப் படையினருடன் இணைந்து அமெரிக்க வீரர்கள் இராக்கில் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்குப் பதிலடியாக 5 குர்து வீர்ரகளின் தலைகளைத் துண்டித்து அதன் விடியோ காட்சியை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் இணையதளத்தில் வெளியிட்டனர். |
| வியாபாரிகள், காவல் துறையினர் விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 31 Oct 2015 11:41 AM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உத்தரமேரூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட அடகு கடை, நகைக் கடை, வங்கிகள், வணிக வளாக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் உத்தரமேரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ருமேனியா கேளிக்கை விடுதியில் தீ: 27 பேர் பலி Posted: 31 Oct 2015 11:41 AM PDT ருமேனியா நாட்டில் கேளிக்கை விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயமடைந்தனர். |
| ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் Posted: 31 Oct 2015 11:41 AM PDT காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| Posted: 31 Oct 2015 11:40 AM PDT காஞ்சிபுரத்தில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வங்கதேசத்தில் மேலும் 3 மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர்கள் மீது தாக்குதல் Posted: 31 Oct 2015 11:40 AM PDT வங்கதேசத்தில் மேலும் மூன்று மதச்சார்பற்ற வலைதளக் கட்டுரையாளர்கள் சனிக்கிழமை மர்ம நபர்களால் தாக்கப்பட்டனர். |
| தூய்மை பாரத திட்டப் பணிகள்: மத்திய சுகாதார ஆலோசகர் ஆய்வு Posted: 31 Oct 2015 11:40 AM PDT உத்தரமேரூர் ஒன்றியத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மத்திய அரசின் குடிநீர், சுகாதாரப் பணிகள் ஆலோசகர் சலீம்ஹதர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். |
| சிரியா: அரசுப் படையினர் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 91-ஆனது Posted: 31 Oct 2015 11:40 AM PDT சிரியாவில் அரசுப் படையினர் கிளர்ச்சியாளர் பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91-ஆக உயர்ந்தது. |
| Posted: 31 Oct 2015 11:39 AM PDT |
| தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு Posted: 31 Oct 2015 11:39 AM PDT இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை மதிப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இதன்படி, 10 கிராம் இறக்குமதித் தங்கத்தின் விலை மதிப்பு 373 டாலர்களாக (சுமார் ரூ.24,396) உயர்கிறது. |
| "இணைய வர்த்தகத்தால் வணிக வளாக விற்பனை வீழ்ச்சியடையும்' Posted: 31 Oct 2015 11:39 AM PDT "இணையதள வர்த்தகத்தால், வணிக வளாகங்களின் பண்டிகைக் கால விற்பனை பாதிக்கும் மேலாக வீழ்ச்சியடையும்' என வர்த்தக சபைகளின் சங்கம் (அசோசேம்) கூறியுள்ளது. |
| கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 31 Oct 2015 11:39 AM PDT செங்கல்பட்டில் வருகிற 3-ஆம் தேதி கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. |
| 15 ஏர்பஸ் புதிய விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு Posted: 31 Oct 2015 11:38 AM PDT அரசு விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர்பஸ், தனது நடவடிக்கையை விரிவாக்கும் வகையில் புதிதாக 15 ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களை குத்தகைக்கு வாங்கவிருக்கிறது. |
| குண்டர் தடுப்புச் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு Posted: 31 Oct 2015 11:38 AM PDT திருக்கழுகுன்றம் அருகே சாராய வியாபாரியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் போலீஸார் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனர். |
| திருட்டு சி.டி.க்கள் விற்பனை: இருவர் கைது Posted: 31 Oct 2015 11:37 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு சி.டி.க்களை விற்பனை செய்தது தொடர்பாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| குற்றாலத்தில் தொடர் மழை: பேரருவியில் வெள்ளப் பெருக்கு Posted: 31 Oct 2015 11:37 AM PDT குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. |
| Posted: 31 Oct 2015 11:36 AM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து, சனிக்கிழமை ரூ.20,016-க்கு விற்பனையானது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |