Tamil News | Online Tamil News |
- மவுனம் கூடாது: மோடிக்கு 'மூடிஸ்' எச்சரிக்கை
- உலகின் 'மெகா' நச்சு நகரம் டில்லி
- சோனியா அன்னியரா: நிதிஷை மடக்கிய மோடி
- சகோதரியிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய ஒடிசா முதல்வர்!
- 'வாங்கி குவிக்கின்றனரே': கருணாநிதி ஆதங்கம்
- ஐகோர்ட் பாதுகாப்பு பணியில் மத்திய போலீஸ்: தமிழக அரசு எதிர்ப்பை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு
- 'ஒளிரும் நிகழ்காலம்; மிளிரும் வருங்காலம்': புது கோஷத்துடன் அ.தி.மு.க., பிரசாரம்
- விவசாயிகளுக்காக ரகசிய திட்டம்: விஜயகாந்தின் புதிய அறிவிப்பு
- எதிர்கால அணு சோதனைக்காக பூமிக்கடியில் சுரங்கப்பணிகள்: மிரட்டுது வடகொரியா
- அ.தி.மு.க.,வினர் பொறாமையில் வெம்பி தவிப்பு: ஸ்டாலின்
| மவுனம் கூடாது: மோடிக்கு 'மூடிஸ்' எச்சரிக்கை Posted: புதுடில்லி: 'சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் பா.ஜ.,வினரை, இனியும் அடக்காமல், மோடி மவுனம் காத்தால், உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டிலும், அவர் நம்பகத்தன்மையை இழக்க நேரும்' என, சர்வதேச தர நிர்ணய அமைப்பான, 'மூடிஸ்' எச்சரித்துள்ளது. |
| உலகின் 'மெகா' நச்சு நகரம் டில்லி Posted: லண்டன்: உலகிலேயே, மிக அதிக நச்சுத் தன்மையுடன் கூடிய, மாசு காற்று உள்ள நகரமாக, டில்லி விளங்குகிறது என, பிரிட்டனின், சர்ரே பல்கலைக்கழக ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. |
| சோனியா அன்னியரா: நிதிஷை மடக்கிய மோடி Posted: பாட்னா,:பீஹார் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'காங்., கட்சித் தலைவர் சோனியாவும் அன்னியரா?' என, கேள்வி எழுப்பியுள்ளார். பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 243 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு, 12ந் தேதி முதல், ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, மூன்று கட்டங்கள் முடிந்த நிலையில், 55 தொகுதிகளுக்கு, நான்காம் கட்ட தேர்தலுக்காக, நவ., 1ல், ஓட்டுப்பதிவு நடக்கிறது. லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து, மெகா கூட்டணி ... |
| சகோதரியிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய ஒடிசா முதல்வர்! Posted: புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தன் சகோதரியிடம், கடந்த நிதியாண்டில், 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்து உள்ளார்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கே, 2014 - 15ம் நிதியாண்டுக்கான, தங்களின் சொத்து விவரங்களை, முதல்வர் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள், இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதில், நவீன் பட்நாயக் தான், பெரும் பணக்காரராக உள்ளார்.இருந்தும் கூட, தன் சகோதரி கீதா மேத்தாவிடமிருந்து, மார்ச் 9ல், 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிவித்து உள்ளார்.தன்னிடம் அசையும் சொத்துகளாக, 17 ரூபாய் ... |
| 'வாங்கி குவிக்கின்றனரே': கருணாநிதி ஆதங்கம் Posted: சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது, நீதிபதி குன்ஹா தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள, 'ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்று. இதன் பெயரை, 'ஜாஸ்' சினிமா நிறுவனம் என மாற்றி, சத்யம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான, 600 கோடி முதல், 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய, 11 திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரில் வாங்கியிருக்கிற செய்தி, இன்று ... |
| ஐகோர்ட் பாதுகாப்பு பணியில் மத்திய போலீஸ்: தமிழக அரசு எதிர்ப்பை நிராகரித்து ஐகோர்ட் உத்தரவு Posted: சென்னை: 'சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, நவ., 16 முதல், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக அரசின் எதிர்ப்பை, உயர் நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. மேலும், ஒரு வாரத்துக்குள், மத்திய அரசு கோரியுள்ள, 16.60 கோடி ரூபாயை, டிபாசிட் செய்யவும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில், தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, தலைமை நீதிபதி அமர்ந்து வழக்குகளை விசாரிக்கும் முதலாவது நீதிமன்ற ஹாலில், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிருப்பு ... |
| 'ஒளிரும் நிகழ்காலம்; மிளிரும் வருங்காலம்': புது கோஷத்துடன் அ.தி.மு.க., பிரசாரம் Posted: சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணியாக, அ.தி.மு.க.,வில் ஓட்டுச்சாவடி வாரியாக, பூத் ஏஜன்ட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்; அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில், வீடு தோறும் சென்று, சாதனைகளை கூறி, பிரசாரம் செய்ய வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, 234 சட்டசபை தொகுதிகளையும் இலக்காக வைத்து, புதிய கோஷங்களுடன், சமூக வலைதளங்களில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி பிரசாரத்தை துவக்கி உள்ளது. முதல் கோஷமாக, 'ஒளிரும் நிகழ்காலம், மிளிரும் வருங்காலம்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., இணையதளத்தின் முதல் பக்கத்தில், இக்கோஷம் பின்னணி இசையுடன் ... |
| விவசாயிகளுக்காக ரகசிய திட்டம்: விஜயகாந்தின் புதிய அறிவிப்பு Posted: திருவாரூர்,: ''டெல்டா மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், தே.மு.தி.க., சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அதில், விஜயகாந்த் பேசியதாவது:தமிழகத்தில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறிமாறி ஆட்சிக்கு வந்து விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை. கர்நாடகா, கேரள மாநில முதல்வர்களிடம் தண்ணீர் கேட்க, முதல்வர் ஜெயலலிதா கவுரவம் பார்க்கிறார். இதனால், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்க்க ... |
| எதிர்கால அணு சோதனைக்காக பூமிக்கடியில் சுரங்கப்பணிகள்: மிரட்டுது வடகொரியா Posted: பையோங்: வடகொரியா எதிர்காலத்தில் பரந்தஅளவிலான அணு ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை நடத்துவதற்காக பூமிக்கடியில் மெகா சுரங்கம் தோண்டும் பணியை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.வடகொரிய அதிபராக கிம் ஜோங் உன் உள்ளார். அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள வடகொரியா கடந்த 2013-ம் ஆண்டு முதல் இதுவரை மூன்று முறை அணு சோதனை நடத்தி சர்வதேச சமூகத்தினை மிரட்டி வருகிறது. வடகொரியாவின் இந்த போக்கிற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அணு திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியது.இந்நிலையில் யான்ஹாப் என்ற செய்தி நிறுவனம் ... |
| அ.தி.மு.க.,வினர் பொறாமையில் வெம்பி தவிப்பு: ஸ்டாலின் Posted: சென்னை: 'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணதினால் அ.தி.மு.க.,வினர் பொறாமையில் வெம்பி தவிக்கின்றனர் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: 'நமக்கு நாமே' விடியல் மீட்புப் பயணத்தை, அ.தி.மு.க.,வினர் கொச்சைபடுத்தி, விமர்சிக்கின்றனர். இதற்கெல்லாம், கவலைப்பட மாட்டேன். காரணம், இந்த பயணம் ஏற்படுத்திய தாக்கத்தால், அவர்கள் அரண்டு போய் உள்ளனர். அதனால்தான், அவர்கள் பொறாமையில் இப்படி வெம்பித் தவிக்கின்றனர்; விமர்சிக்கின்றனர். சுற்றுப்பயணத்தின் போது, நான் சந்தித்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல தரப்பினரும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 31,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |