Tamil News | Online Tamil News |
- பொய் சொல்வதை நிறுத்துங்க: மோடி மீது ராகுல் பாய்ச்சல்
- பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் சிக்கினான்: தாவூத் இப்ராகிமின் 'மாஜி' கூட்டாளி
- பேச்சு இன்னும் தொடர்கிறது அ.தி.மு.க., குழுவிடம் சுஷ்மா தகவல்
- இந்தியாவை ஒடுக்க பயங்கரவாதம்: பாக்., செய்த சூழ்ச்சி அம்பலம்
- வடகிழக்கு பருவமழை நாளை துவக்கம்!
- எல்லை தாண்டினால் ரூ.15 கோடி அபராதமா: இலங்கைக்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு
- 'தி.மு.க., ஆட்சியில் தவறு': ஸ்டாலின் பகிரங்க ஒப்புதல்
- தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு: முதல்வருக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
- தி.மு.க., பொதுக்கூட்டத்திற்காக குளங்கள் அழிப்பு
- நில அதிர்வால் டில்லி உட்பட பல வட மாநிலங்கள் குலுங்கியது: பாக்., ஆப்கன் நாடுகளில் பெரும் சேதம்; பலர் பலி
- சீன பட்டாசுகளை தடுக்க 36 தனிப்படைகள்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
| பொய் சொல்வதை நிறுத்துங்க: மோடி மீது ராகுல் பாய்ச்சல் Posted: மோதிஹரி:''பிரதமர் நரேந்திர மோடி, பொய் பிரசாரம் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்,'' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசினார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபைக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாவது கட்டமாக, 50 தொகுதிகளில், நாளை தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில், தேர்தல் பிரசாரம், நேற்று மாலையுடன் முடிந்தது. மோதிஹரியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:பொய் பிரசாரம் செய்வதில் மோடி வல்லவர்; அது, அவர் ஆர்.எஸ்.எஸ்., ... |
| பிரபல நிழல் உலக தாதா சோட்டா ராஜன் சிக்கினான்: தாவூத் இப்ராகிமின் 'மாஜி' கூட்டாளி Posted: ஜகார்தா:கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த, நிழல் உலக தாதா சோட்டா ராஜன், 55, இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டான். அவனை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்பையைச் சேர்ந்த சோட்டா ராஜனின் இயற்பெயர், ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி. ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கொலை, கொள்ளை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தாதாவாக வலம் வந்தான். சர்வதேச போலீசார்இந்தியாவில் இவன் மீது, 20க்கும் அதிகமான கொலை வழக்குகள் உள்ளன. வழக்குகளில் சிக்காமல் இருப்பதற்காக ... |
| பேச்சு இன்னும் தொடர்கிறது அ.தி.மு.க., குழுவிடம் சுஷ்மா தகவல் Posted: 'ஆந்திர சிறையில் உள்ள, இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை விடுதலை செய்வதற்காக, அம்மாநில அரசுடன், பேச்சு நடந்து வருகிறது. அதன்பின், இலங்கை சிறையில் உள்ள, தமிழக மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகள் துரிதமடையும்' என, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் குழுவிடம், மத்திய அரசு கூறியுள்ளதாக தெரியவந்து உள்ளது. இரு வாரங்களாகியும்... 'இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக, பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தும்படி, அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு ... |
| இந்தியாவை ஒடுக்க பயங்கரவாதம்: பாக்., செய்த சூழ்ச்சி அம்பலம் Posted: புதுடில்லி: ஆப்கானிஸ்தானில், இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதை பொறுக்காமல், அதை சீர்குலைக்க, பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் பயன்படுத்தியது அம்பலமாகிஉள்ளது. அமெரிக்க உளவுத் துறையின் இயக்குனர், ஜான் பிரன்னன். இவர், 2008, நவம்பரில், அமெரிக்க அதிபராக, ஒபாமா தேர்வானபோது, அவரது வெளியுறவு கொள்கை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆலோசகராக இருந்தார். அப்போது, அவர், ஒபாமாவுக்கு எழுதிய கடிதங்களை, 'விக்கிலீக்ஸ்' இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா - பாகிஸ்தான் தொடர்பான, 13 பக்க கடிதங்களில் உள்ள விவரம்:* ஆப்கனில், இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை, ... |
| வடகிழக்கு பருவமழை நாளை துவக்கம்! Posted: தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை நாளை துவங்குகிறது. நடப்பாண்டில், தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, ஒரு வாரம் தாமதமாக துவங்குகிறது. தற்போது பருவமழைக்கான அறிகுறிகள் வலுவடைந்துள்ளன. 'வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், நாளை முதல், 30ம் தேதி வரை கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.'சென்னையில், நாளை ஒரே நாளில், 30 செ.மீ., மழை பெய்யும்; முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி பெயரில், 'வாட்ஸ் ஆப்'பில், நேற்று உலா வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், நாளை நடக்க இருந்த ... |
| எல்லை தாண்டினால் ரூ.15 கோடி அபராதமா: இலங்கைக்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு Posted: 'எல்லையை தாண்டி மீன் பிடித்தால், 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, இலங்கை மீன்வளத்துறை அதிகாரி அறிவித்துள்ளது, தமிழக மீனவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 'சமரச பேச்சுக்கு, இது முட்டுக்கட்டையாக அமையும்' என, மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.பாக் நீரிணை பகுதியில் மீன்பிடித்தல் தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. மூன்று கட்ட பேச்சு நடத்தியும், சிக்கலுக்கு தீர்வு ஏற்படவில்லை. 'பாக் நீரிணை பகுதியில், மீன்பிடி உரிமை தர முடியாது' என, இலங்கை மீனவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.இலங்கை சிறையில் உள்ள, 86 தமிழக மீனவர்களை, நாளை ... |
| 'தி.மு.க., ஆட்சியில் தவறு': ஸ்டாலின் பகிரங்க ஒப்புதல் Posted: சேலம் : ''கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த தவறுகள், இனி இருக்காது; அதற்கு துணையாக, நான் கூட இருந்திருக்கலாம். இனிமேல், அதுபோன்று நடக்காது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பகிரங்கமாக கூறினார்.'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ள ஸ்டாலின், நேற்று, மூன்றாம் கட்ட பயணத்தை சேலத்தில் துவக்கினார். சங்ககிரியில், லாரி உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.அப்போது, சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி பேசியதாவது: சங்ககிரியில், 15 ஆயிரம் லாரிகள் உள்ளன; அனைத்து லாரிகளையும் நிறுத்தும் வகையில், சங்ககிரியில் ஆட்டோ நகர் அமைக்க வேண்டும். ... |
| தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு: முதல்வருக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்' Posted: சென்னை : சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அவருக்கும், தேர்தல் கமிஷன் உட்பட, 31 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த தண்டனையால், முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்த ஜெயலலிதா, பின், மேல் முறையீட்டில், கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனால், மீண்டும் முதல்வரானார்; அவர் தேர்தலில் போட்டியிட ஏதுவாக, ஆர்.கே.நகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த ... |
| தி.மு.க., பொதுக்கூட்டத்திற்காக குளங்கள் அழிப்பு Posted: செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் அருகே, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள, 'நமக்கு நாமே' பயண பொதுக்கூட்டத்திற்காக அழிக்கப்பட்ட, இரு குளங்களை கோட்டாட்சியர் மீட்டார்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், 'நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசுகிறார். நவம்பர், 21ல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ள ஸ்டாலின், சிங்கபெருமாள் கோவிலை அடுத்த ஆப்பூர் கிராமத்தில், பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் ... |
| Posted: இஸ்லாமாபாத்: வட கிழக்கு ஆப்கனை மையமாக வைத்து, நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஆப்கன், பாக்., நாடுகளில், 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; இந்தியாவில், டில்லி உட்பட, வட மாநிலங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியில், வீடுகளிலிருந்து ஓட்டம் பிடித்தனர்.ஆப்கன் தலைநகர் காபூலிலிருந்து, 250 கி.மீ., தொலைவில், இந்துகுஷ் மலைப்பகுதியில், 213 கி.மீ., ஆழத்தில், நேற்று பிற்பகல், 2:40 மணிக்கு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 7.5 புள்ளியாக பதிவான, இந்த நிலநடுக்கத்தால், ஆப்கன் மட்டுமல்லாது, அண்டை நாடான பாகிஸ்தானின் பெரும்பகுதிகள், பலத்த பாதிப்புக்கு ... |
| சீன பட்டாசுகளை தடுக்க 36 தனிப்படைகள்: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் Posted: சென்னை: 'சீன பட்டாசுகளை கண்டுபிடித்து அழிப்பதற்காக, மாநிலம் முழுவதும், 36 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு தெரிவித்தது.சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர் சங்கத்தின் செயலர் ஷேக் அப்துல்லா தாக்கல் செய்த மனு:சென்னை உயர் நீதிமன்றம், 2011ல் பிறப்பித்த உத்தரவுப்படி, சென்னை, தீவுத் திடலில் பட்டாசு கடைகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டும், பட்டாசு கடைகளை அமைப்பதற்கான பணிகளை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்து வருகிறது. எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கிய போது, சிவகாசி பட்டாசுகளை மட்டுமே வாங்கி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 27,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |