Tamil News | Online Tamil News |
- அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை
- தவறாக பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு ராஜ்நாத் கண்டனம்
- நாடு முழுவதும் பருப்பு விலை விரைவில் குறையும்: கிலோ ரூ.135க்கு வழங்க இறக்குமதியாளர்கள் உறுதி
- காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சூடு
- அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு
- 'தேர்தலை சந்திக்க தி.மு.க., தயார்': ஸ்டாலின்
- 'தோற்றால் பதவி காலி!': கருணாநிதி எச்சரிக்கை
- 21 வயதுக்கு குறைவானவர்கள் மது அருந்துவதை தடுக்க உத்தரவு
- தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தாமதம்: இம்மாத இறுதியில் கொட்டத் துவங்கும்
- தங்க சேமிப்பு திட்டத்திற்கு வட்டி: வங்கிகள் முடிவெடுக்க அனுமதி
| அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை Posted: தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவு: அரசு பள்ளி ஆசிரியர்கள் அனுமதியின்றி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற்று, விடுப்பு ... |
| தவறாக பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு ராஜ்நாத் கண்டனம் Posted: புதுடில்லி,:மத்திய அமைச்சர், வி.கே.சிங், பரீதாபாத்தில், தலித் குழந்தைகள் கொல்லப்பட்டது தொடர்பாக, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர்களும், பா.ஜ., தலைவர்களும், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் கூறிவருவதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர், வி.கே.சிங், ஹரியானா மாநிலம், பரீதாபாத்தில், இரு தலித் குழந்தைகள் கொல்லப்பட்டது தொடர்பாக கூறும் போது, 'யாராவது நாயை கல்லால் அடித்தால் கூட, அதற்கு, மத்திய அரசை குறை கூறுகின்றனர்' எனக் கூறிஇருந்தார். ... |
| நாடு முழுவதும் பருப்பு விலை விரைவில் குறையும்: கிலோ ரூ.135க்கு வழங்க இறக்குமதியாளர்கள் உறுதி Posted: புதுடில்லி: தினந்தோறும், 1 லட்சம் கிலோ துவரம் பருப்பை, இறக்குமதி செய்து, கிலோ, 135 ரூபாய் விலையில்,அரசு நிறுவனங்களுக்கு அளிக்க, பருப்பு இறக்குமதியாளர்கள் முன்வந்துள்ளனர். இதனால், பருப்பு விலை, விரைவில் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வட மாநிலங்களில் இந்தாண்டு பருவ மழை பொய்த்தது. ஒரு சில மாநிலங்களில் பருவம் தவறி, மழை பெய்தது. இதனால், 2014 - 15ல், பருப்பு விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டது. பருப்பு விவசாயம் அதிகம் நடக்கும், உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பாதிப்பு அதிகம் இருந்ததால், நாடு முழுவதும், இதன் தாக்கம் எதிரொலித்தது. பருப்பு உற்பத்தி, 20 ... |
| காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாது பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சூடு Posted: வாஷிங்டன்:'காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும்' என, பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை, அமெரிக்கா நிராகரித்து உள்ளது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அமெரிக்கஅதிபர் ஒபாமாவை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இதையடுத்து, இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின், வெள்ளை மாளிகை செய்தித் துறையின் துணைச் செயலர் எரிக் ஸ்கல்ட்ஸ் அளித்த பேட்டி:நவாஷ் ஷெரீப், காஷ்மீர் பிரச்னையில், அமெரிக்கா தலையிட வேண்டும் என, ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்தார்.இதை, ஒவ்வொரு சந்திப்பிலும் பாகிஸ்தான் ... |
| அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு Posted: தமிழகத்தில், அரசு பஸ்சை இயக்கிய, முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கு உரியவர் வசந்தகுமாரி, 57. துவக்கத்தில், பஸ் டிரைவர் பணியில் சேர முயன்ற போது, உயரம் குறைவு எனக்கூறி ஓரம் கட்டப்பட்டார்; தொடர் முயற்சியால், தன், 34 வயதில், அரசு பஸ் டிரைவரானார்.அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, 'சிறப்பாக செயல்படு; ஆதரவாக இருப்பேன்' என்று கூறிய வார்த்தைகளை உள் வாங்கி, பஸ்சை இயக்க துவங்கினார். தற்போது, நெல்லை கழகமாக செயல்படும், அப்போதைய நேசமணி போக்குவரத்து கழகத்தில், 1993ல் பணியில் சேர்ந்தார். பயணிகளும், பணியாளர்களும் வியக்கும் அளவிற்கு சிறப்பாக பஸ்சை ... |
| 'தேர்தலை சந்திக்க தி.மு.க., தயார்': ஸ்டாலின் Posted: சென்னை: ''எந்த நேரத்தில், சட்டசபை தேர்தல் வந்தாலும், சந்திக்க தயார்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.அ.தி.மு.க., - பா.ம.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த பலர், ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர். சென்னை, அறிவாலயத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:பருப்பு விலை உச்சத்துக்கு சென்றுள்ளது. அ.தி.மு.க., அரசு, எந்த விலைவாசி உயர்வையும் கண்டுகொள்வதில்லை; கவலைப்படாமல், கோடநாட்டில் முதல்வர் ஜெயலலிதா தங்கியுள்ளார். 'நமக்கு நாமே' பயணத்தின் போது, விலைவாசி உயர்வு பற்றி, மக்கள் ஆதங்கத்துடன், வருத்தத்துடன் ... |
| 'தோற்றால் பதவி காலி!': கருணாநிதி எச்சரிக்கை Posted: சென்னை: 'சட்டசபை தேர்தல் பணிகளில், முழு மூச்சாக ஈடுபட்டு, வெற்றி கனிகளை சமர்ப்பிக்க வேண்டும்; தோல்வியை தழுவினால், பதவிகள் பறிக்கப்படும்' என, புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.தி.மு.க.,வில் உள்ள, 65 மாவட்டங்களிலும், ஓட்டுச்சாவடி ஏஜன்ட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இப்பட்டியலில் இடம்பெற்ற, 'மாஜி' அமைச்சர்கள் நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட சிலர், நேற்று கோபாலபுரம் ... |
| 21 வயதுக்கு குறைவானவர்கள் மது அருந்துவதை தடுக்க உத்தரவு Posted: சென்னை:'தமிழகத்தில், 21 வயதுக்கு குறைவானவர்கள், மது குடிக்க விதித்துள்ள தடையை, தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு, 2003ல் பிறப்பித்த, மதுபான சில்லரை விற்பனை விதிகளை தீவிரமாக அமல்படுத்தக் கோரி, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.மனுவில் கூறியுள்ளதாவது:* தமிழகத்தில், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு, மது விற்பனை செய்யக் கூடாது; அவர்கள் மது அருந்த அனுமதிக்கக் கூடாது என்ற விதியை, தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்* இந்த விதிப்படி, ௨௧ ... |
| தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தாமதம்: இம்மாத இறுதியில் கொட்டத் துவங்கும் Posted: தமிழகத்தில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை தாமதமாகிறது. வழக்கமாக, அக்., 17 முதல், 21ம் தேதிக்குள் துவங்க வேண்டிய பருவ மழை, ஒரு வாரம் தாமதமாக, 27ல் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது; எனினும், எதிர்பார்த்த அளவு பெய்யும் என, கணிக்கப்பட்டுள்ளது.நம் மாநிலத்தில், தென்மேற்கு திசை நோக்கி காற்று வீசும் பருவம், ஜூன் முதல், செப்டம்பர் வரை; இப்பருவத்தில், குறைந்த அளவே மழை பெய்யும். இதைத் தொடர்ந்து, வட கிழக்கு திசையில் காற்று வீசும் பருவம் துவங்கும். இது பொதுவாக, அக்., 17 முதல், 21ம் தேதிக்குள் துவங்கி, டிசம்பர் வரை நீடிக்கும். இந்த காலத்தில், சராசரியாக, 28 நாட்கள், சென்னை ... |
| தங்க சேமிப்பு திட்டத்திற்கு வட்டி: வங்கிகள் முடிவெடுக்க அனுமதி Posted: மும்பை:மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள, தங்க சேமிப்பு திட்டத்திற்கான வட்டியை, வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டம் தொடர்பான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:தங்க சேமிப்பு திட்டத்தின் கீழ் பெறப்படும், தங்க நகைகளின், 'டிபாசிட்'டிற்கான வட்டியை, வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஒன்று முதல், மூன்று ஆண்டுகள் வரையிலான தங்க டிபாசிட் திட்டத்திற்கு வங்கிகளும், 5 - 7 ஆண்டுகள் மற்றும், 12 - 15 ஆண்டுகள் வரையிலான தங்க டிபாசிட் திட்டங்களுக்கு, மத்திய அரசும் பொறுப்பேற்கும். திட்ட முதிர்வு காலத்தில், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 24,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |