Tamil News | Online Tamil News |
- வன்முறையாளர்களுக்கு அமைச்சர் ஜெட்லி எச்சரிக்கை: நாட்டின் கவுரவம் பாதிக்கப்படும் என்கிறார்
- 5,800 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல்
- இந்திராவின் அரசியல் வாரிசு பிரியங்கா
- புதிய தொழில் பதிவுக்கு 'ஆதார்' அவசியம்: சுப்ரீம் கோர்ட்டை மீறுகிறதா மத்திய அரசு?
- சோனியா மருமகனுக்கு ஹரியானா அரசு 'நோட்டீஸ்'
- ராஜா சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ.,க்கு திடீர் நெருக்கடி
- 'கும்பி எரியுது; குடல் கருகுது; கோடநாடு ஒரு கேடா': கருணாநிதி கோபம்
- குறுநில மன்னர்கள் போல பேராசிரியர்கள்: 10 ஆண்டுகளுக்கு மேலாக 'நங்கூரம்'
- தமிழகத்தில் காஸ் மானியத்தை சரண்டர் செய்தவர்கள் 2.54 லட்சம் பேர்: முதல் ஐந்து இடங்களில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை
- நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்
| வன்முறையாளர்களுக்கு அமைச்சர் ஜெட்லி எச்சரிக்கை: நாட்டின் கவுரவம் பாதிக்கப்படும் என்கிறார் Posted: புதுடில்லி: மாற்று கருத்துகளை கூறுவோர் மீது, சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ''ஒருவர் தெரிவிக்கும் கருத்தில் உடன்பாடில்லை என்றால், அதுகுறித்து ஆரோக்கியமான விவாதம் நடத்தலாமே தவிர, வன்முறையை கட்டவிழ்த்து விடக்கூடாது,'' என, அவர் எச்சரித்து உள்ளார். மாட்டிறைச்சி விவகாரம், இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி குறித்த பேச்சு, பாக்., முன்னாள் அமைச்சரின் புத்தக வெளியீட்டு விழா தொடர்பான விஷயங்களில், சமீபகாலமாக விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. ... |
| 5,800 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் Posted: புதுடில்லி: 'பருப்பு வகைகளை பதுக்கி வைத்து, கொள்ளை லாபம் பார்த்த வியாபாரிகளிடம் இருந்து, 5,800 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.பருப்பு வகைகளின் விலை, கடந்த சில மாதங்களாக உயர்ந்து, வரலாறு காணாத வகையில், உச்சத்திற்கு சென்று விட்டது. ஓராண்டுக்கு முன், 1 கிலோ துவரம் பருப்பு விலை, 50 - 80 ரூபாயாக இருந்தது. இப்போது, 190 - 200 ஆக உயர்ந்துள்ளது.இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். |
| இந்திராவின் அரசியல் வாரிசு பிரியங்கா Posted: புதுடில்லி :'மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, தன் அரசியல் வாரிசாக, பேத்தி பிரியங்கா உருவாக வேண்டுமென விரும்பினார்' என, இந்திராவின் நீண்டகால அரசியல் ஆலோசகர் எம்.எல்.பொத்தேதார் கூறிஉள்ளார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா, 1984ல் பிரதமராக இருந்த போது, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின், அவரது மூத்த மகன் ராஜிவ், பிரதமரானார். |
| புதிய தொழில் பதிவுக்கு 'ஆதார்' அவசியம்: சுப்ரீம் கோர்ட்டை மீறுகிறதா மத்திய அரசு? Posted: புதுடில்லி:ரேஷனில் பொருட்கள் வாங்குவது, சமையல் காஸ் மானியம் போன்ற சில திட்டங்களுக்கு மட்டுமே, ஆதார் அடையாள எண்ணை சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ள நிலையில், புதிய தொழில் நிறுவனங்களை பதிவு செய்வோருக்கு, ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துஉள்ளது. அரசின் நலத்திட்டங்களின் பயன்களை பெற, ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான வழக்கில், சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு:அரசின் நல உதவிகளை பெற, ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை. ரேஷனில் பொருட்கள் வாங்குவது, சமையல் காஸ் மானியம் ... |
| சோனியா மருமகனுக்கு ஹரியானா அரசு 'நோட்டீஸ்' Posted: சண்டிகர்:பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, டி.எல்.எப்.,புடன் கொண்டுள்ள நில பரிவர்த்தனை தகவல்களை தருமாறு, காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவுக்கு, ஹரியானா மாநில அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. 'டி.எல்.எப்., நிறுவனத்துடன், சோனியா மருமகன் செய்து கொண்ட நில பரிவர்த்தனை ஒப்பந்தம் முறைகேடானது' எனக் கூறிய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்தார்.இந்த நில விவகாரம் தொடர்பாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீகாந்த் ஜாதவ் தலைமையிலான, எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. ராபர்ட் வாத்ராவின் நிறுவனம், ... |
| ராஜா சொத்து குவிப்பு வழக்கு: சி.பி.ஐ.,க்கு திடீர் நெருக்கடி Posted: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீதான வழக்கை, துரிதப்படுத்தும்படி, சி.பி.ஐ.,க்கு மேலிடத்தில் இருந்து, நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தி.மு.க.,வைச் சேர்ந்தவர், ஆ.ராஜா. அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக, 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, சென்னை சி.பி.ஐ., அலுவலகத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பாக, ராஜா, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஆகஸ்ட், 20ல் சோதனை நடந்தது.சென்னை, பெரம்பலுார், டில்லி, திருச்சி, கோவை உட்பட, 17 இடங்களில் நடைபெற்ற அதிரடி சோதனையில், 200க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள், 6.5 ... |
| 'கும்பி எரியுது; குடல் கருகுது; கோடநாடு ஒரு கேடா': கருணாநிதி கோபம் Posted: சென்னை: 'கும்பி எரியுது; குடல் கருகுது; கோடநாடு ஒரு கேடா' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க., ஆட்சியில், விலைவாசி இறக்கை கட்டி விண்ணை நோக்கி வேகமாக பறக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன் உள்ள விலையை, இப்போது அதே பொருட்களின் விலையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். தேர்தல் வருவதால் அரைத் துாக்கம் கலைந்து, 'அங்காடிகளில் குறைந்த விலைக்கு பருப்பு விற்பனை துவங்கப்படும்' என, தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பதை போல, அரசு அறிவித்துள்ளது.இதனால், 'கும்பி எரியுது; குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா' என, தமிழக மக்களுக்கு கேட்கத்தான் ... |
| குறுநில மன்னர்கள் போல பேராசிரியர்கள்: 10 ஆண்டுகளுக்கு மேலாக 'நங்கூரம்' Posted: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில், பல பேராசிரியர்கள் பணிபுரிந்து, குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. 8,500 உதவி, இணை பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூலையில் விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடக்கும். இந்த ஆண்டு கல்லுாரிகள் திறந்து, முதல் பருவத்தேர்வு வந்து விட்ட நிலையில், இன்னும் கலந்தாய்வை நடத்தவில்லை.அதே நேரத்தில், செல்வாக்குள்ள பேராசிரியர்கள் மட்டும், தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு, ... |
| Posted: சென்னை: தமிழகத்தில், செப்டம்பர் வரை, 2.54 லட்சம் பேர், சமையல் காஸ் சிலிண்டர் மானியத்தை, எண்ணெய் நிறுவனங்களிடம் சரண்டர் செய்துள்ளனர். காஸ் மானியத்தை சரண்டர் செய்தவர்கள் அதிகம் நிறைந்த முதல் ஐந்து மாநிலங்களில், தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.59 கோடி வீட்டு சமையல் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர்; இவர்கள், ஆண்டுக்கு, தலா, 12 சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் பெறுகின்றனர். அதற்கு மேல், எவ்வளவு சிலிண்டர்கள் வேண்டுமானாலும், ... |
| நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் Posted: வாஷிங்டன்:அமெரிக்காவுக்கு வந்துள்ள, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள இந்து அமைப்புகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துஉள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அதிபர் ஒபாமாவை, நவாஸ் ஷெரீப் நாளை சந்தித்து பேச உள்ளார். மும்பையில் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தான் அடைக்கலம் வழங்குவதை கண்டித்து, அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பு கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. அதுபோல், பாகிஸ்தானின் ஒரு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 21,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |