Tamil News | Online Tamil News |
- ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ.,க்கு கண்டனம்
- எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி...மிச்சம் நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்
- உள்விவகாரங்களில் தலையிடுகிறது பாக்., மீது இந்தியா குற்றச்சாட்டு
- ராமேஸ்வரத்தில் கலாம் நினைவிடம்
- மேலும் முற்றுகிறது நடிகர்கள் பலப்பரீட்சை: ராதாரவியின் 10 கேள்விகள்
- 'தமிழர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவுங்கள்!'
- மீண்டும்...!மஹாராஷ்டிரா மாநிலத்தில் 'டான்ஸ் பார்'கள்:மாநில அரசு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
- ஜெ., ஆட்சி முடிவுக்கு வர 3 மாதம் ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் ஆரூடம்
- பாரத ஸ்டேட் வங்கி சேவையால் அதிருப்தி
- கைதாவாரா ஹிமாச்சல் முதல்வர்?
| ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ.,க்கு கண்டனம் Posted: புதுடில்லி:தனியார் நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் ஷ்யாமல் கோஷை விடுவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. பொய் வழக்கு போட்டதற்காக, சி.பி.ஐ.,க்கு கடும் கண்டனமும் தெரிவித்தது. சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த, முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரிக்கிறது. முந்தைய காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு, கூடுதல் ... |
| எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி...மிச்சம் நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம் Posted: புதுடில்லி,:நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் ... |
| உள்விவகாரங்களில் தலையிடுகிறது பாக்., மீது இந்தியா குற்றச்சாட்டு Posted: நியூயார்க்,:''ஐ.நா.,வில், சம்பந்தமில்லாமல், ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை இழுத்து, இந்தியாவின் உள்விவகாரத்தில், பாகிஸ்தான் மூக்கை நுழைக்கிறது,'' என, ஐ.நா.,வில், இந்திய குழுவின் முதன்மை செயலர், அபிஷேக் சிங் காட்டமாக கூறினார். அண்மையில், ஐ.நா., பொதுச் சபையில், பாகிஸ்தான் துாதர், மலிஹா லோதி பேசினார். அப்போது, 'காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; அங்கு அமைதியை ஏற்படுத்த பாகிஸ்தான் விரும்பினாலும், இந்தியாவின் நிபந்தனையால், இருதரப்பு பேச்சு நடைபெறாமல் உள்ளது' என, அவர் தெரிவித்திருந்தார். இந்தியா பதிலடிஇதற்கு, நேற்று முன்தினம், ஐ.நா., கூட்டத்தில், 'பதில் ... |
| ராமேஸ்வரத்தில் கலாம் நினைவிடம் Posted: புதுடில்லி:''மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் மத்திய அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும்; அதற்கான பணிகள் விரைவில் துவங்கும்'' என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.நாட்டின் 11வது ஜனாதிபதியாக 2002 முதல் 2007 வரை பதவி வகித்த தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஜூலை 27ல் இறந்தார். அவரின் 84வது பிறந்த நாளான நேற்று டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அதில் அவர் பேசியதாவது:இரண்டு விதமான மனிதர்கள் உள்ளனர். ஒரு தரப்பினர் வாய்ப்புகளுக்காக காத்திருப்பவர்கள்; இரண்டாவது தரப்பினர் சவால்களை ... |
| மேலும் முற்றுகிறது நடிகர்கள் பலப்பரீட்சை: ராதாரவியின் 10 கேள்விகள் Posted: நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணிக்கு ஆதரவாக இருக்கும், பிரதான நடிகர்களை, தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் நடிகர் ராதாரவி களம் இறங்கி உள்ளார்.விஷால் அணியில் உள்ளவர்களிடம், 10 கேள்விகளை முன் வைத்து, உருக்கமாக பேசி வருகிறார். விஷால் அணிக்கு ஆதரவாக செயல்படும் நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவாவை நட்சத்திர ஓட்டலில் சந்தித்துள்ளார்; நடுநிலை வகிக்கும் நடிகர்கள் தனுஷ், விக்ரம் பிரபுவையும் சந்தித்ததாகத் தெரிகிறது.அவர்களிடம், ராதாரவி முன் வைத்த பத்து கேள்விகள்:* நடிகர் சங்கத்தில் உங்களுக்கு என, தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததா?* அந்த பிரச்னைகளை, நடிகர் சங்க ... |
| 'தமிழர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவுங்கள்!' Posted: சென்னை:'ஆந்திர சிறையில் வாடும், தமிழகத்தைச் சேர்ந்த, 516 பேர், ஜாமினில் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தைச் சேர்ந்த, 516 பேர், வனம் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட், 13 நிலவரப்படி, கடப்பா மாவட்டத்தில், 107 பேர்; சித்துார் மாவட்டத்தில், 109 பேர்; திருப்பதி நகர காவல் மாவட்டத்தில், 300 பேர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், படிப்பறிவு இல்லாத பழங்குடியினர் மற்றும் ... |
| மீண்டும்...!மஹாராஷ்டிரா மாநிலத்தில் 'டான்ஸ் பார்'கள்:மாநில அரசு சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை Posted: புதுடில்லி: மஹாராஷ்டிராவில், 'டான்ஸ் பார்'களுக்கு தடை விதித்து, மாநில அரசு பிறப்பித்திருந்த சட்டத்தை, சுப்ரீம் கோர்ட் நேற்று நிறுத்தி வைத்து விட்டது; இதனால், மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில், டான்ஸ் பார்கள் மீண்டும் செயல்படும் சூழல் உருவாகி உள்ளது. ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில், அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் நடனமாடும் பார்கள், மும்பை உட்பட, மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வந்தன. அவற்றுக்கு தடை விதித்து, முந்தைய, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சட்டம் கொண்டு ... |
| ஜெ., ஆட்சி முடிவுக்கு வர 3 மாதம் ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் ஆரூடம் Posted: ராமேஸ்வரம்: தமிழக மக்கள் வேதனைபடும் ஜெ. ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 3 மாதம் தான் உள்ளது என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.ராமேஸ்வரத்தில் நடந்த பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெ., மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடல் அடக்கத்திற்கும், பிறந்த தினத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார். மாணவர்களுக்காக வாழ்ந்து வழிகாட்டிய கலாம் பிறந்த தினத்தை மாணவர் தினமாக மாநில அரசு அறிவிக்க வேண்டும். கடும் விலை வாசி உயர்வால் தமிழக மக்கள் அவதிபடுகின்றனர். ஜெ., ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 3 மாதம் தான் உள்ளது. அதன் பிறகு, ஜெ., ... |
| பாரத ஸ்டேட் வங்கி சேவையால் அதிருப்தி Posted: சென்னை: நாட்டின் மிகப்பெரிய வங்கி என பெயர் எடுத்துள்ள, பாரத ஸ்டேட் வங்கியின் சேவை குறைப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்தபட்ச வைப்பு தொகைக்கு கட்டுப்பாடும், டி.டி., வழங்குவதில் தேவையற்ற கண்டிப்பும் காட்டப்படுகிறது.பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சிலர் கூறியதாவது:சென்னை கணேசன்: பாரத ஸ்டேட் வங்கியில் அனுசரணையான வார்த்தைகளை, ஊழியர்களிடம் எதிர்பார்க்க முடிவதில்லை. வங்கிக்கு வருவதையே விரும்பாதவர்கள் போல எங்களை நடத்துகின்றனர். எனவே, என் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற உள்ளேன்.காஞ்சிபுரம் சுதர்சன்: டி.டி., வழங்குவதை, 'அவுட் சோர்சிங்' செய்து ... |
| Posted: புதுடில்லி :சொத்துக் குவிப்பு வழக்கில், ஹிமாச்சல் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான வீர்பத்ர சிங்கை கைது செய்ய, சி.பி.ஐ., தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக, சி.பி.ஐ., தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீர்பத்ர சிங், அவர் மனைவி உள்ளிட்டோர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, வீர்பத்ர சிங்கின் வீட்டில், சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. தன்னை, சி.பி.ஐ., கைது செய்ய தடைவிதிக்க கோரி, வீர்பத்ர சிங், ஹிமாச்சல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 16,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |