Tamil News | Online Tamil News |
- நாட்டில் கறுப்புப்பண முதலைகள் இனி தப்ப முடியாது: மோசடியை கண்டுபிடிக்கும் 'சாப்ட்வேர்' தயார்
- எய்ம்ஸ் மருத்துவுமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட 'பிரெட்' பாக்கெட்டில் எலி: நோயாளிகள் அதிர்ச்சி
- பாகிஸ்தானின் அறிவுரை தேவையில்லை: மத்திய அரசு பாய்ச்சல்
- கலாசார தாக்குதல்: கருணாநிதி கண்டனம்
- 'சிவில் சர்வீசஸ்' தேர்வு: தமிழகம் பின்னடைவு
- மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்
- கடனில் தவிக்கும் மின் வாரியம்: கைவிரித்தது டில்லி
- தமிழகத்திலும் அமித் ஷா புது 'பார்முலா'
- ஓட்டல்களில் விலை உயர்வில் இருந்து டீ, காபி, இட்லி தப்பியது: சாப்பாடு விலை 5 ரூபாய் அதிகரிப்பால் மக்கள் கவலை
- தாத்ரி சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்னை: அமித் ஷா பேட்டி
| நாட்டில் கறுப்புப்பண முதலைகள் இனி தப்ப முடியாது: மோசடியை கண்டுபிடிக்கும் 'சாப்ட்வேர்' தயார் Posted: புதுடில்லி:கறுப்புப்பண புழக்கத்தை கண்டுபிடித்து, ஒழிக்கும் வகையில், ஒருவரது அனைத்து பணப்பரிமாற்றங்களையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண் மூலம் பின்தொடர உதவும் சாப்ட்வேர் எனப்படும் மென்பொருளை, வருமான வரித்துறை, இம்மாத இறுதியில் பயன்படுத்த உள்ளது.நாடு முழுவதும், பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்பணம், புழக்கத்தில் உள்ளது. பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு, கறுப்புப்பணம் முக்கிய காரணமாக உள்ளது. |
| எய்ம்ஸ் மருத்துவுமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட 'பிரெட்' பாக்கெட்டில் எலி: நோயாளிகள் அதிர்ச்சி Posted: புதுடில்லி,: நோயாளிகளுக்கு வழங்கப்படும் பிரெட், பால் போன்றவற்றின் தரம் குறித்த சர்ச்சை அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுவது வழக்கம். |
| பாகிஸ்தானின் அறிவுரை தேவையில்லை: மத்திய அரசு பாய்ச்சல் Posted: புதுடில்லி:'சகிப்புத் தன்மை பற்றியும், மத நல்லிணக்கம் பற்றியும், இந்தியாவுக்கு பாகிஸ்தானின் அறிவுரை தேவையில்லை' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கலாசார தாக்குதல்: கருணாநிதி கண்டனம் Posted: சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:உத்தர பிரதேச மாநிலம், தாத்ரி கிராமத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக, முதியவர் இக்லாக், அடித்துக் கொல்லப்பட்டார்.எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக ஆர்வலரும், பகுத்தறிவு பரப்புரையாளர்களுமான கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோர், படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.இவற்றை கண்டித்து, பிரபல எழுத்தாளர் நயேந்திர சேகல், 1986ல், தனக்கு வழங்கப்பட்ட, சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்துள்ளார். இவரை பின்பற்றி, லலித் கலா அகாடமி முன்னாள் தலைவரான, கவிஞர் அசோக் வாஜ்பாயும், சாகித்ய விருதை திருப்பி ... |
| 'சிவில் சர்வீசஸ்' தேர்வு: தமிழகம் பின்னடைவு Posted: 'சிவில் சர்வீசஸ்' தேர்வில், பொதுப் பாடத்தில் தமிழக மாணவர்கள் பின்தங்கியதால், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகையான பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 23ல், முதல்நிலைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன. தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது. |
| மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம் Posted: சென்னை:'இலங்கை சிறையில் வாடும், 78 தமிழக மீனவர்களையும், 38 படகுகளையும் விடுவிக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:கடந்த, 20 நாட்களில், ஆறு முறை தமிழகத்தை சேர்ந்த, அப்பாவி மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டு உள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து, நான்கு படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற, 24 மீனவர்கள், 12ம் தேதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நிலவரப்படி, 38 படகுகளுடன், 78 மீனவர்கள், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கின்றனர். மத்திய அரசு ... |
| கடனில் தவிக்கும் மின் வாரியம்: கைவிரித்தது டில்லி Posted: ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும், தமிழக மின் வாரியத்துக்கு உதவ, மத்திய அரசு மறுத்து விட்டது.தமிழக மின் வாரியத்துக்கு, மின் கட்டணம் மற்றும் அரசு மானியம் ஆகியவை மூலம் வருவாய் கிடைக்கிறது; மின் கொள்முதல், எரிபொருள் ஆகியவற்றால் செலவு ஏற்படுகிறது. வருவாயை விட செலவு அதிகமாக இருப்பதால், மின் வாரியம், கடன் வாங்கி சமாளித்து வருகிறது.பவர் பைனான்ஸ், 15 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ரூரல் எலக்ட்ரிபிகேஷன், தமிழ்நாடு மின் விசை நிறுவனம், கடன் பத்திரம் ஆகியற்றின் மூலம் தலா, 10 ஆயிரம் கோடி ரூபாய்; வங்கிகளில், 12 ஆயிரம் கோடி ரூபாய் என, கடன் பட்டியல் ... |
| தமிழகத்திலும் அமித் ஷா புது 'பார்முலா' Posted: சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக, தமிழக பா.ஜ.,வில், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.சென்னை, திருச்சி, மதுரை, ஈரோடு என, நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும், தலா, 55 தொகுதிகள் வருமாறு, 234 தொகுதிகளையும் பிரித்துள்ளனர். இப்படி நியமிக்கப்பட்ட மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில் பேசிய, மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட, மூத்த நிர்வாகிகள் பலர், தேர்தல் பணிகள் குறித்து, பல வியூகங்களை தெரிவித்துள்ளனர்.இது ... |
| Posted: பருப்பு விலை, எண்ணெய் விலை, மளிகை பொருட்கள் விலை உயர்வால், தமிழக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை, 10 சதவீதம் உயர்கிறது. சாப்பாட்டுக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தப்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். எனினும், இந்த விலை உயர்வில் இருந்து, டீ, காபி, இட்லி தப்பியுள்ளன.தமிழகத்தில் பருப்புகள் விலை, முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது.இது போன்று, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதால், நடுத்தர, சிறிய ஓட்டல்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த, ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்து, படிப்படியாக ... |
| தாத்ரி சம்பவம் சட்டம் ஒழுங்கு பிரச்னை: அமித் ஷா பேட்டி Posted: புதுடில்லி: தாத்ரி சம்பவம், சட்டம் ஒழுங்கு பிரச்னை எனவும், இதனை கட்டுப்படுத்த உ.பி., மாநில அரசு தோல்வியடைந்து விட்டது என பா.ஜ.,தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.பீகார் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ள பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தனியார் டிவிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சோம்நாத் சோம் தாத்ரி சென்றது தவறு. இது தவறான வழியை ஏற்படுத்தி விட்டது. தாத்ரி சம்பவத்திற்கும் பீகார் தேர்தலுக்கும் தொடர்பில்லை. அனைத்து மதம் மற்றும ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 14,2015. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |