Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின் கொள்முதலில் வெளிப்படை கர்நாடகாவை பின்பற்றுமா தமிழகம்

Posted:

'கர்நாடக அரசு, மின் கொள்முதல் விவரத்தை, உடனுக்குடன் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிப்பது போல, தமிழ்நாடு மின் வாரியமும் தெரிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில், தமிழ்நாடு மின் வாரிய வளாகத்தில், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளது. இந்த மையத்தின் இணையதளத்தில், 'கிரிட் டீடெய்ல்' என்ற பகுதியில் மின் தேவை, மின் உற்பத்தி, மத்திய மின்சாரம், தனியார் மின்சாரம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படுகின்றன. பகிரங்கமாக...கர்நாடக அரசின், மாநில மின் பகிர்ந்தளிப்பு மைய இணையதளத்தில், மின் தேவை, மின் கொள்முதல் உள்ளிட்ட விவரங்கள், ஒவ்வொரு நிமிடமும் ...

மத்திய அரசு அதிகாரிகளுக்கு வீர, தீர விளையாட்டு பயிற்சி

Posted:

புதுடில்லி:மத்திய அரசு அதிகாரிகளை, வீர, தீர, சாகச விளையாட்டுகளில் ஈடுபடுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.யோகாசனம்'மத்திய அரசு ஊழியர்கள், யோகாசன பயிற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்' என, உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, 'ஜிம்' எனப்படும் உடற்பயிற்சி கூடங்களை, மத்திய அரசு அலுவலகங்களில் உருவாக்க, ஒவ்வொரு பயிற்சி கூடத்திற்கும், 10 லட்சம் ரூபாய் வழங்கவும் முன்வந்துள்ளது.மேலும், மலைஏறுதல், 'பாராகிளைடிங்' எனப்படும், கிளைடர் விமானம் மூலம் வானத்தில் பறப்பது, ஆழ்கடலில் மூழ்கி நீச்சலடித்து விளையாடுவது, துடுப்பு படகில் கடலில் பயணிப்பது போன்ற வீர, தீர பயணங்களில் ...

பிளேட்டை திருப்பி போட்ட கெஜ்ரிவால்

Posted:

'பீஹார் தேர்தலில், யாரையும் ஆதரிக்கவில்லை' என, கூறியிருந்த, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த 24 மணி நேரத்திற்குள், தன் நிலைப்பாட்டை மாற்றி, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.பீஹார் முதல்வர்டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதிலிருந்தே, அரவிந்த் கெஜ்ரிவால், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன், நட்புடனிருந்து வருகிறார். நிதிஷ் குமார் டில்லிக்கு வரும்போதெல்லாம், கெஜ்ரிவாலை பாராட்டி பேட்டியளிப்பார்; பதிலுக்கு, கெஜ்ரிவாலும், பீஹார் முதல்வரை கொண்டாடுவார். இதனால், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு கணிசமான ...

இவ்வளவு தான்:கறுப்பு பண வேட்டையில் சிக்கியது வெறும் ரூ.3,770 கோடி

Posted:

புதுடில்லி:கறுப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் வேட்டையில், 3,770 கோடி ரூபாய் மட்டுமே சிக்கியுள்ளது. பதுக்கப்பட்டுள்ள, மேலும் பல லட்சம் கோடி ரூபாய் பற்றிய, எந்தத் துப்பும் இல்லை.

வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில், ஏராளமான இந்தியர்கள், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில், பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். மேலும் பலர், வெளிநாடுகளில், 'பினாமி' பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்ததும், கறுப்பு பணத்தை மீட்க, ...

நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் நிறுத்தம் : அரசுக்கு 2,000 கோடி ரூபாய் 'அவுட்'

Posted:

'சுங்கச் சாவடி கட்டணத்தை, வாகன உரிமையாளர்களிடம் இருந்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வசூலிக்க வேண்டும்; குறிப்பிட்ட சில சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று துவங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும், 65 லட்சம் லாரிகள் நிறுத்தப்பட்டன.இதனால் மத்திய அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம் உட்பட நாடு முழுவதும் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளதால் சரக்கு போக்குவரத்து அறவே நடைபெறவில்லை.மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில், லாரி உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் ...

மதிய உணவு கிடைக்காவிட்டால் மாணவர்களுக்கு பணம் கிடைக்கும்

Posted:

புதுடில்லி :'பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைக்காவிட்டால், அவர்களுக்கு அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும்' என, புதிய, மதிய உணவு திட்ட விதிகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், 13 கோடி குழந்தைகள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, 55 லட்சம் பள்ளிக் குழந்தைகள், பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடுகின்றனர்.மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்கள் வராதது, உணவுப்பொருள் கிடைக்காதது, எரிபொருள் தீர்ந்து விட்டது போன்ற பல காரணங்களால், சில நேரங்களில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட முடியாமல் போகிறது.அத்தகைய ...

நெல் கொள்முதல் விலை உயர்வு: கருணாநிதி, ராமதாஸ் அறிக்கை

Posted:

சென்னை,: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சாதாரண நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள, 1,410 ரூபாயுடன், தமிழக அரசு சார்பில் கூடுதலாக, 50 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவின்டால் ஒன்றுக்கு 1,450 ரூபாயுடன் கூடுதலாக 70 ரூபாயும் வழங்குவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.சட்டசபை கூட்டம் முடிந்த மறுநாளே, நெல் கொள்முதலுக்கு, கூடுதல் ஆதார விலையை, ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபை கூட்டத்தில் 110வது விதியின் கீழ், இதை அறிவித்து இருந்தால், கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டு தான், ...

'பத்து லட்சத்தை முதலில் கொடுங்கள்' ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் கோரிக்கை

Posted:

சென்னை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:'மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 10 லட்ச ரூபாய் கடன் கொடுக்கப்படும்' என, தேர்தல் நேரத்தில், ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதியையே நிறைவேற்றாதவர், இன்று ஆட்சி பறிபோகும் நிலையில், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மகளிர் சுய உதவிக் குழு பயிற்சியாளர்களுக்கு, இலவச மொபைல் போன் வழங்கப்படும்; அதற்கு, 15 கோடி ரூபாய் செலவிடப்படும் என, வழக்கம் போல, 110 விதியில் அறிவித்துள்ளார்.இப்படி, தேர்தல் நாடகத்தை அவர் அரங்கேற்ற துவங்கி உள்ளார். ஏற்கனவே தமிழக அரசு, 2.11 லட்சம் ...

சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்வி நிறுவனங்களில் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., சிலை திறப்பு

Posted:

மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்வி நிறுவனங்களில், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் (டி.வி.ஆர்.,) திருவுருவச்சிலைகள் திறக்கப்பட்டன.சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்வி நிறுவனங்களின் நிறுவனராக, டி.வி.ஆர் மகனும், தினமலர் வெளியீட்டாளருமான டாக்டர் ஆர்.லட்சுமிபதி உள்ளார். இக்கல்வி நிறுவனங்களில், மூன்று இடங்களில் டி.வி.ஆர்., திருவுருவச்சிலைகள் திறக்கப்பட்டன.கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளியில், டி.வி.ஆரின் இளைய மகள் லட்சுமி திறந்து வைத்தார். முதல்வர் சாந்தி, துணை முதல்வர் கலா கலந்து கொண்டனர்.ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ்சில், ...

அமெரிக்காவில் கல்லூரியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

Posted:

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்லூரி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியாயினர். 22 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டதுஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருமளவு பரவிவிட்டது. கல்லூரி, மற்றும் வழிபாட்டு தலைங்களில் மர்மநபர் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது வாடிக்கையாகி வருவது அந்நாட்டிற்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.நா. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™