Cinema.tamil.com |
- ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்? - கபிலன் வைரமுத்து விளக்கம்
- 'தூங்காவனம்' - இயக்கவும் செய்த கமல்ஹாசன்
- தனது சம்பளத்தை வெளியில் சொல்ல விரும்பாத சல்மான்!
- கட்டி பட்டி தோல்வியிலிருந்து வெளியே வந்த கங்கனா!
- சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் பாகுபலி
- விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராம் சரண்
- தேசிய விருது நடிகரின் மசாலா படம்
- சோஷியல் மீடியாவை பாசிட்டிவாக பார்க்கும் பிருத்விராஜ்..!
- மோகன்லாலுக்கு வில்லனாக மாறுகிறார் ஜெகபதிபாபு..?
- அஜித் ரசிகர்களின் அநியாய சென்ட்டிமெண்ட்
- 17 ஆம் தேதி பசங்க-2 பாடல்கள்
- புசான் திரைப்பட விழா, பாராட்டில் 'பாகுபலி'
- அக்டோபர் 16ம் தேதி தமிழில் 'ருத்ரமாதேவி' வெளியீடு
- “ஏடிஜிபி ரிஷிராஜ் சிங் கேரள முதல்வராக வரவேண்டும்” - நடிகர் சீனிவாசன் விருப்பம்..!
- எந்திரன் 2வில், அர்னால்ட் வில்லன்? தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சி
- இரண்டு நாளில் ரூ.35.17 கோடி வசூலித்த சிங் இஸ் பிலிங்!
- ஆதித்யா சோப்ரா படத்தில் ரன்வீர்-வாணி கபூர்!
- சைப் அலிகானை இயக்குகிறார் பிரபுதேவா!
- நயன்தாரவை கடத்தலிலிருந்து காப்பாற்றும் விஜய்சேதுபதி
- 18 காமெடி நடிகர்கள் நடிக்கும் கோப்பெருந்தேவி
| ஆம் ஆத்மியை சாடுகிறதா பேய்கள் ஜாக்கிரதை பாடல்? - கபிலன் வைரமுத்து விளக்கம் Posted: |
| 'தூங்காவனம்' - இயக்கவும் செய்த கமல்ஹாசன் Posted: கமல்ஹாசன், திரையுலகத்தில் சகலகலா வல்லவன் என அழைக்கப்படுபவர். எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தாலும் அதை தமிழ்த் திரையுலகத்தில் புகுத்துபவர். டிடிஎஸ், டிஜிட்டல் சினிமா, ஆரோ ஒலி, என பல விஷயங்களை தமிழ்த் திரையுலகத்தில் முதலில் கொண்டு வந்தவர். அவர் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். அப்படியே அவர் ... |
| தனது சம்பளத்தை வெளியில் சொல்ல விரும்பாத சல்மான்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரும் இவர் தான். படங்களில் மட்டுமன்றி, விளம்பரம், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடிக்கிறார். இதனால் கணிசமான தொகையை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சல்மானின் சம்பளம் எவ்வளவு என்று ... |
| கட்டி பட்டி தோல்வியிலிருந்து வெளியே வந்த கங்கனா! Posted: குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கங்கனாவிற்கு கட்டி பட்டி படம் தோல்வி படமாக அமைந்துவிட்டது. இதனால் மனதளவில் அவருக்கு சிறிய வருத்தம் இருந்தாலும் அதைவிட்டு வெளியில் வர நினைக்கிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா பேசும்போது... கட்டி பட்டி படம் முடிந்துவிட்டது, அதைப்பற்றி ... |
| சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிலும் பாகுபலி Posted: கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான படங்களில் சாதனைப்படம் என்றால் அது பாகுபலி படம்தான். மற்ற படங்கள் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் பாகுபலி படம்தான் பல்வேலறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'பாகுபலி' படங்ம வெளியான நாள் முதலே ஏராளமான சாதனைகளை படைத்து ... |
| விபத்தில் சிக்கியவருக்கு உதவிய ராம் சரண் Posted: தெலுங்கு திரை உலகில் ப்ரூஸ் லீ படத்தின் வெளியீட்டில் பிசியாக உள்ள நடிகர் ராம் சரண் இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய கலைஞருக்கு உதவி செய்துள்ளார். ப்ரூஸ் லீ படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியவர் ஜூப்லி ஹில்ஸில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். அவரை தனது மனைவி உபசேனவுடன் ... |
| தேசிய விருது நடிகரின் மசாலா படம் Posted: 'ஜிகர்தண்டா' படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் பாபி சிம்ஹா. தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமாகி 'நேரம்' படத்தில் அதிகமாக கவனத்தை ஈர்த்தவர். 'ஜிகர்தண்டா' படம் விமர்சன ரீதியாக அவருக்கு பாராட்டுக்களைக் கொடுத்ததோடு, தேசிய விருதையும் பெற்றுத் ... |
| சோஷியல் மீடியாவை பாசிட்டிவாக பார்க்கும் பிருத்விராஜ்..! Posted: இன்றைய தேதியில் சினிமாவில் உள்ள முக்கால்வாசி பேர் தங்களது எதிரியாக நினைப்பது திருட்டு விசிடியைக்கூட அல்ல.. சோஷியல் மீடியாவைத்தான். ஒரு படம் பூஜை போடப்பட்டு ஆரம்பிப்பதில் இருந்து அதன் ரிலீஸ் வரைக்கும் சோஷியல் மீடியாவில் விதம் விதமாக செய்திகள் தங்களது படத்தைப்பற்றி வெளியாகும்போது, அதை தங்களுக்கு கிடைத்த பப்ளிசிட்டியாக ... |
| மோகன்லாலுக்கு வில்லனாக மாறுகிறார் ஜெகபதிபாபு..? Posted: மோகன்லால் நடித்துவரும் 'புலிமுருகன்' மலையாள சினிமாவின் மெகா பட்ஜெட் படமாக உருவாகி வருகிறது என்பது வெறும் பணத்தை மட்டுமே அள்ளி இறைப்பதால் மட்டுமல்ல.. தென்னிந்தியாவில் முன்னணியில் இருக்கும் பல நடிகர்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகிறார்கள் என்பது தான் இதன் அர்த்தம். அந்த வகையில் ஏற்கனவே இளையதிலகம் பிரபு, கிஷோர், நமீதா, என ... |
| அஜித் ரசிகர்களின் அநியாய சென்ட்டிமெண்ட் Posted: திரைப்பட உலகமே சென்ட்டிமென்ட்டில் இயங்குவதுதான். அதிலும் குறிப்பாக தமிழ்சினிமாவில் இந்த சென்டிமென்ட் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனாலோ என்னவோ அந்த வியாதி ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது போலிருக்கிறது. தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு 'வேதாளம்' என தலைப்பு வைக்கப்பட்டதை பலரும் ... |
| Posted: சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கிய ஹைக்கூ படம் அந்தபெயரிலேயே வளர்ந்து வந்தது. ஹைக்கூ என்பது ஜப்பானிய வார்த்தை என்பதால் வரிவிலக்கு கிடைக்காது என்று பலரும் பயமுறுத்தியதால் கடைசி நேரத்தில் தனக்கு முகவரி கொடுத்த பசங்க படத்தை மீண்டும் நினைகூரும் வகையில் பசங்க- 2 என்று பெயர் வைத்தார் ... |
| புசான் திரைப்பட விழா, பாராட்டில் 'பாகுபலி' Posted: தென் கொரியாவில் உள்ள புசான் நகரில் நடைபெற்று வரும் புசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் நேற்று ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள 'பாகுபலி' படம் திரையிடப்பட்டது. மக்கள் வெள்ளத்தின் மத்தியில் அந்தப் படம் திரையிடப்பட்டது. பட திரையிடலுக்குப் பின் இயக்குனர் ராஜமௌலியிடம் பலரும் கேள்வி கேட்டனர். அதைப் பற்றி ராஜமௌலியே ... |
| அக்டோபர் 16ம் தேதி தமிழில் 'ருத்ரமாதேவி' வெளியீடு Posted: குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையைமப்பில் அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ள 'ருத்ரமாதேவி' படம் தமிழில் அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பல வெற்றிப் படங்களை தமிழில் வினியோகம் செய்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது. தெலுங்கில் இந்த ... |
| “ஏடிஜிபி ரிஷிராஜ் சிங் கேரள முதல்வராக வரவேண்டும்” - நடிகர் சீனிவாசன் விருப்பம்..! Posted: படத்திலும் சரி.. நேரிலும் சரி.. மனதில் பட்டதை துணிச்சலுடன் பேசுவதில் வல்லவர் மலையாள நடிகரும் இயக்குனருமான சீனிவாசன்.. குறிப்பாக சமூக பிரச்னைகளிலும் அரசியல் விவகாரங்களிலும், பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் காரசாரமாக தனது கருத்தை முன்வைப்பார் சீனிவாசன். கடந்த மாதம் கூட கொச்சின் கேன்சர் இன்ஸ்டிடியூட் பற்றி பகிரங்கமாக ... |
| எந்திரன் 2வில், அர்னால்ட் வில்லன்? தயாரிப்பு நிறுவனம் தீவிர முயற்சி Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி, ஐஸ்வர்யாராய் நடித்த எந்திரன் படம் சூப்பர் ஹிட்டானது. ஷங்கர்தான் தென்னிந்தியாவின் பிரமாண்ட இயக்குனராக வர்ணிக்கப்பட்டார். ஆனால் பாகுபலி படத்துக்கு பிறகு அந்த பட்டம் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு சென்று விட்டது. தற்போது பாகுபலியை விட பிரமாண்ட படம் இயக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஷங்கர், இதற்காக அவர் ... |
| இரண்டு நாளில் ரூ.35.17 கோடி வசூலித்த சிங் இஸ் பிலிங்! Posted: அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன், லாரா தத்தா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ''சிங் இஸ் பிலிங்''. பிரபுதேவா இயக்கிய இந்தப்படம் கடந்த வெள்ளியன்று அக்., 2ம் தேதி வெளியானது. படம் இரண்டு நாளில் ரூ.35.17 கோடி வசூலித்துள்ளது. முதல்நாளில் மட்டும் ரூ.20.67 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.14.50 கோடியும் வசூலித்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.90 ... |
| ஆதித்யா சோப்ரா படத்தில் ரன்வீர்-வாணி கபூர்! Posted: தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதித்யா சோப்ரா பெபிகர் படத்தை இயக்க உள்ளார். இந்தப்படத்தில் ஆதித்யா, ஷாரூக்கான் மற்றும் ரன்வீர் சிங்கை நடிக்க எண்ணியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது இந்தப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் வாணிகபூரை நடிக்க வைக்கிறார் ஆதித்யா. மேலும் இப்படத்தில் ஷாரூக்கான் ... |
| சைப் அலிகானை இயக்குகிறார் பிரபுதேவா! Posted: சிங் இஸ் பிலிங் படத்திற்கு பிறகு பிரபுதேவா, சைப் அலிகானை இயக்க இருப்பதாகவும், இப்படத்தை ஏக்தா கபூர் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மூன்று முறை வாய்ப்பு வந்தும் முதன்முறையாக ஏக்தா கபூரின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் சைப். மேலும் இப்படத்தில் பிரபுதேவா சைப் உடன் ஷாகித்தையும் இணைத்து நடிக்க வைக்க எண்ணினார். ... |
| நயன்தாரவை கடத்தலிலிருந்து காப்பாற்றும் விஜய்சேதுபதி Posted: ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவின் தொகுப்பாளர், மேடையேறிய விஜய் சேதுபதியிடம் "இங்கு வந்திருக்கிற நடிகைகளில் ஒருவரை கடத்தச் சொன்னால் யாரை கடத்துவீர்கள்?" என்று கேட்டார். அதற்கு விஜய்சேதுபதி பளிச்சென்று சொன்ன பதில் "நயன்தாரா". அதைக் கேட்டு வெட்கத்தால் சிரித்த நயன்தாரா மனதுக்குள் அந்த நிமிடமே இடம் ... |
| 18 காமெடி நடிகர்கள் நடிக்கும் கோப்பெருந்தேவி Posted: சிலந்தி படத்தை தயாரித்த அச்சுதானந்த சங்கர், உதிரம் என்ற படத்தை இயக்கினார். அது ரிலீசாகவில்லை. இந்த நிலையில் 18 காமெடி நடிகர்களை வைத்து அவர் இயக்கி இருக்கும் படம் கோப்பெருந்தேவி. கடந்த 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் இப்போது ரிலீசுக்க தயாராகி விட்டது. வருகிற 9ந் தேதி வெளிவருகிறது. இதில் கோவை சரளா, வி.டி.வி.கணேஷ், ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-05. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |