Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு

Posted: 12 Oct 2015 11:36 AM PDT

நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ...

நம்ம தல சிவா என்ன சொல்லியிருப்பார்? சொல்லுங்கள் உறவுகளே

Posted: 12 Oct 2015 11:10 AM PDT

இந்தப் புகைப்படங்களை எடுக்கும் போது நம்ம தல சிவா ஒன்றைச் சொல்லிவிட்டு எடுத்தார்.  என்ன சொல்லியிருப்பார் ஊகிக்க முடிகிறதா?  யார் கண்டு பிடிக்கிறீங்க பார்க்கலாம்?

தோல்வி கண்டு துவளாதே!!!

Posted: 12 Oct 2015 10:39 AM PDT

தோல்வி கண்டு துவளாதே!!! "முடியாதது"- மூளையில் ஏறினால்... முடிந்ததும் "முடியாதது" ஆகி விடும்!!! நேற்றைய முயற்சி தன் முன்னேற்றத்தில் கண்ட வெற்றியே இன்றைய தோல்வி!!! முயற்சியின் தளர்ச்சி தொடங்கிய இடம் - தோல்வி!!! முயற்சியின் வளர்ச்சி முடிந்த இடம் - வெற்றி!!! முதல் முயற்சியில் கிடைத்த வெற்றியில் முழு ருசி ஏது??? வெற்றியில் கண்ட பெருமைக்கு ஏது தோல்வியில் கண்ட பொறுமை???!!! எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால் எதார்த்தம் இறந்து விடும்!!! எதிர்பார்ப்பு ...

செவ்விலக்கியம் : சூழலியல் மாற்றம்

Posted: 12 Oct 2015 10:34 AM PDT

செவ்விலக்கியம் : சூழலியல் மாற்றம் நம்மிடம் கொட்டிக்கிடக்கின்ற செல்வங்களை எல்லாம் இத்தலைமுறை முடிவதற்குள்ளாகவே இழந்து விடும் பேராபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது. ஆகையினால் இன்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் இருக்கின்ற விஞ்ஞானிகளின் ஆய்வு முயற்சிகள்யாவும் இழந்துவிட்ட செல்வங்களை மீட்டெடுக்க முடியுமா? என்றும் இழந்து விட்டவைகளை ஓரிரு நாட்களிலோ அல்லது ஓரிரு வருடங்களிலோ உண்டாக்கிவிட முடியாது; பலகோடி ஆண்டுகள் தேவைப்படும் என்பதை உணர்ந்திருப்பதால் வேறு கோள்களுக்குப் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துவிட ...

அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்…

Posted: 12 Oct 2015 09:55 AM PDT

- பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருத்தலம், வைணவ திவ்யதேசம் நூற்றியெட்டில் முதன்மையானது. ஏழு பிராகாரங்கள் கொண்ட இத்தலத்தில் ஒவ்வொரு பிராகாரமும் சிறப்பு மிக்கது. அந்த வகையில் வடக்கு வாசல் வழியில் உள்ள ஐந்தாம் பிராகாரத்தில் அமைந்துள்ள தாயார் சந்நதிக்கு எதிரில், அழகிய சிங்கர் கோயிலுக்கு அருகில் உள்ள நாற்கால் மண்டபம் மிகவும் போற்றப்படுகிறது. இங்குதான் கம்பர் இயற்றிய ராமாயணம் அரங்கேறியது என்பதால் இந்த மண்டபத்தை கம்பர் மண்டபம் என்று அழைக்கின்றனர். கம்பர் பிறந்த ஊர் ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 12 Oct 2015 09:28 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

இன்று-12/10/2015- மஹாளய அமாவாசை !

Posted: 12 Oct 2015 09:22 AM PDT

ஒவ்வொரு மனிதனும், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். ஒரு பிள்øளையை வளர்க்க பெற்றோர் செய்த தியாகத்திற்கு அளவே கிடையாது. அவர்கள் வாழும் காலத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்வது எவ்வளவு அவசியமோ, அதுபோல அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும் இந்த நன்றிக்கடனைத் தொடரவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்காக பிதுர்கடனை ஏற்படுத்தி வைத்தனர். தர்ப்பணம், பிதுர்காரியம், முன்னோர்கடன் என்று பல பெயர்களில் இதைக் குறிப்பிடுவர். நன்றியுணர்வோடு, அவர்கள் மறைந்த மாதத்தின் ...

நடுநிலை வழியல் நடைபயில -கவிதை

Posted: 12 Oct 2015 08:50 AM PDT

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 12 Oct 2015 08:49 AM PDT

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

விதையில்லாப் பழம் .

Posted: 12 Oct 2015 08:44 AM PDT

"காய்கறி வாங்கிட்டு வரும்போது அப்படியே ஒரு தர்பூசணி பழம் வாங்கிட்டு வாங்க! வெயிலுக்கு இதமா இருக்கும்." என்றால் என் மனைவி. "வெயிலுக்கு இதமாத்தான் இருக்கும்; ஆனா அதுல இருக்குற கறுப்பு விதைகளை எடுத்துட்டு சாப்பிடணும்! அதுதான் கொஞ்சம் கஷ்டம்! முன்னாடியெல்லாம் திராட்சையில விதை இருக்கும்.அத சாப்பிடும்போது விதைய துப்பிட்டு சாப்பிடணும்.பிறகு Seedless Grapes..கண்டுபிடிச்சாங்க இப்ப நிம்மதியா சாப்பிட முடியுது. சீதாப்பழம் சாப்பிடறது ரொம்ப நியூசன்ஸ்! அதுல இருக்குற விதைய எடுத்துட்டு சாப்பிடறதுக்குல்ல பிராணனே ...

தெய்வங்களுக்கு வாழைப்பழம் தேங்காய் படைப்பது ஏன்?

Posted: 12 Oct 2015 08:39 AM PDT

ரமணியின் கவிதைகள்

Posted: 12 Oct 2015 08:24 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

வல்லவனுக்கு காது குடையுற குச்சியும் ஆயுதந்தான்..!!

Posted: 12 Oct 2015 07:32 AM PDT

சென்னையில் டிக்கெட் முன்பதிவு முறை மாற்றம் – திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

Posted: 12 Oct 2015 07:17 AM PDT

திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை தியாகராயநகரில் உள்ள தேவஸ்தான அலு வலகத்தில்தான் டிக்கெட் முன் பதிவு செய்வதில் தற்போதைய நடைமுறை, குறித்து, தேவஸ்தான அதிகாரிகள் கூறினர் – தரிசனத்துக்கு செல்லும் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து வருவது பக்தர்களுக்கு வீண் அலைச் சலும், காலவிரயமும் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. – மேலும் தேவஸ்தான அலுவலகத்திலும் கூட்டம் ஏற்பட் டது. இந்நிலையில், அந்த நடைமுறையை தளர்த்தும் பொருட்டு, ஒரு நபர் தனது அடையாள அட்டையுடன் வந்து 5 பேருக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் ...

சரக்கு வாங்க ஆதார் கார்டு அவசியம்’னு அறிவிச்சா போதும்..!

Posted: 12 Oct 2015 07:13 AM PDT

கல்யாணம் ஆகி மூணு வருஷங்கள் ஆனதும், மாமனார் நம்மள ஒரு ஆச்சர்யத்தோடவே பார்ப்பார்! – எப்படி இவன் சமாளிக்கிறான்..? – ரவிக்குமார் – —————————————————- – உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம். நம்ம நிலைமையே மோசமா இருக்கு. மிச்சம் ஆறு பேரும் எந்த நாட்ல…எந்தத் தெருவுல பிச்சையெடுத்துட்டு இருக்காங்களோ..! – சிவராம் – ———————————————- – டாஸ்மாக்குல சரக்கு வாங்க ஆதார் கார்டு அவசியம்'னு அறிவிச்சா போதும், தமிழ்நாட்டுல 80 சதவீதம் ஆதார் கார்டு புழக்கத்துக்கு வந்துடும்..! – தோட்டா – ————————————————– – என்னென்னவோ ...

கவி வாக்கு - கவிதை - விக்ரமாதித்யன் நம்பி

Posted: 12 Oct 2015 06:57 AM PDT

ஆட்டிஸம் போக்கும் தோபுக்கரணம்

Posted: 12 Oct 2015 06:49 AM PDT

குருவா தெய்வமா? - ஆன்மிக குட்டிக் கதை

Posted: 12 Oct 2015 06:42 AM PDT

புலம் பெயர் - கவிதை

Posted: 12 Oct 2015 06:28 AM PDT


-

நளமகாராஜாவின் மகள் யார்?

Posted: 12 Oct 2015 06:14 AM PDT

நளமகாராஜாவின் மகள் யார்?

அறிமுகம்

Posted: 12 Oct 2015 06:14 AM PDT

பெயர்: தமிழ்ப்பொியசாமி
சொந்த ஊர்: திண்டுக்கல்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நண்பா் மதி வழியாக
பொழுதுபோக்கு: எழுதுவதும் படிப்பதும்
தொழில்: முதுகலைத் தமிழாசிாியா் (ஓய்வு)
மேலும் என்னைப் பற்றி: எழுதிய நுால்கள்
1. குண்டலகேசி - காப்பிய நாடகம்
2. பிழையில்லாத் தமிழறிவோம்
3. நந்திக் கலம்பகம் - உரை
4. தமிழ்விடுதுாது - உரை
5. திருக்குறள் புதையல்  -- மற்றும் பிற

குறுங்கவிதைகள்...

Posted: 12 Oct 2015 06:07 AM PDT

நீயும் நானும் சேர்ந்தால்...!!

Posted: 12 Oct 2015 06:02 AM PDT

மீம்ஸ்...ஆங்கிலத்துல எனக்குப்பிடிக்காத ஒரே வார்த்தை..!

Posted: 12 Oct 2015 05:51 AM PDT

கிளாசிக் ஜோக்ஸ் - கல்கி

Posted: 12 Oct 2015 05:37 AM PDT

இலக்கிய ஈடுபாடு மூன்று ஆண்டுகள்தான்

Posted: 12 Oct 2015 05:11 AM PDT

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன். எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை ...

அன்புள்ள மகனுக்கு

Posted: 12 Oct 2015 03:10 AM PDT

ஆயிரம் முறை  அழுத்தி பார்த்தேன்  அலைபேசியில் உந்தன்  அழைப்பு உள்ளதா என்று?  அந்த நேரம்  அன்பிற்கு முன்னால்  அறிவியல் கூட அர்த்தமற்றதாய் தோன்றியது!!  அம்மா என்று  அழைத்து விடு  அலைபேசியில்!  அன்பிற்கு ஏங்கும்  அனாதையாய் நான்!  நான் தொடர்பு  கொண்டேன்  தொப்புள் கொடி சொந்தம்  தொடர்பு எல்லைக்கு அப்பால்  உள்ளது என்றது!  மகனே  மறந்து விடாதே  மாதாவை!  மண்ணிற்கு கொண்டு  செல்வது ஒன்றும்  இல்லை!  மன்னித்து விடுகிறேன்  மனம் திறந்து பேசி விடு!!

ஹா...ஹா....இது எப்படி இருக்கு...!!

Posted: 12 Oct 2015 02:47 AM PDT

காமாட்சியம்மன் கோயில்,காஞ்சிபுரம்

Posted: 12 Oct 2015 02:46 AM PDT

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். கோயிலின் உள்ளே பிரகாரங்களும், ...

நெப்போலியன் ஹில் அவர்களின் think  grow rich ன் தமிழாகப் புத்தகம்

Posted: 12 Oct 2015 01:51 AM PDT

மிக்க நன்றி...எங்கு தேடினாலும் அறிய மின்புத்தகங்கள் நிறைய அள்ள அள்ள வந்துகொண்டே இருக்கிறது...மிக்க நன்றி..எனக்கு நெப்போலியன் ஹில் அவர்களின் think  grow rich ன் தமிழாகப் புத்தகம் இருந்தால் பகிரவும்..நன்றி...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 12 Oct 2015 01:20 AM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

நவராத்திரி - கொத்துக்கடலை சுண்டல்

Posted: 11 Oct 2015 11:51 PM PDT

நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு  வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம். சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல ...

கொலு வைக்க சில டிப்ஸ் :)

Posted: 11 Oct 2015 11:46 PM PDT

ஆச்சு, மகாளயம் முடிந்து விட்டது, இன்று மகாளைய அமாவாசைபுன்னகை இன்று பரணில் இருக்கும் கொலு பொம்மைகளை எடுத்து, படி கட்டி கொலு வைக்க வேண்டியது தான். அப்படி வைக்கும் போது உபயோகப்பட சில டிப்ஸ். நீங்களும் இங்கு எழுதுங்கள் புன்னகை

தொல்காப்பியனே, சொல்லாமல் போய் விட்டாய்...

Posted: 11 Oct 2015 11:40 PM PDT


-

-
பாக்யாவேலு - மணிசங்கர்

வெற்றிக்கு வழி - கவிதை

Posted: 11 Oct 2015 11:15 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™