Tamil Star |
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பின்பற்றும் கனடிய பிரிவினைவாதக் கட்சி
- ரொரன்ரோ Downsview பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்
- தண்டவாளத்தில் காணப்பட்ட மர்மப் பொருள்: தடைப்பட்ட GO தொடரூந்து சேவைகள்
- கிழக்கு ரொரன்ரோவில் தீ சம்பவங்கள் – விழிப்புடன் இருக்குமாறு காவல்த்துறை எச்சரிக்கை
- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில்
- அகதிகள் தொடர்பிலான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் – கத்தலின் வின்
- அகதிகள் விடயத்தில் ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் அவசியம் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்
- குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவு குறிப்புகள்
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பின்பற்றும் கனடிய பிரிவினைவாதக் கட்சி Posted: 09 Sep 2015 09:41 PM PDT
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தேசிய அரசாங்கம் அமையாவிட்டால் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயைந்திருந்த போதும் அதற்கான தேவை ஏற்படவில்லை. அதேபோன்று சடுதியாக மாறியுள்ள கனடியத் தேர்தல் களத்தில் லிபரல் கட்சி அல்லது புதிய ஜனநாயகக் கட்சி ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெறாதவிடத்து அவர்களிற்கு தமது ஆதரவை வழங்கி அமைச்சரவையில் இடம்பெறப் போவதாக புளக் கெபெக்குவா கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய கருத்துக் கணிப்பு நிலவரப்படி புதிய ஜனநாயகக் கட்சி 33 வீத ஆதரவுடன் முன்னணியிலும், லிபரல் கட்சி 30 வீத ஆதரவுடன் இரண்டாமிடத்திலும், கண்சவேட்டிவ் கட்சி 26 வீத ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. இந் நிலையிலே ஆட்சியை அமைக்கும் போட்டி லிபரல் கட்சிக்கும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையேயானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் வெளியிட, மேற்படி புளக் கெபக்குவா கட்சி தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இதேவேளை தான் ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களில் ஒன்றைத் தானும் குறைவாகப் பெற்றால் கூட பிரதமராகப் பதவி வகிக்கப் போவதில்லை என கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தானத்திற்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். The post தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பின்பற்றும் கனடிய பிரிவினைவாதக் கட்சி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ Downsview பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம் Posted: 09 Sep 2015 09:04 PM PDT
Chalkfarm Drive இல் அமைந்துள்ள உயர்மாடிக் கட்டிடம் ஒன்றில் இன்று இரவு ஏழு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், குப்பைகளை வீசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பர்ககிப் பிரயோகம் மேற்கெர்ள்ளப்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை. மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், சந்தேக நபர்கள் தொடர்பிலான விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை. The post ரொரன்ரோ Downsview பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தண்டவாளத்தில் காணப்பட்ட மர்மப் பொருள்: தடைப்பட்ட GO தொடரூந்து சேவைகள் Posted: 09 Sep 2015 09:00 PM PDT
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் குறித்த அந்த சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதனை அடுத்து, யூனியன் நிலையத்திற்கும், லோங் பிராஞ்ச் நிலையத்துக்கும் இடைப்பட்ட அனைத்து Lakeshore West தடம் ஊடான தொடரூந்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. குறித்த அந்த பகுதியில் சிலின்டர் போன்றதொரு பொருளை அவதானித்த, கடமையில் இல்லாத காவல்த்துறை உத்தியோத்தர் ஒருவர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து ஆபத்தான இரசாயன, உயிரியல், அணுவியல் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் சிறப்பு படையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதனை காவல்த்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். The post தண்டவாளத்தில் காணப்பட்ட மர்மப் பொருள்: தடைப்பட்ட GO தொடரூந்து சேவைகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கிழக்கு ரொரன்ரோவில் தீ சம்பவங்கள் – விழிப்புடன் இருக்குமாறு காவல்த்துறை எச்சரிக்கை Posted: 09 Sep 2015 03:51 PM PDT
சுமார் ஏழு தீச்சம்பவங்கள் இன்று காலையில் அந்த பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும், அவை ஒன்வொன்றும் 25 நிமிட இடைவெளியில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர். முதலாவது தீப்பற்றல் சம்பவம் Coxwell மற்றும் Danforth அவனியூவிற்கு அருகில் உள்ள Oakdene Crescent பகுதியில் வீடு ஒன்றின் முகப்பில் இடம்பெற்றதாகவும், அதிகாலை 3.15 மணியளவில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போது இரண்டு தீச் சம்பவங்கள் அந்த பகுதியில் இடம்பெற்றதை காண்டுபிடித்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து Strathmore Boulevard பகுதியில் கார் ஒன்று தீப்பற்றியதாகவும், அந்த தீ அருக்கில் இருந்த வீட்டிற்கும் பரவியிந்த நிலையில் தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு வந்திருந்தாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து தெற்கு Coxwell அவனியூவில் மூன்ற தீச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றில் ஒரு சம்பவம் வீடு ஒன்றின் பின்பகுதியில் உள்ள குப்பை பகுதியிலும், மற்றையது வேறொரு வீட்டில் இருந்த மீள்சுழற்சி குப்பை தொட்டியிரும்,மற்றொன்று வீடு ஒன்றின் முகப்புப் பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இந்த ஏழு தீ மூட்டல் சம்பவங்களும் அந்ததந்த பகுதியில் காணப்பட்ட பொருட்களை வைத்தே மூட்டப்பட்டது எனவும், வேறு பொருட்கள் கொண்டுவரப்பட்டு தீ மூட்டப்படவில்லை என்றும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவங்கள் தொடர்பில் அதிக விழிப்புடன் இருக்குமாறு அந்த பகுதி மக்களை காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post கிழக்கு ரொரன்ரோவில் தீ சம்பவங்கள் – விழிப்புடன் இருக்குமாறு காவல்த்துறை எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் Posted: 09 Sep 2015 03:48 PM PDT
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறையினர், நேற்று இரவு ஸ்காபரோவின் Pharmacy Avenue பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதான முறைப்பாடு தமக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போது இலக்கம் 3120, Sheppard Ave. East பகுதியில் துப்பர்ககிப் பிரயோகம் மேற்கொள்ப்பட்டமைக்கான ஆதாரமாக அங்கு வெற்றுத் தோட்டாக்கள் பல கிடந்ததாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் காயமடைந்த எவரும் காணப்படவில்லை என்ற போதிலும், சிறிது நேரத்தின் பின்னர் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றதாக தகவல் தமக்கு கிடைத்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட அவர் உடனடியாகவே ரொரன்ரோ தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகள் தொடர்பிலான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் – கத்தலின் வின் Posted: 09 Sep 2015 01:40 PM PDT
மேலும் பல அகதி குடிவரவாளர்களை வரவேற்பதற்கு ஒன்ராறியோ தயாராக உள்ள போதிலும், அவ்வாறு எவ்வள பேரை தற்போதைக்கு தம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதனை இலகுவாக கூறிவிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது தம்முடைய கவலை சிரிய நாட்டு அகதிகளை பொறுப்பேற்கும் விடயத்தில், அவர்களுக்கான ஆவணங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எனவும் அவர் விளக்கியுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளில் மத்திய அரசாங்கம் மாநில அரசர்ஙகத்துடன் இணைந்து பணியாற்றும் என எதிர்பார்ப்பதாகவும், அவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக கனடாவினுள்ளேயும் ஒன்ராறியோவினுள்ளேயும் அகதிகளை கொண்டுவரும் விடயத்தினை விரைவு படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை இவ்வாறான அகதிகளை ஒன்ராறியோவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் தன நபர்கள், அமைப்புக்கள், தேவாலய குழுக்கள் போன்றவற்றுக்கு தேவையான நிதிமூலங்களை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் தாம் தயாராக உள்ளதாகவும் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் உறுதியளித்துள்ளார். The post அகதிகள் தொடர்பிலான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் – கத்தலின் வின் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அகதிகள் விடயத்தில் ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் அவசியம் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் Posted: 09 Sep 2015 12:34 PM PDT
அரசாங்கம் அகதிகள் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேம்படுத்த முயல்கின்ற போதிலும், சிரியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத அமைப்புகள் பலமாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வாறான நாடுகளில் இருந்து வெளியேறும் அகதிகளை, சரியான பாதுகாப்பு திரையிடல் இன்றி கனடாவிற்குள் அனுமதிக்க முடியாதெனவும் அவர் விளக்கமளித்துள்ளார். அதிகமான மக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்ற போதிலும், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களிற்கு உதவுகின்றோமா என்பதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாத போர் வலயத்திலிருந்து மடையை திறந்து பல ஆயிரக்கணக்கான அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவ்வாறு செய்வது கனடாவிற்கு மிகப் பெரிய ஆபத்தாகும் என்றம் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மேலும் தெரிவித்துள்ளார். The post அகதிகள் விடயத்தில் ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் அவசியம் – பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவு குறிப்புகள் Posted: 09 Sep 2015 04:58 AM PDT
குழந்தைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அதிலும் குழந்தைகளின் உணவு விசயத்தில் பெற்றோர்கள் பெரும் போராட்டத்தை சந்திக்கிறனர். எந்த உணவை கொடுத்தாலும் சாப்பிடவில்லை என்று குழந்தைகள் மீது குற்றம் சுமத்துக்கின்றோம். உண்மையில் தவறு நம் மீதுதான் என்பதை மறந்துபோகிறோம். ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவது மூலம் எளிதாக அவர்களை ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடவைக்கலாம். முதலில் குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை சமைத்துகொடுங்கள். பின்னர் அவர்களுக்கு பிடிக்காத அதே சமயத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதனுடன் சேர்த்து பரிமாறுங்கள்.
சில குழந்தைகள் தாய் அருகில் இருந்தால் தான் சாப்பிடும். இது போல் சில குழந்தைகள் பாட்டி, தாத்தா போன்றோர்கள் மீது பாசம் வைத்திருக்கும். எனவே அவர்கள் அருகிலிருக்கும் போது உணவு பரிமாறினால் அடம் பிடிக்காமல் உண்ணுவார்கள். அடுத்ததாக, அளவான உணவையே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் திரும்பவும் பரிமாறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்காத உணவுகளை சாப்பிடுமாறு வற்புறுத்த வேண்டாம். மேலும் உணவு உண்ணும் நேரத்தில் நொறுக்குத்தீனிகள் தருவதையும் தவிர்க்க வேண்டும்.
அதேவேளையில் உணவு உண்ட பின் தண்ணீர் அல்லது பழச்சாறு ஆகியவற்றை கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஒரே உணவு வகையை கொடுக்காமல் புதிது புதிதாக செய்துகொடுங்கள். இது அவர்களுக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். விளையாட்டு என்றால் வீடியோ கேம் இல்லை. அவர்களின் உடல்களுக்கு புத்துணர்ச்சி தருகிற வெளிப்புற விளையாட்டுகளை கற்றுக்கொடுங்கள். இது அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு அவர்களின் பசியையும் அதிகரிக்கும்.
The post குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவு குறிப்புகள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



தண்டவாளத்தில் மர்மப் பொருள் ஒன்று காணப்பட்டதனை அடுத்து இன்று பிற்பகல் தடைப்பட்டு போயிருந்த GO தொடரூந்து சேவைகள் அனைத்தும் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இன்று அதிகாலை ரொரன்ரோவின் கிழக்குப் பாகங்களில் இடம்பெற்ற தீச் சம்பவங்களை அடுத்து விழிப்புடன் இருக்குமாறு அந்த பகுதி மக்களுக்கு காவல்த்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனை ஒன்றினை சென்றடைந்த நபர் ஒருவர் ரொரன்ரோ தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சிரிய நாட்டு அகதிகள் தொடர்பிலான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் வலியுறுத்தியுள்ளார்.
ஒழுங்கு முறையான பாதுகாப்பு திரையிடல் இல்லாது கனடா அகதிகளை ஏற்றுக்கொள்ளாதென பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். எனினும் நிறைய பெற்றோர்கள் அதை சுகமாக நினைக்காமல் சுமையாகவே கருதுகின்றனர்.
