Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இன்று இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுனர் பலி

Posted: 06 Sep 2015 08:54 PM PDT

tyuit6

tyuit6இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஹமில்டனைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் உயிரிழந்து விட்டதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Jameson Avenue இற்கு அருகில் Lake Shore Boulevard பகுதியில் காலை 10.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளி ஓட்டுனர் தமது வாகனக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காண்பதற்கான முயற்சியில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தை அடுத்து Jameson அவனியூவில் இருந்து Parkside Drive பகுதி வரையிலான Lake Shore Boulevard பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கும் மீண்டும் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-1900 என்ற இலக்கத்தில் காவல்த்துறையினரை அல்லது 416-222-8477 (TIPS) என்ற இலக்கத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறனர்.

The post இன்று இடம்பெற்ற விபத்தில் உந்துருளி ஓட்டுனர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈற்ரோபிக்கோ பகுதியில் பதின்ம வயது இளைஞன் மீது கத்திக்குத்து

Posted: 06 Sep 2015 08:36 PM PDT

tiu

tiuஈற்ரோபிக்கோ பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி மோசமான காயங்களுக்கு உள்ளான பதின்ம வயது இளைஞன் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

42 ஆவது வீதி மற்றும் Lake Shore Boulevard அருகில் இன்ற அதிகாலை 1 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் இளைஞன் சென்றுகொண்டிருந்த போது அவரை அனுகிய இனம் தெரியாதவர்கள் அவர் மீது கத்திக்குத்து நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அவர், தற்போது உயிருடன் இருப்பதாக மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.tiu

இதேவேளை கத்திக்குத்துக்கு ஆளான நபர் காவல்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கையில், தம்மிடம் இருந்தவற்றை அபரித்தவிட்டு தம்மை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்த்துறையினர், சந்தேக நபர்களையும் தேடி வருகின்றனர்.

The post ஈற்ரோபிக்கோ பகுதியில் பதின்ம வயது இளைஞன் மீது கத்திக்குத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

போலியான வெடிகுண்டு கண்டுபிடிப்பு – பதின்ம வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு வயது நபர் கைது

Posted: 06 Sep 2015 03:56 PM PDT

yu

yuபோலியான நேரக் கட்டுப்பாட்டு வெடிகுண்டு ஒன்றை வைத்திருந்தமை தொடர்பில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

15 வயதுடைய சிறுவன் ஒருவர் போலியான நேரக் கட்டுப்பாட்டு வெடிகுண்டை கொண்டு பியேசன் விமான நிலையத்திற்கு சென்றிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

பியேசன் விமான நிலையத்தில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிறுவனிடம் வெடி குண்டு இருப்பதை கண்டுபிடித்திருந்தனர்.

அதனை அடுத்து உடனடியாக காவல்த்துறையினர் குண்டுகளைக் கையாளும் சிறப்புத் தொழில்நுட்பப் பிரிவினரை அங்கு வழவழைத்திருந்தனர்.yu

பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சிறுவன் கொண்டு சென்றிருந்தது போலியான வெடி குண்டு என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் விமான நிலயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிறுவன் செயற்பட்டதாக கூறி அந்த சிறுவன் மீது குற்றஞ்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

The post போலியான வெடிகுண்டு கண்டுபிடிப்பு – பதின்ம வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு வயது நபர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டன், ஒன்ராறியோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் பலி

Posted: 06 Sep 2015 03:26 PM PDT

;ki

;kiலண்டன், ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஐந்து பேரைத் தாம் கைது செய்து வைத்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக காவல்த்துறையினருக்கு தவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 5 மணிக்கு காவல்த்துறையினர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

அங்கு ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகிக் கிடந்த நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் மருத்துவமனையிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.;ki

உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும், அவரின் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை இது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் லண்டன் காவல்த்துறையினருடன் அல்லது குற்றத் தடுப்புப் பிரிவினருட்ன தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினா பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post லண்டன், ஒன்ராறியோவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஒருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அகதித் தஞ்சம் கோருவோரை உள்வாங்கும எண்ணிக்கையினை கனடா அதிகரிக்க வேண்டும்

Posted: 06 Sep 2015 11:42 AM PDT

,,hjkthydrygrd

,,hjkthydrygrdநெருக்கடிக்கு உள்ளாகி அகதித் தஞ்சம் கோருவோரை உள்வாங்கும எண்ணிக்கையினை கனடா அதிகரிக்க வேண்டும் என புதிய சனநாயக கட்சி மற்றும் லிபரல் கட்சி போன்றன வலியுறுத்தியுள்ளன.

சிரிய அகதிகள் விவகாரம் பன்னாட்டு அளவில் முனைப்பு பெற்றுள்ள நிலையில் எதிர்க் கட்சிகள் இவ்வாறான கருத்தினை முன்வைத்துள்ளன.

2019ஆம் ஆண்டினுள் அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையை 46,000 ஆக அதிரிக்குமாறு மத்திய பழமைவாதக் கட்சி அரசாங்கத்திடம் கோரப் போவதாக புதிய சனநாயக கட்சியின் அனைத்துலக விவகார விமர்சகர் Paul Dewar தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருட இறுதிக்குள் 10,000 அகதிகளை கனடா உள்வாங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கனேடிய மத்திய அரசாங்கத்தின் நேரடி உதவித் திட்டத்தின் கீழ் சிரியாவில் இருந்து உடனடியாக 25,000 அகதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.,,hjkthydrygrd

கனடாவுக்கான அகதிகள் உள்வாங்கப்படும் விவகாரங்களை கையாள்வதற்காக லிபரல் அரசாங்கம் மேலதிகமாக 100 மில்லிய்ன டொலர்களை ஒதுக்கீடு செய்யும் என லிபரல் கட்சியின் வெளிவிவகார விமர்சகர் Marc Garneau தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர், உலகம் முழுவதும் ஒரு இலட்சம் அகதிகளை குடியேற்றும ஐ.நா அகதிகள் திட்டத்தின் கீழ், எதிர்வரும் மூன்று வருடங்களுள் கனடா 10,000 சிரிய அகதிகளை உள்வாங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

The post அகதித் தஞ்சம் கோருவோரை உள்வாங்கும எண்ணிக்கையினை கனடா அதிகரிக்க வேண்டும் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

north Etobicoke தீ விபத்து

Posted: 06 Sep 2015 11:30 AM PDT

jghj

jghjnorth Etobicoke பகுதியில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீ விபத்து சம்பவித்துள்ளது.

நெடுஞ்சாலை 27 மற்றும் டிக்சன் வீதிக்கு தென்கிழக்கே, Kelfield வீதியில் அமைந்துள்ள "A-1 Auto Repair" எனப்படும் வாகனத் திருத்தகத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த தீப் பரவல் சம்பவம் தொடர்பில் நேற்று இரவு 9.11இலிருந்து தமக்கு தொடர்ச்சியாக பல்வேறு முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருந்ததாக ரொரன்ரோ தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீப் பரவலின் தீவிரத் தன்மை காரணமாக சம்பவ இடத்தில் 21 தீயணைப்பு வாகனங்களும் 85ற்கும் அதிகமான தீயணைப்பு படையினரும் பிரசன்னமாகியிருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் வாகனங்கள் திருத்தும் பகுதியில் ஆரம்பமான தீ பின்னர் கட்டடத்தின் ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியிருக்க கூடும் என ரொரன்ரோ தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தீ மிகவும் தீவிரமாக எரிந்தமையால் கட்டிடத்தினுள் நுளைய முடியவில்லை எனவும், வெளியில் இருந்தவாறே தீயணைப்பு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் கட்டிடத்தின் கூரைப் பகுதி சரிந்து வீழ்ந்ததாகவும் சம்பவ இடத்தில் உள்ள தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.jghj

சம்பவத்தில் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் எவையும் இன்னமும் மதிப்பிடப்படவில்லை.

தீப் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இன்று அதிகாலை வரையிலும் அங்கு தீயணைப்பு படையினர் தொடர்ந்து பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post north Etobicoke தீ விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்

Posted: 06 Sep 2015 07:48 AM PDT

ju

juஎல்லா காலகட்டங்களிலும் எளிதாக கிடைக்ககூடிய அதிக சத்துக்கள் நிறைந்த பழம் தான் சாத்துக்குடி.

வைட்டமின் சி அதிகமுள்ள சாத்துக்குடி ஆரஞ்சு வகையை சார்ந்தது.

சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.

குறைவான எரிசக்தி கொண்டதால் உடல் எடை கூடுவதை தடுப்பதுடன், உடலுக்கு பலத்தை தருகிறது.

பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது.

மேலும் ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து.

எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.

சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.ju

சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

பசியில்லாம் அவதியுறும் நபர்கள், சாத்துக்குடி சாற்றை குடித்தால் சீரண சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது நல்லது.

The post சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™