Tamil Star |
- மிசிசாகவில் துப்பாக்கிச் சூடு – 25வயது ஆண் படுகாயம்
- ரொரன்ரோ Bluffers Parkஇல் நீரில் மூழ்கிய அக்காவும் தம்பியும் மருத்துவமனையில்
- Davenport பகுதியில் தளபாட களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து
- மனிதக் கடத்தல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் இருவர் பலி
- ஒன்ராறியோ கல்வித் துறையின் துணைநிலை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கை
- 5,000 சிரிய அகதிகளை கனடாவுக்குள் கொண்டுவருமாறு மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள்
- உயர் இரத்த அழுத்தமா? மருந்தாகும் காளான்
- எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட இரா. சம்பந்தனிற்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து
| மிசிசாகவில் துப்பாக்கிச் சூடு – 25வயது ஆண் படுகாயம் Posted: 05 Sep 2015 06:20 PM PDT
காயமடைந்த நபர் நள்ளிரவுவாக்கில் மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததை அடுத்தே குறித்த அந்த சம்பவம் காவல்த்துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் தொடர்பில் இதுவரை தம்மால் மிகக் குறைந்த அளவு தகவல்களை மட்டுமே திரட்ட முடிந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசமும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் அறிந்தோர் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்த்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். The post மிசிசாகவில் துப்பாக்கிச் சூடு – 25வயது ஆண் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ Bluffers Parkஇல் நீரில் மூழ்கிய அக்காவும் தம்பியும் மருத்துவமனையில் Posted: 05 Sep 2015 06:17 PM PDT
சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கியதான முறைப்பாட்டினை அடுத்து இன்று முறபகல் 11.25 அளவில் தாம் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக ரொரன்ரோ காவல்த்துறையினரும் அவசர மீட்புப் படையினரும் தெரிவித்துள்ளனர். எட்டு வயது சிறுவன் ஒருவர் நீரினுள் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட வேளையில் அந்த சிறுவன் சுவாசித்தவாறு சுயநினைவுடன் காணப்பட்டதாகவும் ரொரன்ரோ அவசர மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். சிறுவனின் சகோதரியான 12 வயது சிறுமி உணர்வற்ற நிலையில் மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நீரோட்டம் வேகமடைவதைக் கண்ட தாயார் சிறுவர்களை கரைக்கு வருமாறு அழைத்ததாகவும், அவர்கள் கரையை வந்தடைவதற்குள் ஆற்று நீர் அவர்களை அடித்துச் சென்றதாகவும், அங்கிருந்த உறவினர்கள் அவர்களை காப்பாற்ற முனைந்த போதிலும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை எனவும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். The post ரொரன்ரோ Bluffers Parkஇல் நீரில் மூழ்கிய அக்காவும் தம்பியும் மருத்துவமனையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Davenport பகுதியில் தளபாட களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து Posted: 05 Sep 2015 01:09 PM PDT
Dufferin street மற்றும் Dupont street பகுதியில், 330 Geary Avenueவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினை சென்றடைந்த வேளையில், தீ மரப் பொருட்களில் இருந்து அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அனுகிய நிலையில் காணப்பட்டதாக ரொரன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மாலை வேளையில் தீப் பரவலின் பெரும் பகுதி கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. The post Davenport பகுதியில் தளபாட களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனிதக் கடத்தல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் இருவர் பலி Posted: 05 Sep 2015 12:05 PM PDT
சென். லோறன்ஸ் ஆற்றில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில், சிறிய ரக கடல் கலம் ஒன்று நீரில் மூழ்கியதாகவும், அழைத்துச் செல்லப்பட்ட இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அதனைச் செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த அந்த இருவரும் சட்டவிரோதமான முறையில் கனடாவில் இருந்து அமெரிக்காவினுள் செல்ல முயன்றவர்களாக இருக்ககூடும் என அமெரிக்க எல்லைப் பாதுகாவல் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கனடாவுக்கு வந்திருந்த இருவரே இவ்வாறு அமெரிக்காவினுள் நுளைய முனைந்திருக்க கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அந்த சிறியரக கடல் கலத்தினை செலுத்திச் சென்ற 36 வயதான கியூபெக்கின் Snye பகுதியைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ள அதிகாரிகள், அவர் மீது உயிரிழப்புக்கு காரணமாக செயற்பட்டமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் அமெரிக்க அதிகாரிகளுடன் கனேடிய மத்திய காவல்த்துறை மற்றும் கனேடிய எல்லைப் பாதுகாவல் துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். The post மனிதக் கடத்தல் என சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் இருவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 05 Sep 2015 11:57 AM PDT
ஒன்ராறியோ பாடசாலைகளின் ஆசிரியர்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை தவிர்க்கும் வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், தற்போது கல்வித்துறை சார் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முன்னைய கல்வி ஆண்டில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினை ஆரம்பித்திருந்த ஆசிரியர்கள், புதிய கல்வி ஆண்டிலும் அதனை தொடரவுள்ளதாக எச்சரித்து வந்தனர். அதனைத் தவிர்க்கும் வகையிலான போச்சுவார்தைகளை ஆசிரியர்கள் சங்கத்துடன் மேற்கொண்டுள்ள மாகாண கல்வித்துறை, போரட்டங்களை தவிர்க்கும் வகையிலான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முனைந்து வருகிறது. இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கும் கனேடிய அரசாங்க பாடசாலைகளின் ஊழியர் சங்கம், எதிர்வரும் வியாழக்கிழமையில் இருந்து தமது உறுப்பினர்கள் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளது. அதன் பிரகாரம் கல்வி உதவி உத்தியோகத்தர்கள், அலுவலக நிர்வாகிகள், பாதுகாப்பு பொறுப்பாளர்கள், மழலை கல்வி பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்டோர் 10ஆம் திகதியிலிருந்து சில விதிமுறைகளுக்கு அமையவே பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விநெறி வெற்றிக்கு தமது உறுப்பினர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தமது முக்கியத்துவத்தினை அனைத்து தரப்பினரும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ற வகையில் தமது தரப்பு நியாயங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். The post ஒன்ராறியோ கல்வித் துறையின் துணைநிலை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 5,000 சிரிய அகதிகளை கனடாவுக்குள் கொண்டுவருமாறு மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் Posted: 05 Sep 2015 11:06 AM PDT
மாநில அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் Eric Hoskins நேற்றைய நாள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அகதிகளின் தகுதி நிலையினை ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது வேறு ஏனைய நாடுகளோ உறுதிப்படுத்தும் வரையில் கனேடிய மத்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான படிமுறைகளை மேற்கொண்டு முடிப்பதற்கு பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவையான ஆளணி, பொருளாதார வசதிகளை கனேடிய அரசாங்கமே ஏற்படுத்தி, அல்லலுறும் ஆயிரக்கணக்கான சிரிய அகதிகளை கனடாவுக்குள் கொண்டுவந்த பின்னர் அவர்கள் தொடர்பிலான தகுதிநிலை பரிசீலனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். முன்னை அரசாங்கங்கள் இவ்வாறான மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்ட சமயங்களில் உடனடியாக செயலாற்றியுள்ளதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக 1999ஆம் ஆண்டில் கொசோவா போர் இடம்பெற்ற சமயம், அப்போதய கனேடிய அரசாங்கம் ஒரு மாத கலத்தினுள்ளேயே 5,000 அல்பேனியர்களை கனடாவில் குடியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கையினை தற்போதும் மேற்கொள்ள முடியும் என்ற போதிலும், அதற்கேற்ற அரசியல் நிலைப்பாட்டினை தற்போதய அரசர்ஙகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒன்ராறியோ சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். The post 5,000 சிரிய அகதிகளை கனடாவுக்குள் கொண்டுவருமாறு மத்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உயர் இரத்த அழுத்தமா? மருந்தாகும் காளான் Posted: 05 Sep 2015 04:31 AM PDT
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது.
இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது. மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும். காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. The post உயர் இரத்த அழுத்தமா? மருந்தாகும் காளான் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட இரா. சம்பந்தனிற்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து Posted: 05 Sep 2015 03:26 AM PDT
1956 இல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய இரா. சம்பந்தன் ஆழமான அரசியல் அறிவும் அளவற்ற நேர்மையும் படைத்தவர். இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்ததன் மூலம் எதிர்காலத்தில் ஒரு ஐக்கிய இலங்கையின் நல்வாழ்வில் முக்கிய பாகத்தை வகிக்க ததேக ஆயத்தமாக இருக்கிறது என்பதை அது காட்டியுள்ளது. தமிழ்மக்களது இனச்சிக்கலுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண்பதே தனது முக்கிய நோக்கம் என ததேகூ கூறியுள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு பலியான மக்களுக்கு பொறுப்புகூறலும் நீதியும் பெற்றுக் தேர்தல் வெற்றியின் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய ததேகூ எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எப்போதும் போல் கனடிய தமிழர் பேரவை இலங்கையின் அனைத்து மக்களது, குறிப்பாக தமிழ்மக்களது, விருப்பங்களை மதிக்கிறது. தமிழ்மக்களது உண்மையான சமத்துவம், நீதி,சமாதானம் மற்றும் மதிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பாடுபடும் திரு இரா. சம்பந்தன் அவர்களுக்கு கைகொடுக்க கனடிய தமிழர் பேரவை எப்போதும் ஆயத்தமாக இருக்கிறது. The post எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட இரா. சம்பந்தனிற்கு கனடிய தமிழர் பேரவை வாழ்த்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் 25 வயது ஆண் ஒருவர் படுகாயமடைந்ததாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Bluffers Park பகுதியில் நீரினுள் மூழ்கிய சிறுவர்கள் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரொரன்ரோவின் Davenport பகுதியில் அமைந்துள்ள தளபாட களஞ்சிய வளாகத்தில் இன்று மாலை பாரிய தீப் பரவல் ஏற்பட்டதனை அடுத்து 45ற்கும் அதிகமான படையினர் தீயணைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்ராறியோவின் Cornwall பகுதியில் மனித கடத்தல் முயற்சி என சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உள்ளது.