Tamil Star |
- மார்க்கம் பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட நபர் உயிராபத்தான நிலையில்
- ஈட்டோபிக்கோவின் வட பகுதியில் மோதல் சம்பவம் – பெண் ஒருவர் மீது கத்திக்குத்து
- Leslieville பகுதியில் பாலியல் தாக்குதல்கள், முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- Woburn பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளைகள் தொடர்பில் 3 பதின்மவயதினர் கைது
- கார்டினர் அதிவிரைவு சாலை நிர்மானிப்பு பணிகள் விரைவில் நிறைவுறும் என நகரபிதா நம்பிக்கை
- வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கனேடிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம்
- சமச்சீர் உணவு பற்றி தெரியுமா?
| மார்க்கம் பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட நபர் உயிராபத்தான நிலையில் Posted: 29 Sep 2015 07:04 PM PDT
மக்கவுன் வீதி மற்றும் நெடுஞசாலை 7 பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தினை தொடர்ந்து அந்த பகுதி ஊடான போக்கவரத்துகள் தடை செய்யப்பட்டன. The post மார்க்கம் பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட நபர் உயிராபத்தான நிலையில் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈட்டோபிக்கோவின் வட பகுதியில் மோதல் சம்பவம் – பெண் ஒருவர் மீது கத்திக்குத்து Posted: 29 Sep 2015 06:47 PM PDT
இன்று அதிகாலை நான்கு மணியளவில் இலக்கம் 311, டிக்சன் வீதியில் அமைந்துள்ள சிறிய பூங்கா ஒன்றில் ஆண்களும்,பெண்களும் அடங்கிய குழுக்களுக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களின் போதே பெண் ஒருவர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் பல முறை கத்திக்குத்துக்கு ஆளாகியிருந்தார் என்றும் அவர்கள் விபரித்துள்ளனர். காயமடைந்த பெண் உடனடியாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என நம்பப்படுவதாகவும், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் இன்னமும் யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதனால் சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இன்னமும் கிடைக்கவில்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்த்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். The post ஈட்டோபிக்கோவின் வட பகுதியில் மோதல் சம்பவம் – பெண் ஒருவர் மீது கத்திக்குத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 29 Sep 2015 03:43 PM PDT Leslieville பகுதியில் அண்மையில் இடம்பெற்றுள்ள மூன்று சம்பவங்கள் தொடர்பில் காவல்த்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி அதிகாலை மூன்று மணியளவில் Queen Street East மற்றும் Caroline Avenue பகுதியில் ஆண் ஒருவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அந்த நபர் சுமார் 245இறாத்தல் எடையும், ஆறு அடி உயரமும், 40இலிருந்து 60வரையான வயதுள்ள மொட்டைத் தலையுடன் கூடிய வெள்ளை இன ஆண் என அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த 23ஆம் […] The post Leslieville பகுதியில் பாலியல் தாக்குதல்கள், முறைகேடான செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Woburn பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளைகள் தொடர்பில் 3 பதின்மவயதினர் கைது Posted: 29 Sep 2015 03:06 PM PDT ஸ்காபரோவின் Woburn குடியிருப்பு பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்ப்பட்டுள்ள மூன்று பதின்மவயது ஆண்களுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 26ஆம் திகதிக்கும் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், Military Trail மற்றும் Ellesmere வீதிப் பகுதியில் இடம்பெற்ற ஐந்து வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஏழு பேர் தமது உடமைகளை பறிகொடுத்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்த்துறையினர், நேற்றைய தினம் ரொரன்ரோவைச் சேர்ந்த மூன்று […] The post Woburn பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளைகள் தொடர்பில் 3 பதின்மவயதினர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கார்டினர் அதிவிரைவு சாலை நிர்மானிப்பு பணிகள் விரைவில் நிறைவுறும் என நகரபிதா நம்பிக்கை Posted: 29 Sep 2015 11:57 AM PDT
நகரபிதா ஜோன் ரொறி நேற்று சாலையின் Spadina விற்கும் Jameson avenues ற்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்தார். குறித்த அந்த சந்திப்பின் போதே தாம் எதிர்பார்த்ததைவிடு விரைவில் திட்டம் நிறைவடைந்துவிடும் என்றும், எனினும் செலவீனங்களும் எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே இந்த நிர்மானப் பணிகள் நிறைவடையும என முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திட்டமிடப்பட்ட அந்த தினத்தின் மூன்று மாதங்கள் முன்னதாக அவை நிறைவடையக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் விபரித்துள்ளார். முன்னைய செலவீன மதிப்பீடு 66.5 மில்லியன் டொலர்களாக இருந்தது என்றும், தற்போது அது 3.4 மில்லியன்கள் அதிகரித்து 69.9 மில்லியன்களாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சாலை விரிவாகத்கதினால் ஏற்டக்கூடிய பலன்களுடன் ஒப்பிடுகையில் இந்த செலவீன அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதே எனவும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி மேலும் தெரிவித்துள்ளார். The post கார்டினர் அதிவிரைவு சாலை நிர்மானிப்பு பணிகள் விரைவில் நிறைவுறும் என நகரபிதா நம்பிக்கை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கனேடிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம் Posted: 29 Sep 2015 10:49 AM PDT
தேர்தல் வாக்களிப்பு தினம் நெருங்கும் நிலையில், எவ்வாறான வெளியுறவுக் கொள்கையினை கனடா பின்பற்ற வேண்டும் என்ற தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொருவரும் தமது வாதத்தை முன்வைத்திருந்தனர். குறிப்பாக அனைத்துலவ வர்த்தக பங்காளித்துவம், உலக பருவநிலை மாற்றம், குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் விவகாரம், பாதுகாப்பு சட்டங்கள் போன்ற விடயங்கள் நேற்றைய விவாத்தின் பேசு பொருளாக முன்வைக்கப்பட்டன. நேற்றைய விவாத நிகழ்வில் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் பாரிய அளவில் விவாதிக்கப்படும் என அனைத்துலக அளவிலும், உள்நாட்டிலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அரசியல் கட்சித் தலைவர்களின் அடிப்படைக் கருத்துக்கள் உள்நாட்டை நோக்கியதாகவே இருந்ததாக அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ரொரன்ரோ Roy Thomson மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்த நேரடி விவாதத்தில் சுமார் மூவாயிரம் பேர் கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் விவாதத்தின் போது கடுமையான கருத்துக்கள் பரிமாறப்பட்ட வேளைகளில் பார்வையளார்கள் ஆரவாரம் செய்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post வெளியுறவுக் கொள்கை தொடர்பில் கனேடிய பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேரடி விவாதம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 29 Sep 2015 07:09 AM PDT
ஆனால், சரிவிகித உணவு என்பது காலை மற்றும் இரவு வேலைகளில் குருணை தானியங்களில் செய்யப்படும் கஞ்சி, அடை, களி போன்றவற்றைச் சாப்பிடலாம். உணவில் அதிகக் கொழுப்பு சேராதிருக்க, தோல் நீக்கிய இறைச்சியே சமச்சீரில் இடம்பெறும். எண்ணெயில் பொரித்த காய்கள் எதுவும் சமச்சீரில் இடம் பெறாது. ஆவியில் வேகவைத்த உணவுகளில் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது மட்டுமே சமச்சீர். மிகவும் பொடியாக நறுக்கிய காய், கீரை, கனிகளில் சத்துக்கள் வெகுவாகக் குறைந்துவிடும். பெரிய அளவில் நறுக்கியதாக இருக்கும். உருக்கிய நெய், ஆடை, கொழுப்பு நீக்கிய நீர்மோர் நல்லவை. சப்பாத்தி குருமா, சப்பாத்தி பருப்பு, சப்ஜி சமச்சீர் உணவுதான். ஆனால், சப்பாத்தியுடன் சாஸ், ஜாம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்தைக் கெடுக்கும். வயதுக்கேற்ற டயட்: உடம்பை குறைப்பதற்காக பலரும் டயட் என்ற பெயரில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கின்றனர். ஆனால், தங்கள் வயதிற்கேற்றபடி டயட்டினை மேற்கொள்வது நல்லது. 0-1 முதல் வயது வரை: இந்த வயதுதான் வளர்ச்சிக்கு ஆதாரம், தாய்ப்பால் அதிக ஆற்றலைத் தரும், கொழுப்பு, மாவுச்சத்து, புரதச்சத்துக்கள் நிறைந்த உணவைச் சாப்பிடக்கொடுக்க வேண்டும். 1-13 வயது வரை: வளர்ச்சிக்கு உதவும் பருவம் இது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். பால் காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகள் சிறுதானியம், அரிசி, கோதுமை, கேழ்வரகு, பருப்பு மற்றும் பயறு வகைகளை உட்கொள்ளலாம். 14-25 வயது வரை: எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமான உணவுகள் தேவை, உடல் வளர்ச்சிக்குத் தேவையான நட்ஸ், பயறு, பருப்பு, பால் பொருட்கள் அசைவ உணவுகளை சாப்பிடலாம். 25 வயதுக்கு மேற்பட்டோர்: அனைத்து உணவுகளையும் சமச்சீரான அளவில் சாப்பிட வேண்டும். The post சமச்சீர் உணவு பற்றி தெரியுமா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மார்க்கம் பகுதியில் பிக்கப் ரக வாகனம் ஒன்றினால் மோதுண்ட நபர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை வேளையில் ஈட்டோபிக்கோவின் வட பகுதியில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும், அதன் போது பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமச்சீர் உணவு பற்றி பலரும் தெரிந்திராமல் அன்றாட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.